Friday, August 25, 2006

குயி...குயி...குயிஜு பதில்கள்

குயி...குயி..குயி...குயிஜு பதிவின் பதில்கள் கீழே.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக் கண்டத்தவர் யார்?
பர்மாவைச் சேர்ந்த திரு.மஹா த்ராய் சித்து யூ.தாண்ட்(Maha Thray Sithu U Thant). ஐ.நா.பொதுச் செயலாளர்களாக இது வரை இருந்தவர்களில், ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஒருவர் தான். பஹ்ரைன், யெமன் நாடுகளுக்குள் உள்நாட்டுப் போர் மூளாமல் தடுக்க சமாதான முயற்சிகளையும், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஆறு நாள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தனது பணிக் காலத்தின் போது தாண்ட் பணியாற்றினார்.

http://en.wikipedia.org/wiki/Thant

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின் திரைப்பெயர் என்ன?
'லஜ்ஜாவதி' கோபிகா தானுங்கோ...

நண்பர் பவன் தரும் கூடுதல் தகவல் : 'கேர்ளி ஆண்டோ' என்ற கோபிகாவின் இயற்பெயரை மாற்றி 'கோபிகா' என வைத்தவர் மலையாள திரைப்பட இயக்குநர் துளசிதாஸ்.

http://www.hinduonnet.com/thehindu/mp/2005/08/20/
stories/2005082003450100.htm


3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். எனக்கு பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. சரி! இப்ப கேள்வி...இப்படத்தில் 'பாட்சா' ரஜினி அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?
Pince-nez - பே நே என்று உச்சரித்தல் வேண்டும். இவ்வகை கண்ணாடிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்தன. காதின் மீது அமராமல் அணிபவரின் மூக்கின் மீது ஒரு சிறிய முட்டுக் கொடுத்து அமருவதால் இக்கண்ணாடிகளுக்கு ஆங்கிலத்தில் "Pinch nose" என்ற பொருள்படும் பிரெஞ்சு மொழிச் சொல்லான "Pince-nez" கொண்டு அறியப் பெறுகிறது.(காது மேலே உக்காறது, மூக்கு மேல முட்டு அப்படி இப்படின்னு எழுதும் போது எனக்கே காமெடியாத் தான் இருக்கு...ஆனாலும் எப்படி எழுதுறதுன்னு தெரியாததுனால அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கிறேன்)


பாட்சா படத்தில் ரஜினி அணியும் இக்கண்ணாடியை, நிஜ வாழ்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட்டும்(Theodore Roosevelt), திரையில் மேட்ரிக்ஸ் ஆங்கிலத் திரைபடத்தில் மொட்டைபாஸ் மார்ஃபியஸ் ஆக வரும் லாரென்ஸ் ஃபிஷ்பர்னும்(Laurence Fishburne) அணிந்து பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Pince-nez

4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுவது என்ன?
வருவேன் அல்லது வரமாட்டேன் என்று பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Respondevu Sil vou plait என்ற பிரெஞ்சு மொழி சொற்றொடரின் சுருக்கம் தான் RSVP. வரவேற்பைத் தங்களுக்கு அனுப்பியவர், எத்தனை விருந்தினர்கள் வருவார்கள் எத்தனை பேர் வரமாட்டார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படையில் திட்டமிடுதலுக்காகவும் தங்களை பதில் அளிக்கக் கோருகிறார்.

http://dictionary.reference.com/search?q=RSVP

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?
சௌரி சௌரா சம்பவம். 1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கெதிரான அடக்குமுறை சட்டமான ரௌலத் சட்டத்தையும், மற்றும் சில உரிமை மீறல் சட்டங்களையும் எதிர்ப்பதற்காகவே காந்தியடிகள் பொது ஒத்துழையாமை இயக்கத்திற்கு அரைகூவல் விடுத்தார். இவ்வியக்கம் உச்சத்தில் இருந்த போது, பிப்ரவரித் திங்கள் 1922 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அருகில் உள்ள சிறிய ஊரான சௌரி சௌராவில், ஒரு காவல் சாவடியைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் 22 போலிசார் பலியாயினர். அஹிம்சை வழியைத் தம்முடைய ஆதரவாளர்கள் இன்னும் சரி வரப் புரிந்து கொள்ளாததை உணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். அதன் விளைவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டனர். அதன் பிறகு காந்தியடிகள், வெள்ளையர்களால் ஆறாண்டு காலம் சிறை வைக்கப் பட்டார்.

http://en.wikipedia.org/wiki/Chauri_Chaura

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = "சத்தி முத்த வாவியுள்"

நாரைவிடு தூது - முழுபாடலும் கீழே.

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!

மன்னருக்குக் குறிப்பால் தம்முடைய வறுமை நிலையை உணர்த்த புலவர், நாரையைத் தூதாக விடுவதாக அமைந்த ஒரு பாடல். எழுதியவர் பெயர் 'சத்திமுத்தப் புலவர்' என நினைவு. இது புறநானூற்றுப் பாடலா என நினைவில்லை. நம்ம தளபதி சிபி புறம் தான்னு சொல்றாரு...சரியாத் தான் இருக்கும். இப்பாடலின் சுட்டியை மேற்கோள் காட்டிய ப்ரியன் மற்றும் கொத்ஸ் இருவருக்கும் நன்றி. இக்கேள்வியை எழுதுவதற்கு முன் இப்பாடல் வரிகளை நானும் திரு.சங்கர் அவர்களின் பதிவில் தான் சரி பார்த்தேன்.

நன்றி : திரு.சங்கர் - சுவடு

7. இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?
ரியோ டி ஜெனிரோ(Rio de Janeiro) நகரம், பிரேசில் நாடு. 2330 அடி உயரம் கொண்ட கார்கோவாடோ(Corcovado) மலையின் மீது இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிர்மானிக்கப் பட்டது. சிலையின் பெயர் 'Christ the Redeemer' (மீட்பர் இயேசு - சரி தானுங்ளே?). கிறித்தவ சமய சின்னமாக காணப் படுவதுடன் ரியோ நகரத்திற்கு அடையாளம் வழங்கும் ஒரு சின்னமாகவும், இயேசுவின் விரிந்த கைகள் பிரேசில் மக்களின் நேசத்தைக் குறிப்பதாகவும் திகழ்கிறது.


கொசுறு : இந்தச் சிலையை நான் முதன்முதலில் பார்க்க நேர்ந்தது ஜீ-எம்ஜிஎம் சேனலில் கண்ட 'Blame it on Rio' என்ற ஆங்கிலப் படத்தில் தான். டெமி மூரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. டெமி மூர் போன்ற புகழ் பெற்ற நடிகைக்கே இந்தப் படத்தில் ஒரு சின்ன சைடு ரோல் தான்னா பாத்துக்கங்களேன். படம் அங்கங்கே மெதுவா நகர்ந்தாலும் "ஜில்" டைப்பு தான் :)
http://en.wikipedia.org/wiki/Christ_the_Redeemer_(statue)

8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
'தா' அல்லது தைவதம். இசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ஏழு. "ஸ ரி க ம ப த நி". ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு இயற்கையில் ஒரு மிருகத்தாலோ அல்லது ஒரு பறவையாலோ எழுப்பப் படும் ஒலியை ஆதாரமாகக் கொண்டது. இதில் 'த' என்னும் ஸ்வரம்குதிரையின் கணைப்பை அடிப்படையாகக் கொண்டது. மற்ற ஸ்வரங்கள் எந்த ஒலியை அடிப்படையாகக் கொண்டது என்று அறிந்து கொள்ள ப்ரியன் கொடுத்த கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.

நன்றி : http://janhaag.com/NP23thats.html


9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
பிகினி. 1940களில் ஆணுஆயுத பரிசோதனைகளை பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கு மேற்கே உள்ள தீவுக் கூட்டங்களில் அமெரிக்கா மேற்கொண்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப் பட்ட ஒரு தீவுக் கூட்டத்தின் பெயர் தான் பிகினி(Atoll of Bikini). 1946இல் லூயி ரியாட்(Louis Reard) என்ற பிரெஞ்சு நாட்டு கார் பொறியாளர்(பாருங்கைய்யா பாருங்க!!) இரத்தினச் சுருக்கமான(!?) ஒரு பெண்கள் நீச்சலுடையை வடிவமைத்தார். அதே சமயத்தில் அமெரிக்கா தன்னுடைய அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததால் அதை போன்றே ஒரு பெரிய பரபரப்பை இவ்வுடை ஏற்படுத்தும் என்று எண்ணி அதற்கு 'பிகினி' என்று பெயர் சூட்டினார்.

ஆமா...இதுக்கு சுட்டி கொடுத்து தான் நீங்க வெவரம் தெரிஞ்சிக்கனுமாக்கும்? :)

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
ஜெர்ரி லூயிஸ். இவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காமெடி நடிகர். நாகேஷ் இவரைத் தன் ரோல் மாடலாகக் கருதினாலும், மனோரமா ஆச்சி என்ன சொல்லிருக்காங்கன்னு கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

http://www.hindu.com/2005/08/01/stories/2005080113040200.htm

கேள்விகளுக்குப் பதில் அளித்து இப்பதிவைக் கலகலப்பாகக் கொண்டுச் சென்ற நண்பர்கள் மகேந்திரன், மின்னல், பவன், பொன்ஸ், ப்ரியன், சின்னத்தம்பி, வணக்கத்துடன், தேவ், தளபதி சிபி, கோவி.கண்ணன், தம்பி, கப்பி, இலவசக் கொத்தனார், ராம் மற்றும் ஹிட்களை எகிறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களும் நன்றிகளும்.

27 comments:

  1. Thanks for quick answers.
    I just knew the answers only for 4...

    ReplyDelete
  2. தல,

    உன்னோட நன்றிக்கு நன்றி.... ஆனா பேசின பரிசுதொகை என்னோட அக்கவுண்ட்க்கு வரலை. நீ நேத்து சொன்னதுதான் பரிசு சொன்னேன்னு வச்சுக்கோ...! அப்புறம் இங்கனெ பெரிய கலவரமே நடக்கும் பார்த்துக்கோ ஆமாம் சொல்லிப்புட்டேன்.....!

    ReplyDelete
  3. உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  4. சரியான பதில், முயற்சிகள் மற்றும் பின்னூட்டங்களுக்கு பேசினபடி பரிசுத் தொகை வரலைண்ணா ரண களமாயிடுமப்பு!

    அப்புறம் கட்டதுரை, பார்த்தியைக் கூட்டிட்டு வந்துடுவேன்.

    (அட! பேசாம அவங்களையும் குவிஸ்ல கலந்துகச் சொல்லி இருக்கலாமே)

    ReplyDelete
  5. சங்கத்துச் சிங்கங்களே..
    கோபிகா க்யூட்டா இருப்பதைப் பார்த்து மயங்கி அந்த கேமிரா மேட்டரை மறந்துடாதீங்க

    ReplyDelete
  6. தல... பிரமாதம்!!!
    சும்மா மூச்சுத் திணறத் திணற கேட்டுடீங்க...ரெண்டு கேள்விக்குத் தான் பதில் தெரிஞ்சது!!

    நடக்கட்டும்...நடக்கட்டும்!!!

    ReplyDelete
  7. //Thanks for quick answers.
    I just knew the answers only for 4...//

    வாங்க வாங்க அனிதா,
    வருகைக்கு நன்றி. இங்கேயும் அதே கேஸ் தாங்க.
    :)

    ReplyDelete
  8. //அப்புறம் இங்கனெ பெரிய கலவரமே நடக்கும் பார்த்துக்கோ ஆமாம் சொல்லிப்புட்டேன்.....!//

    கலவரம்னா கை போறது, கால் போறது, தலை துண்டாறது இதெல்லாம் நடக்குமா? யே ப்ளீஸ் பா...சீக்கிரம் கலவரம் பண்ணுங்கப்பா. நான் பாத்ததேயில்ல

    ReplyDelete
  9. //உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    வா புலி!
    இப்ப எதுக்கு உருமுறே? இன்னிக்கு எரை பலமோ?

    ReplyDelete
  10. //(அட! பேசாம அவங்களையும் குவிஸ்ல கலந்துகச் சொல்லி இருக்கலாமே)//

    அஆம்பா அவுங்க என்னை கலாய்க்க, நீங்க பாஞ்சு வந்த என்னை காப்பாத்த அப்படின்னு அந்த பதிவுல 200 அடிச்சிருக்கலாம்...ஹ்ம்ம்ம்.

    கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம்.

    ReplyDelete
  11. //கோபிகா க்யூட்டா//

    யாராச்சும் சொல்லுவாங்களான்னு எதிர்பாத்தேன். பரவால்ல நீங்களாவது சொன்னீங்களே?

    //அந்த கேமிரா மேட்டரை மறந்துடாதீங்க//
    பொன்ஸு...பொன்ஸு. செம சிரிப்பு போங்க. அது உண்மையான கேமரான்னு நீங்களும் நம்பிட்டீங்களா?

    ReplyDelete
  12. //தல... பிரமாதம்!!!
    சும்மா மூச்சுத் திணறத் திணற கேட்டுடீங்க...ரெண்டு கேள்விக்குத் தான் பதில் தெரிஞ்சது!!//

    வாங்க சிவகுமார்,
    எல்லாம் கலந்து கொடுத்ததா தான் நெனச்சிட்டு இருக்கேன். ரொம்ப கஷ்டமோ? தேடுனா கூகிள்ல எல்லா கேள்விக்கும் பதில் கெடக்குமுங்க.
    :)

    ReplyDelete
  13. //கலவரம்னா கை போறது, கால் போறது, தலை துண்டாறது இதெல்லாம் நடக்குமா? யே ப்ளீஸ் பா...சீக்கிரம் கலவரம் பண்ணுங்கப்பா. நான் பாத்ததேயில்ல //

    நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன்.... ஓவரா பேசிக்கிட்டே இருக்கே, ரணகளமின்னு உன்னோட கேப்சனில் வச்சுக்கிட்டே இந்த ஆட்டமா உனக்கு...????

    ReplyDelete
  14. //யாராச்சும் சொல்லுவாங்களான்னு எதிர்பாத்தேன். பரவால்ல நீங்களாவது சொன்னீங்களே?//

    ம் சரி சரி தொடச்சுக்கோ... ரொம்ப வழியுது.... ஓ என்னா எனக்குமா சரிவிடு இதல்லாம் அரசியல்லே சகஜம்.. :-)))))))



    //பொன்ஸு...பொன்ஸு. செம சிரிப்பு போங்க. அது உண்மையான கேமரான்னு நீங்களும் நம்பிட்டீங்களா? //

    தல உன்னோட சேட்டை அளவில்லாமே போகுது... இப்பிடியா அநியாத்துக்கு பொய் சொல்லுவே.....

    ReplyDelete
  15. //ஓவரா பேசிக்கிட்டே இருக்கே, ரணகளமின்னு உன்னோட கேப்சனில் வச்சுக்கிட்டே இந்த ஆட்டமா உனக்கு...????//

    அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா ராசா?
    :)

    ReplyDelete
  16. //ம் சரி சரி தொடச்சுக்கோ... ரொம்ப வழியுது.... ஓ என்னா எனக்குமா சரிவிடு இதல்லாம் அரசியல்லே சகஜம்.. :-)))))))//

    அழகை ரசிக்க கத்துக்கங்கப்பா. இப்ப என்னையவே எடுத்துக்க... பாரு எப்படி அழகை ஒரு கலைஞனா பல எடங்கள்ல ரசிக்கிறேன்னு? அத வுட்டுப் புட்டு வழியுது, ஓடுதுன்னுக்குட்டு சின்னப்புள்ளத்தனமா? எப்ப தான் நீங்கல்லாம் திருந்தப் போறீங்களோ?
    :)

    ReplyDelete
  17. //தல உன்னோட சேட்டை அளவில்லாமே போகுது... இப்பிடியா அநியாத்துக்கு பொய் சொல்லுவே.....//

    இதுக்கே இப்படின்னா...படத்தை எல்லாம் சுட்டுத் தான் ப்ளாக்ல போட்டதுன்னு சொன்னா என்ன சொல்லுவியோ? ஹையோ...ஹையோ!!! ஒரே டமாஸு

    ReplyDelete
  18. //அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா ராசா? :) //

    சரி தல நீயே சொல்லீட்டே...அப்புறமென்னே மிச்சமா இருக்கு அடிவாங்கிறதுக்கு ....!

    //அழகை ரசிக்க கத்துக்கங்கப்பா. இப்ப என்னையவே எடுத்துக்க... பாரு எப்படி அழகை ஒரு கலைஞனா பல எடங்கள்ல ரசிக்கிறேன்னு? அத வுட்டுப் புட்டு வழியுது, ஓடுதுன்னுக்குட்டு சின்னப்புள்ளத்தனமா? எப்ப தான் நீங்கல்லாம் திருந்தப் போறீங்களோ?//

    தல,

    நீயீ பெரிய கலாரசிகன் தான் போ....!
    இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு உனக்கு.....


    இன்னோன்னு கடைசியா நமக்கு தெரிச்ச இங்கிலிபிஸ்'ல லாஸ்ட் பார் நாட் லீஸ்ட்....

    ReplyDelete
  19. அப்படியே யார் யாரு எந்த கேள்விக்கு சரியான பதில்சொன்னாங்கன்னொ சொன்னா நல்லா இருக்கும் :)

    ReplyDelete
  20. //அப்படியே யார் யாரு எந்த கேள்விக்கு சரியான பதில்சொன்னாங்கன்னொ சொன்னா நல்லா இருக்கும் :)//

    ஏங்க? ஏங்க? ஏங்க? ஒங்களுக்கு இந்த அல்ப ஆசை? சரி! இருந்தாலும் ஆஸப்பட்டு கேட்டுட்டீங்க...

    மகாஜனங்களே! நல்லா கேட்டுக்கங்கய்யா! குவிஜுல ஒன்பதாவது கேள்விக்கு 'பிகினி'ன்னு மொத மொதோ சரியா பதில் சொன்னது பல்லவ பேரரசர் மகேந்திர வர்மன் தான்...மகேந்திர வர்மன் தான்...மகேந்திர வர்மன் தான். சத்தமா சொல்லிட்டேன். அப்புறமா யாரும் எனக்கு கேக்கலன்னு சொல்லப்பிடாது ஆமா!

    பல்லவரே! போதுமாங்க? ஒங்க ஆசையைப் தீத்து வச்சேனுங்ளா?
    :)

    ReplyDelete
  21. //இன்னோன்னு கடைசியா நமக்கு தெரிச்ச இங்கிலிபிஸ்'ல லாஸ்ட் பார் நாட் லீஸ்ட்....//

    அட! என்னான்னு சொல்லுப்பா?

    ReplyDelete
  22. ஹையா! நாம 4.5 மார்க். 4.5 விடைகள் சரியானவை

    ReplyDelete
  23. அடப்பாவி ஒன்னிய தூக்கி தண்ணியில்லா காட்டுல போட்டா என்னா யார் யாரு சரியா எந்த கேள்விக்கு சொன்னான்னு சொல்லச்சொன்னா பிகினிக்கு நான் சொன்னது சரின்னு சொல்லி என்னை பிகினிக் காதலன் போலன்னு மக்கள் நினைக்கிற மாதிரி ஆக்கிபுட்டயே நல்லா இருப்பா :))

    ReplyDelete
  24. //ஹையா! நாம 4.5 மார்க். 4.5 விடைகள் சரியானவை//

    வாங்க சிவஞானம்ஜி!
    ஒரு கேள்விக்கு ஒரு மார்க் போதுமாங்க? அது சரி அந்த அரை டிக்கட் யாருங்க?
    :)

    ReplyDelete
  25. //அடப்பாவி ஒன்னிய தூக்கி தண்ணியில்லா காட்டுல போட்டா என்னா//
    இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

    //யார் யாரு சரியா எந்த கேள்விக்கு சொன்னான்னு சொல்லச்சொன்னா பிகினிக்கு நான் சொன்னது சரின்னு சொல்லி என்னை பிகினிக் காதலன் போலன்னு மக்கள் நினைக்கிற மாதிரி ஆக்கிபுட்டயே நல்லா இருப்பா :)) //

    ஐயயோ! தப்பு நடந்து போச்சா? அப்போ நீங்க எதார்த்தமா தான் கேட்டீங்களா? நான் தான் ஒளறிட்டேனா? ஆனா தப்பு உங்க பேருலயும் தான்...நீங்க உங்க பின்னூட்டத்தோட ஸ்மைலி போட்டுருக்கறதை பாத்து ஏமாந்துட்டேன். சரி எதோ நடந்தது நடந்துடுச்சு...தனிமனித தாக்குதல் அது இதுன்னு என் மேல பிராது எதுவும் குடுத்துடாதீங்க சாமியோவ்!
    :)

    ReplyDelete
  26. ம்ம்ம்ம்ம், நாராய், நாராய் பாட்டு சங்க காலத்தைச் சேர்ந்ததுனு நினைக்கிறேன். ஏற்கெனவே yosinga.blogspot.com பதிவிலே ஒரு முறை நான் இந்தப் பாட்டை எழுதினேன். பல மாதம் முன்னால் அது எழுதினேன். நல்ல உபயோகமான கேள்வி-பதில். சினிமா சம்மந்தப்பட்ட கேள்விகளின் பதில் தெரியாமல் தான் பேசாமல் இருந்தேன். மொத்தத்தில் நல்ல முயற்சி, தொடர வாழ்த்துக்கள். உங்க பதிவில் பின்னூட்டம் இடலைன்னு வரலைனு நினைக்காதீங்க. அப்போ அப்போ வந்து பார்த்துட்டுத் தான் இருக்கேன்.

    ReplyDelete
  27. //ம்ம்ம்ம்ம், நாராய், நாராய் பாட்டு சங்க காலத்தைச் சேர்ந்ததுனு நினைக்கிறேன். ஏற்கெனவே yosinga.blogspot.com பதிவிலே ஒரு முறை நான் இந்தப் பாட்டை எழுதினேன்.//

    நானும் இதை பாத்தேங்க. Google searchல "நாராய் நாராய்"னு தேடுனா நீங்க எழுதுனது உங்க பேரோட முதல் பக்கத்துலயே வருது.

    //மொத்தத்தில் நல்ல முயற்சி, தொடர வாழ்த்துக்கள். உங்க பதிவில் பின்னூட்டம் இடலைன்னு வரலைனு நினைக்காதீங்க. அப்போ அப்போ வந்து பார்த்துட்டுத் தான் இருக்கேன்.//
    ரொம்ப நன்றி மேடம். நேரம் கெடக்கும் போதெல்லாம் பின்னூட்டமும் போடுங்க.
    :)

    ReplyDelete