புதுசா வரப் போற 'குஷி-2' படத்துல ஒரு சீன். படத்தோட ஹீரோ வெட்டி(விஜய்), தேன் குடிக்கப் போன எடத்துல ஒரு வெளக்கைப் பாத்துட்டு அதுலேருந்து ஒரு சுடரை ஏத்திக் கொண்டாந்து தமிழ் மணக்கற எடத்துக்கும் வலை தொங்கற மத்த எடங்களுக்கும் பொதுவா ஏத்தி வைக்கிறாரு. சுடரை ஏத்தி வச்சிட்டுத் தேடிப் பாத்தா,வெளக்கை அணையாம பாத்துக்க ஜோதிகா எங்கேயும் தென்படலை. சரி, ஆபத்துக்குப் பாவமில்லைன்னு அந்தப் பக்கமா போன நம்ம 12பி நாட்டாமை ஸ்யாமைப் பாத்துச் சுடரை அணையாம மத்த எடங்கள்லயும் ஏத்தி வைங்கய்யான்னு குடுக்கறாரு. ஆனா நம்ம ஜோதிகா...சே...சே...12பிக்குச் சுடரை ஏத்தி வைக்கறவங்களைக் கூப்பிடணும்னு தோணலை...ஏந்தறவங்களைக் கூப்புடனும்னு தான் தோணியிருக்கு. அதனால "தல தேன்கூடு சுடர் அடுத்து ஏந்த போறது நீங்கதான்...என்னோட போஸ்ட் பார்த்திட்டு ஆக வேண்டியத பாருங்க"ன்னு கேட்டுக்கிட்டாரு. ஏந்தச் சொன்ன ஸ்யாமோட அன்புக்குக் கட்டுப்பட்டுக் கையில வாழை மட்டைக் கூட இல்லாம ரிஸ்க் எடுத்து ஏந்திருக்கேன் சாமிகளா.
இதான் சாக்குன்னு வாயைத் தொறக்க வச்சி நெருப்புக் கோழி முட்டை மாதிரி இருக்கற வெளக்கோடச் சேத்துச் சுடரை என் வாயில வைச்சி திணிச்சிடாதீங்கப்பு. சுடர் ஏத்துனதுக்கு ஆதாரமா அஞ்சு கேள்விக்குப் பதில் சொல்லணுமாம்லே? எதோ ராத்திரில வெளக்கை எரிய வுட்டுத் தூக்கக் கலக்கத்துல கிறுக்குனது...
1. கைப்புள்ளனு பேரு உங்களுக்கு எப்படி வந்துச்சு...சொந்த பேரா, தானா வந்த பேரா, காரணப்பேரா, இல்ல பட்டபேரா?
இந்த நக்கல் தானே வேணாங்கிறது? இருந்தாலும் இந்தப் பேரைக் கருவா வச்சி கற்பனை பண்ணுனப்பத் தோணுனது கீழே.
கைப்புள்ள - சொந்தப் பேரா இருந்திருந்தா :
அ. "ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே டூ யூ...ஹேப்பி பர்த்டே...டியர் கைப்புள்ள! ஹேப்பி பர்த்டே டூ யூ"
ஆ. "எழிலன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜகன்னாதன்" - ப்ரெசெண்ட் மிஸ்
"ஜோசஃப்" - ப்ரெசெண்ட் மிஸ்
"கைப்புள்ள" - ...
"கைப்புள்ள" - ...
"க்கைப்புள்ள..."
"டேய் கைப்புள்ள! மிஸ் உன்னைத் தாண்டா கூப்புடறாங்க"
"யெஸ் மிஸ்...ப்ரெசெண்ட் மிஸ்"
"கைப்புள்ள!...லேட்டா வர்ற்தோட இல்லாம க்ளாசுலேயே தூக்கம் வேறயா?...அட்டெண்டென்சு எடுக்கறது கூடத் தெரியாமத் தூங்கறியா நீ? கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்"
இ. "குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக "நேருவும் குழந்தைகளும்" என்றத் தலைப்பில் இப்போது மேடையில் பேச வருவது எங்கள் பள்ளியின் எட்டாம் வகுப்பு அ பிரிவின் மாணவர் கைப்புள்ள"
ஈ. நாலாவது வருஷ ப்ராஜெக்ட் ரிப்போர்டின் அட்டையில்"A Model Study for Removal of Vortices in Lower Mettur Barrage Power House No.4 at Ooratchikkottai" - Final Year B.E. Project in Civil Engineering by K.Dyeaneshwaran, Kaipullai and A.P.Arun Prasad Raja
கைப்புள்ள - தானா வந்தப் பேரா இருந்திருந்தா :
"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தாயே! கைப்புள்ளன்னு பேர் தந்து அகிலம் அறிய வைத்தாய் நீயே"ன்னு சரஸ்வதி சபதம் ரேஞ்சுக்கு ஒரு பாட்டு பாடியிருக்கலாம்.
கைப்புள்ள - காரணப் பேரா இருந்திருந்தா :
அ. பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பாடம் எண்.10 'அஞ்சா நெஞ்சன் கைப்புள்ள'யில் இரண்டாவது பத்தியில்
"வண்ண வண்ணமாக வளைந்து நெளிந்து அடி வாங்குவதில் வீரனான அஞ்சாநெஞ்சன் கைப்புள்ள, குழந்தை வயதிலிருந்து கழுதை வயது வரை கை சூப்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தக் காரணத்தால் கைப்புள்ள என்று எல்லோராலும் பாசத்துடன் அழைக்கப் பட்டார். நாளடைவில் அவருடைய சொந்தப் பெயர் மறக்கப் பட்டு காரணப் பெயரினாலேயே அனைவராலும் அறியப் பெற்றார்."
(அதாவது நாளைக்கு வரலாற்றுல எடம் புடிச்சதுக்கப்புறம்...)
கைப்புள்ள - பட்டப் பேரா இருந்திருந்தா :
B.A, B.Sc, M.A, M.Sc மாதிரி B.K.(Bachelor of Kaipullaiology), M.K.(Master of Kaipullaiology) பட்டம் குடுக்கலாம்.
சரி சரி...ரொம்பக் கடிச்சிட்டேன்னு நெனக்கிறேன். 'கைப்புள்ள' கதாபாத்திரத்தின் குணநலன்கள்(!) எனக்கு ரொம்பப் புடிச்சதுனாலயும், 'கைப்புள்ள'ங்கிற பேரு வித்தியாசமா இருந்ததுனாலயும் அந்தப் பேரை எனக்கு நானே சூட்டிக்கிட்டேன்யா...சூட்டிக்கிட்டேன்யா.
2. வருத்தபடாத வாலிபர் சங்கம் னு ஆரம்பிச்சு,அதுக்கு ஒரு ஆபீஸ் புடிச்சி,போட்டு போர்டு மாட்டி, ஒரு பென்ஸ் கார் வாங்கி அதல ஏறி எங்கள தள்ள வெச்சு தெனமும் போய் அடி வாங்கிட்டு வரதுக்கு ஐடியா எப்படி தோனுச்சு?
மாட்டிக்கினியா? ஹிஸ்டரில நீ வீக்குன்னு தெரிஞ்சுப் போச்சு நைனா. எனக்கு எங்க ஐடியா தோணுச்சு? பென்ஸ் கார் வாங்கற ஐடியா பொன்ஸும் தேவும் சேர்ந்து யோசிச்சதுனால வந்தது. உண்மையில ஆப்பு வாங்குறது மட்டும் தான் நானு...வக்கிறதுக்கு ஒரு குரூப்பு ராப்பகலா உழைச்சிக்கிட்டு இருக்கு.
3.அகமதாபாத் சப்பாத்திஸ் பத்தி நச்சுனு நாலு வரில சொல்லுங்க?
மறுபடியும் கலத் சவால். கேள்வியே தப்பாயிருக்கே? அகமதாபாளையத்துல சப்பாத்திஸ் எல்லாம் ஃபேமஸ் இல்லப்பா...இந்தப் பக்கமெல்லாம் டோக்லா தான். மஞ்சக் கலர்ல கடுகு, பச்சை மிளகாய், கொஞ்சமா தேங்காப்பூ போட்டு கடலை மாவுல பண்ணிருப்பாங்க. அத சாப்புடும் போதெல்லாம், நம்ம புத்திக்கு மட்டும் என்னமோ இட்லி உப்புமா சாப்புடற மாதிரியே இருக்கும். சரி....சரி...டென்சன் ஆவாதே... நீ கேக்கற டோக்லாவும் நல்லாத் தான் இருக்கும். அக்டோபர் மாசத்துல நவராத்திரி சமயத்துல ரெண்டு குச்சி எடுத்துக்கிட்டுப் பாளையத்துப் பக்கம் வந்தீன்னா டோக்லாவோட டாண்டியா கூட ஆடலாம்.
4.இது பிப்ரவரி மாசம்ங்கறதால இந்த வருசம் ப்ரபோஸ் பண்ண கார்டு, கெக்கே பொக்கே எல்லாம் வாங்கி வெச்சுட்டீங்களா?
ஏம்ப்பா...இம்புட்டு ஆப்பையும் வாங்கிட்டு நான் சிங்கிள் பீசா நடமாடுறது கூட உனக்குப் பொறுக்கலையா? பொக்கே வாங்கச் சொல்லி ஐடியா குடுத்து ஒரேயடியா எனக்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடா? வளர்ந்தப் பயலுங்களே நம்மளைப் பாத்து அங்கிள்னு சொல்லிக் கேவலப் படுத்தறானுவ. இந்த லட்சணத்துல ப்ரபோஸ் பண்ணறேன்னு போயி அங்கேயும் போய் அசிங்கப் படணுமா? அதுவும் இல்லாம நம்ம பாளையத்துப் பக்கம் பார்க்ல காதல் பறவைகளாச் சுத்தற பொண்ணு-பசங்களைக் கலாச்சாரத்தைக் காப்பாத்தறோம்னு ஒரு குரூப்பு கெளம்பி அடிச்சித் துவைச்சிருக்காய்ங்க. கீழே இருக்கற நியூஸைப் பாருப்பா.
VHP Workers thrash young couples
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊருல நம்ம ஆளுங்கக் கையால அடி வாங்குறது வேற? பாஷை தெரியாம ஊருல அடி வாங்கிட்டு மனசுக்கு இதமா அய்யோ அம்மான்னு கத்தக் கூட முடியாம என்னத்துக்கு வீணாப் போய் அடியை வாங்கிக்கிட்டு? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு?
5.நம்ம ஊர் தலைவருங்கள்ள (இருந்த/இருக்கிற) யார உங்களுக்கு ரொம்ப்ப பிடிக்கும்..ஏன்?
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்"ங்கிற வாக்குக்கு ஏத்த மாதிரி வாழ்ந்து காட்டிய கர்மவீரர் காமராஜர். தனக்குக் கிடைக்காத கல்வி, பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைக்க வழிவகை புரிந்தவர். ஐஐடி சென்னை நிறுவப் படப் போற சமயத்துல அது ஆந்திராவில அமையணுமா இல்ல தமிழகத்துல அமையணுமான்னு பலத்த விவாதம் நடைப்பெற்றுச்சாம். ஆனா அப்படியொரு சிறப்பான கல்விக் கழகம் சென்னையில் வர வேண்டும் என்பதற்காக அப்போது முதல்வராக இருந்த காமராஜர் அனைத்து வசதிகளையும் செய்து தந்ததோடு, அப்போது அடர்ந்த வனப் பகுதியாக இருந்த கிண்டியில் ஏழு கி.மீ.சுற்றளவு கொண்ட ஒரு மிகப் பெரிய இடத்தையும் ஐஐடி வளாகம் அமைவதற்காக அளித்தார் என எங்கோ எப்போதோ கேள்விப் பட்டிருக்கேன். இது போல அவர் செய்த பல நல்ல காரியங்களைப் பற்றி டண்டணக்கா என்ற பதிவர் தன்னுடைய வலைப்பூவில் பதிந்திருக்கிறார்.
இந்தச் சுடரை(வாழைமட்டை இல்லாம) ஏந்த சொல்லற அளவுக்கு நான் இரக்கமில்லாதவனில்ல. அதனால வைகை வேந்தன் அன்புத் தம்பி ராயல் 'ராம்'சாமியைச் சுடர் ஏத்தும் சுடர்மணியாக இருக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.
2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?
3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?
4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?
5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?
செவ்வாக் கெழமையும் அதுவுமா ரொம்ப நாளைக்கப்புறம் சுடர் ஏத்(ந்)திருக்கேன். டச் வுட்டதுனால கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும், சுடரை ஏத்தி வச்ச நம்ம வெட்டிக்குப் பதினாலாம் தேதிக்குள்ள ஒரு அமெரிக்கன் ஜோதிகா கெடைக்கணும்னு வாழ்த்தி, தன்னோட கடலை மேட்டர் எல்லாம் தைரியமா ப்ளாக்ல எழுதுன நம்ம 12பி, அவங்க தங்கமணி கிட்ட மொத்து வாங்காம தப்பிக்கனும்னு வேண்டிச் சுடரை அணையாம பாதுகாப்பாப் பக்குவமாக் கொண்டு போங்க சாமிங்களான்னு கேட்டுக்கறேன்.
தல,
ReplyDeleteஎன்னையும் மனுசனா மதிச்சு ஒன்னோட டார்சை என்கிட்டே குடுத்துருக்கே....
இப்போ ரெண்டுகெட்டான் நேரத்திலே என்னத்தை நான் யோசிச்சு எழுத???
ஹிம் விடியக்காலை எழுதுறேன்... நீ கேட்ட கேள்விக்கு தூங்கின மாதிரிதான் :)
நான் தான் முதல் ஆள்...
ReplyDeleteஜி has left a new comment on your post "சுடர் ஏந்து...சுடர் ஏத்து...செவ்வாக்கெழமை":
ReplyDeleteசுடர் கண்ணுக் கூசுது.... அதிரடிக் கேள்விகளுக்கு அதிரடி பதில்கள்.... ராயலு ராம் இனி பஞ்சர்தான் :))
ராயல்.......
ReplyDeleteநான் போடறதுக்கு முன்னாடி கமெண்ட் போட்டாச்சா???
ராத்திரி 2 மணிக்கு தூங்காம என்ன வேலை????
எல்லா பதில்களும் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்.....
ReplyDeleteகேள்விகள் அதைவிட சூப்பர்...
ராயல் மழுப்பாமல் பதில் சொல்லவும்... இல்லையென்றால் தனி பதிவு தயாராகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...
வெட்டி, நீர் முதல் ஆள் இல்லை. இந்த பதிவில் ராயல் வந்தாச்சு, உம்ம தல பதிவு எப்படி போடணுமுன்னு மறந்து போயிட்டாரு. அந்த சொதப்பலில் நான் போட்ட பின்னூட்டத்தையும் காணும்.
ReplyDeleteஅடிக்கடி வந்து பதிவு போட்டாத்தானே. இப்படி வருஷத்துக்கு ஒரு செவ்வாய்க்கிழமை வந்தா இப்படித்தான்.
பேரைப் பத்தி எழுதியே முக்கால்வாசிப் பதிவை ஒப்பேத்திட்டீங்க.. மிச்சமிருக்கிற கால்வாசிப் பதிவுல காதல் கீதல் விசயமெல்லாம் வரும்னா அதையும் காணோமே? (சுடர் பதிவுன்னா அதெல்லாம் உண்டு தானே?)
ReplyDeleteஇந்த வெளயாட்டுல 'சுட்டும் விழிச் சுடரே'னு அஸினோட டான்ஸ் ஆடப்போறது யாருங்க?
ReplyDeleteரசித்தேன்..ரசித்தேன்
ReplyDeleteதல சுடர்னு ஆரம்ப்பிச்ச உடனே அப்படியே அடிச்சு தூள்கிளப்பிட்ட...ஒன்னு ஒன்னும் சூப்பர்...நாளைக்கு ஆப்போட வரேன் :-)
ReplyDeleteஎனக்கும் தலயா ராயலானு கொஞ்சம் டவுட்டு இருந்தது...சரி தலக்கு அப்புறம் ராயலுக்குதான் போகும்னு நினைச்சேன் நீ நிறைவேத்திட்ட தல :-)
ReplyDeleteஎங்கய்யா என் முதல் பின்னூட்டம்? மெயிலில் தேடிப் பார்த்து எடுத்துப் போடும்....
ReplyDeleteஇலவசக்கொத்தனார் has left a new comment on your post "சுடர் ஏந்து...சுடர் ஏத்து...செவ்வாக்கெழமை":
ReplyDeleteதலையெல்லாம் சுத்துதப்பா! ( சங்க தலயை சொல்லலை, இது என் தலை!) ஒண்ணு புரியுது. இந்த 4,6 மேட்டர் மாதிரி அடுத்த அலை இந்த சுடர் மேட்டர். ஆனா இதுல ஒண்ணும் புரியற மாதிரி எழுதக் கூடாது. சரியா?!
கைப்புள்ள, ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு..
ReplyDeleteஇது வருகைபதிவு தான்.. அப்புறமா வந்து கமண்டுறேன்
wow. good answers. and questions. waiting for the next post of raam.
ReplyDeleteரொம்ப ரொம்பரொம்ப...ரொம்ப நல்லாயிருக்கி.
ReplyDeleteசும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க தல........ :)))
ReplyDeleteபெயர் காரணம் சூப்பர்
சூப்பர் தல..இம்புட்டு நாள் லீவ் விட்டதுக்கு சேர்த்துவச்சு அசத்திட்டீங்க :)
ReplyDelete//A Model Study for Removal of Vortices in Lower Mettur Barrage Power House No.4 at Ooratchikkottai" - Final Year B.E. Project in Civil Engineering by K.Dyeaneshwaran, Kaipullai and A.P.Arun Prasad Raja
//
என்னா இது? சந்தடி சாக்குல உங்க பெரிய படிப்பெல்லாம் எடுத்துவிட்டாச்சா ;))
கலக்கிட்டீங்க கைப்புள்ள. அஹமதாபாத் குளிரையும் தாண்டி வீரச்சுடர் ஏத்தின உங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்பவே நல்லா இருந்துது கைப்புள்ள..
ReplyDeleteஒரு நல்ல comeback பதிவு..
வாரம் ஒண்ணாவது எழுதுங்க இது மாதிரி..
//ஜி has left a new comment on your post "சுடர் ஏந்து...சுடர் ஏத்து...செவ்வாக்கெழமை":
ReplyDeleteசுடர் கண்ணுக் கூசுது.... அதிரடிக் கேள்விகளுக்கு அதிரடி பதில்கள்.... ராயலு ராம் இனி பஞ்சர்தான் :))//
வாங்க ஜி! நீங்க தான் ஃபர்ஸ்ட். ரொம்ப டாங்ஸூங்கோ. போன பதிவுக்கு நீங்கப் போட்ட கமெண்டுக்கு உடனே பதில் போட முடியலை. மாப்பு கேட்டுக்கறேன். ராயலு கில்லாடி பையன்ங்க...எப்படியும் அடிச்சி ஆடுவாருன்னு தான் நெனக்கிறேன். பாப்போம்.
:)
//தலையெல்லாம் சுத்துதப்பா! ( சங்க தலயை சொல்லலை, இது என் தலை!) ஒண்ணு புரியுது. இந்த 4,6 மேட்டர் மாதிரி அடுத்த அலை இந்த சுடர் மேட்டர். ஆனா இதுல ஒண்ணும் புரியற மாதிரி எழுதக் கூடாது. சரியா?!//
ReplyDeleteதூக்க கலக்கத்துல 12பியோட அன்புக்குக் கட்டுப்பட்டு மப்புல எழுதுனது சாமி...கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருக்கும்...கண்டுக்காதீங்க.
:)
//என்னையும் மனுசனா மதிச்சு ஒன்னோட டார்சை என்கிட்டே குடுத்துருக்கே....//
ReplyDeleteஉன்னை என்ன கற்பூரம் ஏத்தி வாயில போடவா சொன்னேன்? ஒரு சுடர்மணி பனியன் தானே போடச் சொன்னேன்?
//இப்போ ரெண்டுகெட்டான் நேரத்திலே என்னத்தை நான் யோசிச்சு எழுத???
ஹிம் விடியக்காலை எழுதுறேன்... நீ கேட்ட கேள்விக்கு தூங்கின மாதிரிதான் :)//
சரியான ஜெனுயினான பதில் வரலைன்னா போராட்டம் வெடிக்கும்னு பணிவன்புடன் எச்சரிச்சிக்கிறேன்.
:)
//நான் தான் முதல் ஆள்...//
ReplyDeleteசுடர் ஏத்துனதுல நீ தான் ஃபர்ஸ்ட்...ஆனா இங்கன மூனு பேரு இதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க. இந்தப் பதிவை ரீபப்ளிஷ் பண்ணதுனால உரல் மாற, பழைய உரல்ல இருந்த ரெண்டு பின்னூட்டம் காப்பி பண்ணி போட்டுருக்கேன்.
ஆனாலும் சுடரை ஏத்தி ஒரு நல்ல வேலையைச் செஞ்சிருக்கேப்பா. பாப்போம் ராயல் என்ன சொல்றாப்லன்னு?
:)
//ராயல்.......
ReplyDeleteநான் போடறதுக்கு முன்னாடி கமெண்ட் போட்டாச்சா???
ராத்திரி 2 மணிக்கு தூங்காம என்ன வேலை????//
அதானே மேட்டர் இல்லாம ராயலு எதுக்கு ராக்கோழி வேலை பாக்கணும். ஒன்பது மணிக்கே "வீட்டுக்குப் போயிட்டேனே"பார்ட்டியாச்சே நம்ம ராயலு? எங்கேயோ எதோ இடிக்குது. உண்மை கொஞ்ச நாள்ல வெளியே வரும்னு நம்புவோம்.
:)
//எல்லா பதில்களும் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்.....//
ReplyDeleteநன்றி.
//கேள்விகள் அதைவிட சூப்பர்...
ராயல் மழுப்பாமல் பதில் சொல்லவும்... இல்லையென்றால் தனி பதிவு தயாராகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... //
இதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. மிக்க மகிழ்ச்சி.
//அடிக்கடி வந்து பதிவு போட்டாத்தானே. இப்படி வருஷத்துக்கு ஒரு செவ்வாய்க்கிழமை வந்தா இப்படித்தான். //
ReplyDeleteவயித்துக்காக மனுஷன் இங்கே பொட்டி தட்டுறான் பாரு...பொட்டித் தட்டி முடிச்சி வந்தாக்கா அப்புறமாத் தான் சோறு. இத அடுத்தவன் சொன்னா கசக்கும்...கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்...
:)))
//பேரைப் பத்தி எழுதியே முக்கால்வாசிப் பதிவை ஒப்பேத்திட்டீங்க.. //
ReplyDeleteஒப்பேத்தல்ல தானே நம்ம வாழ்க்கையே ஓடிட்டிருக்கு?
:)
//மிச்சமிருக்கிற கால்வாசிப் பதிவுல காதல் கீதல் விசயமெல்லாம் வரும்னா அதையும் காணோமே? (சுடர் பதிவுன்னா அதெல்லாம் உண்டு தானே?)//
சட்டியில் இருந்தாத் தானே அகப்பையில் வரும்?
:))
//இந்த வெளயாட்டுல 'சுட்டும் விழிச் சுடரே'னு அஸினோட டான்ஸ் ஆடப்போறது யாருங்க?//
ReplyDeleteஅஸின்னா நினைவுக்கு வர்றது நம்ம மு.கார்த்திகேயன் தான். அவருக்கே விட்டுக் கொடுத்துருவோம்.
:)
//ரசித்தேன்..ரசித்தேன்//
ReplyDeleteவாங்க மேடம்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
//தல சுடர்னு ஆரம்ப்பிச்ச உடனே அப்படியே அடிச்சு தூள்கிளப்பிட்ட...ஒன்னு ஒன்னும் சூப்பர்...நாளைக்கு ஆப்போட வரேன் :-)//
ReplyDeleteரைட்டேய்...வெயிட்டிங்
:)
//எனக்கும் தலயா ராயலானு கொஞ்சம் டவுட்டு இருந்தது...சரி தலக்கு அப்புறம் ராயலுக்குதான் போகும்னு நினைச்சேன் நீ நிறைவேத்திட்ட தல :-) //
ReplyDeleteஹி...ஹி...சேம் ப்ளட்...சேம் திங்கிங்.
:)
//எங்கய்யா என் முதல் பின்னூட்டம்? மெயிலில் தேடிப் பார்த்து எடுத்துப் போடும்.... //
ReplyDeleteதப்பு நடந்துப் போச்சு. மன்னிக்கணும். தேடிப் பிடிச்சுப் போட்டாச்சு. அப்புறம் என்ன ப்ரொஃபைல்ல புது படம்?
:)
//கைப்புள்ள, ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு..
ReplyDeleteஇது வருகைபதிவு தான்.. அப்புறமா வந்து கமண்டுறேன் //
வாங்க கார்த்தி,
வருகைக்கும் வருகைப் பதிவுக்கும் மிக்க நன்றி.
//wow. good answers. and questions. waiting for the next post of raam.//
ReplyDeleteவாங்க அனானி,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி.
//ரொம்ப ரொம்பரொம்ப...ரொம்ப நல்லாயிருக்கி. //
ReplyDeleteவாங்க செல்லி மேடம்,
வருகைக்கு உங்க ரசிப்புக்கும் மிக்க நன்றி.
//சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க தல........ :)))//
ReplyDeleteவாங்க அரசியாரே,
டேங்ஸுங்கோ.
//பெயர் காரணம் சூப்பர்//
ஹி...ஹி...வெளக்கேத்து வெளக்கேத்து வெளிக்கிழமைன்னு பேர் சொல்லும் பிள்ளை படம் பாட்டோடு ரைமிங்கா இருக்கட்டும்னும் பதிவுக்கு இந்தப் பேரை வச்சேன்.
:)
//சூப்பர் தல..இம்புட்டு நாள் லீவ் விட்டதுக்கு சேர்த்துவச்சு அசத்திட்டீங்க :)//
ReplyDeleteடேங்கீஸ் கப்பி நிலவா!
:)
//A Model Study for Removal of Vortices in Lower Mettur Barrage Power House No.4 at Ooratchikkottai" - Final Year B.E. Project in Civil Engineering by K.Dyeaneshwaran, Kaipullai and A.P.Arun Prasad Raja
//
//என்னா இது? சந்தடி சாக்குல உங்க பெரிய படிப்பெல்லாம் எடுத்துவிட்டாச்சா ;))//
ஹி...ஹி...அப்பப்போ உதார் விடறதுனால தானே கைப்புள்ளன்னு பேரு வச்சிருக்கு? இதை எல்லாம் கண்டுக்கப் பிடாது.
:)
//கலக்கிட்டீங்க கைப்புள்ள. அஹமதாபாத் குளிரையும் தாண்டி வீரச்சுடர் ஏத்தின உங்களுக்கு வாழ்த்துகள். //
ReplyDeleteவாங்க வல்லி மேடம்,
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
:)
//ரொம்பவே நல்லா இருந்துது கைப்புள்ள..
ReplyDeleteஒரு நல்ல comeback பதிவு..
வாரம் ஒண்ணாவது எழுதுங்க இது மாதிரி.. //
இஞ்சரங்கோ...இஞ்சரங்கோ!
ரொம்ப நன்றிங்க தெனாலி சோமரே! கண்டிப்பா முயற்சி பண்ணறேன்.
:)
அட அடா பேரக் கருவா வச்சி வந்த உங்க கற்பனை சூப்பர் கைப்பு :-)
ReplyDelete//
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊருல நம்ம ஆளுங்கக் கையால அடி வாங்குறது வேற?
//
ரொம்ப கரெக்ட் :)
கைப்ஸ், வாழபட்ட இல்லாம கைல ஏந்துனத்துக்கே இப்புடி பீலாவுடுறீங்களே....உங்க ரேஞ்சுக்கு நாக்குல ஏந்தியிருக்கனும்.
ReplyDelete(இப்புடி உசுப்பேத்திதான் உடம்பெல்லேம் ரணகளமா இருக்கு)
சரி, நம்ம வீட்டுக்கு எப்ப வரப்போறீங்க?
Maamu...
ReplyDeleteNalla irundhchu unnoda vaguppu... welcome back after a long time...
Dyeany
//கைப்புள்ள - காரணப் பேரா இருந்திருந்தா : //
ReplyDeleteஅருமை !
நீர் வரலாற்றில் இடம் பிடிக்க எனது வாழ்த்துக்கள்
//கைப்புள்ள - காரணப் பேரா இருந்திருந்தா : //
ReplyDeleteஅருமை !
நீர் வரலாற்றில் இடம் பிடிக்க எனது வாழ்த்துக்கள்
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ReplyDeleteகலக்கிட்டீங்க கைப்புள்ள. ahmbd doklas padam ellam pottu irunthaa hit rate egiri irukkum illa? :p
ReplyDeleteungalukkave "so write blog" -II release panniachu. vanthu gummi adingappu! :)
//அட அடா பேரக் கருவா வச்சி வந்த உங்க கற்பனை சூப்பர் கைப்பு :-)//
ReplyDeleteரொம்ப நன்றி அருண்குமார்.
//
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊருல நம்ம ஆளுங்கக் கையால அடி வாங்குறது வேற?
//
ரொம்ப கரெக்ட் :)//
ஹி...ஹி...நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே...டாங்கீஸுங்க
:)
//உங்க ரேஞ்சுக்கு நாக்குல ஏந்தியிருக்கனும்//
ReplyDeleteஆஹா...கெளம்பிட்டாங்கையா...கெளம்பிட்டாங்கையா
//(இப்புடி உசுப்பேத்திதான் உடம்பெல்லேம் ரணகளமா இருக்கு)
சரி, நம்ம வீட்டுக்கு எப்ப வரப்போறீங்க?//
சீக்கிரம் வரேன் சாமியோவ்.
:)
//Maamu...
ReplyDeleteNalla irundhchu unnoda vaguppu... welcome back after a long time...
Dyeany //
டாங்கீஸ் மச்சி.
//அருமை !
ReplyDeleteநீர் வரலாற்றில் இடம் பிடிக்க எனது வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி சுந்தர்.
:)
//??????????????????????????????????????????????????????????????????//
ReplyDeleteதலைவிஜி,
எதுக்கு இத்தனை கேள்விக்குறி? திரும்ப எதுக்கு வந்தேன்னு கேக்கறீங்களா?
//கலக்கிட்டீங்க கைப்புள்ள. ahmbd doklas padam ellam pottu irunthaa hit rate egiri irukkum illa? :p//
ReplyDeleteஹி...ஹி...ஐ ஆம் தி ஜெண்டில்மேன் மா
:)
//ungalukkave "so write blog" -II release panniachu. vanthu gummi adingappu! :) //
பாத்துட்டு கும்மியும் அடிச்சாச்சப்பு.
:)
//எதுக்கு இத்தனை கேள்விக்குறி? திரும்ப எதுக்கு வந்தேன்னு கேக்கறீங்களா?
ReplyDelete//
@kaips, inuma puriyala, en mokka postuku comment poda en varala?nu kekkaranga geetha madam. :p
//ஹி...ஹி...ஐ ஆம் தி ஜெண்டில்மேன் மா
:)
//
ha haa. ipdi thaan sollikanum! :p
danks for the gummi.
//வளர்ந்தப் பயலுங்களே நம்மளைப் பாத்து அங்கிள்னு சொல்லிக் கேவலப் படுத்தறானுவ.//
ReplyDelete:-))
////வளர்ந்தப் பயலுங்களே நம்மளைப் பாத்து அங்கிள்னு சொல்லிக் கேவலப் படுத்தறானுவ.//
ReplyDelete:-)) //
என்ன கைப்ஸ் அங்கிள், நிலா சிரிக்கிரார் அய்யோ அய்யோ....அன்புடன் அபிஅப்பா
தலை - அடுத்த போஸ்ட்டுக்காக நான் வெய்டிங்!
ReplyDeleteஅம்பி, அபி அப்பா, நிலா மிஸ் - ரொம்ப நன்றி.
ReplyDeleteதீக்ஷ் - அடுத்த போஸ்ட் சங்கத்துல போட்டுருக்கேன். பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
http://vavaasangam.blogspot.com/2007/02/alonein-womans-world.html