நவராத்திரி அப்போ போன பதிவுல போட்டிருக்கற படங்களோட ஒரு சின்ன வீடியோவும் எடுத்தேன். அங்கே வேலை செய்யறவங்களோட குழந்தைகள் ஆடி காட்டிய கர்பா(Garba) நடனம். ஒரு வாரத்துல இந்த கர்பா நடனத்துலேயே பல வகைகளைப் பார்த்தேன். பெண்கள் வட்டமா சுத்தி வந்து கும்மி அடிக்கிற மாதிரி இருக்கற நடனத்தையும் கர்பா நடனம்னு தான் சொல்றாங்க. இத மாதிரி சின்ன குழந்தைகள் வேகமா ஆடற நடனத்தையும் கர்பான்னு தான் சொல்றாங்க. பின்னாடி ஒலிக்கிற பாடல் குஜராத்தி மொழியில அமைஞ்சது. பள்ளிக் கூடத்து டான்ஸ் மாஸ்டரோட பயிற்சியில பசங்க நல்லாவே ஆடுனாங்க. பாரம்பரிய உடை அணிஞ்சு சந்தோஷமா ஆடற பாத்ததும் நமக்கும் ஒரு குத்து குத்தனும் போல தான் இருந்தது. ஆனா நம்ம கூட இருந்த பசங்க எவனும் கம்பெனி குடுக்காததுனால ஒரு நல்ல கலைஞனின் நடனத் திறமைகளை மக்களால கண்டுகளிக்க முடியலை :)
வீடியோவைப் பகிர்ந்துக்கனும்னு நேத்து தான் Photobucketல அக்கவுண்ட் தெறந்தேன். படம் ஒழுங்காத் தெரியுதா இல்லியான்னு பாத்துட்டுச் சொல்லுங்க.
மனதின் ஓசை has left a new comment on your post "கர்பா நடனம்":
ReplyDeleteபடம் தெரியுதுப்ப தெரியுது...
//படம் தெரியுதுப்ப தெரியுது... //
ReplyDeleteஒருத்தரு நம்மள மதிச்சு கமெண்ட் போட்டா அது ஒழுங்கா பப்ளிஷ் ஆவனும். அப்படி ஆவலைன்னா நாங்க கயமைத்தனம் பண்ணத் தான் செய்வோம்.
வந்து கமெண்ட் போட்டதுக்கு நன்றி மாவீரரே!
தெரியுது நல்லவே தெரியுது
ReplyDelete//தெரியுது நல்லவே தெரியுது//
ReplyDeleteவாப்பா ராயல்,
பாத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா.
கைப்ஸ்,
ReplyDeleteபடம் அழகாவே தெரியுது!
இன்னும் கொஞ்சம் போகஸ் பண்ணி எடுத்திருக்கலாமே, எல்லாமே லாங் ஷாட்டா இருக்கு!, ஒரு பிகர் முகம் கூட சரியா தெரியலையே :((
It is clear and good..good work..enjoyyyyyyyyyyyyyyyy mohan
ReplyDeleteநடனம் நன்றாகவே இருந்தது. பாட்டும், உடைகளும் கூட சூப்பர்.
ReplyDeleteஆமாம் ஆடற இடத்தில், முன்னாடி ஏதோ குடங்கள்-ல்லாம் வச்சிருக்காங்களே, நம்மூரு கரகாட்டம் போலவா அது? :-))
அந்த க்ளிப்பை நீங்க போடவே இல்லையே? :-))
படம் தெரியுது கைப்புள்ளெ.
ReplyDeleteநல்லாதான் இருக்கு.
கலக்குறீங்க போங்க............
ReplyDelete//கைப்ஸ்,
ReplyDeleteபடம் அழகாவே தெரியுது!
இன்னும் கொஞ்சம் போகஸ் பண்ணி எடுத்திருக்கலாமே, எல்லாமே லாங் ஷாட்டா இருக்கு!, ஒரு பிகர் முகம் கூட சரியா தெரியலையே :((//
அடப்பாவி தம்பி,
அதுங்களைப் பாத்தா பிகருங்க மாதிரியா தெரியுது? அஞ்சாவது ஆறாவது படிக்கிற குழந்தைங்கப்பா...உங்களைச் சொல்லி குத்தமில்லை...படம் எடுத்தவனை(நான் தான்) உதைக்கனும். அவ்வளோ லட்சணத்துல படம் எடுத்துருக்கான். ஆனா அவுங்களோட அஃபிசிய்ல ஃபோட்டோகிராபரும் உள்ளே நின்னுக்கிட்டு க்ளோசப்ல படம் புடிச்சிட்டு இருந்தாப்புல. நாம் ஓசியில படம் புடிக்கிறவங்க தானே...அதனால கிட்டத்துல போயி எடுக்க முடியலை.
//நடனம் நன்றாகவே இருந்தது. பாட்டும், உடைகளும் கூட சூப்பர்.
ReplyDeleteஆமாம் ஆடற இடத்தில், முன்னாடி ஏதோ குடங்கள்-ல்லாம் வச்சிருக்காங்களே, நம்மூரு கரகாட்டம் போலவா அது? :-))
அந்த க்ளிப்பை நீங்க போடவே இல்லையே? :-))
//
வாங்க ரவிசங்கர்,
முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றிங்க. இல்லீங்க கரகம் மாதிரி எல்லாம் இல்லீங்க. அந்த குழந்தைகள் பந்தலுக்குள் வரும் போது குடங்களை இடுப்பில் வைத்து எடுத்து வந்தார்கள்னு நினைக்கிறேன். அது ஒரு prop மாதிரி தான் உபயோகப்பட்டதுன்னு நினைக்கிறேன். கடைசி வரை அந்த குடங்கள் கீழேயே தான் இருந்தன.
//படம் தெரியுது கைப்புள்ளெ.
ReplyDeleteநல்லாதான் இருக்கு. //
//கலக்குறீங்க போங்க............ //
வாங்க துளசியக்கா, செந்தழல் ரவி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஒன்னியுமே தெரியலப்பு, நான் படத்தை சொல்ல அப்பு. நல்லா கிட்டக்க போயி எடுத்து இருக்கலாம்லே. என்ன பொட்டி வாங்கி என்னா பிரியோசனம்.
ReplyDeleteகைப்புள்ளைக்குக் கயமைத்தனம் தேவையா! இல்லை. இல்லை. இல்லவே இல்லை.
ReplyDeleteகர்பா நடனத்தைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் டீவில பாத்திருக்கேன். சுழண்டு சுழண்டு ஆடுவாங்க. நல்லாயிருக்கும் பாக்க.
கைப்பு பாத்த கர்பா நடனம்னு தலைப்பு வெச்சிருந்தா இந்நேரம் பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போயிருக்காதோ!
padam elam katringa ..hmm theritinga thalaiva. sari neega enga irukeenga antha videola?
ReplyDeleteநீங்க தான் ஸ்கூல் பசங்கனு தெளிவா போட்டுருக்கீங்களே.. இருந்தும் மக்கள் அவங்களுக்கு எது வேணும்னு இன்னும் தெளிவா இருக்காங்க ;) நடனம் அருமை, சென்னைல கூட குஜராத்தியர் எல்லாம் சேர்ந்து இப்போ தாண்டியா கர்பா இரவு வெக்கறாங்க. இதுக்காக புகைப்படவாளில சேர்ந்த உங்க சேவை உள்ளத்த பாராட்ட வார்த்தைய தேடறேன்.. (இந்தாப்பா ஒரு சோடா எடு!)
ReplyDelete//பள்ளிக் கூடத்து டான்ஸ் மாஸ்டரோட பயிற்சியில பசங்க நல்லாவே ஆடுனாங்க.//
ReplyDeleteடான்ஸ் மாஸ்டரா மாஸ்டரினியா?? மாஸ்டரினியா இருந்தா அவிங்க போட்டோவையும் போட்டு கவுரவப் படுத்தறது ;)
//வீடியோவைப் பகிர்ந்துக்கனும்னு நேத்து தான் Photobucketல அக்கவுண்ட் தெறந்தேன். //
எங்க மேல இருக்க பாசத்துல என்னென்னவோ செஞ்சிருக்கீயே தல...அவ்வ்வ்வ்வ்வ்
தொறந்த அக்கவுண்டை சீக்கிரம் மூடிடு..களவானிப்பசங்க நிறைய பேரு சுத்திட்டிருக்காங்க :))
//ஒன்னியுமே தெரியலப்பு, நான் படத்தை சொல்ல அப்பு. நல்லா கிட்டக்க போயி எடுத்து இருக்கலாம்லே. என்ன பொட்டி வாங்கி என்னா பிரியோசனம்.//
ReplyDeleteவிவ்,
கையில பொட்டி இருந்தாலும் இன்னும் கத்துக்க வேண்டியது மெய்யாலுமே நெறைய இருக்குதுங்க...கத்துக்கறேன்.
//கைப்புள்ளைக்குக் கயமைத்தனம் தேவையா! இல்லை. இல்லை. இல்லவே இல்லை.
ReplyDeleteகர்பா நடனத்தைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் டீவில பாத்திருக்கேன். சுழண்டு சுழண்டு ஆடுவாங்க. நல்லாயிருக்கும் பாக்க.
கைப்பு பாத்த கர்பா நடனம்னு தலைப்பு வெச்சிருந்தா இந்நேரம் பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போயிருக்காதோ! //
வாங்க ஜிரா,
உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷம். எப்பவாச்சும் உருப்படியா எழுதனும்னு நெனக்கும் போது நையாண்டி, கலாய்ச்சல் இதை எல்லாம் கொஞ்சம் குறைச்சிக்கனும்ங்கிறது நம்ம எண்ணம். அதான் :) ஆனாலும் நான் எதுவும் கலாய்க்கலைன்னாலும் பின்னூட்டத்துல கலாய்க்கப் பட்டுக் கொண்டு தானிருக்கேங்க.
:)
//padam elam katringa ..hmm theritinga thalaiva. sari neega enga irukeenga antha videola? //
ReplyDeleteவாங்க தீக்ஷ்,
கலாய்க்கிறீங்க பாத்தீங்களா? நான் அந்த வீடியோல இருந்திருந்தா படத்தை யாரு எடுத்துருப்பாங்க? நீங்கல்லாம் இந்த வீடியோவைப் பாக்கனும்னு நான் ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டேன்.
:)
நீங்க தான் ஸ்கூல் பசங்கனு தெளிவா போட்டுருக்கீங்களே.. இருந்தும் மக்கள் அவங்களுக்கு எது வேணும்னு இன்னும் தெளிவா இருக்காங்க ;) நடனம் அருமை, சென்னைல கூட குஜராத்தியர் எல்லாம் சேர்ந்து இப்போ தாண்டியா கர்பா இரவு வெக்கறாங்க. இதுக்காக புகைப்படவாளில சேர்ந்த உங்க சேவை உள்ளத்த பாராட்ட வார்த்தைய தேடறேன்.. (இந்தாப்பா ஒரு சோடா எடு!)
ReplyDeleteசென்னையும் காஸ்மோபாலிட்டன் ஆகிட்டு வருதுங்க மும்பை, தில்லி போல
சாரி தல...ஆபீஸ்ல பார்க்க முடியல...அப்பாலிக்கா வூட்டாண்ட போய் கண்டுக்கினு சொல்றேன் :-)
ReplyDelete//டான்ஸ் மாஸ்டரா மாஸ்டரினியா?? மாஸ்டரினியா இருந்தா அவிங்க போட்டோவையும் போட்டு கவுரவப் படுத்தறது ;)//
ReplyDeleteகப்பி! அந்த வீடியோவுலேயே மீசை வச்சிக்கிட்டு கறுப்பு டிரஸ் போட்டுக்கிட்டு சுழண்டு சுழண்டு ஆடறாரே அவரைப் பாத்தா ஒனக்கு மாஸ்டரினியாட்டமாத் தெரியுது
//தொறந்த அக்கவுண்டை சீக்கிரம் மூடிடு..களவானிப்பசங்க நிறைய பேரு சுத்திட்டிருக்காங்க :))//
பக்கெட்டையாச்சும் விட்டு வையுங்கப்பா
:(
//சாரி தல...ஆபீஸ்ல பார்க்க முடியல...அப்பாலிக்கா வூட்டாண்ட போய் கண்டுக்கினு சொல்றேன் :-) //
ReplyDeleteரைட்டுபா...ஆனா அப்பால எப்டியிருக்குன்னு கண்டிஷனாச் சொல்லிக்க இன்னா?
:)
பல நல்ல நினைவுகளை சுகமாக அசை போட வைத்து விட்டது உங்களின் இந்தப் பதிவு. மும்பையில் வேலை செய்யும் சமயம் எங்கள் அலுவலகத்தில் நவராத்திரி சமயத்தில் இந்த நடனம் விளையாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று பண்பாட்டு உடை அணிந்து வரலாம் என்று வேறு அனுமதி கொடுத்திருந்தார்கள். ஷார்ட் குர்தா அணிந்து கொண்டு அன்று அலுவலகம் வந்தால் திருவிழா போல போல அனைவரும் பாரம்பரிய உடையில் வந்திருந்தது அப்படியே பசுமையாக மனதில் இன்னும் இருக்கிறது.
ReplyDeleteமாலை நடனத்தில் குச்சி எல்லாம் எடுத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் சுற்றியது, வடநாட்டு நண்பர்கள்/பிகளிடம் ஆட்டம் கற்றுக் கொண்டது என்னவோ போங்க இந்த பின்னூட்டம் போடும் சமயம் நான் என் கணிணி முன் இல்லை எங்கயோ போயிட்டேன்.
//பல நல்ல நினைவுகளை சுகமாக அசை போட வைத்து விட்டது உங்களின் இந்தப் பதிவு. மும்பையில் வேலை செய்யும் சமயம் எங்கள் அலுவலகத்தில் நவராத்திரி சமயத்தில் இந்த நடனம் விளையாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று பண்பாட்டு உடை அணிந்து வரலாம் என்று வேறு அனுமதி கொடுத்திருந்தார்கள். ஷார்ட் குர்தா அணிந்து கொண்டு அன்று அலுவலகம் வந்தால் திருவிழா போல போல அனைவரும் பாரம்பரிய உடையில் வந்திருந்தது அப்படியே பசுமையாக மனதில் இன்னும் இருக்கிறது.
ReplyDeleteமாலை நடனத்தில் குச்சி எல்லாம் எடுத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் சுற்றியது, வடநாட்டு நண்பர்கள்/பிகளிடம் ஆட்டம் கற்றுக் கொண்டது என்னவோ போங்க இந்த பின்னூட்டம் போடும் சமயம் நான் என் கணிணி முன் இல்லை எங்கயோ போயிட்டேன்//
வாங்க குமரன்,
இந்தப் பதிவு தங்களை பழைய நினைவுகளில் மூழ்கச் செய்ததை அறிந்து மகிழ்ச்சி. தங்கள் பின்னூட்டம் ஊக்கமளித்தது. மிக்க நன்றி.
இப்போதான் தல சான்ஸ் கிடச்சது...ரொம்ப நல்லா இருந்தது டான்ஸ்...அத்த கஷ்டபட்டு எடுத்து இங்க போட்டதுக்கு ரொம்ப டாங்க்ஸ்...
ReplyDelete