Tuesday, October 09, 2007

சன்னாகிதா குரூ?

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்களாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டது. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.

நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.

நிகண்டுகள்
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
அகராதி நிகண்டு (இரேவண சித்தர் இயற்றியது)
அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)

ஹி...ஹி...அதொன்னுமில்லீங்க. சொல்ல வந்த மேட்டர் ரொம்ப சிறுசு. அதை தமிழ்மணம் முகப்புலயே படிச்சிட்டு யாரும் ஓடிப் போயிட கூடாதில்ல...அதுக்கு தான் தமிழ் விக்கிபீடியாலேருந்து நிகண்டு பத்தி ச்ச்ச்சும்மா ஒரு கட் அண்ட் பேஸ்ட். மன்னிச்சுக்கங்கங்கங்கோ.

மேல் மாடியைக் கசக்கி புழிஞ்சு கடைஞ்சு ஜூஸ் போட்டு அன்புடன் குழுமம் நடத்துன படக்கவிதை போட்டிக்காக எழுதி அனுப்புன கவிதை.


அன்பின் வாசம்

மரணம் முத்தமிடக்காத்திருக்கும் மயான
பூமியிலும்
உன்னன்பின் வாசம்
என் உயிர்ப்பூவைப்
பூக்கச் செய்யும்


இப்ப பதிவோட தலைப்பை ஒரு தடவை படிச்சிட்டு துப்பிட்டு போங்க.

30 comments:

  1. நல்ல எழுத்து நடை!எப்படி இப்படி?:-))

    ReplyDelete
  2. ஒந்தில்லாப்பா .. தும்ப கஸ்டமாகிதி இல்லி.

    :))

    ReplyDelete
  3. நல்ல எழுத்து நடை!ஆழமான கருத்துகள்.

    அப்புறமா வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்.

    ReplyDelete
  4. //திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
    பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)//

    திவாகர நிகண்டினை எழுதியது திவாகர முனிவர்ன்னா பிங்கல முனிவர்தானெ பிங்கலநிகண்டினை எழுதியிருக்கனும்?....ஹெஹ்.ஹெஹெஹெஹெ

    ReplyDelete
  5. மொதல்ல பயமுறுத்திட்டீங்களே?

    ReplyDelete
  6. தல,

    ஆமேலே பர்த்தீனி.... இவத்து தும்ப கல்சாதீரீ......

    ReplyDelete
  7. //அன்பின் வாசம்

    மரணம் முத்தமிடக்காத்திருக்கும் மயான
    பூமியிலும்
    உன்னன்பின் வாசம்
    என் உயிர்ப்பூவைப்
    பூக்கச் செய்யும்//


    ரீ சென்னாகீது ரீ.... பேஜார் மாடூக்கோ பேடா... :)

    ReplyDelete
  8. தல!

    சொல்ல வார்த்தைகள தேடிட்டு இருக்கேன் கிடைக்கவேல்ல.

    ReplyDelete
  9. அதானே பார்த்தேன்.. யாரெல்லாம் நிகண்டு பத்தி எழுதறதுன்னே இல்லாம போச்சு :-))))

    ReplyDelete
  10. ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா!!

    ஏதோ எனக்கு தெரிஞ்ச அன்நிய மொழி!!!

    ReplyDelete
  11. கைப்புள்ளை நிகண்டு இங்கே கிடைக்கும்.
    - கைப்புள்ளை இயற்றியது.

    (ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)

    ReplyDelete
  12. //நல்ல எழுத்து நடை!எப்படி இப்படி?:-))//

    ஹி...ஹி...தானா வருதுங்க. என்ன பண்ண?
    :)

    ReplyDelete
  13. //ஒந்தில்லாப்பா .. தும்ப கஸ்டமாகிதி இல்லி.

    :))//

    வாங்க பொன்வண்டு,
    உங்க ப்ரொஃபைல்ல இருக்கற பையன் செம க்யூட்டுங்க. வருகைக்கு நன்றிங்கோ.
    :)

    ReplyDelete
  14. //நல்ல எழுத்து நடை!ஆழமான கருத்துகள்.

    அப்புறமா வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்.//

    படிக்காமலே நல்ல எழுத்து நடைன்னு தெரிஞ்சிடுச்சா? இதெல்லாம் ஓவர் நக்கலு...ஆமா.
    :))

    ReplyDelete
  15. //திவாகர நிகண்டினை எழுதியது திவாகர முனிவர்ன்னா பிங்கல முனிவர்தானெ பிங்கலநிகண்டினை எழுதியிருக்கனும்?....//

    லாஜிக். கரெக்ட் தான். ஆனா நானே கட் பேஸ்ட் தானே பண்ணேன்?
    :)

    ReplyDelete
  16. //மொதல்ல பயமுறுத்திட்டீங்களே?//

    இப்ப பயம் நீங்கிடுச்சுங்களா?
    :)

    ReplyDelete
  17. //ரீ சென்னாகீது ரீ.... பேஜார் மாடூக்கோ பேடா... :)//

    நல்லாருக்குது. அப்படியே பேஜார் பண்ணாம மாட்டுக்கு பேடா வச்சிட சொல்றே? சரி...வச்சிடறேன்.
    :)

    ReplyDelete
  18. //தல,

    கவுஜ கவுஜ!!//

    ஜாவா பாவலரே,
    நன்றி நன்றி!!

    ReplyDelete
  19. //தல!

    சொல்ல வார்த்தைகள தேடிட்டு இருக்கேன் கிடைக்கவேல்ல//

    வாங்க மர்மயோகி,
    நன்றிங்கங்கோ. "அரசி"ல வர்ற மந்திரவாதி மாதிரி மை போட்டு பாருங்க. கெடைச்சாலும் கெடைக்கலாம்.
    :)

    ReplyDelete
  20. //ஹச்சூ!! ஹச்சூ!//

    தும்மல் பலமா இருக்கே கொத்ஸ்! சரி...இந்த போஸ்டை சாய்ஸ்ல விட்டுட்டீங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
    :)

    ReplyDelete
  21. //அதானே பார்த்தேன்.. யாரெல்லாம் நிகண்டு பத்தி எழுதறதுன்னே இல்லாம போச்சு :-))))//
    ஆமாங்க...கல்கண்டு மாதிரி எதோ ஒரு கண்டுன்னு நெனச்சி பேஸ்ட் பண்ணிட்டேன்.

    ReplyDelete
  22. //ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா!!

    ஏதோ எனக்கு தெரிஞ்ச அன்நிய மொழி!!!//

    அட! வாங்க குசும்பரே...நேத்து தாங்க இந்த படம் போட்டான் கே டிவில.

    ReplyDelete
  23. //கைப்புள்ளை நிகண்டு இங்கே கிடைக்கும்.
    - கைப்புள்ளை இயற்றியது.

    (ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)//

    ஹி...ஹி...டேங்ஸூங்கோ.
    :)

    ReplyDelete
  24. //:)//

    வாங்க பாபா,
    சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டீர்.
    :)

    ReplyDelete
  25. ஏண்ரீ...தும்ப சென்னாகிதே குரு...மஸ்து மஜா மாடி...!!!

    ReplyDelete
  26. ஜஜயோ.. ஏன்னாச்சி இந்த புள்ளைக்கி..
    வெய்யில் அதிகமோ?
    கவலைப் படாதிங்க சரியாக்கிடலாம்.எனக்கு கூட ஆரம்பத்தல அப்படிதான் இருதிச்சி..
    அங்க எலும்மிச்சை பழம் கிடைக்குமா? அண்டாவில் ஜுஸ் பிழிந்து அரைமணி நேரம் முங்கியிருக்கவும்.

    ReplyDelete
  27. கவிதை அற்புதம்... ஆனா அதுக்கு முன்னாடி ஏதோ எழுதிருக்கீங்களே அது தான் புரியல... (புரியாதுங்கிற நம்பிக்கையில் படிக்கவே இல்லை... :P)

    ReplyDelete
  28. அட, இப்போத் தான் இ.கொ. பதிவிலே பார்த்தேன், ஏதோ படம் எல்லாம் காட்டிட்டுப் பொழுதை ஓட்டறீங்கனு? மாவாட்டறதிலே பிசியா? :P :P


    மங்களூர் சிவா said...
    நல்ல எழுத்து நடை!ஆழமான கருத்துகள்.

    அப்புறமா வந்து படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்.

    October 09, 2007 4:51 PM

    repeateeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

    ReplyDelete