Tuesday, April 11, 2006

பதில் சொல்லிக்கிறேன்

தேவ்,பாண்டி,கீதா மேடம், பொன்ஸ் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கோடானுகோடி தொண்டர்கள் எல்லாருக்கும் இப்போதைக்கு என் பதில் :

நம்ம நிலைமை கொஞ்சம் சரியாகுற வரைக்கும் சங்கத்தின் மூத்த தொண்டன் தேவ், சங்கத்தை முன்னின்று வழி நடத்துவார். தேவ்! கண்ணா...என் செல்லம்...you are fully empoweredமா. நடத்துமா...(சங்கத்தை தான்). திரும்ப வந்ததும் என் பிரியமான சேப்பாக்கம்(ராயபுரத்துல வேற யாரையாச்சும் நிக்க வச்சிடு) தொகுதியிலேருந்து கோதால குதிப்பேன். அது வரைக்கும் நீ அறிக்கை அறிக்கையா குடுப்பியாம். வர்ற ஆப்பையும் சங்கத்துல எல்லாருக்கும் சமமா பிரிச்சு குடுத்து நீயும் ரெண்டு வாங்கிக்குவியாம். என்ன சரியா?

9 comments:

  1. கையெழுத்து மட்டும் போடறதுக்கு சட்டசபை போற தலைவரா கைப்பு?

    தேவ் பாவம் ஏற்கனவே பலமுனைத்தாக்குதல சமாளிச்சுகிட்டு கஷ்டப்பட்டுகிட்டிருக்கார், தலைவன் தாங்க வேணாமா?

    எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா-- இவன் ரொம்ப நல்லவண்டா என்று பெயர் பெற்ற கைப்புவா இப்படிச்செய்வது? வெட்கம் வெட்கம்!

    ReplyDelete
  2. பதிவு படமெல்லாம் பலமாத்தான் இருக்கு! ஆனா இது என்ன "அறிவியல்/நுட்பம்"மா??

    இதெல்லாம் உமக்கே ஓவராத்தெரியலை?! :)

    ReplyDelete
  3. யாரோ நல்லா போட்டு தாக்கி

    கைப்புள்ள

    இப்பிடி அப்பீட்

    வாங்குரது நல்லா இல்லெ

    ReplyDelete
  4. அடி தாங்க முடியல போல, பாவம்.

    ReplyDelete
  5. தனியா நின்னு புலம்ப விட்டுட்டாங்கன்னு இதிலேர்ந்தே தெரியலியா! சரி சரி! வா வந்து நம்ம கூட்டணியில நீயும் சேர்ந்துக்கோ கைப்புள்ள! கட்டதுரைக்கு இரக்க சுபாவம் உண்டு! அடிக்கற கைதான் அணைக்கும்!

    ReplyDelete
  6. தல உன் ஒத்தச் சொல்லு போது தல.... நீ போயிட்டு வா தல.... உன் பங்கௌ ஆப்பையும் உனக்காகவே பத்திரமா வச்சிருப்பேன் தல.. சங்கத்து மக்கள் என்னிக்குமே எதுக்குமே ஆசப் பட்டது இல்ல... எல்லா ஆப்பும் நீ வரும் போது உனக்கே உனக்கு மட்டுமே தல....

    நீ என் மேல வச்சுருக்க நம்பிக்கையை நினைச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரே அழுவாச்சியா வருது தல...
    ஆனந்த அழுவாச்சி...
    இனி ஊர் என்னப் பத்தி என்ன வேணுமோப் பேசிக்கிட்டும் .... உன் நம்பிக்கைய நான் காப்பாத்துவேன் தல....

    Then HAPPY TAMIL NEW YEAR THALAI and HAPPY VISHU TO ANNI Too

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள். தேர்தல் வேலையிலே busy ஆக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதுக்குள்ளே இங்கே தொகுதி பிரித்து, மண்டலம் பிரித்து என்ன என்னவோ நடக்குது போங்க. இந்த பொன்ஸ் வேறே வந்து மகளிர் அணியின் தலைவி பட்டத்தை ஒரு யானைப் பதிவு போட்டு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.ஒரே நிரந்தரத் தலைவி நான் மட்டும்தான்னு அவங்களுக்குப் புரிய வைக்கணும்.

    ReplyDelete