Wednesday, October 03, 2007

விழிக்கு உணவு

வேறென்னங்க? அக்டோபர் மாச புகைப்படப் போட்டிக்காகத் தான். எல்லா புகைப்படங்களுமே க்ளோசப்ல கேமராவோட 'டிஜிட்டல் மேக்ரோ' மோட்ல, புகைப்பட பிரம்மாக்கள் சொல்லற மாதிரி 'As close as it gets' என்ற முறையில் எடுத்தது.

1. சுடு சாதமும் போட்டியும் - இது வேற போட்டி :)



2. பாக்கறதுக்கு உப்புமா மாதிரி இருந்தாலும் கோப்பைக்குள்ள இருக்கறதை எங்க ஊர்ல 'ஐஸ்க்ரீம்'னு சொல்லுவாங்க.


3. பிரமிட் ஜல்லிகள்...சாரி ஜெல்லிகள்


4. பாதரசமா? பருப்பு ரசமா?


5. நூடுல்ஸ் மேல பச்சை பட்டாணி...அதுவும் முளை கட்டுனது??? அப்பத் தான் படம் அழகா நல்லா வரும்னு தங்கமணி கொடுத்த ஐடியா. எதிர்த்து பேச முடியுமா?:)


6. புளியம் பிரியாணியும்(இது மட்டும் அவங்க காதுக்கு எட்டுச்சு...நான் செத்தேன்) கோழி முட்டை தோசையும்


7. ஆணா? பெண்ணா?


8. எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடனும்...:)



9. அழுதுகிட்டே எடுத்தது



10. முழிக்கிறத பாரு...


படங்கள் 2உம், 3உம் An& தன்னோட புகைப்படப் பதிவுல சொல்லிக் குடுத்த மாதிரி ஒரு சின்ன டேபிள் லேம்ப் வச்சி எடுத்தது. அவரு சொன்ன மாதிரி ஒரு கூடைக்குள்ளயோ வாளிக்குள்ளயோ வச்சி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் போல.

படங்கள் 7,8,9,10 : எப்பவோ எடுத்தது. சும்மாச்சிக்கும் போட்டு வச்சிருக்கேன்.

படங்கள் 1,2,3,4,5,6 - இதுலேருந்து எந்த ரெண்டு படங்களைப் போட்டிக்குக் கொடுக்கலாம்? சொல்லுங்க மக்கா.

படம் 3(ஜெல்லி) மற்றும் 5(நூடுல்ஸ்) இரண்டும் போட்டிக்கான படங்கள்.

40 comments:

  1. பதிவெழுதக் காணும் போட்டிக்கு மட்டும் வந்துட்டாரு.

    சரி, சரி. அம்மிணி சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டீங்க. அதுக்கு மேல அப்பீல் உண்டா. அந்த முளை கட்டின பட்டாணியை அனுப்பலாம். தொட்டுக்க கடைசிப் படம்.

    ReplyDelete
  2. எனக்கு எல்லவற்றையும் விட பிடிச்சத்து...ஹ்ம்ம்.. ஒன்னே ஒன்னு தான்..:-)))

    அதுக்காகவே பரிசு கொடுக்கலாம் கைப்ஸ்க்கு..:-))

    ReplyDelete
  3. முட்டை அருமையாக வந்து இருக்கிறது.

    ReplyDelete
  4. என்னக் கேட்டீங்கன்னா,

    ஜெல்லியும்
    முட்டையும்

    அனுப்பலாம்

    போட்டிக்கு

    எல்லா படமும் ஜூப்பரு.

    ReplyDelete
  5. நூடுல்ஸும் ஜூப்பரு. மொளச்ச பட்டாணி அழகு.

    அதையும் கன்ஸிடர் பண்ணலாம் ;)

    ReplyDelete
  6. முழு நேர போட்டோ பிளாகர் ஆயிட்டீயா நீ... ம்ம் படம்ல்லாம் நல்லாத் தான் இருக்கு ஆனா உன்னிய உன் பிரண்ட் எடுத்தார் பாரு அந்த சில் அவுட் அளவுக்கு நீ இன்னும் பீல் பண்ணி படமெடுக்கணும்ய்யா:)))

    ReplyDelete
  7. //பதிவெழுதக் காணும் போட்டிக்கு மட்டும் வந்துட்டாரு//
    ஹ்ம்ம்...வாஸ்தவம் தான் :(
    வயசாயிடுச்சா? முன்ன மாதிரி ஓடி ஆடி ஓவர்டைம் பாக்க முடியலை.

    //சரி, சரி. அம்மிணி சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டீங்க. அதுக்கு மேல அப்பீல் உண்டா. அந்த முளை கட்டின பட்டாணியை அனுப்பலாம். தொட்டுக்க கடைசிப் படம்//

    கடைசி படம்னா மொச்சைக் கொட்டை படத்தையா சொல்றீங்க கொத்ஸ்?

    ReplyDelete
  8. //எனக்கு எல்லவற்றையும் விட பிடிச்சத்து...ஹ்ம்ம்.. ஒன்னே ஒன்னு தான்..:-)))

    அதுக்காகவே பரிசு கொடுக்கலாம் கைப்ஸ்க்கு..:-))//

    வாங்க மேடம்,
    எதுன்னு சொல்லாமயே போறீங்களே?

    //புளியம் பிரியாணியும்(இது மட்டும் அவங்க காதுக்கு எட்டுச்சு...நான் செத்தேன்) கோழி முட்டை தோசையும்
    //
    இதை சொல்றீங்களா? நான் பயந்து நடுங்கறதை பாத்து சந்தோஷமா?
    :(

    ReplyDelete
  9. //முட்டை அருமையாக வந்து இருக்கிறது.//

    வாங்க தல! வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி.

    உண்மையில டேபிள் மேலே வச்சி க்ளோசப்ல ஃபோகஸ் பண்ணி எடுக்கறதை உங்க படங்களைப் பாத்து தான் கத்துக்கிட்டேன். உண்மையிலேயே ரிசல்ட்ஸ் பிரமாதமா இருக்கு. குருவே வந்து நல்லாருக்குன்னு பாராட்டறது ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  10. //சூப்பர்!!!//

    வாங்க பாபா,
    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  11. //ஜெல்லியும்
    முட்டையும்//

    //நூடுல்ஸும் ஜூப்பரு. மொளச்ச பட்டாணி அழகு.

    அதையும் கன்ஸிடர் பண்ணலாம் ;)//

    வாங்க சர்வேசன்,
    ஜெல்லியும் நூடுல்ஸும் என்னோட ஷார்ட்லிஸ்டுல இருக்கு. ஆனா முட்டையை நீங்களும் ஆனந்தும் நல்லாயிருக்குன்னு சொல்லிருக்கறது என்னை சிந்திக்க வச்சிட்டுது.

    //எல்லா படமும் ஜூப்பரு//
    அடியேன் தன்யனானேன்.
    ரொம்ப டேங்ஸுங்க.
    :)

    ReplyDelete
  12. //முழு நேர போட்டோ பிளாகர் ஆயிட்டீயா நீ... //
    அப்படியெல்லாம் இல்லை மாமூ. பக்கம் பக்கமா எழுதுனா ரொம்ப நீளமா இருக்குன்னு கமெண்ட் வருது. அதோட நானும் சோம்பேறிஸ் ஆஃப் இந்தியா ஆயிட்டேன். அதான். மத்தபடி
    நான் இன்னும் வெறும் ப்ளாக்கர் தான்.

    //ம்ம் படம்ல்லாம் நல்லாத் தான் இருக்கு ஆனா உன்னிய உன் பிரண்ட் எடுத்தார் பாரு அந்த சில் அவுட் அளவுக்கு நீ இன்னும் பீல் பண்ணி படமெடுக்கணும்ய்யா:)))//
    அத மட்டும் மறக்காதீங்கய்யா :( ஒரு மேரீட் மேன் வாழ்க்கையில வெளாடறது உங்களுக்கெல்லாம் நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  13. எல்லா படமும் சூப்பர் நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. சூப்பர் தல!!

    வெற்றி நாயகனே!!
    காமிரா காவியமே!!
    ஒளி ஓவியமே!!
    மேக்ரோ மேதையே!!!
    ஆப்புக்கே அபர்ச்சர் பார்க்கும் சிங்கமே!!
    பட்டாணியை படமெடுத்த எங்கள் அச்சாணியே!!
    முட்டைக்கு கலரடித்த மூவேந்தனே!!

    இதையெல்லாம் பேனர் அடிக்க ஆர்டர் கொடுத்தாச்சு தல! :))

    ReplyDelete
  15. தல,


    படமெல்லாமே அட்டகாசம்.... :))

    ReplyDelete
  16. //எல்லா படமும் சூப்பர் நல்லா இருக்கு//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சிவா.

    ReplyDelete
  17. //தல,


    படமெல்லாமே அட்டகாசம்.... :))//

    டேங்கீஸ்பா ராயல்.
    :)

    ReplyDelete
  18. //வெற்றி நாயகனே!!
    காமிரா காவியமே!!
    ஒளி ஓவியமே!!
    மேக்ரோ மேதையே!!!
    ஆப்புக்கே அபர்ச்சர் பார்க்கும் சிங்கமே!!
    பட்டாணியை படமெடுத்த எங்கள் அச்சாணியே!!
    முட்டைக்கு கலரடித்த மூவேந்தனே!!

    இதையெல்லாம் பேனர் அடிக்க ஆர்டர் கொடுத்தாச்சு தல! :))//

    எல்லாம் சரி தான்...ஆனா இந்த பட்டங்கள்ல ஒரு புரட்சி பட்டம் கூட இல்லியே...ஊருக்குள்ள என்னை எவன் பெரிய மனுஷனா மதிப்பான். அதை நெனச்சா தான் வெசனமா இருக்கு.

    ReplyDelete
  19. //ஒரு புரட்சி பட்டம் கூட இல்லியே...ஊருக்குள்ள என்னை எவன் பெரிய மனுஷனா மதிப்பான்//

    அதான் நேத்தே 'புரட்சி தல' பட்டம் கொடுத்துட்டோமே தல!! :))

    ReplyDelete
  20. இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(

    தங்கமணி கொடுத்த ஐடியா படி 6 தான் என் PICK.

    ReplyDelete
  21. மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு போட்டி ரூல்ஸ்ல..

    ReplyDelete
  22. //படங்கள் ஏதாவது உணவு பதார்த்தமாகவோ அல்லது கனி காய்கறிகளாகவும் இருக்கலாம்.அதுக்காக செடி கொடி, ஆடு,மாடு,கோழி எல்லாம் உயிரோடு இருக்கும்போது படம் எடுத்து அனுப்பினால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது!! :-)//

    அப்படின்னு PIT ப்ளாக்ல போட்டுருக்கறதுனால ஓட்டோட இருக்கற முட்டையை மிகுந்த மனக்கஷ்டத்துக்கிடையே போட்டிக்கு சேக்காம விட்டுட்டேன்.(ரெண்டு பேரு நல்லாருக்குன்னு வேற சொல்லிருக்காங்க).
    :(

    இருந்தாலும் போட்டிக்கு வந்துருக்கற மத்த எண்ட்ரீஸ் எல்லாம் பாக்குற போது நாம இன்னும் நெறைய கத்துக்கனும்னு மட்டும் புரியுது.

    ReplyDelete
  23. //அதான் நேத்தே 'புரட்சி தல' பட்டம் கொடுத்துட்டோமே தல!! :))//

    அடடா, சாரி 'புரட்சி பாவலரே'...மறுபடியும் மன்னிக்கனும் 'புரட்சி காதலரே'...நான் அதை மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு.
    :)

    ReplyDelete
  24. //மேடம்னு சொல்றவங்களுக்கு பரிசு குடுக்ககூடாதுன்னு ஒரு சட்டம் இருக்கு போட்டி ரூல்ஸ்ல..//

    எங்கூர்ல எங்க கலாச்சாரப் படி காலேஜ் பேராசிரியையா இருக்கறவங்களை 'மேம்'னோ 'மேடம்'னோ தான் கூப்பிடுவோம். என்ன தான் இண்டர்நெட்ல குந்திக்கிட்டு மொக்கை போட்டாலும் நம்ம பண்பாட்டை விட முடியுங்களா?

    இருந்தாலும் உங்க புரட்சிகரமான கமெண்டுக்காக உங்களுக்கு 'புரட்சி புரஃபஸர்' என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    :)

    ReplyDelete
  25. //இப்படி ஜொள் விட வச்சிட்டீங்களே நல்லா இருங்க :(

    தங்கமணி கொடுத்த ஐடியா படி 6 தான் என் PICK//

    //சாரி சாரி படம் 5//

    வாங்க மேடம்,
    "நீள நேரம் இல்லை பார்க்க" :)
    எப்படியிருக்கீங்க. படம் எண் 5ஐ போட்டிக்குச் சேர்த்துட்டேன். நன்றி.

    ReplyDelete
  26. எனக்கென்னவோ எல்லாருமே அசையாம போஸ் கொடுக்கிற மாதிரி தெரியுது.அதனால எட்டாவதா ஆடுறவருக்கு பரிசு கிடைச்சா நல்ல துன்னு தோணுது.

    ReplyDelete
  27. அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice, gradient use பன்னீங்களா?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)

    மூணு பதிவு காட்டி ஒன்னு தான் இருக்கு...

    என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....

    ReplyDelete
  29. நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். மாவாட்டக் கத்துக் கிடனும் என்று சொன்னவுடன் K.B.யின் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  30. //"நீள நேரம் இல்லை பார்க்க"//

    இப்படியெல்லாம் முழிபெயர்த்து அழவைக்காதீங்க ப்ளீஸ்! நீங்க தான் கண்ணாலம் ஆனதுலருந்து ரொம்ப பிசியா இருக்கீங்க!

    ReplyDelete
  31. வெற்றி மீது வெற்றி வந்து உன்னை(ங்களை) சேரும் அதை வாங்கை தந்த பெருமை எல்லாம் எங்களை சேரும் ;)

    ReplyDelete
  32. வாங்க நட்டு,
    யாரு எடுத்திருந்தாலும் நல்ல படங்களுக்குக் கண்டிப்பா பரிசு கெடைக்கும்னு நம்பறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  33. //அழகா வந்திருக்கு படங்கள், முட்டை என்னுடைய choice, gradient use பன்னீங்களா?

    வாழ்த்துக்கள்//

    வாங்க ஒப்பாரி,
    ஆமாங்க colour gradient use பண்ணி தான் அந்த எஃபெக்ட் கொண்டு வந்தேன். உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  34. //போட்டிக்காக... வாழ்த்துக்கள் அய்யா :)//

    நன்றிப்பா புலி.

    //மூணு பதிவு காட்டி ஒன்னு தான் இருக்கு...

    என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....//

    என்ன சொல்ல வர்றேன்னு புரியலியே புலி?
    :(

    ReplyDelete
  35. //நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்//
    வாங்க சதங்கா,
    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.


    //மாவாட்டக் கத்துக் கிடனும் என்று சொன்னவுடன் K.B.யின் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது//
    ஆமாங்க! எனக்கும் அந்த படத்துக்கு இந்தப் பாட்டு தான் இன்ஸ்பிரேஷன்.
    :)

    ReplyDelete
  36. //இப்படியெல்லாம் முழிபெயர்த்து அழவைக்காதீங்க ப்ளீஸ்! நீங்க தான் கண்ணாலம் ஆனதுலருந்து ரொம்ப பிசியா இருக்கீங்க!//

    ஹி..ஹி...
    :)

    ReplyDelete
  37. கலக்குறீங்க கைப்புள்ள... அந்த ஜெல்லி ரொம்ப அழகு

    ReplyDelete
  38. கலக்குறீங்க கைப்புள்ள.... அந்த ஜெல்லி ரொம்ப அழகு.

    ReplyDelete