பதினைந்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு க்யூஸுங்க(Quiz தான்) இது. முயற்சி பண்ணுங்களேன் ப்ளீஸ்.
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?
4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.
5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?
6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?
9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?
11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?
12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.
13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
கூகிளிக்காம தெரிஞ்ச ஒரே பதில்
ReplyDelete2. Nike
இதையும் தப்புன்னு சொல்லிடாத தல ;))
1. சூப்பர் ஸ்டார்
ReplyDeleteஞாபகம் வந்துடுச்சு..ஆசையில் ஓடி வந்தேன் ;))
கப்பி,
ReplyDelete1,2 உங்கள் பதில் பில்குல் சஹி
:)
பெங்குயின்
ReplyDelete3. பெங்குயின்
ReplyDelete5. sakchi
வாங்க சந்தனமுல்லை,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
3. தவறு
5. சரி
மத்ததையும் முயற்சி பண்ணுங்க
அது க்யூஸ் இல்லைங்க, குவிஸ் :)
ReplyDelete1. Super Star
ReplyDelete14. ஹெர்ஷீஸ் (Hershey's கிஸ்ஸஸ்)
ReplyDelete//அது க்யூஸ் இல்லைங்க, குவிஸ் :)//
ReplyDeleteவாங்க மேம்,
க்யூஸை க்யூஸ்னு சொல்லலாம், குயிஜுன்னு சொல்லலாம்... நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.
:))
சேதுக்கரசி(மேம்),
ReplyDelete(இதானே வேணாங்கிறதுன்னெல்லாம் சொல்லப்பிடாது :)))
14 சரியான பதில்
தளபதியாரே,
ReplyDelete1. சரியான பதில்
3.Lemmings?
ReplyDelete4. Borneo (http://www.worldislandinfo.com)
5. Sakchi (http://en.wikipedia.org/wiki/Jamshedpur)
6. Self Contained Underwater Breathing Apparatus(http://en.wikipedia.org/wiki/Scuba_diving)
7.Mrignayani (http://www.mrignayani.com)
8.Goa (http://en.wikipedia.org/wiki/Category:Rivers_of_India)
9.In Jun 87 Subedar Bana Singh along with other men of 8 J&K LI snatched it away from Pakistanis. The Quaid Post was thus renamed as “Bana Post”.
10.Bird-of-paradise (Strelitzia reginae)
birdofparadise.gif..file pera maatharathuku munnadiye paathutane :D
12. பாரிஸ் கார்னர்ல அந்த இது இருக்கும்ல இது..அதுக்கு பக்கத்துல ஒரு அது இருக்குமே..அது தானே ;))
13. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் (http://en.wikipedia.org/wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu)
வாழ்க கூகிளார்..வளர்க அவர் புகழ் ;)
3. Penguin
ReplyDelete6. self-contained underwater-breathing apparatus
சிபி,
ReplyDelete3 தவறு
6 சரி...முதல் பதில் உங்களோடது தான்.
:)
கப்பி,
ReplyDeleteகலக்கல்ஸ் ஆஃப் அர்ஜெண்டினா.
3,4,5,6,7,8,9,10,13 - மிகச் சரியான பதில்கள்.
12 - துல்லியமான பதில் தேவைன்னு சொல்லியும் நக்கல் பண்ணதுனால மிகக் கொடூரமான முறையில் கா வுட்டுக்கறேன்.
3. Sea Lion
ReplyDelete2. Nike
ReplyDeleteசிபி,
ReplyDelete2, சரி
3, தவறு
:)
4. Borneo
ReplyDeleteசிபி,
ReplyDelete4 சரி
3. Lemming
ReplyDeleteசிபி,
ReplyDelete3 சரி
எப்படியோ விடாம புடிச்சிட்டீங்க?
:)
5. Navarsi, Gujarat
ReplyDeleteதல, என்னால முடிஞ்சது. தப்பா இருந்தா சபையில மானத்தை வாங்க கூடாது, இப்பவே சொல்லிட்டேன்.
ReplyDelete1. ரஜினி காந்த்
2. Nike
3. Lemming . (People are saying this is a myth)
4. island of Borneo
5. Sakchi
8. Goa
11. Rajiv Gandhi
13. Rajaji
8. Goa
ReplyDeleteசிபி,
ReplyDelete8 சரி
5 தவறு
//முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
ReplyDelete//
காதலி சாப்பிட்ட எல்லா சாக்லேட்டுகளும் உலகப்புகழ் பெற்றவைதான்!
***
முத்தத்துடன் தொடர்புபடுத்துவதற்காகவே வாங்கித்தந்த சாக்லேட்டுகளுக்கு
என்ன பெயர் வைப்பது?
மன்னிச்சிடு தல...கொடுத்த வாக்கை காப்பாத்திடு ;)
9. Mr.Bana Singh, Current Name Of The Post : Siachin
ReplyDeleteவாங்க உதய்,
ReplyDeleteகலக்கல்ஸ் ஆஃப் மில்வாக்கீ.
1,2,3,4,5,8,11(ஏன்னு சொல்லலியே) - இதெல்லாம் சரி
13 தவறு
11. Rajiv Gandhi
ReplyDelete13. O. P. Ramaswamy Reddiyar
14. HERSHEY'S CHOCKLATES
ReplyDeleteசிபி,
ReplyDelete9 வீரரின் பெயர் சரி(சிகரத்தின் தற்போதைய பெயர் தவறு)
//காதலி சாப்பிட்ட எல்லா சாக்லேட்டுகளும் உலகப்புகழ் பெற்றவைதான்!
ReplyDelete***
முத்தத்துடன் தொடர்புபடுத்துவதற்காகவே வாங்கித்தந்த சாக்லேட்டுகளுக்கு
என்ன பெயர் வைப்பது?//
இன்னுமொரு நவீன் பிரகாஷ் இங்கு உருவாகிக் கொண்டிருக்கிறார். கமெண்டே இப்படி ஜில்லுன்னு போடறீங்களே? எப்படி கப்பி இப்படியெல்லாம்?
சிபி,
ReplyDelete11 சரி(ஏன்னு சொல்லலியே?)
13 சரி
சிபி
ReplyDelete14 மிகச் சரி
12 .Seshadri
ReplyDeleteசிபி,
ReplyDelete12 தவறு(குழம்பிட்டீங்களா?)
:)
9. Siachen Glacier
ReplyDelete12. They Hit Rajeev Gandhi In A Parade
ReplyDeleteசிபி,
ReplyDelete9 சிகரம் பேரு தப்புங்க
:)
12 க்கு இன்னும் நான் சொல்லவே இல்லையே! தவறா நம்பர் போட்டுட்டேனா? எந்த கேள்விக்கு நான் அதை சொல்லி இருப்பேன்னு ஊகித்து சொல்லுங்களேன்.
ReplyDeleteசிபி
ReplyDelete12, இப்ப சரிங்க
ஒரு க்யூஸ் மாஸ்டரா நான் நீங்க கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லப்பிடாதுங்க. அது தப்பூ
:))
9. கார்கில்
ReplyDeleteசிபி,
ReplyDelete9 மலை பேரு இப்பவும் தப்பு. ஒரு குறிப்பிட்டப் பேரை நான் எதிர்பார்க்கறேன்.
முதலமைச்சர் பேரு சொல்லி இருப்பேன்
ReplyDelete9. இமயமலை
ReplyDelete9. இமயமலை
ReplyDeleteசிபி,
ReplyDelete9 தப்பு
மத்ததுக்கு மவுனமே என் பதில். ஏன்னா எங்க பரம்பரைக்குத் தெரிஞ்சதெல்லாம் நேர்மை, கருமை, எருமை
:)
11 காரணம் கரெக்டா?
ReplyDelete9. அண்ணாமலை!
ReplyDelete15. சேஷாத்ரி
ReplyDeleteசிபி,
ReplyDeleteநம்பர் தப்பா போட்டு என்னைய கொழப்பிட்டீங்களே?
12 முன்னே சரின்னு சொன்னேன் இப்ப தப்பு
11 காரணம் இன்னொருக்கா ப்ளீஸ்
:)
சிபி,
ReplyDelete15 சரி
9 இப்பவும் தவறு(கேள்வியை இன்னொருக்கா பாருங்க)
:)
8. கோவா
ReplyDelete9. பானா சிங்க்
11. ராஜீவ்காந்தி, இலங்கையில் நடந்த ராணுவ அணிவகுப்பில் தாக்கப்பட்டார்
13. ராமசாமி உடையார்
14. HERSHEYS
15. Shesadri
குழப்பம் நீங்கியதா?
9 எவரெஸ்ட்
ReplyDeleteசிபி,
ReplyDeleteயெஸ். 11 இப்ப சரி
சிபி,
ReplyDeleteஎல்லாமே சரி தான். நீங்கள் பதில் சொல்லாதது 7, 12
சிபி,
ReplyDelete9 சிகரத்தின் பெயரும் இன்னும் வரவில்லை
//பதில் சொல்லாதது 7, 12 //
ReplyDeleteஇதென்ன புது கயமைத்தனம்?
அப்போ 10?
பஞ்சவர்ணக்கிளி
9. ஜம்மு காஷ்மீர்
ReplyDelete7,9/2, 10,12 --> சரண்டர். ஆளைவுடும்.
ReplyDeleteபின்னூட்டக் கயமைத்தனத்துக்கு ஏதாவது பார்த்து போட்டுக் குடுங்க!
//இதென்ன புது கயமைத்தனம்?
ReplyDeleteஅப்போ 10?
பஞ்சவர்ணக்கிளி //
லேது பாபு
:)
//சேதுக்கரசி(மேம்),
ReplyDelete(இதானே வேணாங்கிறதுன்னெல்லாம் சொல்லப்பிடாது :)))//
சும்மா வாங்க மேம் வாங்க மேம்-னா அப்புறம் வரமாட்டேன் பாத்துக்குங்க :(
:D
வேற வேலை இல்லையா உங்க ரெண்டு பேருக்கும்?
ReplyDeleteகைப்புவின் சவால் , சஹி ஜவாப்.
ReplyDeletehttp://thacnathaku.blogspot.com/
1. ரஜினிகாந்த்
ReplyDelete2. எதீனா
12. பொதுவாகப் பேருந்து நிலையங்களைத்தான் அப்படிக் குறிப்பார்கள். சென்னை பேருந்து நிலையம். அதாவது பாரிமுனை பேருந்து நிலையம்.
13. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்...அல்லது பிரகாசம்
தெரியலை கைப்ஸ் :-(
நம்பர் பத்து கொகாட்டூ?
ReplyDeleteநம்பர் பத்து கொகாட்டூ?
ReplyDelete//சும்மா வாங்க மேம் வாங்க மேம்-னா அப்புறம் வரமாட்டேன் பாத்துக்குங்க :(
ReplyDelete:D //
ஹி..ஹி...கோச்சிக்காதீங்க.
:)
நான் தொடர்கிறேன்...
ReplyDeleteமுத்தத்துடன் தொடர்புபடுத்துவதற்காகவே வாங்கித்தந்த சாக்லேட்டுகளுக்கு
என்ன பெயர் வைப்பது?
முத்தம் என்றே
வைக்கலாம் என்கிறேன்!
முத்தமே வைத்துவிடு
என்கிறாய் நீ?
பனிச்சிகரத்தின் பெயர்தான்
விடை என்கிறாய் நீ?
உன் பார்வைதானே
அது என்கிறேன் நான்!
சென்னையின் மையப்புள்ளி
எங்கே என்கிறாய் நீ!
உதன் உதடுகளின்
மையச்சுழலில்
சிக்கிக்கொண்டுள்ளது
என்றேன் நீ?
போடா பொறுக்கி
என்கிறாய் நீ!
ஆனாலும் உன் வெட்கம்
ஆர்டிக் பெருங்கடலில்
தற்கொலை செய்துகொள்கிறது!
செருப்பைக் கழட்டிக்
காட்டுகிறாய் நீ!
அது விடைசொல்லும்
கயமை என்கிறார்
கைப்புள்ளை!
ஜிரா,
ReplyDelete1 சரி
2 தவறு
12 இன்னும் கொஞ்சம் இதுல பாக்கி இருக்கு
13 சரி
//வேற வேலை இல்லையா உங்க ரெண்டு பேருக்கும்?//
ReplyDeleteஹி...ஹி...வாங்க பணிவிரும்பி. இன்னிக்கு தேங்க்ஸ்கிவிங் டேயாம்ல? நாங்க ரெண்டு பேரும் அது தான் பண்ணிட்டிருக்கோம்.
:)
தல..
ReplyDelete11. ராஜீவ் காந்தி
14. Cadbury's ல ஏதாவது சாக்லேட்டா இருக்கும்...0.5 மார்க் கொடுப்பீங்களா??
15..தேடறேன்..தேடறேன்..தேடிக்கிட்டே இருக்கேன் ;)
15. Seshadri Swamigal.
ReplyDeleteI read the last question only. I will come back and read the remaining questions.
வெற்றியின் தேவதை
ReplyDeleteஎது என்கிறாய் நீ?
வெற்றி கிடைத்தால்
கிடைக்கும் தேவதை நீ
என்கிறேன்!
தீவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன
நாடுகள் என்று வியக்கிறாய்!
நம் இதழ்களைப் பகிரலாமா
என்றால் வெட்கத்துடன்
மறுத்து பருகுவோம்
என்கிறாய்!
இரும்பின் காரணத்தால்
ஊரின் பெயர் மாற்றம்!
உந்தன் காரணத்தால்
என் பெயரையே
மாற்றிக் கொள்கிறேன்!
நீரில் மூழ்கி செல்லும்போது
மூச்சு முட்டாதா?
என்கிறாய் நீ!
உனக்காகக் காத்திருக்கையில்
எனக்கு மூச்சு முட்டுகிறது
என்கிறேன்!
மத்தியப் பிரதேசம்
பற்றியும் கேள்வி
உள்ளது என்கிறேன்!
சீ.போடா என்று
வெட்கம் காட்டுகிறாய்!
இரு நதிகள்
இருக்கும் மாநிலம்
எதுவாமே?
உன் விழிகளைக்
காண்கையில்
நதிகளின் குளுமை
எனக்கு!
12. மூர் மார்க்கெட்
ReplyDelete12. Chennai Harbour's Zero Gate (main entry point) as a temporary shelter
ReplyDeleteவாங்க ஆன்மீகச் செம்மலே,
ReplyDelete15 Bingo. மிகச் சரி. நீங்க சொல்லலைன்னா வேறு யார் சொல்லுவாங்க. மத்த கேள்விகளுக்கும் பாத்து ஒரு டிரை விடுங்க.
டேங்ஸ்.
:)
கப்பி,
ReplyDelete11 சரி
வாங்க வல்லி மேடம்,
ReplyDelete10 ஆம் கேள்விக்கு உங்கள் பதில் தவறு
உங்களை பின்னூட்ட போலீஸ்காரர் விசாரிசிட்டு வரச் சொன்னார்.
ReplyDelete(ஹிஹி.... ஏதாவது போட்டுக் கொடுங்க)
இன்னும் பேப்பர் வரலை!
ReplyDeleteஎஃப் ஐ ஆர் போடணும் போல இருக்கு!
பின்னூட்டங்கள் வழியே வைரஸ் வருகிறது. உஷாராக இருக்கவும்.
ReplyDeleteபேசாம நம்ம கூட கூட்டணி வைச்சிக்குங்க!
ReplyDeleteசட்டசபைல நிறைய கேள்வி கேக்கலாம்.
கேள்விகள் கேட்பதை நிறுத்து.
ReplyDeleteஆண்டவனை அணுகு.(கூகிளாண்டவரை அல்ல)
அனைத்து விடைகளும் தானாய் கிடைக்கும்.
மக்களே!
ReplyDeleteமணி 12.30 ஆகுது. சனிக்கிழமை ஆஃபீசுக்குப் போற ஒரு அவல நிலையில நான் இருக்கேன். அதுனால உத்தரவு குடுத்தீங்கன்னா போயி தாச்சிக்குவேன். சரிங்களா?
நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பதில்களைத் தனிப் பதிவாப் போடறேன்.
இப்பவும் பதில் சொல்லனும்னு நெனக்கிறவங்க சொல்லலாம்.
12 ஆம் கேள்விக்கு இன்னும் யாருமே பதில் சொல்லலை.
தல,
ReplyDelete12. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் பாலத்தின் மையத்தில் இருக்கிறது '0' பாய்ன்ட். (அல்லது) தீவு திடலுக்கு செல்லும் பாலத்தின் மத்தியில் இருக்கிறது ( அல்லது ) தெரியாது.
:))
3. திமிங்கிலம்
ReplyDeleteஹெர்ஷே- சாக்லேட் கிஸ்ஸஸ்
ReplyDeleteவாங்க துளசிக்கா,
ReplyDelete3 பதில் தவறு
ஒரு பதிலுக்கு நம்பரை விட்டுடீங்களே? ஆனா அது சரியான விடை தான்
:)
ஸ்ரீகாந்த்,
ReplyDeleteபாவனா, நயந்தாரானு பீலா விட்டுப்புட்டு யாரும் பதில் சொல்லாத 12 ஆம் கேள்விக்குச் சரியான பதில்(99%) சொல்லிட்டியேப்பா...சூப்பர்ஸ் ஆஃப் சிட்னி. இப்ப என்ன ஸ்பெயின்ல வேலை? சூப்பர்ஸ்டார் பாடற மாதிரி "மாலை ஸ்பெயினில் சம்ஸாவா?"
:)
Srikanth has left a new comment on your post "சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு":
ReplyDeleteதல,
அடியேன் நான் எஸ்கேப் ஆப் ஸ்பேய்ன்...
பாவனா பிறந்த நாள் எப்போழுது ?
த்ரிஷாவின் புது வீடு சென்னையில் எங்கு அமைந்துள்ளது ?
நயன்தாரா வழக்கமாக தங்கும் இரு ஹோட்டல்களின் பெயர்களை வரிசை படுத்துக.
அசின் கஜினி படத்தின் ரகதுல்லா ரகதுல்லா பாடலில் மூக்கு குத்தியிருந்தாரா, நினைவு கூர்க.
இந்த மாதிரி சுலபமா கேள்விகளை கேட்டு இருந்தேனா, Syam, நான் எல்லாம் போட்டி போட்டு பதில் சொல்லி இருப்போம். அத விட்டு போட்டு...
Anonymous has left a new comment on your post "சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு":
ReplyDeleteஎன்னுடைய பதிவிற்கு வந்து ஆசிர்வாதம் கேட்டிருந்திங்க. இந்தாங்க
ஆசி (- எனக்கு) ர் வாதம்( - உனக்கு)- (பழைய சினிமா ஜோக்)
எமக்கு கேள்விகள் கேட்கமட்டும் தெரியும்
12. சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சற்று வெளியே, பொது மருத்துவமனை சாலை / பெரியார் சாலை(பூந்தமல்லி நெடுஞ்சாலை)யும், வலது பக்கத்தில் அண்ணா சாலையின் ஆரம்பத்திலிருந்து பூங்கா - கோட்டை இரயில் நிலையங்களுக்கிடையில் ஒவர்ப்ரிட்ஜ் வழியாக வரும் சாலையும் (முத்துசாமி சாலை என்றால் எங்கே என்று கேட்பீர்கள் - அதனால் இப்படி) சந்திக்கும் இடத்தில் ஒரு மைல்கல் உள்ளது. அங்குதான் சென்னையின் ஜீரோ பாயிண்ட் ஆரம்பிக்கிறது என்று எப்பவோ படித்த நினைவு.
ReplyDelete7. Mrignayani (கூகிளாண்டவர்தான் அருள் பாலித்தார் என்று ஒப்புக் கொள்கிறேன்)
ReplyDeleteMan Singh, a popular and just ruler, married a courageous Gujari village belle, Mrignayani, and the tale of their meeting has been beautifully played out in the Son-et-Lumeire. A constant friend and companion, Mrignayani was the perfect consort. Music was their mutual passion and the legendary Baiju Bawra their common guru.
http://www.mptourism.com/dest/gwa_ms.html
hi,
ReplyDelete1.Rajnikanth
2.Nike
3.Lemmings??
4.Borneo? Sabah and Sarwak areas??
8.Goa
9.Quetzal??
14.Hershey
15.Sri Seshadri Swamigal
I dont have Tamil fonts ,so had to post my answers in English
regards
Krishna
பாலராஜன்கீதா,
ReplyDeleteகலக்கிட்டீங்க.
12ஆம் கேள்விக்கு மிகச் சரியான விடையைச் சொல்லிருக்கீங்க. 7ஆம் கேள்விக்கும் உங்கள் பதில் சரி தான். வாழ்த்துகள்.
கிருஷ்ணா,
ReplyDeleteவாங்க.
1,2,3,4,8,14,15 - சரியான பதில்கள்
9 - தவறு
நல்ல முயற்சி.
0: பர்ட் ஆஃப் பாரடைஸ்
ReplyDeleteHi,
ReplyDeletejust got a few more answers
Qaid Post Question---> Its called Bana Post after Naib subedar Bana Singh
Vijotrohana Vijaymuni----> Is it the guy who attacked Rajiv Gandhi in 1987?
regards
Krishna
Hello form Mexico
ReplyDeleteசிபி..இந்த பதிவில் அதிகமான பதில்களை நீங்களே சொல்லிவிட்டதால் ... ம்ம் நான் முயற்சி செய்யவே இல்லை..
ReplyDeleteஇந்தத் தடவை கூகிள் துணையுடன்:
ReplyDelete1. ரஜினிகாந்த்
2. Nike
3. லெம்மிங்
5. Sakchi
6. Self Contained Underwater Breathing Apparatus
8. கோவா
12. சென்னை தலைமை தபால் நிலையம், அண்ணா சாலை
அன்புடன்,
மா சிவகுமார்
துளசிக்கா,
ReplyDeleteசரியான பதில். ஆனா கேள்வி எண்ணை நீங்க சொல்லலை.
கிருஷ்ணா,
ReplyDeleteஉங்க இரண்டு பதில்களும் சரியானது தான்.
:)
வாங்க சிவகுமார்,
ReplyDelete1,2,3,5,6,8 - சரிங்க
12 - இல்லீங்க
:)
நான் 10ன்னு போட்டதுலே 0 மட்டும் காமிக்குது. சரி போனாப் போட்டும்.
ReplyDeleteசரியான விடைகளைக் கேள்விக்கு அடியில் போட்டு ஒரு பதிவு போடுங்க.
ஸ்க்ரோல் பண்ணி. தலை சுத்துது:-)