பாரதி படத்துல வர்ற "எதிலுமிங்கு இருப்பானவன் யாரோ?"ங்கிற பாட்டை சமீபத்துல பல நாளுக்கப்புறம் கேட்டேங்க. முன்னல்லாம் கேட்டப்ப தெரியாத ஒரு பிரமிப்பு இந்த முறை அந்த பாட்டோட பாடல் வரிகளைக் கேட்டப்போ உணர முடிஞ்சதுங்க. இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையை உணர்த்தற மாதிரி இருந்தது. இவ்வளவு நாள் கூர்ந்து கவனிக்காம விட்டுட்டோமேனு இருந்துச்சு. அந்த பாட்டை இப்ப இந்தப் பதிவுல போட்டிருக்கேன். நீங்களும் கேட்டுப் பாருங்க. சித்தூர்கட்லயும், உதய்பூர்லயும், தனேஷ்வர் தேவ் என்கிற இடத்துலயும் எடுத்த சில புகைப்படங்களையும் போட்டுருக்கேன்.
படம் : பாரதி(2000)
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
இந்தப் பதிவுக்கு ஆடியோ டெஸ்ட் செய்து உதவிய பேராசிரியர் கார்த்திக் ஜெயந்திற்கு என் நன்றிகள்.
ReplyDelete:)
கைப்புள்ள,
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை:
//தறித்த முடியான்//- தரித்த முடியான்
//கொற்றைக் கணத்திஅல்//- ஒற்றைக் கணத்தில்
//முடி கனியவும்//- முடிக்கணியவும் (முடிக்கு அணியவும்)
//உற்றப் படித்து//- முற்றப் படித்து
அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி. நண்பர்களிடம் ஓடும் மனிதனை (வாக்மேன்) ஓசிவாங்கி அதில் காசு போட்டு பேட்டரிகளை வாங்கிப்போட்டு இந்தப்பாடலை நாளெல்லாம் கேட்டிருக்கிறேன்.
திருமொழியான்.
தல,
ReplyDeleteபடம் #9 சூப்பர்.
பச்சப் பசேல்னு இருக்குதே.
இத பாக்குறப்ப, 'கயாமத் ஸே கயாமத் தக்' படத்தின் Mt.Abu காட்சிகள் நினைவுக்கு வருது.
சும்மா ஒரே குளுமையா இருக்கும். லொகேஷனும், ஜூஹி சாவ்லாவுந்தான்....
nalla padal nalla padhivu..valthukkal
ReplyDelete//எனக்குத் தெரிந்தவரை:
ReplyDelete//தறித்த முடியான்//- தரித்த முடியான்
//கொற்றைக் கணத்திஅல்//- ஒற்றைக் கணத்தில்
//முடி கனியவும்//- முடிக்கணியவும் (முடிக்கு அணியவும்)
//உற்றப் படித்து//- முற்றப் படித்து//
வாங்க திருமொழியான்,
எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன். அதோட "வரிப்புலி அதள் தறித்தவன்' இதுக்கு அர்த்தம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும். வரிப்புலியின் தோலை ஆடையாக உடுத்தியவன் என்று எண்ணுகிறேன். சரியா?
//அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி. நண்பர்களிடம் ஓடும் மனிதனை (வாக்மேன்) ஓசிவாங்கி அதில் காசு போட்டு பேட்டரிகளை வாங்கிப்போட்டு இந்தப்பாடலை நாளெல்லாம் கேட்டிருக்கிறேன்.//
ஆமாங்க உண்மையிலேயே இசையிலும், பொருளிலும் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் அற்புதமான பாடல் இது. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.
//படம் #9 சூப்பர்.
ReplyDeleteபச்சப் பசேல்னு இருக்குதே.//
வாங்க பெத்தராயுடு,
ஆமாங்க. அஹ்மதாபாத்லேருந்து உதய்பூர் போற ரோடு இது. கிட்டத்தட்ட ஒரு 100 கி.மீக்கு இதே மாதிரி தான் எங்கப் பாத்தாலும் பச்சப் பசேல்னு மலைகளும் பள்ளத்தாக்குகளுமா ரொம்ப அழகா இருக்கும். ராஜஸ்தானைப் பத்திய மூடநம்பிக்கை எல்லாம் தகர்ந்து போச்சு. மேற்கு ராஜஸ்தான்ல ஜெய்சல்மேர் மற்றும் பார்மேர் பக்கம் மட்டும் தான் பாலைவனமாம். தென்கிழக்கு ராஜஸ்தான் மிகவும் செழிப்பான பூமி.
//இத பாக்குறப்ப, 'கயாமத் ஸே கயாமத் தக்' படத்தின் Mt.Abu காட்சிகள் நினைவுக்கு வருது.
சும்மா ஒரே குளுமையா இருக்கும். லொகேஷனும், ஜூஹி சாவ்லாவுந்தான்.... //
:(((
கரெக்டா வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சிட்டீங்களே. எங்க ப்ராஜெக்ட் டீம்ல என்னைத் தவிர எல்லாரும் மவுண்ட ஆபு போயிட்டு வந்தாங்க கம்பெனி செலவுல. வேற ஒரு வேலை விஷயமா அந்த சமயம் என்னை மும்பைக்கு அனுப்பி வச்சிட்டாங்க படுபாவிங்க. அதனால மவுண்ட் ஆபு மிஸ் ஆயிடுச்சு.
:(((
//nalla padal nalla padhivu..valthukkal //
ReplyDeleteவாங்க கார்த்திக்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.
அங்கிள்,
ReplyDeleteபடம் எல்லாம் சூப்பர் ,
பூனா பக்கம் எப்ப வரிங்க.
பாட்டு கேக்க வரலை.
ReplyDeleteஅதுக்காக...? அப்படியே வுட்டுற முடியுமா?
ம்யூஜிக் இண்டியா ஆன்லைன்லே போய் கேட்டுப்புட்டோமுல்லெ.
அருமை பாட்டும் படங்களும்.
ஆமா, கல்லை வீசுன அந்த எடுபட்ட நாய் ஆரு?
//அங்கிள்,
ReplyDeleteபடம் எல்லாம் சூப்பர் ,
பூனா பக்கம் எப்ப வரிங்க. //
வாங்க பேபி பவன்,
ஜிகே குவிஸ்ல கலக்கு கலக்குன்னு கலக்குனீங்கன்னு பாத்தா இப்பத் தான் அஞ்சு மாசக் கைக்குழந்தையா அழகா க்யூட்டா இருக்கீங்க. இப்ப தான் செல்லம் மும்பை வந்துட்டு வந்தேன். இப்போதைக்கு புனே வர்ற மாதிரி இல்ல...புனே பக்கம் வர்றதா இருந்தா கண்டிப்பாச் சொல்றேன்.
உங்களுக்கு அங்கிளோட மனமார்ந்த வாழ்த்துகள்.
ஏய்...
ReplyDeleteகைய வச்சுக்குட்டு சும்மா இருடா....
ஹி ஹி பின்னுட்டம் இட கூடாதுனுதான் பாக்குறேன்
கை நம நமங்குது...::))
அன்புடன்
சின்னபுள்ள..
//பாட்டு கேக்க வரலை.
ReplyDeleteஅதுக்காக...? அப்படியே வுட்டுற முடியுமா?
ம்யூஜிக் இண்டியா ஆன்லைன்லே போய் கேட்டுப்புட்டோமுல்லெ.
அருமை பாட்டும் படங்களும்.//
வாங்கக்கா,
டேட்டா டிரான்ஸ்பர் ரேட் எகிறுனதுனால சர்வர்ல எதோ பிரச்னைன்னு நெனக்கிறேன். அநேகமா நாளைக்குச் சரியாயிடும்னு நெனக்கிறேன். உங்களோட வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிக்கா.
//ஆமா, கல்லை வீசுன அந்த எடுபட்ட நாய் ஆரு?//
"கல்லை எடுத்து வீசுனா புறா பறக்கும் அதை படம் புடிக்கலாம்"னு ஐடியா குடுத்துட்டு கல்லை எடுத்து வீசுனது என் கூட வந்த ஒரு எடுவட்ட நாய்(இங்லீசுல கலீக்னு சொல்லுவாங்க :) )
"ஆஹா! பிரமாதமான ஐடியா நீ வீசுடா"ன்னு ஆமாஞ்சாமி போட்டுட்டு படம் புடிச்ச எடுவட்ட நாய்....நான் தான்.
:)
//ஏய்...
ReplyDeleteகைய வச்சுக்குட்டு சும்மா இருடா....
ஹி ஹி பின்னுட்டம் இட கூடாதுனுதான் பாக்குறேன்
கை நம நமங்குது...::))
அன்புடன்
சின்னபுள்ள.. //
வாங்க சின்னபுள்ள,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. ஏங்க பின்னூட்டம் போடக் கூடாதுன்னு நெனக்கிறீங்க? எல்லாரும் ரசிக்கிற மாதிரி சந்தோஷமா யார் வேணாலும் வந்து பின்னூட்டம் போடறதுக்காகத் தானே அனானிமஸ் ஆப்ஷனை என் ப்ளாக்ல வெச்சிருக்கேன்?
//வரிப்புலியின் தோலை ஆடையாக உடுத்தியவன் என்று எண்ணுகிறேன். சரியா?//
ReplyDeleteமிகவும் சரி.
திருமொழியான்.
/./
ReplyDelete9. இனிமே ராஜஸ்தான் வெறும் பாலைவனம்னு சொல்லுவியா? சொல்லுவியா?
/./
வரலாறு காணாத மழை வெள்ளத்தில தளும்பும் பாலைவனம்
கரெட்டா...::)
பசமுடன்
சின்னபுள்ள
/./
ReplyDeleteஎல்லாரும் ரசிக்கிற மாதிரி சந்தோஷமா யார் வேணாலும் வந்து பின்னூட்டம் போடறதுக்காகத் தானே அனானிமஸ் ஆப்ஷனை என் ப்ளாக்ல வெச்சிருக்கேன்?
/./
கைபுள்ள
அப்ப சங்கத்தில ஏன்..???
ஆப்புடன்
சின்னபுள்ள
கைப்ஸ்!!
ReplyDeleteராஜஸ்தான் இவ்வளவு பச்சையா இருக்குமா? இல்ல சித்தூர்கட் மட்டும் பச்சையா இருக்கா! வரலாறு புத்தகத்தில பாலவனத்தை மட்டும்தான் சொல்லியிருக்காங்க. அதான் கேட்டென்!
மிகச் சிறப்பான பாடல் மோகனா. என்னோட 'கேட்டதில் பிடித்தது' பதிவுல வந்திருக்க வேண்டியது. நீங்க முந்திக்கிட்டீங்க. :-) சரி. பரவாயில்லை. இங்கே சொல்லிட்டுப் போறேன். இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிச்சப் பாட்டு. :-)
ReplyDeleteதால் பாட்டி எப்படி சாப்புடுவாங்கன்னு சொல்லுங்க. அப்படியே சாப்புடுவாங்களா? கனல்ல வச்சு சமைக்கிறாங்கன்னு தெரியுது. ஆனா சுத்தமா இருக்குங்களா?
//வரலாறு காணாத மழை வெள்ளத்தில தளும்பும் பாலைவனம்
ReplyDeleteகரெட்டா...::)//
ஒரு விதத்தில் சரி, ஒரு விதத்தில் தவறு. உண்மையிலேயே பாலைவனப் பிரதேசமான பார்மேர் என்ற மாவட்டத்தில் இம்முறை வெள்ளம் வந்து பலத்த சேதம் ஏற்பட்டது. பாலைவன மக்களுக்கு வெயிலை விட மழையை சமாளிப்பது கடினமாக இருந்ததாம்.
எவ்விதம் தவறு என்றால் இவ்விடம் உதய்பூர் மிகவும் வளமான பகுதிகளில் ஒன்று, இது பாலைவனப் பகுதி அல்ல.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகிலேயே அதிக மழை பெய்யும் பகுதியான மெகாலய மாநிலம் சிராபுஞ்சியில் மழை குறைவாகப் பெய்கிறதாம். பாலைவனத்தில் வெள்ளம் வருவதும் மழை பிரதேசத்தில் மழை பொய்ப்பதும் க்ளோபல் வார்மிங்கினால் தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பற்றி எண்டிடிவி சேனலில் கூட செய்தி வந்தது.
நல்ல பாட்டு கைப்பு....இன்னொரு பாட்டு கூட இருக்கு ம்ம்ம்ம் இளையராஜா பாடினது...அதான் நின்னை சரனடைந்தேன் தானே அது?
ReplyDeleteஇரண்டுமே சூப்பர் பாட்டு!
அப்புறம் படங்காட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா? புல்லா லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது... :(
dhal bhati செய்முறை பாத்துட்டு வித்தியாசமா இருக்கே, ஒருநாள் சாப்பிட்டுப் பாக்கணும் (நான் அந்த செய்முறை படி செஞ்சது சுமார் தான்:-(( ) னு நினச்சுட்டு இருந்தேன். இந்த படத்தைப் பாத்ததில இருந்து அந்த நினப்பில் கரியும் சாம்பலும்:-)
ReplyDeleteபாட்டு இன்னும் கேட்டுப் பாக்கல, வரிகள் பிரமாதமாக இருக்கு.... "சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல்..." பாட்டு - நம்ம தல பாட்டு தான் - ஏனோ ஞாபகம் வருது...
கைப்பு இப்பவாவது உண்மைய சொல்லுங்க.... நீங்க அந்த ஒட்டகத்தில தான சுத்திவந்தீங்க ஊர... தண்ணி காட்டலியோ? ரொம்ப பாவமா படுத்துகிடக்கு?
ReplyDeleteகைப்புள்ள,
ReplyDeleteஅருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
புகைப்படங்கள் பிரமாதம்.
//என்னோட 'கேட்டதில் பிடித்தது' பதிவுல வந்திருக்க வேண்டியது. நீங்க முந்திக்கிட்டீங்க. :-) சரி. பரவாயில்லை. இங்கே சொல்லிட்டுப் போறேன். இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிச்சப் பாட்டு. :-) //
ReplyDeleteவாங்க குமரன்,
பலருக்கும் பிடித்தப் பாடலைப் போட்டிருப்பதில் உண்மையிலேயே மகிழ்கிறேன். நான் போட்டிருந்தால் என்ன, நீங்களும் இப்பாடலைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்...கண்டிப்பாகப் புதிதாக எதாவது சொல்வீர்கள்.
//தால் பாட்டி எப்படி சாப்புடுவாங்கன்னு சொல்லுங்க. அப்படியே சாப்புடுவாங்களா? கனல்ல வச்சு சமைக்கிறாங்கன்னு தெரியுது. ஆனா சுத்தமா இருக்குங்களா?
//
"தால் பாட்டி" நானும் சாப்பிட்டதில்லீங்க. நீங்க கேட்டீங்கன்னு நண்பர் ஒருத்தர் கிட்ட கேட்டேன்(ஓணானை வச்சி சிவாஜி கோட்டையப் பிடிச்சாருன்னு சொன்ன அதே பய தான்). தால் பாட்டி செய்யறதுக்கு முதல்ல கோதுமை மாவுல பாலும் இன்ன சில சமாசாரங்களும்(என்னன்னு தெரியல) போட்டு நல்லாப் பெசஞ்சுக்குவாங்களாம். அப்புறம் உருண்டைகளாக்கி மேலே இரண்டாவது படத்துல இருக்குற மாதிரி தண்டூரி(இங்கிலீசுல Barbecueனு நெனக்கிறேன்) அடுப்புல வேக வைப்பாங்களாம். மேலே படத்துல தந்தூரி அடுப்பு இல்லாததுனால கரியில தீ மூட்டி வேக வைக்கிறாங்க(அதுக்கப்புறம் நல்லா சுத்தம் பண்ணுவாங்கன்னு தான் நெனக்கிறேன் :) ). அந்த உருண்டைங்க நல்லா வெந்ததும் எடுத்து நெய்யுல ஒரு முக்கு முக்கி எடுப்பாங்களாம். உருண்டைங்க நல்ல காய்ஞ்சு சுத்தமா ஈரப்பதம் இல்லாம இருக்குறதுனால நெய்யை அப்படியே குடம் குடமா உறிஞ்சுக்குமாம். அப்புறம் அதை எடுத்து தால்ல(பருப்பு) ஊற வைச்சி சாப்பிடுவாங்களாம். இந்த ஐட்டம் சாப்பிட செம கனமா இருக்குமாம். இதை சாப்பிட்டீங்னா அடுத்த ரெண்டு வேளைக்கு ஒன்னும் சாப்புட முடியாதாம். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கட், குஜராத், ராஜஸ்தான் இங்கல்லாம் "தால் பாட்டி"(Dal Bhati) ரொம்ப பிரபலமாம்.
//ராஜஸ்தான் இவ்வளவு பச்சையா இருக்குமா? இல்ல சித்தூர்கட் மட்டும் பச்சையா இருக்கா! வரலாறு புத்தகத்தில பாலவனத்தை மட்டும்தான் சொல்லியிருக்காங்க. அதான் கேட்டென்!//
ReplyDeleteவாங்க தம்பி,
ராஜஸ்தான்ல மூணு மாசம் தங்கியிருந்தது அந்த மாநிலத்தைப் பத்தி இருந்தத் தப்பான கருத்தை எல்லாம் போக்கிடுச்சு. ராஜஸ்தான்னதும் ஜியாகிரபி/ஹிஸ்டரி புத்தகத்துல எல்லாம் பாலைவனமும் ஒட்டகமும் தான் போடுவாங்க. ஆனா உண்மையில ராஜஸ்தான்ல எல்லா பகுதியும் பாலைவனம் இல்லை. நான் இருக்குற தென்மேற்கு பகுதி கணிமங்களிலும்(மார்பிள்(சலவைக்கல்) குவாரிகள் எக்கச்சக்கம்) சரி, இயற்கையழகிலும் ரொம்ப வளமான பகுதி. ஜெய்சல்மேர், டோங்க், பார்மேர், ஜோத்பூர் போன்ற மேற்கு, வடமேற்கு பகுதிகளும் பாகிஸ்தான் பார்டரில் அமைந்துள்ள பகுதிகளும் தான் வறட்சியான பகுதிகள். அதிலும் ஜெய்சல்மேர் மற்றும் பார்மேர் பகுதியில் மட்டும் தான் தார் பாலைவனம் இருக்கிறது. வடக்குப் பகுதியான கங்காநகரில் இந்திரா காந்தி கால்வாய் என்ற கால்வாய்களின் மூலமாக வறண்ட பகுதிகளாக இருந்த இடங்களையும் இப்போது விவசாய நிலங்களாக மாற்றி விட்டனர்.
//கைபுள்ள
ReplyDeleteஅப்ப சங்கத்தில ஏன்..???//
ஆஹா கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்கையா! நீங்க கேக்கறது லாஜிக்கான கேள்வி தான் சின்னப்புள்ள. எல்லாரும் ரசிச்சு சந்தோஷப் படனும்ங்கிறது தான் சங்கத்தோட கொள்கையும். ஆனா சில ரசிக்கமுடியாத படியான பின்னூட்டங்கள் சங்கத்துல வந்ததுனால அனானி ஆப்ஷனை அங்கேருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு. இருந்தாலும் அதை மறுபரிசீலனை பண்ணி கூடிய சீக்கிரமே அனானி ஆப்ஷனை போட்டுடலாம்.
//ஆப்புடன்
சின்னபுள்ள //
இதெல்லாம் என்ன நமக்குப் புதுசா? நெக்ஸ்ட் ஆப்பு ப்ளீஸ்!
:)
//உங்களுக்கு அங்கிளோட மனமார்ந்த வாழ்த்துகள்.//
ReplyDelete//நெக்ஸ்ட் ஆப்பு ப்ளீஸ்!//
அங்குள் அங்குள்... (பெங்களூர்ல இப்படித்தான் கூப்பிடுவாங்க, கண்டுக்கபிடாது)உங்களை எல்லோரும் அங்குள்ன்னு கூப்பிடராங்களேன், அது ஏன்????
//நல்ல பாட்டு கைப்பு....இன்னொரு பாட்டு கூட இருக்கு ம்ம்ம்ம் இளையராஜா பாடினது...அதான் நின்னை சரனடைந்தேன் தானே அது?
ReplyDeleteஇரண்டுமே சூப்பர் பாட்டு! //
ஆமாங்க! நின்னைச் சரணடைந்தேன் பாட்டை பாம்பே ஜெயஸ்ரீயும் பாடியிருப்பாங்க. அதுவும் நல்லாருக்கும்.
//அப்புறம் படங்காட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா? புல்லா லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது... :(//
ஹி...ஹி...எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறு தாங்கோ
:)
dhal bhati செய்முறை பாத்துட்டு //வித்தியாசமா இருக்கே, ஒருநாள் சாப்பிட்டுப் பாக்கணும் (நான் அந்த செய்முறை படி செஞ்சது சுமார் தான்:-(( ) னு நினச்சுட்டு இருந்தேன். இந்த படத்தைப் பாத்ததில இருந்து அந்த நினப்பில் கரியும் சாம்பலும்:-)//
ReplyDeleteவாங்க கெ.பி(பாலச்சந்தர் பட ஸ்டைலில் இனிஷியல்கள் மட்டும் :)),
மேலே குமரனுக்கு தால் பாட்டி பத்தி சொல்லிருக்குற பதிலைப் பாருங்க.
//பாட்டு இன்னும் கேட்டுப் பாக்கல, வரிகள் பிரமாதமாக இருக்கு.... "சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல்..." பாட்டு - நம்ம தல பாட்டு தான் - ஏனோ ஞாபகம் வருது... //
கேட்டுப் பாருங்க...அருமையான பாடல். அத்வைத்த தத்துவங்களை விளக்கும் பாடல் என எண்ணுகிறேன். நீங்க சொன்ன பாடலை இது வரை கேள்வி பட்டதில்லை. பாரதியார் பாடல்களைக் கேக்கும் போதும் படிக்கும் போதும் ஒரு உணர்ச்சி மேலிடுதல் ஏற்படுதலை பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீங்க சொன்ன பாட்டை இணையத்தில் தேடிய போது கிடைத்த சுட்டி :
http://www.keetru.com/rebel/bharathi/47.html
//கைப்பு இப்பவாவது உண்மைய சொல்லுங்க.... நீங்க அந்த ஒட்டகத்தில தான சுத்திவந்தீங்க ஊர... தண்ணி காட்டலியோ? ரொம்ப பாவமா படுத்துகிடக்கு? //
ReplyDeleteஐயா பல்லவ பேரரசே!
நீங்க சொல்ற மாதிரி ஒட்டகத்தை எல்லாம் கட்டிக்கலீங்க. அது பாட்டுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்புட்டுட்டு மப்புல படுத்து கெடக்கு...நீங்க என்னைய மிருகவதை தடுப்பு சட்டத்துல உள்ள அனுப்பிடுவீங்க போலிருக்கே?
:)
வாருங்கள் வெற்றி,
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. இப்பாடலை எழுத நேர்ந்தது எப்படி என்பது குறித்து பாடலாசிரியர் புலமைபித்தன் கூறியுள்ளதை கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
http://www.tamilnation.org/literature
/lyricwriters/pulamaipithan.htm
அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி. ivloo padam ore postla podanumaa? ada, post numbera kooti irukalaam illa? :)
ReplyDelete//பாலைவனத்தில் வெள்ளம் வருவதும் மழை பிரதேசத்தில் மழை பொய்ப்பதும் க்ளோபல் வார்மிங்கினால் தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பற்றி எண்டிடிவி சேனலில் கூட செய்தி வந்தது. //
he hee, imputtu arivaa ungalukku? avvvvvvvvv.
NDTV ellam kooda paapengalaa kaipullai? :D
(ithula ulkuthu ethuvum illai, as per our agreement) :D
./
ReplyDeleteஆனா சில ரசிக்கமுடியாத படியான பின்னூட்டங்கள் சங்கத்துல வந்ததுனால அனானி ஆப்ஷனை அங்கேருந்து எடுக்க வேண்டியதாப் போச்சு.
./
Comment moderation இருக்குல பின்ன என்ன எடுக்க வேண்டியதாப் போச்சு....?
பிளாக்கர் வைச்சி அதுமாதிரி பின்னுட்டம் இட்டால் என்ன பண்ணுவீங்க.....
அதுமாதிரிதானே இதுவும்..........
அன்புடன்
சின்னபுள்ள.
photo's எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு! ஆனா தனி பதிவா போட்ருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்! பாரதி-யின் பாட்டை பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி!
ReplyDelete//இந்தப் பதிவுக்கு ஆடியோ டெஸ்ட் செய்து உதவிய பேராசிரியர் கார்த்திக் ஜெயந்திற்கு என் நன்றிகள்.
ReplyDelete:)
மோகனா இத எல்லாமா பொதுவுல சொல்லுறது. அப்புறம் வீக் என்டுல வேல ஜாஸ்தி ஆகி போச்சி. கொஞ்சம் பொறுத்துகோ. இப்பத்தான் பாஸ்வேர்ட் கிடைச்சது :D
//இனிமே ராஜஸ்தான் வெறும் பாலைவனம்னு சொல்லுவியா? சொல்லுவியா?
இனிமே நான் சொல்ல மாட்டேன் அதுக்காக இப்படியா பொதுவுல :D
//அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி. ivloo padam ore postla podanumaa? ada, post numbera kooti irukalaam illa? :)//
ReplyDeleteவாங்க அம்பி!
வாழ்த்துகளுக்கு நன்றி. நூத்துக் கணக்குல படம் புடிச்சு வச்சிருக்கோமே...அதையெல்லாம் ஒன்னொன்னா போட்டா எப்படி காட்டுறதாம்?
//
he hee, imputtu arivaa ungalukku? avvvvvvvvv.
NDTV ellam kooda paapengalaa kaipullai? :D//
ஹி..ஹி...சன், விஜய், கே, ஜெயா, ராஜ் அட ஒரு பொதிகை டிவி கூட வரலைன்னா என்னங்க செய்ய முடியும்? என் டி டிவியெல்லாம் தான் பாக்கனும்.
:)
//அங்குள் அங்குள்... (பெங்களூர்ல இப்படித்தான் கூப்பிடுவாங்க, கண்டுக்கபிடாது)உங்களை எல்லோரும் அங்குள்ன்னு கூப்பிடராங்களேன், அது ஏன்????//
ReplyDeleteஎல்லாம் ஒரு அன்பு தான்யா! அன்பு இருக்குறதுனால தான் அங்கிள்னும் அங்குள்னும் கூப்புடறாங்க...வேறென்ன?
:)
ஆனா அங்குள்னு கூப்புடற உரிமையை நான் இப்போதைக்கு கைக்குழந்தைகளுக்கு மட்டும் தான் குடுத்துருக்கேன். கைக்குழந்தை அல்லாதவர்கள் என்னை அங்குள்னு கூப்புட்டா அப்புறம் என்னோட கொடூர முகத்தை நான் காட்ட வேண்டி வரும்னு எச்சரிச்சிக்கிறேன்.
:)
//Comment moderation இருக்குல பின்ன என்ன எடுக்க வேண்டியதாப் போச்சு....?
ReplyDeleteபிளாக்கர் வைச்சி அதுமாதிரி பின்னுட்டம் இட்டால் என்ன பண்ணுவீங்க.....
அதுமாதிரிதானே இதுவும்..........
அன்புடன்
சின்னபுள்ள//
சின்னபுள்ள,
நீங்க சொன்ன பாயிண்ட் எல்லாமே சரியானது தான். பொறுமையா எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி. சங்கத்துலயும் இப்ப அனானி ஆப்ஷனைப் போட்டு விட்டாச்சு. அங்கேயும் உங்கள் பின்னூட்டங்களைப் போடுங்க.
நன்றி.
//photo's எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு! ஆனா தனி பதிவா போட்ருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்! பாரதி-யின் பாட்டை பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி!//
ReplyDeleteவாங்க ஏஞ்சல்,
நன்றிங்க. நீங்க சொல்லிட்டீங்கல்ல? இனிமே தனிப் பதிவாப் போட்டுத் தள்ளிடுவோம்.
அடிக்கடி வாங்க
:)
//மோகனா இத எல்லாமா பொதுவுல சொல்லுறது. அப்புறம் வீக் என்டுல வேல ஜாஸ்தி ஆகி போச்சி. கொஞ்சம் பொறுத்துகோ. இப்பத்தான் பாஸ்வேர்ட் கிடைச்சது :D//
ReplyDeleteசரி போனாப் போவுது...இந்த தடவை மன்னிச்சு விட்டுடறேன். ஆனா சரிகா! அடுத்த வாட்டி இந்த மாதிரி தப்பு நடக்காம ப் பாத்துக்கோ.
:)
//இனிமே நான் சொல்ல மாட்டேன் அதுக்காக இப்படியா பொதுவுல :D//
முருகேஷா! நான் கேட்டேனா?
:)
//கைப்பு இப்பவாவது உண்மைய சொல்லுங்க.... நீங்க அந்த ஒட்டகத்தில தான சுத்திவந்தீங்க ஊர... தண்ணி காட்டலியோ? ரொம்ப பாவமா படுத்துகிடக்கு? //
ReplyDeleteஎனக்குக் கூட இதே சந்தேகம் தான் வந்தது கைப்ஸ்.. இருந்தாலும், அது உண்ட மயக்கத்தில் இருப்பதாக நீங்க சொல்லீட்டீங்க.. நான் நம்பிட்டேன்..
(அதோட கைப்புவைக் கலை நயத்தோட எடுத்த போட்டோவெல்லாம் பார்த்தோமே! அப்புறமும் சந்தேகப்பட்டா எப்படி?! :) )
கைப்பு நீயெல்லாம் இப்ப பெரியாளா அயிட்ட போல நடத்து நடத்து... ஊரச்சுத்தி பாக்கறே இங்க பாரு என்ன தேடி இப்ப செந்தில் கூட வற்றதில்லே :(
ReplyDeleteகைப்பு...படம் மட்டும் காட்டிக்கிட்டு இருந்தவரு...இப்ப பாட்டும் போடத் தொடங்கீட்டீரு. ஆனா ஒன்னு....இதெல்லாம் நல்லாயிருக்கு...சொல்லீட்டேன்.
ReplyDeleteசாமி என்ன நாலு கடல் நாலு மலை நாலு வானம் தாண்டியா இருக்கு? எப்பவும் கூட இருக்குதய்யா...உள்ள இருக்குதய்யா....அதனால்தான் கடவுள்னு சொன்னான் தமிழன். அனைத்தையும் கடந்து அனைத்துக்கும் உள்ள இருக்குறது கடவுளாம்யா. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கேன்.
அந்த பருப்புருண்டை என்ன இத்தாந்தண்டி இருக்கு. ராசஸ்தான் சாப்பாட்டுல அதப் பெணஞ்சு திங்குறதுதான....உப்பு ஒறப்பு இருகாதேய்யா!
ஊரெல்லாம் நல்ல மழை பெஞ்சிருக்கு போல. எல்லாரும் நல்லாயிருக்கட்டும். நாங்க மட்டும் பெங்குளூருல வேகுறோம். கடவுளு கருண காட்டுனாத் தேவலை.
நின்னை சரணடந்தேன் பாடல் தான் உலகத்திலேயே தலைசிறந்த பாடலாக நான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅதற்கு இசைவடிவம் இளையராஜாவை தவிர யாரும் கொடுக்க முடியாது.
/./
ReplyDeleteசின்னபுள்ள,
நீங்க சொன்ன பாயிண்ட் எல்லாமே சரியானது தான். பொறுமையா எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.
/./
புதுசா பிளாக் திறக்கும்போது இப்படிதான் யாரையாவது கலாய்ப்போம்...::))))
/./
சங்கத்துலயும் இப்ப அனானி ஆப்ஷனைப் போட்டு விட்டாச்சு. அங்கேயும் உங்கள் பின்னூட்டங்களைப் போடுங்க.
/./
ஹிஹி நன்றி
( போட்டாச்சில )
நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ReplyDeleteஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
பிடித்த படங்கள் 2 மற்றும் 4.
ReplyDeleteஆமா ரெண்டாம் படத்தில பிடிக்கற உருண்டை இங்கன கிடைக்குமா?
ஐ யாம் தி ப்ரசண்டு..
ReplyDeleteபோட்டோஸ் ஆர் எக்ஸலண்டு..
//எனக்குக் கூட இதே சந்தேகம் தான் வந்தது கைப்ஸ்.. இருந்தாலும், அது உண்ட மயக்கத்தில் இருப்பதாக நீங்க சொல்லீட்டீங்க.. நான் நம்பிட்டேன்..//
ReplyDeleteவாங்க பொன்ஸ்!
பின்ன...நம்பற மாதிரி இல்ல சொல்லிருக்கோம்?
:)
//(அதோட கைப்புவைக் கலை நயத்தோட எடுத்த போட்டோவெல்லாம் பார்த்தோமே! அப்புறமும் சந்தேகப்பட்டா எப்படி?! :) )//
ஷ்ஷ்ஷ்...நோ கமெண்ட்ஸ்
:)
//கைப்பு நீயெல்லாம் இப்ப பெரியாளா அயிட்ட போல நடத்து நடத்து... ஊரச்சுத்தி பாக்கறே இங்க பாரு என்ன தேடி இப்ப செந்தில் கூட வற்றதில்லே :( //
ReplyDeleteஅண்ணே!
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாண்ணே! உங்க கிட்ட அடி வாங்கின ராசி தான்ணே இப்ப ஊரு ஊரா சுத்தி படம் புடிச்சிக்கினு கெடக்கேன். செந்தில் அண்ணனுக்கும் வயசாயிருச்சில்ல...அதனால தான் முன்ன மாதிரி அடி தாங்க முடியறதில்லியோ என்னவோ?
//கைப்பு...படம் மட்டும் காட்டிக்கிட்டு இருந்தவரு...இப்ப பாட்டும் போடத் தொடங்கீட்டீரு. ஆனா ஒன்னு....இதெல்லாம் நல்லாயிருக்கு...சொல்லீட்டேன்.//
ReplyDeleteஹி...ஹி...ரொம்ப நன்றிங்க ஜிரா
:)
//சாமி என்ன நாலு கடல் நாலு மலை நாலு வானம் தாண்டியா இருக்கு? எப்பவும் கூட இருக்குதய்யா...உள்ள இருக்குதய்யா....அதனால்தான் கடவுள்னு சொன்னான் தமிழன். அனைத்தையும் கடந்து அனைத்துக்கும் உள்ள இருக்குறது கடவுளாம்யா. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கேன்.//
கடவுள் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு விளக்கமா? இன்று தான் தெரிந்து கொண்டேன். அதை இங்கு பதித்தமைக்கு மிக்க நன்றி ஜிரா.
//அந்த பருப்புருண்டை என்ன இத்தாந்தண்டி இருக்கு. ராசஸ்தான் சாப்பாட்டுல அதப் பெணஞ்சு திங்குறதுதான....உப்பு ஒறப்பு இருகாதேய்யா!//
அது பருப்புருண்டை இல்லீங்க...மாவு உருண்டை தான். பருப்புல ஊற வச்சி சாப்புடுவாங்களாம். மேலே குமரனுக்குக் கொடுத்துருக்கற விளக்கத்தையும் பாருங்க. நானும் சோத்துல பெசஞ்சோ இல்ல சப்பாத்திக்குத் தொட்டோ சாப்புடுவாங்கன்னு நெனச்சேன். அப்படி இல்லியாம்...பருப்புல ஊற வச்சி அப்படியே சாப்புடறதாம்.
:)
ஊரெல்லாம் நல்ல மழை பெஞ்சிருக்கு போல. எல்லாரும் நல்லாயிருக்கட்டும். நாங்க மட்டும் பெங்குளூருல வேகுறோம். கடவுளு கருண காட்டுனாத் தேவலை.
//நின்னை சரணடந்தேன் பாடல் தான் உலகத்திலேயே தலைசிறந்த பாடலாக நான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅதற்கு இசைவடிவம் இளையராஜாவை தவிர யாரும் கொடுக்க முடியாது. //
வாங்க மணி,
நின்னைச் சரணடைந்தேனும் அருமையான பாடல். நீங்களும் நம்மளை மாதிரி ராஜா ரசிகர் போலிருக்கு. அடிக்கடி வாங்க.
:)
//புதுசா பிளாக் திறக்கும்போது இப்படிதான் யாரையாவது கலாய்ப்போம்...::))))
ReplyDeleteஅடப் பாவி! எதோ அனானி உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வந்த புரட்சிக்காரன்னு நெனச்சி வெலவெலத்து போயிட்டேனேயா? வெறும் கலாய்ச்சல் பார்ட்டி தானா நீயி? ஆஹா...ஒரு குரூப்பாத் தான்யா கெளம்பிருக்காய்ங்க.
:)
//ஹிஹி நன்றி
( போட்டாச்சில )//
வாங்க...வாங்க! வந்து கலாய்ச்சிட்டே இருங்க.
:)
//நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ReplyDeleteஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.//
ஏற்கனவே வந்துட்டோம்ல?
:)
//பிடித்த படங்கள் 2 மற்றும் 4.
ReplyDeleteஆமா ரெண்டாம் படத்தில பிடிக்கற உருண்டை இங்கன கிடைக்குமா? //
வாங்க சுதர்சன்,
4 எனக்கும் ரொம்ப பிடிச்ச படம். என்னோட சிஸ்டத்துல அது தான் இப்போ வால் பேப்பர்.
நீங்க பெங்களூர்ல இருக்கீங்கல்ல? நம்ம ஊரு பக்கம் அதிகமா காணக் கிடைக்கிற பஞ்சாபி உணவகத்துல கெடக்காது. ராஜஸ்தானி இல்லன்ன குஜராத்தி உணவகம் எதாச்சும் அங்கே இருந்துச்சுன்னா முயற்சி பண்ணிப் பாருங்க.
//ஐ யாம் தி ப்ரசண்டு..
ReplyDeleteபோட்டோஸ் ஆர் எக்ஸலண்டு.. //
மார்க்டு பிரெசண்டு...பட் லேட் கமிங் நாட் அக்செப்டட் ஹியர் ஆஃப்டர். டேங்ஸ்மா.
:)
thalla
ReplyDelete//ஐ யாம் தி ப்ரசண்டு..//
ReplyDeleteஐ யம் ஆல்சோ....
//போட்டோஸ் ஆர் எக்ஸலண்டு.. //
யெஸ் டூ குட்....
கைப்புள்ள!
ReplyDeleteஅருமையான பாடல். மிக நல்ல படங்கள். சுற்றுலாவும், படம் பிடித்தலும் எனக்கும் பிடித்தமானவை. நீங்களும் அப்படித்தானா?
//ஐ யம் ஆல்சோ....
ReplyDelete//போட்டோஸ் ஆர் எக்ஸலண்டு.. //
யெஸ் டூ குட்.... //
வாய்யா கு.ராயல் ராம்சாமி,
ரொம்ப டேங்க்ஸ்.
:)
//thalla //
ReplyDeleteதல?
தலை?
தள?
தளை?
வாட் மா?
:)
//அருமையான பாடல். மிக நல்ல படங்கள். சுற்றுலாவும், படம் பிடித்தலும் எனக்கும் பிடித்தமானவை. நீங்களும் அப்படித்தானா?//
ReplyDeleteவாங்க மலைநாடான்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. சுற்றுலாவும் படம் பிடித்தலும் எனக்கும் மிக பிடித்தமானவை தான்.
:)
தல டிஜிடல் கேமரா வாங்குனாலும் வாங்குன ஒரே போட்டாவா போட்டு தள்ரயே.... 7,8,10,14 அப்புறம் சென்சார் பன்னி வெச்சுருக்கயே அந்த சப்பாத்திஸ் போட்டு எல்லாம் சூப்பர் :-)
ReplyDeleteகைப்பு அங்குள்.. கைப்பு அங்குள்.. போட்டோ எல்லாம் சூப்பர் அங்குள்.. எந்த ஸ்டூடியோல எடுத்தீங்க அங்குள்?? :)
ReplyDeleteஎன்னையும் உங்க சங்கதுல சேர்த்துப்பீங்களா?
ReplyDelete//கைப்பு அங்குள்.. கைப்பு அங்குள்.. போட்டோ எல்லாம் சூப்பர் அங்குள//
ReplyDeleteகைப்புவ கலாய்கரதுக்கு இன்னொரு ஆள்...பொற்கொடி நீ நடத்துமா...ஆப்பு இல்லனா தலைக்கு தூக்கம் வராது :-)
//7,8,10,14 அப்புறம் சென்சார் பன்னி வெச்சுருக்கயே அந்த சப்பாத்திஸ் போட்டு எல்லாம் சூப்பர் :-) //
ReplyDeleteயோவ் 12பி,
எங்கேயா சப்பாத்தி நானும் நாலு நாளாத் தேடி தேடிப் பாக்குறேன்...படம் புடிச்ச எனக்குத் தெரியாதது ஒனக்கு எப்பிடியா தெரியுது?
நீங்க போட்டிருக்கிர படங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு.
ReplyDeleteநீங்க என்னுடைய blog க்கு வந்து பதில் போட்டிருக்கிறீங்க. நன்றி.
நான் படத்துல வடிவேலுவின் பஹிடியெல்லாம் பார்த்து சிரிப்பேன். வடிவேலு சொல்லுற "ஆஹா, வந்துட்டாய்யா வந்துட்டா" கேக்க நல்ல சிரிப்புத்தான் வரும். வடிவேலுடைய படத்துக்கும் நன்றி.
//படம் புடிச்ச எனக்குத் தெரியாதது ஒனக்கு எப்பிடியா தெரியுது//
ReplyDeleteஎல்லாம் ஒரு அனுமானம் தான் :-)
//கைப்பு அங்குள்.. கைப்பு அங்குள்.. போட்டோ எல்லாம் சூப்பர் அங்குள்.. எந்த ஸ்டூடியோல எடுத்தீங்க அங்குள்?? :)//
ReplyDeleteவாம்மா கோல்டன் க்ரீப்பரு,
முதல் வருகைக்கு நன்றி. டெப்யூ கமெண்டே கலாய்ச்சலோடவா? சரி...மேலே இத்தனை பேரு கமெண்டுக்குப் பதில் சொல்லிருக்கேனே அதெல்லாம் பாக்குறதில்லியா? என்னை அங்குள்னு கூப்புடற உரிமையை நான் கைக்குழந்தைகளுக்கு மட்டும் தான் குடுத்துருக்கேன். சரி...சரி...சின்னப்பில்ல எதோ தெரியாம பண்ணிட்ட போலிருக்கு!. இனிமே இப்படி தப்பு நடந்துக்காம பாத்துக்க...ரைட்டா?
ஆங்...போட்டாவைப் பத்தி எதோ கேட்டேயில்ல? இது ஹாலிவுட்ல இருக்குற யூனிவர்சல் பிக்சர்ஸ் காரங்க கையில் துட்டு இல்லாம என் கிட்ட வந்து "அண்ணே கண்ட பயலுக்கும் படம் எடுக்க காசு போட்டு போண்டி ஆயிட்டோம். நீங்க படம் புடிச்சு குடுங்கன்னா எதோ உங்க பேரைச் சொல்லி பொழச்சிக்குவோம்"னு அளுக ஆரம்பிச்சிட்டாங்க...லைக் எ ஸ்மால் சைல்டுமா. போனா போவுதுன்னு நானே என் கைக்காசைப் செலவழிச்சு ஏவிஎம் ஸ்டூடியோவுல செட் போட்டு புடிச்ச படம் இதெல்லாம். நல்லாருக்கில்ல? டேங்கூ...டேங்கூ
:)
//என்னையும் உங்க சங்கதுல சேர்த்துப்பீங்களா?//
ReplyDeleteஆவி,
மொதல்ல ஒரு சின்ன குவெஸ்டியனேர் ஃபில் அப் பண்ணனும். அப்பால தான் முடிவெடுக்க முடியும்.
1. நீ நல்ல ஆவியா? கெட்ட ஆவியா?
2. அமானுஷ்ய ஆவியில இட்லி நல்லா வேகுமா?
மேல இருக்குற கேள்விகளுக்கு ஃபர்ஸ்டு பதில் சொல்லு ஆவி...
//கைப்புவ கலாய்கரதுக்கு இன்னொரு ஆள்...பொற்கொடி நீ நடத்துமா...ஆப்பு இல்லனா தலைக்கு தூக்கம் வராது :-)//
ReplyDelete12பி...என்ன இது கப்பித் தனமா இதுக்கெல்லாம் கூட்டணி அமைச்சிக்கிட்டு?
//நீங்க போட்டிருக்கிர படங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு.
ReplyDeleteநீங்க என்னுடைய blog க்கு வந்து பதில் போட்டிருக்கிறீங்க. நன்றி.
நான் படத்துல வடிவேலுவின் பஹிடியெல்லாம் பார்த்து சிரிப்பேன். வடிவேலு சொல்லுற "ஆஹா, வந்துட்டாய்யா வந்துட்டா" கேக்க நல்ல சிரிப்புத்தான் வரும். வடிவேலுடைய படத்துக்கும் நன்றி//
வாங்க அஞ்சலி,
படங்கள் தங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. எனக்கும் உங்களைப் போலவே வடிவேலுவின் நகைச்சுவை மிகவும் பிடிக்கும். உங்க வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.
enna romba rest edukaringa? next post :)
ReplyDelete@ram:
ReplyDelete//12பி...என்ன இது கப்பித் தனமா இதுக்கெல்லாம் கூட்டணி அமைச்சிக்கிட்டு?
//
parunga kaipu uncle thevai ilama unga friend kappiya vambuku izhukraru.. enanu kepom..
blogla pudhu post-ellam podara ideavay ilaya illa 100 comments vantha odanay than eluthuveengala.. sir we all waiting our "thala"'s post...
ReplyDelete-deeksh!
arumaiyana paadal.. Enoda favourite collectionsla "bharathi" uyum onnu. Nalla padam. romba rasichain.. neenga kavithai books elam vasipingala? Nan niraiya vasipain :) Romba pudikum enaku.
ReplyDelete-deeksh.
கைப்புள்ள, பாரதி பாடல் வரிகளுக்கு நன்றி.
ReplyDeleteசில திருத்தங்கள் (எனக்கு தெரிந்தவரை)
"தெளிய அடியார்" -- எளிய அடியார்
"நெற்றித்திரைக்குள்" -- நெற்றிப் பிறைக்குள்
நன்றி.