Friday, November 24, 2006

சென்னையின் ஜீரோ...பதில்கள்

நேற்று முன் தினம் இட்ட பொது அறிவு கேள்வி பதிவுக்கான விடைகள் இதோ:
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
ரஜினிகாந்த் Die Hard சூப்பர் ஸ்டார் ரசிகர்களான சிபி, கப்பி ஆகியோர் இக்கேள்விக்கு வெகு விரைவாக சரியான பதிலைச் சொல்லி விட்டார்கள்:)

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
நைக்கி(Nike) Nikeயை "நைக்கி"ன்னு சொல்லனும்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். (ஒரு காலத்துல நமக்கு அது நைக் தான்). Nike நைக்கின்னா Spike ஸ்பைக்கியான்னு யாரும் என்னைய கேக்கப்பிடாது. ஏன்னா...ஏன்னு எனக்கு தெரியாது :)
http://en.wikipedia.org/wiki/Nike%2C_Inc.

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?
லெம்மிங்ஸ்(Lemmings). ஆர்க்டிக் கடலைக் கடக்க முடியாமல் லெம்மிங்குகள் மூழ்கி உயிர் விடுவதைத் தற்கொலை எனத் தவறாகக் குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். நல்ல காலம்...இந்த லெம்மிங் நாங்க சின்னப் பசங்களா இருக்கும் போது எங்க கண்ணுல படலை...இல்லன்னா "அம்மா ப்ளீஸ்மா! நாம ஒரு லெம்மிங் வளர்க்கலாம்மா"ன்னு நச்சரிச்சிருப்போம்.

http://en.wikipedia.org/wiki/Lemming

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.
போர்னியோ(Borneo) இது உலகின் மூன்றாவது பெரிய தீவு என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/Borneo

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?
சாக்சி(Sakchi) ஜம்ஷேட்ஜி நசர்வான்ஜி டாட்டா அவர்கள் நிறுவிய சாக்சி என்ற பெயருடன் இந்நகரத்தை, 1919 ஆம் ஆண்டு கெம்ஸ்போர்டு துரை(Lord Chelmsford) "ஜம்ஷேட்பூர்" எனப் பெயர் மாற்றம் செய்தார்.
http://en.wikipedia.org/wiki/Jamshedpur

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
Self Contained Underwater Breathing Apparatus என்பதின் சுருக்கமே SCUBA
http://en.wikipedia.org/wiki/Scuba_diving

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
ம்ருகநயனி(Mriganayani)க்வாலியர் நகரின் ராஜா மான்சிங்கின் மனைவியின் பெயர் தான் ம்ருகநயனி("மான் போன்ற கண்களை உடையவள்" என்பது இப்பெயருக்குப் பொருள்). நம்ம ஊருல மீனு அவங்க ஊருல மானு போலிருக்கு?:)ம்ருகநயனி என்ற பெயரில் தூர்தர்ஷனில் ஒரு இந்தி சீரியல் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
http://www.mptourism.com/dest/gwa_ms.html (நன்றி : பாலராஜன் கீதா)

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?
கோவா புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியான BITS, Goa(BITS Pilaniஇன் கிளை) ஜூவாரி நதியருகில் அமைந்திருப்பதாக அங்கு பணிபுரியும் என் நண்பர் ஒரு முறை தெரிவித்தார்.
http://en.wikipedia.org/wiki/Zuari

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
சுபேதார் நாயக். பாணா சிங்(Nb.Sub. Bana Singh). உயிரோடு இருக்கும் போதே பரம்வீர் சக்ரா வாங்கிய 14 வீரர்களில் இவரும் ஒருவர். அவருடைய நிகரற்ற சேவையைப் பாராட்டி Quaid Post என்னும் சிகரத்தின் பெயர் பாணா டாப்(Bana Top) என்று மாற்றியமைக்கப் பட்டது.
http://www.hindustantimes.com/2005/Apr/23/
5922_1332688,0015002500020000.htm


10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?

சொர்க்கத்தின் பறவை(Bird of Paradise) இந்தோனேசியா, நியூ கினீ மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இப்பறவை, தன்னுடைய வண்ணமயமான இறகுகளுக்காக மிகப் புகழ்பெற்றது. பெண் பறவையைக் கவர ஆண் பறவை ஆடும் நடனமும்(mating dance) பார்க்க நன்றாக இருக்கும்(நானும் டிஸ்கவரில பாத்தது தானுங்க). சரியாகப் பதில் அளித்தவர் துளசியக்கா மட்டுமே. கலக்கல். எப்படி கண்டுபிடிச்சீங்க?
http://en.wikipedia.org/wiki/Bird_of_paradise

11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?
ராஜீவ் காந்தி. ஜூலை 29,1987இல் இலங்கை ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயுடன் கையெழுத்திட்டு விட்டு, மறுநாள்(ஜூலை 30 அன்று) வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் ராஜீவைத் தாக்கிய இலங்கை கப்பல் படைவீரரின் பெயர் தான் விஜிதமுனி ரோஹனா டிசில்வா மன்னிக்கனும்...நான் பெயரைத் தவறுதலாக விஜிதரோஹனா விஜயமுனி என்று குறிப்பிட்டு விட்டேன். நேற்று கூகிளில் தேடித் தேடி அலுத்துப் போனவர்களிடத்தில் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் :( அப்படியிருந்தும் சில நண்பர்கள் சரியான பதிலளித்து விட்டார்கள்.
http://www.dailynews.lk/2001/11/03/wor03.html

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.
பாலராஜன்கீதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியான பதிலை அவர் மட்டுமே கூறியிருக்கிறார். அவருடைய பதிலையே இங்கு பிரசுரிக்கிறேன். "சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சற்று வெளியே, பொது மருத்துவமனை சாலை / பெரியார் சாலை(பூந்தமல்லி நெடுஞ்சாலை)யும், வலது பக்கத்தில் அண்ணா சாலையின் ஆரம்பத்திலிருந்து பூங்கா - கோட்டை இரயில் நிலையங்களுக்கிடையில் ஒவர்ப்ரிட்ஜ் வழியாக வரும் சாலையும் (முத்துசாமி சாலை என்றால் எங்கே என்று கேட்பீர்கள் - அதனால் இப்படி) சந்திக்கும் இடத்தில் ஒரு மைல்கல் உள்ளது. அங்குதான் சென்னையின் ஜீரோ பாயிண்ட் ஆரம்பிக்கிறது என்று எப்பவோ படித்த நினைவு"


13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தின்(சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்சி) பதினோறாவது முதலமைச்சர் இவர்.
http://en.wikipedia.org/
wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu


14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்(Hershey's Kisses) பென்சில்வேனியாவைச் சேர்ந்த என்ற ஹெர்ஷே நிறுவத்தினரால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளை, உற்பத்தி செய்யும் போது, இயந்திரங்கள் ஏற்படுத்தும் முத்தமிடுதல் போன்ற ஒலியினை முன்னிட்டு "ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்" எனப் பெயர் வந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் :)
http://www.hersheys.com/kisses/

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
சேஷாத்ரி சுவாமிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய 19ஆம் அகவையில் துறவு பூண்டார். இவர் தொட்டதெல்லாம் விளங்கியதால் இவருக்கு "தங்கக்கை சேஷாத்ரி" என்ற பெயரும் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.
http://www.arunachalasamudra.org/seshadri.html தளத்தில் படித்தது "Sometimes Sri Seshadri Swamigal, the older by ten years would be called ‘elder Seshadri’ (anna) and Sri Ramana ‘younger Seshadri’ (thambi). One time a devotee told Sri Ramana that everyone called Seshadri a mad man. Ramana smilingly replied that there were three mad men in Arunachala. One was Seshadri, the second was Arunachaleswarar and the third was himself."
இதையும் பாருங்கள் - http://www.omarunachala.com/seshadri.asp

கலந்து கொண்டு பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

29 comments:

  1. அருமையான அறிவுபூர்வ தகவல்கள்!

    படிக்க மிகவும் சுவையாக இருந்தது!

    பதிலகள் வந்தபின்னர்தான்!

    நமக்கெல்லாம் எங்கே அவ்வளவு அறிவு!

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள். ம்ருகநயனி தொலைக்காட்சித் தொடர் நான் நண்டு போல இருந்த பொழுது வந்தது. அதில் ம்ருகநயனியாக நடித்த பல்லவி ஜோஷி எனக்குப் பிடித்த நடிகையரில் ஒருவர்.

    ஏதினா என்று நான் தவறாகச் சொல்லியிருந்தேன். ஏதீனா போர்க்கடவுள். வெற்றிக் கடவுள் ஆண் என்று தெரியும். ஆனால் பெயர் நினைவிற்கு வரவில்லை. நைக்கி....

    ReplyDelete
  3. நிறைய அருமையான தகவல்களுக்கு நன்றி.

    கிரேக்கக் கடவுள் ஆடிடாஸ் என்று நினைத்தேன்:-)

    கைப்புள்ள நல்ல புள்ளை.

    ReplyDelete
  4. //ஹெர்ஷேஸ்//

    தல நைக்கி மாதிரி இதுவும் ஹெர்ஷீஸ் னு சொல்வாங்க இங்க :-)

    ReplyDelete
  5. மொத்தத்துல சூப்பர் பதிவு..போன பதிவுக்கு வந்தேன்..வெறும் கேள்வி மட்டும் தான் இருந்தது...சரி எப்படியும் இந்த பதிவுல answer இருக்கும்ல ரெண்டயும் சேத்து படிச்சுக்கலாம்னு போய்டேன் :-)

    ReplyDelete
  6. //அருமையான அறிவுபூர்வ தகவல்கள்!

    படிக்க மிகவும் சுவையாக இருந்தது!//

    வாங்க ஐயா,
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.

    //பதிலகள் வந்தபின்னர்தான்!

    நமக்கெல்லாம் எங்கே அவ்வளவு அறிவு!//

    என்னங்க ஐயா...தமாஷ் பண்ணறீங்க. உங்களோட ஆன்மீக அறிவும், தமிழ்ப் புலமையைப் பற்றியும் தான் ப்ளாக்ல எல்லாருக்கும் தெரியுமே?
    :)

    ReplyDelete
  7. //நல்ல தகவல்கள். ம்ருகநயனி தொலைக்காட்சித் தொடர் நான் நண்டு போல இருந்த பொழுது வந்தது. அதில் ம்ருகநயனியாக நடித்த பல்லவி ஜோஷி எனக்குப் பிடித்த நடிகையரில் ஒருவர்//

    ஆமாங்க. பல்லவி ஜோஷி நல்ல நடிகை. ம்ருகநயனி தொடர் டிவியில் வரும் போது "மகா சதுர் ம்ருக நயனீ..."ன்னு ஒரு டைட்டில் சாங் வரும் அதுவும் ஞாபகத்துக்கு வருது.

    //ஏதினா என்று நான் தவறாகச் சொல்லியிருந்தேன். ஏதீனா போர்க்கடவுள். வெற்றிக் கடவுள் ஆண் என்று தெரியும். ஆனால் பெயர் நினைவிற்கு வரவில்லை. நைக்கி....//
    ஒரு சின்ன திருத்தம் ராகவன்...நைக்கியும் கிரேக்க பெண் கடவுள் தான். விகிபீடியா சுட்டியைப் பாருங்களேன்.

    ReplyDelete
  8. //நிறைய அருமையான தகவல்களுக்கு நன்றி.

    கிரேக்கக் கடவுள் ஆடிடாஸ் என்று நினைத்தேன்:-)

    //

    வாங்க மேடம்,
    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. அடிடாஸ் என்பதற்கும் பெயர் காரணம் உண்டு. Adi Dassler என்பவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கியதால் அடிடாஸ் என்ற பெயர் வந்தது. அதன் பின்னர் All Day I Dream About Sports என்ற சுருக்கமும் நடைமுறைக்கு வந்தது. ஆனால் கம்பெனி பெயர் வைக்கும் போது இந்த பொருள் படுமாறு அடிடாஸ் என்று பெயர் வைக்கவில்லை. ஆனால் பின்னாளில் அடிடாஸ் நிறுவனமே இந்த சுருக்கத்தை உபயோகித்துக் கொண்டது. இதனை Backronym expansion என்கிறார்கள்.

    //கைப்புள்ள நல்ல புள்ளை//

    மிக்க நன்றி மேடம்.
    :)

    ReplyDelete
  9. ////ஹெர்ஷேஸ்//

    தல நைக்கி மாதிரி இதுவும் ஹெர்ஷீஸ் னு சொல்வாங்க இங்க :-)//

    ஓ அப்படியா? திருத்திக்கிறேன். இனிமே ஹெர்ஷீஸ் கிஸ்ஸஸ்னு சொல்றேன்.
    :)

    ReplyDelete
  10. //மொத்தத்துல சூப்பர் பதிவு..போன பதிவுக்கு வந்தேன்..வெறும் கேள்வி மட்டும் தான் இருந்தது...சரி எப்படியும் இந்த பதிவுல answer இருக்கும்ல ரெண்டயும் சேத்து படிச்சுக்கலாம்னு போய்டேன் :-) //

    அப்படியெல்லாம் பண்ணலாமா? அது தப்பில்லையா? அப்புறம் நம்ம பொழப்பு எப்படி நடக்குறது? சரி இந்த தபா வுட்டுடறேன்...அடுத்த தபா நோ மிஸ்டேக்கிங்ஸ் ஆஃப் வாஷிங்டன் டி.சி.
    :)

    ReplyDelete
  11. நல்ல தகவல் தலை,
    கிஸ்ஸஸ் தவிற வேற எதுக்கும் எனக்கு பதில் தெரியலை தலை :(

    ReplyDelete
  12. அடிக்'கடி' இப்படி ஒரு குவிஸ் போடுங்க கைப்புள்ளெ.
    நம்ம பொது அறிவை(???) கொஞ்சம் சரிபார்த்துக்கலாம்:-)))

    ReplyDelete
  13. நைக்கி.. நெனச்சேன்.. எழுதாமத் தான் விட்டுட்டேன் :)

    ReplyDelete
  14. ஒம்போது கேள்விகளுக்கு சரியா சொல்லியிருக்கேன் தல,
    ஏதாவது பாத்து போட்டு குடுங்க.

    1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
    பார்த்ததா?? நடித்ததா??
    சிவாஜி வந்ததுக்கபுறம் சொல்ரேன்.

    2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
    BARBIE.

    அப்படியே நிக்கி.


    4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.

    போர் நீ யா??

    5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?

    தெரியாதூர்புரம்.

    இதுக்கெல்லாம் சாட்சி யே கிடையாது.


    8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?

    தப்பு சாமி, இருக்குறது ஒரே இந்தியாதான்.நீங்க எந்த இந்தியான்னு கேக்கப்பிடாது.
    அதனாலே இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாது
    (இந்தியாவில் எந்த மாநிலத்தில் ) அப்படின்னு இருக்கணும்.
    கோவா உங்களுக்கு புடிக்குமோ.???


    9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
    BANA SINGH.


    11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?

    டிஸ்கோ சாந்தியோட அப்பா நடிச்ச விஜயபுரி வீரன் பாத்திருக்கேன். ஆனால் அவருக்கும் இதுக்கும் ஏதுனாச்சும் சம்பந்தம் இருக்க வாய்ப்பே இல்லியே.
    ராசீவு காந்திய அடிச்ச சிங்கள சிப்பாயோட பேரு மாதிரி இருக்கேப்பா.

    12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.

    முத்தன்ணன் பாலம்.

    13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?சும்மா ஆபிஸ்லே ஓ.பி அடிச்சதுக்கு வட்டியும் முதலுமா தல வேலை வாங்க்கிட்டார்.
    ஏதாவது படத்துலே நடிச்சிருந்தா டக்கு டக்குன்னு சொல்லலாம்.
    ஓமந்தூரார் என்னும் ராமசாமி ரெட்டியார்.

    ReplyDelete
  15. ஹாய் கைப்ஸ்,

    நிஜமாவே ரொம்ப நல்லாயிருந்தது.படிக்க படிக்க ஒரு exaitment. நிறைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியல.பட் இப்ப ஒ.கே.தெரிஞ்சுகிட்டேன்.

    சரி இதை எல்லாம் எங்கே பிடிச்சீங்க? எப்படி?

    ReplyDelete
  16. //சரி இதை எல்லாம் எங்கே பிடிச்சீங்க? எப்படி? //

    ஆமாம் தல எப்பிடி பிடிச்சே இம்பூட்டு விஷயங்களையும்???

    ReplyDelete
  17. //சரியாகப் பதில் அளித்தவர் துளசியக்கா மட்டுமே. //

    தல...அந்த போட்டோ பேரை மாத்தறதுக்கு முன்னாடியே பார்த்து நானும் பதிலை சரியாத்தானே சொன்னேன்?? அதெல்லாம் கணக்குல வராதா?? ;))

    ReplyDelete
  18. //நல்ல தகவல் தலை,
    கிஸ்ஸஸ் தவிற வேற எதுக்கும் எனக்கு பதில் தெரியலை தலை :(//

    வாங்க சந்தோஷ்,
    வந்து வாழ்த்துனதுக்கு நன்றி சந்தோஷ்.

    ReplyDelete
  19. //அடிக்'கடி' இப்படி ஒரு குவிஸ் போடுங்க கைப்புள்ளெ.
    நம்ம பொது அறிவை(???) கொஞ்சம் சரிபார்த்துக்கலாம்:-))) //

    வாங்க துளசியக்கா,
    அப்படீங்கறீங்க? கடிச்சிடுவோம். உங்கள மாதிரி படிக்கிறவங்க ஊக்கமும் ஆதரவும் இருந்தா எவ்வளவு வேணாலும் ஒடம்பை ரணகளம் ஆக்கிப்போம்ல?
    :)

    ReplyDelete
  20. //நைக்கி.. நெனச்சேன்.. எழுதாமத் தான் விட்டுட்டேன் :) //


    எதுவாக இருந்தாலும் எழுதிருக்கலாம்ல? எனக்கு ஒரு கமெண்டு எண்ணிக்கையை திரை மறைவுலேருந்து குறைச்சிட்டீங்களே?
    :))

    ReplyDelete
  21. //ஒம்போது கேள்விகளுக்கு சரியா சொல்லியிருக்கேன் தல,
    ஏதாவது பாத்து போட்டு குடுங்க.//

    பெருசு,
    கண்டிப்பாங்க. நீங்க பதில் சொன்ன விதமும் ஜாலியா சுறுசுறுப்பா பதிவு போட்டதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அடுத்த பெரு நாட்டு அதிபர் தேர்தல்ல நில்லுங்க. லாரியில பசங்களை இட்டாந்துடுறேன்...அடிச்சி தூள் பண்ணிடுவோம்.

    வருங்கால பெரு அதிபர் பெருசு வாழ்க வாழ்க!

    ReplyDelete
  22. //ஹாய் கைப்ஸ்,

    நிஜமாவே ரொம்ப நல்லாயிருந்தது.படிக்க படிக்க ஒரு exaitment. நிறைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியல.பட் இப்ப ஒ.கே.தெரிஞ்சுகிட்டேன்.

    சரி இதை எல்லாம் எங்கே பிடிச்சீங்க? எப்படி?//


    //ஆமாம் தல எப்பிடி பிடிச்சே இம்பூட்டு விஷயங்களையும்??? //

    வாங்க சுமதி மேடம்/ராயல்,
    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தொழில் ரகசியத்தைக் கேக்கறீங்களே?
    :)

    சும்மா வெளயாட்டுக்குச் சொன்னேன். இதுல சில கேள்விகள் முன்னே பார்த்த சில குவிஸ் நிகழ்ச்சிகளில்(சித்தார்த் பாசு, டெரெக் ஓ ப்ரையன்)நினைவில் நின்றதை எடுத்து போட்டிருக்கேன். சில கேள்விகள் "எதனால்" என்று நான் விடை தேட முயன்ற போது கூகிளில் தேடித் தெரிந்து கொண்டது. உதாரணம் ம்ருகநயனி. சில கேள்விகள் நண்பர்கள் மூலமா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது. இதையெல்லாம் சும்மா அப்படியே சொன்னா சுவாரசியம் குன்றிடுமேன்னு தான் கேள்விகளாத் தொகுத்து குவிஸ் மாதிரி போடறது.

    ப்ராமிஸா நமக்கு தெரிஞ்சதெல்லாம் காட்டனும்ங்கிறது என்னோட எண்ணம் கிடையாது. உண்மையைச் சொல்லனும்னா...இந்த குவிஸ் பதிவுகளைப் போடறதுக்கு நெறைய ஹோம்வர்க் செய்ய வேண்டியிருக்கும். அப்படியிருந்தாலும் இது வரைக்கும் கேட்ட கேள்விகள்லேயே கஷ்டமான கேள்விகள்னு நெனச்ச சில கேள்விகளுக்குக் கூட நம்ம நண்பர்கள் பதில்ளிச்சிட்டாங்க. நானும் இந்த குவிஸ் பதிவுகளின் மூலம் புது விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறேன்ங்கிறது மறுக்க முடியாத உண்மை. உதாரணத்துக்கு மேலே ஜி.ராகவன் ம்ருகநயனி தொடர்ல நடிச்ச நடிகையின் பெயர் பல்லவி ஜோஷின்னு சொல்லிருக்காரு. இது நான் தெரிஞ்சிக்கிட்ட புது விஷயம். ஸ்யாம் Hershey'sங்கிறதை எப்படி உச்சரிக்கணும்னு சொல்லிக் குடுத்துருக்காரு. இந்த மாதிரி...

    ReplyDelete
  23. //தல...அந்த போட்டோ பேரை மாத்தறதுக்கு முன்னாடியே பார்த்து நானும் பதிலை சரியாத்தானே சொன்னேன்?? அதெல்லாம் கணக்குல வராதா?? ;))//

    வாய்யா கப்பி,
    போங்காட்டம், அழுகுணி ஆட்டம் ஆடிட்டு நல்லபுள்ள மாதிரி கேள்வி வேறயா? சரியானதாக ஒரு பதிலுக்கு எமது பாண்டிய மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப் படும் முதல் மனிதனும் நான் தான்...போங்காட்டத்தை எதிர்க்கும் முதல் மனிதனும் நான் தான்.
    :)

    ReplyDelete
  24. ஹாய் கைப்ஸ்,
    //"வாங்க சுமதி மேடம்/ராயல்,"//

    இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

    ReplyDelete
  25. //எதுவாக இருந்தாலும் எழுதிருக்கலாம்ல? எனக்கு ஒரு கமெண்டு எண்ணிக்கையை திரை மறைவுலேருந்து குறைச்சிட்டீங்களே?//

    அதானே இல்ல? நைக்கி பதிலை ஹெர்ஷீஸ் பதில் போட்ட அதே பின்னூட்டத்துல தானே எழுதியிருப்பேன்? பின்ன எப்படிப் பின்னூட்ட எண்ணிக்கை குறையும்? அது சரி, இப்பப் பார்த்தீங்களா, இதை எழுதப் போய், இந்தப் பதிவுல 2 பின்னூட்ட எண்ணிக்கை ஏறப்போகுது. இப்பத் தெரியுதுங்க உங்க வலைப்பதிவர்கள் சூட்சுமம் எல்லாம் :-D

    ReplyDelete
  26. // சரி இந்த தபா வுட்டுடறேன்...அடுத்த தபா நோ மிஸ்டேக்கிங்ஸ் ஆஃப் வாஷிங்டன் டி.சி.
    :) //

    தல அதுக்கு நான் தான் வருத்த படனும்...தலக்கு ஆப்பு வெக்க முடியலயேனு...

    ReplyDelete
  27. கைப்புள்ள..சூப்பரான பயனுள்ள பதிவு..

    வாழ்த்துக்கள்.. சென்னையின் ஜீரோ பாயின்ட் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை

    ReplyDelete
  28. Hi kaipullai,
    I would like to add one more intresting question to question 1. Andhaa kannon movie was remake of a tamil movie. Can anyone tell the movie name and hero of the movie in tamil?

    Ghilli.

    ReplyDelete
  29. since noone answered the question that i posted. here i am giving the answer. The movie name is "sattam oru irruttarai" . hero in thamizh is "Vijayakanth" and directed by vijay's Naina.

    ReplyDelete