Saturday, August 19, 2006

தடிப்பசங்க #5

காட்சி #5 : இலங்கை குறும்பு

எல்லாரும் நெல்லை குறும்பு. கோயமுத்தூர் குறும்பு அப்படின்னு அவங்கவங்க ஊரு குறும்பைப் பத்தி எழுதியிருக்காங்க. நான் ஒரு மாறுதலுக்காக 'இலங்கை குறும்பை' பத்தி சொல்றேங்க. இதுல பியூட்டி என்னன்னா கடைசி வரைக்கும் அது குறும்பா இல்லியான்னு தெரியாமலே போச்சு...அப்படிப்பட்ட ஒரு ஜகஜால குறும்பு. சொல்ல வர்ற மேட்டரு ரொம்ப சிறுசுங்கிறதால வழக்கம் போல நடு நடுவால செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?

நாம ஒருத்தரு கிட்ட போய் பல்பு வாங்கிறதுக்கும் இன்னொருத்தர் பல்பு வாங்கிட்டு வர்றதைப் பாக்கறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு நெனக்கிறீங்க? பெருசா ஒன்னும் வித்தியாசம்
இல்ல...அடுத்தவன் பல்பு வாங்குனா அதப் பாத்து ரசிக்கிறதுல ஒரு சந்தோஷம்...நாலு பேரு கிட்ட பெருமையாச் சொல்லலாம் இன்னாரு இன்னாரு கிட்ட இன்ன தேதிக்கு இன்ன பல்பு வாங்குனாருப்பான்னு...ஏன் அப்படி பட்ட சமாச்சாரங்களை இந்த மாதிரி ப்ளாக்ல எழுதி கூட உலகம் முழுக்க சந்தோஷமாச் சொல்லலாம். அதுவே நாம வாங்குன பல்பா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்போம்...அம்புட்டுத் தான் வித்தியாசம். சரி...அதான் நீ பல்பு வாங்கலையே...சந்தோஷமாச் சொல்லு அப்படீங்கறீங்களா? அதுவும் சரி தான். யப்பா! பல்பு வாங்குனவனே! பாத்துக்கப்பா ஜனங்க எல்லாம் கேக்கறதுனால தான் சொல்றேன். இப்பவே சொல்லிட்டேன்.

சென்னை மாநகரிலே...அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் தடாகங்களையும், அர்ச்சுனனுக்கு டிரைவர் வேலை பாத்த சாமிக்கு என்று ஒரு பழம்பெரும் வைணவத் திருத்தலத்தையும், காலத்தின் கோலத்தால் கலர் கலரான டோக்கன்களைக் கையில் கொண்டு புவ்வாவிற்காகக் காத்து நிற்கும் பேச்சிலர்களையும், மகாகவி பாரதி தன் கடைசி நாட்களைக் கழித்த இடத்தையும், தில்லையம்பலனின் பெயர் கொண்ட கிரிக்கெட் விளையாட்டுத் திடலையும், சென்னையின் வற்றாத ஜீவநதியான 'கூவம் அன்னையின்' இளைய சகோதரி 'பக்கிங்காம் சித்தியையும்' தன்னகத்தே கொண்ட, மதிப்பிற்குரிய மாண்புமிகு திருவாளர் ஐயா திரு கைப்புள்ள அவர்கள் தன்னுடைய சில கழுதை வயது(எத்தனைன்னு சொல்ல மாட்டோம்ல) வரை ஆட்சி செய்த அந்த புண்ணிய தலத்தின் பெயர் 'திருவல்லிக்கேணி'. சான்றோர் இத்திருத்தலத்தை 'தில்லக்கேணி'
என்றும் 'டிரிப்ளிகேன்' என்றும் வழங்குவார்கள்.

அங்கே எங்க பக்கத்து வீட்டுல இருந்த ஆண்ட்டியின் பொறந்த வீடு கொழும்பு, இலங்கை, அவுங்க ஆத்துக்காரருக்கு நம்ம தளபதியாருடைய ஊரான நாமக்கல் பக்கம். ஆண்ட்டிக்கும் அங்கிளுக்கும் தூரத்துச் சொந்தமாம். அவங்களோட குட்டிப் பொண்ணு பிருந்தா, தடிப்பசங்களுக்குத் தங்கச்சி இல்லாத குறையையும் எங்கம்மாவுக்கு பொண்ணு இல்லாத
குறையையும் தீர்த்து வச்சது. எங்க வீட்டுல வணிலா க்ரீம் வேஃபர்ஸும், "கேண்டோஸ்" சாக்லேட்டும், "தில்மா" டீயும், தொத்தலும், மாசி கருவாடும் இருந்ததுன்னா பக்கத்து வீட்டுல சிலோன்லேருந்து யாரோ வந்துருக்காங்கன்னு அர்த்தம். நமக்கு குறிப்பா இந்த தொத்தல்னா ரொம்ப புடிக்குமுங்க. "தொத்தல்"னா என்னன்னு கேக்கறவங்க திருவான்மியூர்ல இலங்கை தமிழர் ஒருத்தர் நடத்தற 'தமிழினி இனிப்பகம்'னு ஒரு கடை இருக்குதுங்க அங்கே "யாழ்ப்பாணம் தொத்தல்"ங்கிற பேருல இந்த இனிப்பு பலகாரம் சென்னையிலேயே கெடைக்குது. வாங்கி சாப்புட்டு பாருங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும். அல்வாவுக்கும் ஆப்பத்துக்கும் ஒரு ஹைப்ரிட் குழந்தை பொறந்துச்சுன்னா எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும் 'தொத்தல்'.

அதோட அவங்க வீட்டுல பேசற தமிழை நானும் என் தம்பியும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். அப்போ, அது அந்த வயசுக்கு உரிய ஒரு amusement(வியப்புன்னு) வையுங்களேன். உதாரணத்துக்கு 'சின்னப் பசங்க'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'பொடியன்மார்'னு சொல்லுவாங்க, 'முடியாது'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'இயலாது'ன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி லுங்கிக்குப் பதிலா 'சாரம்', ஜட்டிக்குப் பதிலா 'ஜங்கி', காசுக்குப் பதிலா 'சல்லி'. அதோட பேச்சுல எப்பவும் யார் கிட்டயும் ஒரு மரியாதை இருக்கும். அவங்க வீட்டுல இருக்குற தம்மாத்தூண்டு பசங்களைக் கூட வாங்க, போங்கன்னு மரியாதையாத் தான் பேசுவாங்க. அப்ஸையே சில சமயம் "இன்னா நைனா எப்பிடிக்கீறே?"ன்னு கேக்கற நமக்கு இதை எல்லாம் பாத்தா பயங்கர ஆச்சரியமா இருக்கும். ஆனா நம்ம சென்னை மட்டும் லேசுப் பட்டதுங்களா? செம்பரம்பாக்கம் தண்ணி குடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அந்த ஆண்ட்டியோட பேச்சு கிட்டத் தட்ட "மெட்ராஸிஃபைட்
சிலோன் தமிழ்" லெவலுக்கு வந்துடுச்சு. ஆனாலும் அவங்களோட அப்பா கொழும்புலேயே இருக்கறவரு, அவரு எப்பவாவாது அவங்க மகளைப் பாக்க சென்னைக்கு வருவாரு. அவரு பேசறதைக் கேக்கும் போது இங்கிலீஸைக் கலக்காம தமிழை இப்படியும் பேச முடியுமான்னு மலைப்பா இருக்கும்.

தாத்தா - அதான் ஆண்ட்டி அவங்க அப்பா, நல்லா ஆறு அடி ஒயரம், படபடன்னு பேசற டைப். ஆண்ட்டி அவுங்க தோப்பனாரைப் பத்தி சொன்ன வரைக்கும் அவங்க வீட்டுல எல்லாரும் அவருக்கு ரொம்ப பயப்படுவாங்கன்னு தெரிஞ்சது. ஆனாலும் நம்ம இளவல், அதாங்க தடிப்பசங்கள்ல சின்னவரு வீட்டுல இருக்குற "ரெண்டாம் நம்பர்" பசங்களுக்கே உரிய 'இளங் கன்று பயமறியாது'ங்கிற குணம் உடையவரு. எப்பவும் எங்க வீட்டுக்கு வரும் போது 'ஜெம்ஸ்' வாங்கிட்டு வர்ற அப்பாவின் நண்பர் ஒருத்தர் அவசரத்துல ஜெம்ஸ் வாங்காம வந்ததும் "என்ன அங்கிள்!
இன்னிக்கு ஜெம்ஸ் வாங்கிட்டு வரலையா?"ன்னு அவரைக் கேட்டு கதிகலங்க வச்சு, அதுக்கப்புறமா வீட்டுல டின்னு வாங்கிக் கட்டிக் கொண்டவர். அதோட ஸ்கூல்ல பசங்க கிட்ட கேக்கற கடி ஜோக்குகளை எல்லாம் கேட்டுட்டு வந்து பட்டித் தொட்டி எங்கும் பரப்புவாரு.

ஒரு கடி மன்னனுக்கே உரிய வீரத்தோட படை எடுத்துப் போய் அடுத்தவங்களைக் கடிச்சிட்டு வர்றவரு. வயசு வித்தியாசம் இல்லாம, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாகுபாடு இல்லாம யாரு கண்ணுல பட்டாலும் அவங்களைக் கடியா ஒரு கேள்வி கேட்டு வப்பாரு. அவங்க பதில் தெரியாம "ஆளை வுடு சாமி"ன்னு சரெண்டர் ஆகும் போது கடியா பதில் சொல்றது நம்மாளோட வழக்கம். உதாரணத்துக்கு அவருடைய அப்போதைய டேட்டாபேஸிலிருந்து சில கடிகள்.
1. கொக்கு ஏன் ஒத்தைக் காலுல நிக்குது?.
இன்னொரு காலையும் எடுத்தா கீழே விழுந்துடும்

2. பஸ்ஸைப் பின்னால தள்ளுனா என்ன ஆகும்?
பின்(Pin) வளைஞ்சுடும்

3. கல்யாணத்துல வாழை மரத்தை ஏன் கட்டி வைக்கிறாங்க?
கட்டி வைக்கலன்னா விழுந்துடும்.

இந்த மாதிரி ஆனவை. கேக்கறவங்களும் சில சமயம் பதில் தெரியாம நீயே பதில சொல்லுப்பான்னு சொல்றதுண்டு, சில பேர் இந்த சின்ன வயசிலேயே ஒனக்கு இம்புட்டு அறிவா(!)ன்னு பாராட்டிட்டு போனதும் உண்டு. அந்த மாதிரி பாராட்டிட்டு போற பார்ட்டிகளால அண்ணாத்தைக்கு ரொம்ப தான் துளிர் விட்டுப் போச்சு. போற வர்றவங்களை எல்லாம் கடிச்சி ரணகளம் ஆக்குறதைப் பொழுதுபோக்கா வச்சிருந்தான்.

ஒரு தரம் இப்படித் தான் ஆண்ட்டியோட அப்பா கொழும்புலேருந்து வந்துருந்தார். என் தம்பி "அம்மா அம்மா ஸ்கூல் லீவு விட்டு எனக்கு ரொம்ப போர் அடிக்குது. பக்கத்து வீட்டுல தாத்தா வந்துருக்காரு அவரைப் போய் கொஞ்சம் கடிச்சிட்டு வர்றேன்" அப்படின்னான்.

அம்மா "அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவருக்கு சட்டுன்னு கோவம் வருமாம். அந்த ஆண்ட்டி சொல்லிருக்காங்க. நீ பாட்டுக்கு எதாச்சும் லூசுத்தனமா ஒளறி வச்சு அவரு தப்பா எடுத்துக்க போறாரு"ன்னு சொன்னாங்க.

இதுக்கெல்லாம் அசருறவரா நம்மாளு? "அவரு கோவக்காரருன்னா அது அவங்க ஊருல. இது மெட்ராஸு, எங்க ஊரு. இங்கே வந்தா நாங்க கடிக்கத்
தான் செய்வோம். அதெல்லாம் தாக்குப் புடிக்க முடியலைன்னா அவரு அவங்க ஊருக்கே போவட்டும்" அப்படி இப்படின்னு வீராப்பு பேச ஆரம்பிச்சிட்டான். அந்த நேரம் எனக்கு எதோ வேலை இருந்ததுனால நான் வெளியே கெளம்பி போயிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு நான் திரும்பி வந்து பாக்குறேன். என்னோட தம்பி வீட்டுல அமைதியா ஒக்காந்துருக்கான். "என்னாடா பக்கத்து வீட்டுத் தாத்தாவைக் கடிக்கப் போறேன்னு சொன்னே இப்ப இங்க ஒக்கார்ந்து இருக்கே" அப்படின்னு அவனைக் கேட்டேன்.

அதுக்கு அவன் "அட போடா! மனுசனாடா அவரு! நானும் எத்தனையோ பேரைக் கடிச்சிருக்கேன். கடிக்க வந்தவனையே கதற கதற கடிச்சு
கொதறுனவங்களை இது வரைக்கும் நான் பாத்ததில்லை. சின்ன பையன்னு கூட பாக்காம அவரு என்னை போட்டு கடிச்சிட்டாரு"ன்னான்.

அதை கேட்டதும் எனக்கு ஒரே சிரிப்பு. ஆனா சிரிச்சிட்டா என்ன நடந்துச்சுன்னு கதை சொல்ல மாட்டானேனு மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டு
ரொம்ப கரிசனமா "அவரு என்ன உன்னை விட பெரிய ப்ளேடா?"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன் "நான்லாம் அவரு முன்னாடி ஜுஜுபி"அப்படின்னான்.

"சரி என்ன தாண்டா நடந்துச்சு. சொல்லு" அப்படின்னேன்.

"அவங்க வீட்டுக்குப் போனேன்னா? தாத்தா நான் ஒங்களுக்கு ஒரு ஜோக் சொல்லவா? அப்படின்னேன்".

அவரும் "சொல்லுங்களேன்" அப்படின்னாரு.

நானும் "ஒரு ஊர்ல ஒரு கொசுவும் ஒரு யானையும் ருந்துச்சாம்"அப்படின்னு ஆரம்பிச்சேன்.

அவரு அதுக்கு "ஒரு ஊரிலே ஒரு கொசுவும் ஒரு யானையும் தானா
இருக்கும்?" அப்படின்னாரு.

நான் அதுக்கு "இல்லீங்க தாத்தா...இப்ப நம்ம ஜோக்ல ஒரு யானையும் ஒரு
கொசுவும் தான் இருக்குது" அப்படின்னேன்.

அதுக்கு அவரும்"சரி சொல்லுங்க" அப்படின்னாரு.

"ஒரு கொசுவும் ஒரு யானையும் மோட்டார் பைக்ல ரேஸ் போய்க்கிட்டு இருக்குதுங்க. அப்போ திடீர்னு ஒரு லாரி அதுங்க மோட்டார் பைக் மேலே வந்து மோதிடுது"

"அவரும் ஒரு ரியாக்ஷனும் காட்டாம அதற்குப் பிறகு அப்படின்னாரு. நானும் சரி இன்னிக்கு நமக்கு நல்ல வேட்டை தான் அப்படின்னு நெனச்சி மேலே சொல்ல ஆரம்பிச்சேன்"

"லாரி இடிச்சதுல யானை செத்துப் போச்சு ஆனா கொசு சாகலை. எப்படின்னு சொல்லுங்க பாக்கலாம்"னு அவரைப் பாத்து கேட்டேன்.

தாத்தா என்ன சொல்லிருப்பாருன்னு தெரிஞ்சிக்க எனக்கா பயங்கர ஆர்வம். "அதுக்கு அவரு என்ன சொன்னாரு"ன்னு நான் கேட்டேன்.

"தெரியலியே நீங்களே சொல்லுங்களேன்" அப்படின்னாருன்னு என் தம்பி சொன்னான்.

"இதான் சாக்குன்னு நீ அவரை வுழுந்து கடிச்சிருப்பியே" அப்படின்னேன்.

"அட போடா! நான் அவரு கிட்ட எல்லார் கிட்டயும் சொல்ற மாதிரி கொசு ஹெல்மெட் போட்டுருந்துச்சு, யானை ஹெல்மெட் போடலை அதான் செத்துப் போச்சு அப்படின்னேன். அதுக்கு அவரு சொன்னதைக் கேட்டுத் தான் ஆடிப் போயிட்டேன்" அப்படின்னான்.

"அப்படி என்ன தான்டா சொன்னாரு" அப்படின்னு ஆர்வத்தை அடக்க முடியாம கேட்டேன்.

"இந்த கேள்வியை நான் கேட்டா அதுக்கு முக்காவாசி பேரு கொசு பறந்து போயிருக்கும்னு தான் சொல்லுவாங்க. ஆனா இவரு பதில் தெரியலைன்னு சொல்லிட்டு நான் பதிலைச் சொன்னதும் முகத்தைப் படு சீரியசா வச்சிக்கிட்டு - அது எப்படிங்க முரளி! கொசு ஒரு சின்ன உருவம் தானே? அதனால் எப்படி ஹெல்மட் அணிய எயலும்" அப்படின்னு கேட்டு என்னையே போட்டு கலாய்ச்சிட்டாரு.

எனக்கா இதை கேட்டதும் பயங்கர சிரிப்பு "நீ அவரு கிட்ட சொல்லி புரிய வக்கலியா?" அப்படின்னேன்.

"போடா! நானும் அவரு கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அது தாங்க தாத்தா ஜோக்கேன்னு கூட சொல்லிப் பாத்தேன். கடியிலயே பெரிய கடி நம்ம ஜோக்கை ஒருத்தரு புரிஞ்சுக்காம கேள்வி கேக்குறாங்க பாரு அது தான். அவரு அதுக்கு கூட இருக்கட்டும் முரளி! ஆனாலும் கொசு போன்ற ஒரு சின்ன உருவத்தால எப்படி அவ்வளவு பெரிய ஹெல்மட்டை அணிய எயலும். இதை நீங்க எனக்கு வெளக்குங்கோ" அப்படின்னு என்னையே திரும்ப கேள்வி கேக்கறாரு.

"மோட்டார் பைக்ல கொசு எப்படி ஏறும்னு கேக்காம, கொசுவால எப்படி ஹெல்மட் அணிய எயலும்னு மட்டும் கேக்கறாரு. உண்மையிலேயே அவருக்கு ஜோக் புரியலியா, இல்ல புரிஞ்சிக்கிட்டு நம்மளைக் கலாய்ச்சி வுட்டுட்டாரான்னே புரியலைடா"அப்படின்னான்.

"சே! இது சென்னைக்கே பெருத்த அவமானம். ஊரு பேரே கெடுத்து வச்சிருக்கே! சிலோன்லேருந்து ஒருத்தரு வந்து உலக மகா கடியன் உன்னையே கடிச்சி வுட்டுட்டாரே! அவமானம் அவமானம்" னு நான் என் பங்குக்கு கொஞ்சம் எண்ணை ஊத்துனேன்.

"இவ்ளோ பேசறியே? அப்போ! நீ அவரு கிட்ட ஒரு ஜோக் சொல்லி அவரைச் சிரிக்க வையேன் பாத்துடுவோம்" அப்படின்னான்.

எங்க அண்ணனும் அவரு கிட்ட கடிபட்டுட்டான்னு சொல்லிக்கறதுக்கு என் தம்பி பண்ண திட்டம் கூடவா எனக்குப் புரியாது? அதுக்கப்புறம் அவரு கிட்ட கடி பட நான் என்ன மாங்கா மடையனா? "ஒரு ஜோக் சொல்லி கூட புரிய வைக்க முடியல பெருசா வந்துட்டான் மெட்ராஸ் காரன்னு சொல்லிக்க"ன்னு சொல்லி அந்நேரத்துக்கு நான் எஸ்கேப் ஆயிட்டேன்.

அதுக்கு அப்புறம் இந்த மாதிரி கடி ஜோக் சொல்லி அது எதிர்ல இருக்குற ஆளுங்களுக்கு புரியலைன்னா "கொசு ஒரு சின்ன உருவம் தானே"ன்னு ஒருத்தரை ஒருத்தரு கலாய்ச்சிக்குவோம்.

76 comments:

  1. //அல்வாவுக்கும் ஆப்பத்துக்கும் ஒரு ஹைப்ரிட் குழந்தை பொறந்துச்சுன்னா எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும் 'தொத்தல்'.//

    தல தொத்தலோட மகிமையச்சொல்லி நாக்குல ஜலம் ஊற வச்சுட்டீங்க என்கே 'தொத்தல்' எங்கே 'தொத்தல்'ன்னு நான் திருவான்மியூருக்கு இப்பவே ஓடறேன் !! :))

    ReplyDelete
  2. உங்க தம்பி பல் அச்சு வெச்சா அந்த தாத்தா பல் செட்டு அச்சு வெச்சிட்டார் போல இருக்கே (அதாங்க கடி ஜோக்கு சொல்லி முடிச்சதும் என்ன அச்சு பலமோ அப்படினு கேட்டு.... கடி பட்டவங்க முழிக்க அத நாம வெளக்கி (not cleaning...) சொல்ல... நல்லா இருக்கும்)

    நல்ல கடி கைப்புள்ள!!!!

    :-)

    ReplyDelete
  3. //கடியிலயே பெரிய கடி நம்ம ஜோக்கை ஒருத்தரு புரிஞ்சுக்காம கேள்வி கேக்குறாங்க பாரு அது தான்.//

    ரொம்ப தமாசா இருக்கு தல !! பாவம் உங்க தம்பி !! அவராலே எப்படி நிம்மதியாக இருக்க இயலும் ??
    :))))

    ReplyDelete
  4. சூப்பரப்பு, ஒரு கொசுக்கடியை இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஅம்ம் பெரிசா சொல்லி கலாய்ச்சு இருக்கீங்க. நல்லா சிரிச்சுபுட்டேன். இனிமேலாவது தெரிஞ்சுக்கங்க, கோவை கடி மகாஆஅ பெரிய கடி.

    ReplyDelete
  5. கைப்புள்ள இனிமேல் நீர் கடிப்புள்ள எனும் பட்டத்தோடு அழைக்கப்படுவீர்
    விரைவில் கெசட்டில் மாற்றுவோம்

    ReplyDelete
  6. //கடியிலயே பெரிய கடி நம்ம ஜோக்கை ஒருத்தரு புரிஞ்சுக்காம கேள்வி கேக்குறாங்க பாரு அது தான்//
    இருக்கிறதுலயே ரொம்ப பெரிய காமெடி இதுதான், அதுவும் நீங்க இதை எழுதி இருக்கிறதுதாங்க. தேவு, வா மாப்ளே. இன்னிக்கு கைப்பு மாட்டிக்கிட்டாரு

    ReplyDelete
  7. /நல்லா சிரிச்சுபுட்டேன். இனிமேலாவது தெரிஞ்சுக்கங்க, கோவை கடி மகாஆஅ பெரிய கடி.//
    இதுலு எங்கய்யா கோவை வந்துச்சு.

    இது சூப்பருப்பு. இது போல நானும் பல பல்பு வாங்கி இருக்கேன். என்ன பண்ணுறது பொது வாழ்க்கையில் சகஜம்.

    நினைச்சு பார்த்து சிரிக்க நல்லா இருக்கும் இல்ல

    ReplyDelete
  8. தல,

    நீ புலிகூட ரொம்ப சேராதே... அநியாத்துக்கு இத்தூனுண்டு விசயத்தை இம்புட்டு பெரிசா பில்டப் பண்ணிட்டு போயிருக்கே.....

    ReplyDelete
  9. //தல தொத்தலோட மகிமையச்சொல்லி நாக்குல ஜலம் ஊற வச்சுட்டீங்க என்கே 'தொத்தல்' எங்கே 'தொத்தல்'ன்னு நான் திருவான்மியூருக்கு இப்பவே ஓடறேன் !! :))//

    திருவான்மியூர் சிக்னல் கிட்ட தான். பாத்து எதாச்சும் கலர் தென்பட்டுச்சுன்னு அப்படியே எதாச்சும் சாப்ட்வேர் கம்பெனி பஸ் பின்னால நாவலூர் போய்டாதே.
    :)

    ReplyDelete
  10. //(அதாங்க கடி ஜோக்கு சொல்லி முடிச்சதும் என்ன அச்சு பலமோ அப்படினு கேட்டு.... கடி பட்டவங்க முழிக்க அத நாம வெளக்கி (not cleaning...) சொல்ல... நல்லா இருக்கும்)//

    ஆமாங்க நான் சொன்ன ஜோக்கை இப்படி புரிஞ்சிக்கனும்னு வெளக்கற நெலமை ஒரு மனுசனுக்கு வரவே கூடாது.
    :)

    ReplyDelete
  11. //ரொம்ப தமாசா இருக்கு தல !! பாவம் உங்க தம்பி !! அவராலே எப்படி நிம்மதியாக இருக்க இயலும் ??
    :))))//

    இயலாது தான். இப்போ ப்ளாக்கில் வேற போட்டுட்டேனா சற்று சிரமம் தான். ஆனா அவன் கையில இப்ப மாட்டுனா கூட என்ன வச்சி காமெடி பண்ணறியாடான்னு பிச்சிடுவான்.

    ReplyDelete
  12. //நல்லா சிரிச்சுபுட்டேன்.//

    வாங்க விவ்!
    இந்த மாதிரி ஊக்குவிப்புகள் தான் ஒரு 'கலைஞனுக்கு' வைட்டமின் மாத்திரைகள்.

    :)

    ReplyDelete
  13. //கைப்புள்ள இனிமேல் நீர் கடிப்புள்ள எனும் பட்டத்தோடு அழைக்கப்படுவீர்
    விரைவில் கெசட்டில் மாற்றுவோம்//

    தங்கள் சித்தம் என் பாக்கியம்.

    (ஐயயோ! நான் அவரில்லைப்பா)
    :)

    ReplyDelete
  14. //நீ புலிகூட ரொம்ப சேராதே//
    புலி கூட இருக்கும்போதே கொசு, ஓணான்னுதான் பதிவு போடறாரு..டைனசரு வந்தாதான் ஒரு புலியை பத்தி பதிவு போடுவாரு போல.

    ReplyDelete
  15. //நீ புலிகூட ரொம்ப சேராதே... அநியாத்துக்கு இத்தூனுண்டு விசயத்தை இம்புட்டு பெரிசா பில்டப் பண்ணிட்டு போயிருக்கே.....//
    ஏலேய், ராம் உன் லந்த இஙகன காட்டுப் பாக்குறீயா. பிச்சுடுவேன் பிச்சி...
    நான் எல்லாம் சும்மா துக்கடா. தல கொடுக்குற பில்டப் முன்னாடி நான் எல்லாம் சதாரணம்ப்பா......

    ReplyDelete
  16. //அதுவும் நீங்க இதை எழுதி இருக்கிறதுதாங்க. தேவு, வா மாப்ளே. இன்னிக்கு கைப்பு மாட்டிக்கிட்டாரு//

    என்னய்யா ஊரு ஒலகத்துல எழுதாததை நாங்க எழுதிட்டோம்? ஆ..ஊன்னா பயமுறுத்தறீங்க? கூப்புடுங்கய்யா உங்க தேவையும். ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் இன்னிக்கு.

    ReplyDelete
  17. வேணாம், வேணாம் அப்புறம் அழுதுருவீங்க. இங்கே இப்போ போன்ல சொல்லி சிரிச்சுகிட்டுதானே இருக்கோம். சிரிப்பா சிரிக்க வைக்கிறைய்யா நீரு.

    ReplyDelete
  18. யப்பா! உங்க தம்பிக்கு நீங்களே பரவாயில்ல போல இருக்கே! அவரும் கடை(வலை) தொறந்து இருக்காரா? :)

    ReplyDelete
  19. //இதுலு எங்கய்யா கோவை வந்துச்சு.//

    வாப்பா புலி!
    அநியாயத்துக்கு நியாயஸ்தனா இருக்கியேப்பா? நல்லாரு.

    ReplyDelete
  20. போட்டோ இல்லாத பதிவு ஒரு பதிவா??

    :::))))

    ReplyDelete
  21. //இது சூப்பருப்பு. இது போல நானும் பல பல்பு வாங்கி இருக்கேன். என்ன பண்ணுறது பொது வாழ்க்கையில் சகஜம்.

    நினைச்சு பார்த்து சிரிக்க நல்லா இருக்கும் இல்ல//

    ஆமாம் புலி! கிட்டத்தட்ட 15 வருசத்துக்கு முந்தி நடந்தது கூட நெனப்பு இருக்குன்னா பாத்துக்கயேன்.

    ReplyDelete
  22. //நீ புலிகூட ரொம்ப சேராதே... அநியாத்துக்கு இத்தூனுண்டு விசயத்தை இம்புட்டு பெரிசா பில்டப் பண்ணிட்டு போயிருக்கே..... //

    //சூப்பரப்பு, ஒரு கொசுக்கடியை இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஅம்ம் பெரிசா சொல்லி கலாய்ச்சு இருக்கீங்க//

    ராம், விவ்!
    இப்படியெல்லாம் கேப்பீங்கன்னு எதிர்பாத்து தானே இதப் போட்டுருக்கேன்.
    "சொல்ல வர்ற மேட்டரு ரொம்ப சிறுசுங்கிறதால வழக்கம் போல நடு நடுவால செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?"
    அதுக்கப்புறமும் இப்படி ஒரு கேள்வி அதுக்கொரு பின்னூட்டம் அத அப்ரூவ் பண்ண ஒரு ஆளு...கட்டுப் படியாகுமாய்யா சர்க்காருக்கு?
    :)

    ReplyDelete
  23. //ரெண்டுல ஒன்னு பாத்துருவோம் இன்னிக்கு. //
    இரண்டுல ஒன்னு பாக்குற மேட்டரு உனக்கும் தெரியுமா?
    அப்ப இது மேட்டர். யோவ்வ்வ்வ்வ்வ்வ் விவ், கூப்பிடுய்யா தேவ்....... பாத்துடலாம் நாங்களா இல்ல நீங்களா என்று....

    தல சவுண்ட வேற கொஞ்சம் அதிகமா விட்டு இருக்கேன். உனக்கு அந்த மேட்டரு தெரியுமுல..... பழி வாங்கிடாத

    ReplyDelete
  24. /./
    செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?
    /./

    70 என்னா 3D படமெ போடு,,,


    ஒன்னியும் செய்ய மாட்டேன். கம்முனு இருப்பேன்.

    ReplyDelete
  25. //தல கொடுக்குற பில்டப் முன்னாடி நான் எல்லாம் சதாரணம்ப்பா...... //

    புலி! இன்னிக்கு என்னைய புல்லரிக்க வக்கணும்னு ஒரு முடிவோட கெளம்பிட்டியா?

    ReplyDelete
  26. //யோவ்வ்வ்வ்வ்வ்வ் விவ், கூப்பிடுய்யா தேவ்....... பாத்துடலாம் நாங்களா இல்ல நீங்களா என்று....

    தல சவுண்ட வேற கொஞ்சம் அதிகமா விட்டு இருக்கேன். உனக்கு அந்த மேட்டரு தெரியுமுல..... பழி வாங்கிடாத//

    ஐயோ புலி! வாங்குன காசுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே கூவிட்டியேப்பா? என்ன ஆப்பு வெச்சிருக்காங்கன்னு வேற ஐடியா இல்ல...இருந்தாலும் ஒனக்கென்ன கவலை? திரும்பி பாக்கும் போது சடக்குன்னு மறைஞ்சு போற வித்தை தான் ஒனக்கு தெரியுமே? கவலை பட வேண்டியது நான் தேன்.
    :(

    ReplyDelete
  27. //ராம், விவ்!
    இப்படியெல்லாம் கேப்பீங்கன்னு எதிர்பாத்து தானே இதப் போட்டுருக்கேன்.
    "சொல்ல வர்ற மேட்டரு ரொம்ப சிறுசுங்கிறதால வழக்கம் போல நடு நடுவால செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?"//

    ஆமா நாங்க பெரிய 007 ஜேம்ஸ்பாண்டுங்க.... பெரிய கண்டுபிடிப்பாம்...... ஹீக்கும்..:-))))

    //அதுக்கப்புறமும் இப்படி ஒரு கேள்வி அதுக்கொரு பின்னூட்டம் அத அப்ரூவ் பண்ண ஒரு ஆளு...கட்டுப் படியாகுமாய்யா சர்க்காருக்கு?
    :)//


    நல்ல ஆளா வெச்சிக்கோ.....

    ReplyDelete
  28. /./
    புலி! இன்னிக்கு என்னைய புல்லரிக்க வக்கணும்னு ஒரு முடிவோட கெளம்பிட்டியா?
    /./

    புல்லரிக்குறத போட்டோ புடிச்சி வை.

    அடுத்த பதிவுல அசத்தி புடலாம்.

    தலைப்பு புலியும் புல்லரிப்பும்..

    ReplyDelete
  29. //யப்பா! உங்க தம்பிக்கு நீங்களே பரவாயில்ல போல இருக்கே! அவரும் கடை(வலை) தொறந்து இருக்காரா? :)//

    அவரு இன்னும் கடை எல்லாம் தொறக்கலீங்க. அவரு கடை தொறந்துட்டா அப்புறம் நமக்கு இந்த மாதிரி கதை சொல்ல மேட்டர் எப்படி வரும்? அதனால entry barriers எல்லாம் போட்டுருவோம் இல்ல?

    ReplyDelete
  30. //போட்டோ இல்லாத பதிவு ஒரு பதிவா??

    :::))))//

    வாய்யா மின்னலு! படம் இல்லாம பதிவு போட நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.
    :(

    ReplyDelete
  31. //ஒன்னியும் செய்ய மாட்டேன். கம்முனு இருப்பேன்.//

    மின்னலு! இதை எங்கியோ கேள்வி பட்ட மாதிரி இருக்கெப்பா?
    :)

    ReplyDelete
  32. //தல சவுண்ட வேற கொஞ்சம் அதிகமா விட்டு இருக்கேன். உனக்கு அந்த மேட்டரு தெரியுமுல..... பழி வாங்கிடாத //

    புலி,

    அந்த மேட்டரா... எனக்கும் தெரியுமே..... :-)))))

    ReplyDelete
  33. //புல்லரிக்குறத போட்டோ புடிச்சி வை.
    அடுத்த பதிவுல அசத்தி புடலாம்.
    தலைப்பு புலியும் புல்லரிப்பும்.. //

    ஊருஸ், உன்ன நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  34. இன்று காலைதான் தல கைப்பு குறிப்பிட்ட இனிப்பை ஊருக்கு சென்று வந்த இலங்கை நண்பர் உபயத்தால் ருசித்தேன்.அதன் சுவையை விளக்க இயலாது.அவ்வளவு ருசி.முடிந்தால் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

    ReplyDelete
  35. ././
    "இவ்ளோ பேசறியே? அப்போ! நீ அவரு கிட்ட ஒரு ஜோக் சொல்லி அவரைச் சிரிக்க வையேன் பாத்துடுவோம்" அப்படின்னான்.
    /./

    அப்பவே உசுபேத்த ஆரம்பிச்சாச ஆப்பு வாங்க...:)

    ReplyDelete
  36. /./
    மதிப்பிற்குரிய மாண்புமிகு திருவாளர் ஐயா திரு கைப்புள்ள அவர்கள் தன்னுடைய சில கழுதை வயது(எத்தனைன்னு சொல்ல மாட்டோம்ல)
    /./

    "தடிப்பசங்க #5"
    /./

    தடிப்பசங்கனாலே எத்தனை கழுதை வயசுனு தெரியாத எங்களுக்கு..:))

    ReplyDelete
  37. /./
    கொஞ்ச நாளிலேயே அந்த ஆண்ட்டியோட பேச்சு கிட்டத் தட்ட "மெட்ராஸிஃபைட்
    சிலோன் தமிழ்" லெவலுக்கு வந்துடுச்சு. ஆனாலும் அவங்களோட அப்பா கொழும்புலேயே இருக்கறவரு, அவரு எப்பவாவாது அவங்க மகளைப் பாக்க
    /./

    ::)))))

    ReplyDelete
  38. //ஆனாலும் அவங்களோட அப்பா கொழும்புலேயே இருக்கறவரு, அவரு எப்பவாவாது அவங்க மகளைப் பாக்க
    /./

    ::)))))//

    எதுக்கு இந்த ஸ்மைலி? புரியலியே மின்னலு?

    ReplyDelete
  39. //புல்லரிக்குறத போட்டோ புடிச்சி வை.

    அடுத்த பதிவுல அசத்தி புடலாம்.//

    குட் ஐடியா

    //தலைப்பு புலியும் புல்லரிப்பும்.. //
    ஸ்வீட் நெம்.
    :)

    ReplyDelete
  40. //தம்பி வீட்டுல அமைதியா ஒக்காந்துருக்கான்//

    i can feel the disappointment. but it's funny. :-)))))))))))))))))))))

    //சிரிச்சிட்டா என்ன நடந்துச்சுன்னு கதை சொல்ல மாட்டானேனு மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டு
    ரொம்ப கரிசனமா "அவரு என்ன உன்னை விட பெரிய ப்ளேடா?"ன்னு கேட்டேன்.//

    //எங்க அண்ணனும் அவரு கிட்ட கடிபட்டுட்டான்னு சொல்லிக்கறதுக்கு என் தம்பி பண்ண திட்டம் கூடவா எனக்குப் புரியாது? அதுக்கப்புறம் அவரு கிட்ட கடி பட நான் என்ன மாங்கா மடையனா?//
    :))))))))))))))))))))))))))))

    சின்ன புள்ளைல நீங்க ரொம்ப வெவராமாத்தான் இருந்திருக்கீங்க போலிருக்கு. என்ன ஒரு சாதுர்யம், அறிவு. (serious ஆ தாங்க சொல்லுறேன்,)

    அப்புறம் எப்ப இருந்து தல இப்பிடி...எல்லாரும் உங்களை #$@%^@# அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ மனசு வலிக்கிது

    உ.கு வெ.கு எதுவும் இல்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  41. //புலி,

    அந்த மேட்டரா... எனக்கும் தெரியுமே..... :-)))))//

    எத்தனை பேருய்யா கெளம்பிருக்கீங்க இந்த மாதிரி?
    :)

    ReplyDelete
  42. //எத்தனை பேருய்யா கெளம்பிருக்கீங்க இந்த மாதிரி?
    :) //

    இப்போ நான் மட்டும்தான் போலிருக்கு தல....

    ReplyDelete
  43. கடிராசாவின் அண்ணன் கைப்புள்ளை வாழ்க வாழ்க " ஆமா நிசமாவே கடிப்பாரா?"

    ReplyDelete
  44. /./
    எதுக்கு இந்த ஸ்மைலி? புரியலியே மின்னலு?
    /./

    Guru said...
    சின்ன புள்ளைல நீங்க ரொம்ப வெவராமாத்தான் இருந்திருக்கீங்க போலிருக்கு. என்ன ஒரு சாதுர்யம், அறிவு. (serious ஆ தாங்க சொல்லுறேன்,)

    இதுதான் அதற்க்கு பதிலு

    வலிக்கதா மாதிரி நடிக்க மட்டும் தான் தெரியுனு நினைத்தேன்
    புரியத மாதிரியும் நடிக்குறே நல்லா..::))))

    ReplyDelete
  45. யோவ் கைப்பு நான் பதிவ உத்தூத்து படிச்சேன் ஒரு குத்தும் தெரியலை இப்ப பின்னூட்டத்த பாத்தாத்தான்யா தெரியுது அத்தனை குத்தும் போற போக்கபாத்தா மாட்ட உட்டு மேய்ப்பிங்க போல ஒரேடியா புல்லரிக்குதேய்யா இதெல்லாம் கும்பலா ஒக்காந்து யோசனைபன்னுவீங்களோ? இல்லை எங்கயாவது பெசல் கிளாஸ் நடக்குதா?

    ReplyDelete
  46. இதை மறந்து போனேன்.....

    நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  47. :)))))))))))


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  48. தல! நீ இன்னும் 50 அடிக்கலையா?


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  49. இப்போ தான் சூடான் புலிக்கு ஒரு பின்னூடம் போட்டு 50 அடிச்சி விட்டேன்!
    தலைக்கு இது கூட பண்ணலைனா எப்படி!


    அன்புடன்...
    சரவணன்

    ReplyDelete
  50. //இன்று காலைதான் தல கைப்பு குறிப்பிட்ட இனிப்பை ஊருக்கு சென்று வந்த இலங்கை நண்பர் உபயத்தால் ருசித்தேன்.அதன் சுவையை விளக்க இயலாது.அவ்வளவு ருசி.முடிந்தால் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன். //

    வாங்க ராஜா!
    படம் புடிச்சு சீக்கிரம் போடுங்க. எனக்கு தெரிஞ்சு தொத்தல் செய்ய தேவையான ஐட்டம் - அரிசி மாவு, தேங்காய் பால், வெல்லம், ஏலக்காய் அப்படின்னு நெனக்கிறேன். கிட்டத்தட்ட அதே டேஸ்டு உள்ள ஒரு இனிப்பு தமிழ்நாட்டுலயும் கெடக்குது. அந்த அங்கிளோட அம்மா நாமக்கல் பக்கத்துலேருந்து வரும் போது தொத்தல் மாதிரி எதோ வாங்கிட்டு வந்ததா ஒரு ஞாபகம்.

    ReplyDelete
  51. //சின்ன புள்ளைல நீங்க ரொம்ப வெவராமாத்தான் இருந்திருக்கீங்க போலிருக்கு. என்ன ஒரு சாதுர்யம், அறிவு. (serious ஆ தாங்க சொல்லுறேன்,)//

    வாங்க குரு! இது எனக்கு புல்லரிப்பு வாரம் போலிருக்கு. நீங்க சொன்னதுல குத்து எதுவும் இல்ல உண்மைன்னு நம்பி டேங்ஸ் சொல்லிக்கிறேன்.
    :)

    //அப்புறம் எப்ப இருந்து தல இப்பிடி...எல்லாரும் உங்களை #$@%^@# அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ மனசு வலிக்கிது

    உ.கு வெ.கு எதுவும் இல்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன். //
    இப்ப தான் கொஞ்சம் பயமாயிருக்கு. ஆமா "#$@%^@#" இது என்ன? எதுவும் ஊத்தப் பேச்சு(இதுவும் இலங்கை தமிழ் தானுங்க) இல்லியே?
    :)

    ReplyDelete
  52. வாங்க கவுரிகிருஷ்ணா,
    வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  53. //யோவ் கைப்பு நான் பதிவ உத்தூத்து படிச்சேன் ஒரு குத்தும் தெரியலை இப்ப பின்னூட்டத்த பாத்தாத்தான்யா தெரியுது அத்தனை குத்தும் போற போக்கபாத்தா மாட்ட உட்டு மேய்ப்பிங்க போல ஒரேடியா புல்லரிக்குதேய்யா இதெல்லாம் கும்பலா ஒக்காந்து யோசனைபன்னுவீங்களோ? இல்லை எங்கயாவது பெசல் கிளாஸ் நடக்குதா? //

    அதெல்லாம் தானா வருதுங்க சாமி! என்னத்த சொல்ல? எல்லாம் நம்ம பசங்களோட கைவண்ணம் தான் வேற என்ன?
    :)

    ReplyDelete
  54. //இப்போ தான் சூடான் புலிக்கு ஒரு பின்னூடம் போட்டு 50 அடிச்சி விட்டேன்!
    தலைக்கு இது கூட பண்ணலைனா எப்படி!//

    வந்து சிரிச்சதுக்கும் 50 அடிக்க வழி செஞ்சதுக்கும் ரொம்ப நன்றியப்பா!

    ReplyDelete
  55. செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித்தேன்...

    ReplyDelete
  56. /./
    வந்து சிரிச்சதுக்கும் 50 அடிக்க வழி செஞ்சதுக்கும் ரொம்ப நன்றியப்பா!
    /./

    இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

    48 வரைக்கும் கொண்டு வந்தது நாங்க
    கடைசில வந்து 3 அடிச்சி பேட்ட தூக்கிட்டா நன்றி அங்கயா????

    ReplyDelete
  57. வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில் தான் வந்தேன்.கலக்கரீங்க.

    லியொ சுரேஷ்
    துபாய்

    ReplyDelete
  58. கைப்புள்ள அண்ணா! உங்க தம்பியோட வலைப்பூக்கள் விலாசத்த தரமூடியுமா? நாங்க புதுசா ஒரு சங்கம் தொடங்கி, கடிக்க முடியாத கடி எல்லாம் எழுதலாம்னு இருக்கோம். இப்படி ஒரு தம்பி இருக்குறது சொல்லவே இல்ல!

    ReplyDelete
  59. //செம கடி சார்.. சும்மா சொன்னேன்.. சிரித்தேன்.ரசித்தேன்...//

    வாங்க டாக்டர்,
    முதல் முறையா நம்ம பதிவு பக்கம் வர்றீங்க. ரொம்ப நன்றி. அடிக்கடி வாங்க. அப்புறம் திடீர்னு 'சார்'னுட்டீங்களா...ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம சுத்தும் முத்தும் பாத்தேன் (யாராச்சும் சார் இருக்குறாங்களானு). அப்புறமா தான் யூகிச்சேன் நீங்க அநேகமா என்னை தான் சொல்லிருப்பீங்கன்னு(இல்லைன்னு சொல்லி கவுத்துடாதீங்கோ!).
    :)

    ReplyDelete
  60. //48 வரைக்கும் கொண்டு வந்தது நாங்க
    கடைசில வந்து 3 அடிச்சி பேட்ட தூக்கிட்டா நன்றி அங்கயா????//

    கோச்சிக்காதப்பா மின்னலு! நீயு எத்தனையோ தடவை 50உம் 100உம் அடிக்க வழி பண்ணியிருக்கே...உன்னைய மறப்பேனா? ஒனக்கும் பின்னூட்டம் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  61. //வணக்கம் தல நான் வலைப்பூக்களின் பக்கம் சமீபத்தில் தான் வந்தேன்.கலக்கரீங்க.//

    வாங்க சுரேஷ்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  62. //நாங்க புதுசா ஒரு சங்கம் தொடங்கி, கடிக்க முடியாத கடி எல்லாம் எழுதலாம்னு இருக்கோம். இப்படி ஒரு தம்பி இருக்குறது சொல்லவே இல்ல!//

    வாங்க ஸ்ரீதர்,
    நம்ம தம்பி இன்னும் வலைப்பூ எல்லாம் தொடங்கலீங்க. அப்படியே தொடங்குனாலும் நான் விலாசம் எல்லாம் தர்றதா இல்லை. எதோ அவனோட மேட்டர்களை எல்லாம் போட்டு நான் பொழப்பை நடத்திட்டிருக்கேன். அதுல நானே மண்ணள்ளி போட்டுக்குவனா என்ன?

    ReplyDelete
  63. ஆமாம் கைப்பூ! நீங்க பயப்படுவதற்க்கும் ஒரு அர்த்தம் இருக்கு. உங்க தம்பி உங்களைப் பத்தி இந்த மாதிரி எழுதியிருப்பார்னு பயம் இருக்காதா ? கவலைப்படாதிங்க, உங்க தம்பி உங்களை பற்றி எழுது நேரத்தை விணாக்க மாட்டார்.

    ReplyDelete
  64. //கவலைப்படாதிங்க, உங்க தம்பி உங்களை பற்றி எழுது நேரத்தை விணாக்க மாட்டார்//

    வாஸ்தவம் தாங்க. நம்மளைப் பத்தி எழுத ஒன்னுமில்லை தான். அதனால அவன் என்னைப் பத்தி எதுவும் எழுத மாட்டான் தான்.

    ஆமாம்! இவ்வளவு அழுத்தமாவும் ஆணித்தரமா எழுதமாட்டார்னு சொல்லிருக்கீங்களே? நீங்களும் "தம்பிகள் சங்கத்தை"ச் சேர்ந்தவரா?
    :)

    ReplyDelete
  65. தமிழக அரசு மட்டும் கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமலாக்கியிருந்தால் யானைக்கு இந்த கதி நேர்திருக்குமா? இந்த மாதிரி மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசுக்கு எங்கள் கண்டனங்கள். இதை எதிர்த்து நடக்க இருக்கும் மாபெரும் பேரணியில் மனேகா காந்தி, அமலா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    யானையைக் காணவில்லையே என்றிருந்த எங்களுக்கு இந்த செய்தியைத் தந்தமைக்கு நன்றி. யானை போய் படகு வந்த மாயம் நன்றாகவே புரிந்துவிட்டது.

    ஒரு சிறிய பதிவானாலும் அதில் மக்கள் நலனை மனதில் கொண்டு இது போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் உங்கள் சமுதாய சீர்த்திருத்த எண்ணங்கள் என்னை பிரமிக்க வைக்கிறது. பெருமை கொள்ளச் செய்கிறது.

    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  66. வாங்க கொத்ஸ்!
    ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு பாத்தா... வந்ததும் வராததுமா இண்டுல, இடுக்குல, சந்துல, பொந்துல உள்ளே, வெளியே, மேலே,கீழே எல்லா எடத்துலயும் குத்தா சொருவி வச்சு ஒரு பின்னூட்டம்.

    ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்மா! நம்ம பொழப்புல மண்ணு வேணாம்மா! ப்ளீஸ்மா!
    :)

    சரி! இதுல அமலான்னு போட்டுருக்கீங்களே...இது நம்ம மிஸஸ்.ரட்சகனா? அவங்களும் இப்ப அனிமல்ஸுக்காவப் போராட ஆரம்பிச்சிட்டாங்களா? சொல்லவே இல்லை?

    ReplyDelete
  67. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங்கிட்டு உங்கள் தம்பி பண்ணியதா சொல்ற மாதிரி இருக்கு!

    ReplyDelete
  68. //:-)) சூப்பர்...//

    வாங்க கோபி!
    வாங்க வாங்க!ரொம்ப நாளா ஆளே காணோம்? டேங்ஸுங்க.
    :)

    ReplyDelete
  69. //எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.நீங்க "பல்ப்" வாங்கிட்டு உங்கள் தம்பி பண்ணியதா சொல்ற மாதிரி இருக்கு!//

    வாங்க வேந்தன்,
    தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. ஏங்க? பல்ப் என்னை தவிர வேற யாரும் வாங்கவே முடியாதுன்னு முடிவே கட்டிட்டீங்களா? உண்மையைத் தாங்க சொல்றேன்?
    :)

    ReplyDelete
  70. //கோச்சிக்காதப்பா மின்னலு! நீயு எத்தனையோ தடவை 50உம் 100உம் அடிக்க வழி பண்ணியிருக்கே...உன்னைய மறப்பேனா?//

    கைப்பூ! அப்போ என்னை மறந்துடுவியா?
    எங்களுக்குக் கோச்சிக்கிறதுக்குத் தெரியாதா....
    பகைச்சுகிட்டைல விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஆமா சொல்லிப்புட்டேன்!:((((((((


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  71. எங்க பெரியப்பா ஒருத்தர் இப்படித் தான் படுத்துவாரு.. கடி ஜோக்கைப் புரிஞ்சிக்கமாட்டேன்னு அநியாயம் பண்ணுவாரு.. அவரைக் கடிப்பது தான் எங்க வீட்டுக் கல்யாணம், மற்ற சுப நிகழ்ச்சிகளின் போது எனக்கும் தங்கைக்குமான முக்கிய பொழுதுபோக்கே..

    எங்க சித்தப்பா இதுக்கு நேர் எதிர்.. திருப்பி வேற கடி ஜோக் சொல்லி நம்மளைக் கலாய்ச்சிடுவார்.. பாதி நேரம் இவர் சொன்னதை பெரியப்பா கிட்ட சொல்லிக் கடிக்க முயன்று.. ம்ம்.. இன்னும் முயன்று.. ம்ம்ம்.. கொண்டிருக்கிறோம்.. :((( அடுத்த சந்திப்பில் இந்தக் கொசுவைப் பத்தி தான் சொல்லிப் பார்க்கணும்..

    ReplyDelete
  72. வாங்க பொன்ஸ்,
    ஆஹா ஊருக்குள்ள 'கடியரசி'களும் இருக்காங்க போலிருக்கே.
    :)

    //அடுத்த சந்திப்பில் இந்தக் கொசுவைப் பத்தி தான் சொல்லிப் பார்க்கணும்.. //
    ஆல் தி பெஸ்ட். இந்த கடியைக் கேக்கற முக்காவாசி பேரு கொசு ஏன் சாகலைங்கிறதுக்கு "கொசு பறந்து போயிருக்கும்'னு தான் பதில் தருவாங்க. அந்த பதில் வராத படிக்கு ஜோக் சொல்லும் போதே ஒரு அடிதளம் ஏற்படுத்திக்கங்க. இல்லன்னா என்ன சொன்னாலும் இந்த கடி எடுபடாது. கடி படப் போற உங்க பெரியப்பாவுக்கு என் அனுதாபங்கள்.
    :)

    ReplyDelete
  73. //கைப்பூ! அப்போ என்னை மறந்துடுவியா?
    எங்களுக்குக் கோச்சிக்கிறதுக்குத் தெரியாதா.... //

    என்னாய்யா ஆளாளுக்கு மெரட்டறீங்க? இப்ப நீ என்னாங்குறே?

    ஒன்னையும் தனியா செல்லம் கொஞ்சனுமா? சொல்லு...அதையும் செஞ்சிடறேன்.

    ReplyDelete
  74. நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :)

    ReplyDelete
  75. //நல்லா திருப்தியா சிரிக்க வெச்சிட்டீங்க சூப்பர் :)//

    வாங்க அனுசுயா,
    திருப்தியா சிரிச்சிட்டு சந்தோஷமாப் பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்க.
    :)

    ReplyDelete