Saturday, March 01, 2008

கமலம்...பாத கமலம்...

படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்


கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்




பாடலைக் கேட்க :
Get this widget Track details eSnips Social DNA



கடந்த கால நினைவுகளில் இன்னும் பிரகாசமாக இருக்கக் கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அவ்விஷயம் இப்போது கிடைக்காமல் இருப்பது அந்த பழைய நினைவுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. அது - ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. ராகம், தாளம் பற்றியெல்லாம் பேசியதில்லை...இருப்பினும் தலைவருடைய பாடல்கள் தரும் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு சுகம் தான். கல்லூரி படிக்கும் நாட்களில் நண்பன் தியானேசுவரன் தான் இளையராஜாவின் பழைய பாடல்களை எனக்கு அறிமுகப் படுத்தியவன். அதன் பின்னர் தில்லி சென்ற பிறகு இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். இந்தூரில் இருக்கும் போது, எங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் ஹெட் ஒரு தீவிர இளையராஜா ரசிகர் என்று தெரிந்து கொண்டேன். சனிக்கிழமை மாலைகளில் சும்மாவே என்னை தன் அறைக்குக் கூப்பிட்டு இளையராஜாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். தேசிய விருது வாங்கிய திரைப்படம் என்று மோகமுள் திரைப்படத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருந்திருக்கிறேன். ஆனால் அப்படத்தில் மேற்கண்ட பாடலையும் அதன் அழகினையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.

"எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்ப்பா. எங்க ஊருல ஒரு அதிகாலை நேரத்து காட்சியைப் பார்த்த மாதிரியே இருக்கும் - நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை - வரிகள். லிரிக்ஸும் ராஜாவோட மியூசிக்கும் ஜஸ்ட் அமேசிங்" அப்படின்னார். அதுக்கப்புறம் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் அதன் அழகு புரிந்தது. மாட்டின் மணியோசை தரும் மகிழ்ச்சியை இதுவரை உணர்ந்ததில்லை. ஆனால் அதை எப்போதாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் அம்மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தன் வரிகளின் மூலம் ஏற்படுத்தியிருப்பார் கவிஞர் வாலி. செந்தமிழ்ப் பண்ணும் உயரிய இசையும் மனதுக்கு எவ்வாறு குதூகலத்தைக் கொடுக்கும் என்பதற்கு இப்பாடல் நல்லதோர் உதாரணம். இப்பாடலில் நானாகக் கவனித்த ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது பாடலின் 1:50வது நிமிடத்திலிருந்து 2:13ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் முதல் சரணத்தில் "இதமான இளங்காற்று" எனும் தொடங்கும் வரிக்குச் சற்று முன்னர் வரும் ஒரு தபலா/மிருதங்கம் நோட். உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்...பாடல் வரிகளுக்கு நடுவில் தபலா/மிருதங்கத்தில் மெல்லமாகத் தட்டி இடைவெளி கொடுத்தது போல இருக்கும் அந்த நயம் உண்மையிலேயே மனதைத் துள்ளச் செய்யும். பாடலுக்கும் அழகு சேர்க்கும். அதே போல பாடலின் 3:39வது நிமிடத்திலிருந்து 4:02ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் இரண்டாம் சரணத்தில் "திருவீதி வலம் வந்த" எனும் தொடங்கும் வரிக்கு முன்னரும் இதை ரசிக்கலாம். நீங்களும் இப்பாடலின் வரிகளையும் இசையையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

படங்களைப் பற்றிய குறிப்புகள் :
1. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சார்கேஜ் காந்திநகர் நெடுஞ்சாலையில் செல்லும் ஒட்டக வண்டி. அகமதாபாத்தில் இருந்த போது நிறைய ஒட்டகங்களைப் பார்த்திருக்கிறேன். காய்கறிகள் விற்கும் வண்டியைக் கூட அங்கு ஒட்டகம் இழுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.

2&3 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள "தக்ஷின சித்ரா" எனும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் எடுத்த படங்கள்.

23 comments:

  1. இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி தல! :)

    ///ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது.//

    அதே அதே!! அழகா சொன்னீங்க தல!

    ReplyDelete
  2. கிராமப்புறத்துக் காட்சிகள் என்பவை மிகவும் ரம்யமானவை. அதுவும் தி.ஜானகிராமன் கதைகளில் பழைய காலத்துக் கிராமம் அப்படியே பதிவாகி இருக்கும்.
    அதே அழகு இந்தப் பாடலில் வருவதுதான் திரு. ராஜாவின் கைவண்ணம்.
    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. //இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி தல! :)

    ///ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது.//

    அதே அதே!! அழகா சொன்னீங்க தல!//

    நன்றிப்பா கப்பி.

    ReplyDelete
  4. //கிராமப்புறத்துக் காட்சிகள் என்பவை மிகவும் ரம்யமானவை//

    வாங்கம்மா, கிராமப்புறம் பக்கம் போயே பல வருஷம் ஆகுது :(

    //அதுவும் தி.ஜானகிராமன் கதைகளில் பழைய காலத்துக் கிராமம் அப்படியே பதிவாகி இருக்கும்//
    தி.ஜா கதைகளைப் படித்ததில்லை. இந்தப் படத்தையும் இன்னும் பாத்ததில்லை :(

    //அதே அழகு இந்தப் பாடலில் வருவதுதான் திரு. ராஜாவின் கைவண்ணம்.
    மிகவும் ரசித்தேன்//
    உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா.
    :)

    ReplyDelete
  5. எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் கைப்ஸ் அண்ணாச்சி!

    //நெல்மூட்டை நிரப்பி
    நெடுஞ்சாலை கடக்கும்
    வில்வண்டி இழுக்கும்
    மாட்டின் மணியோசை//

    "ஒட்டகத்தின் மணியோசை"-ன்னு கைப்பு மட்டும் மாத்திப் பாடுவாரு-ன்னு சொன்னாங்களே! :-)

    //மாட்டின் மணியோசை தரும் மகிழ்ச்சியை இதுவரை உணர்ந்ததில்லை.//

    அந்த ஜல்-ஜல் சுகமே தனி! அதுவும் காலையில் ஒரு இசை, மாலையில் ஒரு இசை வரா மாதிரி கூடக் கட்டுவோம்! காலையில் மணி எண்ணிக்கை கம்மி பண்ணாக்கா, அமைதியா சுப்ரபாதமா ஒலிக்கும்!
    மாலையில் வீட்டுக்கு வரச்சொல்ல மணி எண்ணிக்கையைக் கூட்டினா ஜல்-ஜல்னு ஒரே துள்ளல் இசை தான்!

    ReplyDelete
  6. //எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் கைப்ஸ் அண்ணாச்சி!//

    ஆஹா...ஆன்மீக எக்ஸ்பெர்டுக்கு பிடிச்ச பாட்டை நான் போட்டிருக்கேனா? ரொம்ப சந்தோஷம்.

    //"ஒட்டகத்தின் மணியோசை"-ன்னு கைப்பு மட்டும் மாத்திப் பாடுவாரு-ன்னு சொன்னாங்களே! :-)//
    ஹி...ஹி...

    //அந்த ஜல்-ஜல் சுகமே தனி! அதுவும் காலையில் ஒரு இசை, மாலையில் ஒரு இசை வரா மாதிரி கூடக் கட்டுவோம்! காலையில் மணி எண்ணிக்கை கம்மி பண்ணாக்கா, அமைதியா சுப்ரபாதமா ஒலிக்கும்!
    மாலையில் வீட்டுக்கு வரச்சொல்ல மணி எண்ணிக்கையைக் கூட்டினா ஜல்-ஜல்னு ஒரே துள்ளல் இசை தான்!//

    என்னது கட்டுவீங்களா? அப்போ உங்களுக்கு மாட்டுவண்டி டிரைவிங் கூட தெரியுமா? எட்டு கூட போடுவீங்களா? :)

    ஜல்-ஜல்னு துள்ளல் இசை பத்தி எழுதிருக்குறதைப் படிச்சதும் இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வந்துடுச்சு. நடிகை சரோஜா தேவி(தான்னு நெனக்கிறேன்) மாட்டு வண்டி ஓட்டிக்கிட்டு பாடற மாதிரி ஒரு பாட்டு வருமே...

    "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சல என சாலையிலே..."

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணா.
    :)

    ReplyDelete
  7. ஆமா! இந்த பாடல் அப்படியே நெஞ்சை கொள்ளை கொண்டு போகும்.

    இசை மட்டுமல்ல தல, ஜேசுதாசின் மனதை வருடும் குரலும் தான். சரியான பாடலுக்கு சரியான ஆளை வைத்து பாட வைப்பதில் ராசா என்னிக்குமே கிங்க் தான்!

    ReplyDelete
  8. //காலையில் மணி எண்ணிக்கை கம்மி பண்ணாக்கா, அமைதியா சுப்ரபாதமா ஒலிக்கும்!
    //

    @KRS, அதானே! ஹிஹி, உங்க பஞ்ச் இல்லையேனு பாத்தேன். :p

    ReplyDelete
  9. //ஆமா! இந்த பாடல் அப்படியே நெஞ்சை கொள்ளை கொண்டு போகும்//

    ஆஹா...இது அட்லாஸ் சிங்கத்துக்கும் பிடிச்ச பாட்டா? அடியேன் தன்யன் ஆனேன்.

    //
    இசை மட்டுமல்ல தல, ஜேசுதாசின் மனதை வருடும் குரலும் தான். சரியான பாடலுக்கு சரியான ஆளை வைத்து பாட வைப்பதில் ராசா என்னிக்குமே கிங்க் தான்!//

    அதே அதே :)

    ReplyDelete
  10. சூப்பர் பாட்டு தல.... எனக்கும் ரொம்ப பிடிக்கும்... :)

    ReplyDelete
  11. கமெண்ட்டை தட்டச்சிவிட்டுப் பார்த்தால் எல்லாரும் முன்னாடியே சொல்லிட்டாங்க...இருந்தாலும் தட்டச்சியதைப் போட்டுடறேன்.

    ***
    கைப்ஸ்...எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு இது. இந்த படத்தில் எல்லா பாட்டுக்களுமே அருமையாக இருக்கும். படமும் செம சூப்பரா படமாக்கப்பட்டிருக்கும். ஆர்ட் டைரக்க்ஷன் பட்டையக் கிளப்பும். இந்தப் பாட்டை மிதமான வால்யூமில் பின்னிரவிலோ அதிகாலையிலோ கேட்டால் அப்படி அற்புதமாய் இருக்கும்

    ReplyDelete
  12. Thanks for sharing my close-to-heart song.

    ReplyDelete
  13. //சூப்பர் பாட்டு தல.... எனக்கும் ரொம்ப பிடிக்கும்... :)//

    வாப்பா ராயல்,
    ரொம்ப சந்தோஷம்ப்பா.
    :)

    ReplyDelete
  14. //கைப்ஸ்...எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு இது. இந்த படத்தில் எல்லா பாட்டுக்களுமே அருமையாக இருக்கும். படமும் செம சூப்பரா படமாக்கப்பட்டிருக்கும். ஆர்ட் டைரக்க்ஷன் பட்டையக் கிளப்பும். இந்தப் பாட்டை மிதமான வால்யூமில் பின்னிரவிலோ அதிகாலையிலோ கேட்டால் அப்படி அற்புதமாய் இருக்கும்//

    வாங்க டுபுக்கு சார்,
    இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலை. ஆனா நீங்க சொல்றதைப் பாத்தா ரொம்ப நல்லாருக்கும் போலிருக்கு. வாய்ப்பு கெடைச்சா பாக்கறேன். சில நாட்கள்ல இதே பாட்டை பல முறை கேட்டிருக்கேன்.

    ReplyDelete
  15. //Thanks for sharing my close-to-heart song//

    வாங்க ஹரி,
    எனக்கும் அப்படித் தான். ரொம்ப விரும்பி கேக்கற பாட்டுகள்ல ஒன்னு இது. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு இது மோகனா. கேட்டு ரொம்ப நாளாச்சு. இப்ப ரொம்ப இரசிச்சுக் கேட்டேன்.

    ReplyDelete
  17. நான் கேட்டதே இல்ல இந்த பாட்ட இப்பத்தான் கேக்கரேன்.அருமையா இருக்கு...:)

    ReplyDelete
  18. //எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்ப்பா. எங்க ஊருல ஒரு அதிகாலை நேரத்து காட்சியைப் பார்த்த மாதிரியே இருக்கும் - நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை - வரிகள்//

    அதே!

    அதே ஃபீலிங்க்ஸ்தான் எனக்கும் :))

    நல்லா இருக்கு :)

    ReplyDelete
  19. ஏங்க எல்லாரும் உங்களை இப்படிப் போட்டுத்தாக்களாங்க? இதைப் பார்த்தீங்களா?
    http://blogintamil.blogspot.com/2008/04/02_09.html

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமரன் சார், ராதா மேடம், ஆயில்யன்.

    ReplyDelete
  21. //ஏங்க எல்லாரும் உங்களை இப்படிப் போட்டுத்தாக்களாங்க? இதைப் பார்த்தீங்களா?
    http://blogintamil.blogspot.com/2008/04/02_09.html//

    தனிமனிதத் தாக்குதல், தனிமனிதத் தாக்குதல்னு நானும் சொல்லிச் சொல்லித் தான் பாக்குறேன். யாரும் கண்டுக்கிட்டதாவே தெரியலை...ஹ்ம்ம்ம்ம்
    :((

    ReplyDelete
  22. //செந்தமிழ்ப் பண்ணும் உயரிய இசையும்//
    செந்தமிழ் பண் - அப்படி ஏதும் இல்லைங்க. உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு குறிப்பிட்ட பண்ணின் வரையுரை ஒன்றாகத்தான் இருக்கும்.
    ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே ஒரே பணை வெவ்வேறு பெயரில் பாடிக்கொண்டிருக்க இயலும்!

    கமலம் பாதக் கமலம் - இது என்ன இராகம்? இராமப்பிரியா!

    ReplyDelete
  23. //செந்தமிழ் பண் - அப்படி ஏதும் இல்லைங்க. உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு குறிப்பிட்ட பண்ணின் வரையுரை ஒன்றாகத்தான் இருக்கும்.
    ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே ஒரே பணை வெவ்வேறு பெயரில் பாடிக்கொண்டிருக்க இயலும்!//

    வாங்க ஜீவா சார். விளக்கத்திற்கு நன்றி. புதுசா ஒன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

    //கமலம் பாதக் கமலம் - இது என்ன இராகம்? இராமப்பிரியா!//

    தெரியலை. ஆனா அதுக்கப்புறம் கூகிளில் தேடியதில் இப்பாடலின் ராகம் இராமப்பிரியா என்பதை தெரிந்து கொண்டேன்.

    http://www.s-anand.net/Classical_Ilayaraja_10.html

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete