இன்னிக்கு ரெண்டு படம். முதல் படம் நாம பார்த்து பழக்க பட்ட ரகம் தான்(SIRDS). ஆனாலும் என்ன ஒளிஞ்சுட்டு இருக்குன்னு சரியாச் சொல்லணும்.
க்ளூவா?:"வல்லவன் வகுத்ததடா! கர்ணா"
இரண்டாவது படமும் SIRDS தான். ஆனா இதுல ஒரு வித்தியாசம். பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சுடும்.
க்ளூ: ஆங்கிலமா, ஆங்கிலேயர் அல்லாதவர் இதுல ஒளிஞ்சுட்டு இருக்காரு. யார் அவரு?
அப்புறம் இரண்டு படத்தையும் தொடர்பு படுத்தி இன்னைய தேதிக்கு ரொம்ப பிரபலமான ஒரு வாசகம் சொல்லணும். இது ரொம்ப ரொம்ப சுலபம். யார் மிகச் சரியா சொல்றாங்கன்னு பார்ப்போம்?
கண்டுபிடிச்சிட்டேன்ன்..
ReplyDelete1. ஒரு இதயம்.. அதுக்குள்ள இன்னொரு இதயம்.. அதுக்குள்ள இன்னொரு இதயம்
2. Cupid - ஆங்கில வார்த்தை
அது என்ன பிரபலமான வாசகம்?? காதலர் தினமா??
அன்புடன்
கீதா
வாங்க கீதா மேடம்!
ReplyDeleteகலக்குறீங்களே! First நீங்க தான். நீங்க குடுத்த ரெண்டு பதிலும் சரி. முதல் படத்துல இருக்குறதை இன்னும் கொஞ்சம் அழகாச் சொல்லுங்க பார்ப்போம்.
கடைசியா சொன்னதும் கிட்டத் தட்ட சரி தான்.இன்னும் கொஞ்சம் முயற்சி பண்னி ஒரு வாசகமா எல்லோருக்கும் சொல்லுங்க. உங்களுக்கு அப்புறம் வர்றவங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணட்டுமேன்னு உங்க பதிலை வெளியிடாம வச்சிருக்கேன். ஓகேவா?
அடடா கைப்புள்ள மொத படத்துக்கு தனியாவும் இரண்டாம் படத்துக்கு தனியாவும் வாசகமா.. நான் ரெண்டு படத்துக்கும் சேர்த்து யோசிச்சேன் அதான் சரிவரலை..
ReplyDeleteவாசகம்
1, உள்ளத்தில் நல்ல உள்ளம்// சரியா?/
2, மன்மதன்
அன்புடன்
கீதா
ullathil nalla ullam...athaan onnukulla onnu iruke...
ReplyDeleterendavathu enaku puriyalai. athu english maathiriye theriyalaiye....irunga innoru vaati paakurean.
இல்லீங்க மேடம்,
ReplyDeleteநான் முதல்ல சொன்ன மாதிரி ரெண்டு படத்தையும் இணைச்சு தான் வாசகம் சொல்லணும்...அதையும் நீங்க சரியா யூகிச்சுட்டீங்க. என்ன வாசகமா இருக்கும்னு யோசிங்க. ரொம்ப ஈஸி.
இந்த ரெண்டு 3டி படத்துக்கும் வாசகம் தேவையில்ல...அதுல என்ன இருக்குன்னு சொன்னா போதும்...அதையும் நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. நான் எக்ஸ்ட்ராவா முதல் படத்துல இருக்குறத இன்னும் கொஞ்சம் அழகு தமிழில் சொல்ல முடியுமானு கேட்டேன்!
வாங்க ராகவன்,
ReplyDeleteமுதல் பதில் சரி. இரண்டாவத திரும்பவும் பாருங்க. ரெண்டையும் சேர்த்து ஒரு வாசகம்...என்னவா இருக்கும்?
ஐயயோ! ரொம்ப குழப்பிக்காதீங்க. ரெண்டு படத்தையும் இணைச்சு ஒரு வாசகம் சொல்லணும்னு சொன்னேனே ஒழிய...ரெண்டு படத்துல இருக்குற வார்த்தைகளும் அந்த வாசகத்துல இருக்கணும்னு சொல்லலை. அது ஒரு தொடர்பு ஏற்படுத்த தான். வாசகத்த கண்டுபிடிக்க தேவை கொஞ்சம் GK. அம்புட்டு தான்.
ReplyDeleterendavathu cupid.
ReplyDeleterendaiyum inaichu oru vari chollanuma....
ullathill devathai ullam...ithu okya?
devathaiyin ullathil nalla ullam...ithu eppadi iruku?
ராகவன்,
ReplyDeleteஎன்னோட முந்தைய பின்னூட்டத்தைக் கொஞ்சம் பாருங்க.
//ரெண்டு படத்தையும் இணைச்சு ஒரு வாசகம் சொல்லணும்னு சொன்னேனே ஒழிய...ரெண்டு படத்துல இருக்குற வார்த்தைகளும் அந்த வாசகத்துல இருக்கணும்னு சொல்லலை. //
நான் எதிர்பார்க்குற வாசகம் ரொம்ப சுலபம். வேற ஒரு வார்த்தை சொன்னேன்னா நீங்க ரொம்ப சுலபமா சொல்லிடுவீங்கன்றதுனாலே வாசகம் வாசகம்னு சொல்றேன்.
kathalar dhinam-- sariya
ReplyDelete//kathalar dhinam-- sariya//
ReplyDeleteகிட்டத்தட்ட...இன்னும் கொஞ்சம்...வாசகம்...வாசகம்!
Kadhal Ullangal? or
ReplyDeleteKadhalar Ullangal?
//Kadhal Ullangal? or
ReplyDeleteKadhalar Ullangal? //
இல்லை...இல்லை...எனக்கு தேவை ஒரு வாழ்த்து...சொல்லு...ரெடி...1...2...3...
(நான் வாழ்த்தை தான் வாசகம்னு சொன்னேன்)
இப்பவாச்சும் சொல்லுங்கப்பா!
உள்ளம் கனிந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்! ?
ReplyDeleteசரி! காலம் கடக்கறதுக்குள்ளே நானே சொல்லிடறேன். நான் எதிர்பார்த்த அந்த வாசகம் - ஒரு வாழ்த்து. நம்ம பதிவுக்கு வர்றவங்க எல்லாரும் இன்னிக்கு ஒரு வாழ்த்து சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை. அதனால தான் பதிவுல கூட "இன்னிய தேதிக்கு பிரபலமான ஒரு வாசகம்"னு எழுதினேன். அது படிச்சவங்களைப் போய் சேரலை...பரவாயில்லை.
ReplyDeleteநான் எதிர்பார்த்த அந்த வாழ்த்து - "இனிய காதலர் தின வாழ்த்துகள்"(Happy Valentine's Day).
ரொம்ப யோசிச்சு பின்னூட்டம் போட்ட கீதா மேடம்,
ராகவன்,சிவஞானம்ஜி,திருமுருகன் இவங்கல்லாம் நற நறனு பல்லைக் கடிக்கிறது தெரியுது. :))-
3டி பதிவுகளுக்கு தொடர் வருகை தரும் கீதா மேடத்துக்கும்,ராகவனுக்கும் ரொம்ப நன்றி.
முதல் படத்துல தெரியறது - இதயம் அதுக்குள்ள ஒரு இதயம் அதுக்குள்ள இன்னொன்னு அப்படின்னு. பார்த்தவங்க சரியா சொல்லிட்டிங்கன்னாலும் நான் இதுக்கு யோசிச்சு வச்சிருந்த தலைப்பு "இரண்டற கலந்த இதயங்கள்". நல்லாருக்கா? காதலர் தின ஸ்பெசல் ஆச்சே...கொஞ்சம் கவித்துவமா யோசிக்க வேண்டாமா?
இரண்டாவது படம், கொஞ்சம் வித்தியாசமானது. இதுவரை எதாவது ஒரு உருவம் கொண்ட 3டி படம் தான் நம்ம பதிவுகள்ல வந்திருக்கு. முதல்முறையா ரோமானிய காதல் கடவுள் க்யூபிட் (Cupid)இன் பெயர் ஆங்கிலத்தில் எழுதியதைப் போட்டிருந்தேன்.
பார்த்தவங்கல்லாம் ரசிச்சிருப்பீங்கன்னு நம்பறேன். நன்றி
வாங்க கோபி,
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்க பதிவுக்கு வந்திருந்தேன். நீங்க புதுசா திருமணமானவர்னு தெரிஞ்சுக்கிட்டேன். "தலை Valentine day" இனிதே அமைய என் வாழ்த்துகள். 3டி எல்லாம் பார்த்தீங்களா? பிடிச்சிருந்துதா?
கோபி,
ReplyDeleteவாழ்த்து முதல்ல சொன்னது நீங்க தான். ஆனா உங்களோட மின்னஞ்சல் எனக்கு இப்ப தான் கிடைச்சுது. அதுக்கு முன்னாடி நான் அந்த நீண்ட விள்க்கத்தைக் கொடுத்துட்டேன். அதனால உங்கள் பேர் அதுல விட்டுப்போச்சு. நான் கூட இப்ப தான் அதை கவனிச்சேன்.
வாங்க ஆர்த்தி,
ReplyDeleteஅடடா! இன்னும் உங்களுக்கு தெரியலியா? இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க...தெரிஞ்சிடும். 3டி திருவிழா-1 பதிவைப் பாருங்க. எப்படி 3டி படம் பார்க்கறதுன்னு சொல்லியிருக்கேன் அதுல.
உள்ளேன் ஐயா.
ReplyDeleteஉங்களுக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். இந்த ஊரிலேயெல்லாம் நண்பர்கள், உறவினர் எல்லோருக்கும் சொல்லறாங்கப்பா. வெறும் காதலர்களுக்கு மட்டுமில்லை.
இப்படி 3-டி படம் போட்டு நம்மளை எல்லாம் குமரிமுத்து ரேஞ்சுக்கு கொண்டுபோய் சிரிக்க வைக்கறதா முடிவா?
நல்லாயிருந்தா சரி.
அப்புறம், நம்ம பதிவுல கேட்ட கேள்விங்களுக்கெல்லாம் பதிலே சொல்லலையே. வெறும் புதிருக்கு மட்டும்தான் பதிலா?
வாங்க கொளுத்து!
ReplyDeleteஅதே ஆம்/இல்லை பின்னூட்ட விளையாட்டை நானும் இந்த பதிவுல விளையாடியிருக்கேனே நீங்க பார்க்கலியா? அதிலிருந்தே தெரியலியா தலைவர் கொளுத்து வழி தான் நம்ம வழின்னு?
யப்பா, நம்மை தலீவரு ரேஞ்சுக்கெல்லாம் கொண்டு போயிடாதீங்கப்பா. நெசத் தலீவரு கோச்சுகினு நம்மள கட்டம் கட்டிட போறாரு.
ReplyDeleteஆட்டமெல்லாம் நடக்கட்டும். நல்லா இருந்தா சரி.
அவரு - பாரதிராஜா, நீங்க - பாக்யராஜ், நான் - பாண்டியராஜன். அப்ப நீங்க தானே என் தலைவரு?
ReplyDeleteஎன்னவோ போ. பாண்டியராஜன் அப்படீன்ற, வடிவேலு படத்த போட்டுகினுருக்கே. மொத்ததில நல்லா காமெடி பண்ணுவையாட்டும் தெரிது.
ReplyDeleteவந்து நல்லா சிரிக்க வைப்பா.
ஆமா, நம்ம முதல் பின்னூட்டமெங்கே அய்யா? காணாமல் போகடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே.
ReplyDelete//உள்ளேன் ஐயா.
ReplyDeleteஉங்களுக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். இந்த ஊரிலேயெல்லாம் நண்பர்கள், உறவினர் எல்லோருக்கும் சொல்லறாங்கப்பா. வெறும் காதலர்களுக்கு மட்டுமில்லை.
இப்படி 3-டி படம் போட்டு நம்மளை எல்லாம் குமரிமுத்து ரேஞ்சுக்கு கொண்டுபோய் சிரிக்க வைக்கறதா முடிவா?
நல்லாயிருந்தா சரி.
அப்புறம், நம்ம பதிவுல கேட்ட கேள்விங்களுக்கெல்லாம் பதிலே சொல்லலையே. வெறும் புதிருக்கு மட்டும்தான் பதிலா?
February 15, 2006 9:07 AM //
இது தானே? அங்கேயே தானே இருக்கு? உங்களுக்குத் தெரியலியா?