Sunday, December 30, 2012

கையறுநிலை

நான் நானாய்ப் பிறந்ததற்கு
ஒருபோதும் வருந்தியதில்லை
நான் ஆணாய்ப் பிறந்ததற்கு
வெட்கித் தலைகுனிந்து
வேதனையில் உழன்று
ஆற்றாமையில் பிதற்றும்
அத்தருணங்களை உணரும்
நிலை உனக்கு வந்தால்
உலகை அழிக்காமல்
மாயர்கள் கணிப்பைப்
பொய்யாக்கிய குற்றவுணர்வில்
குன்றி நீ போவாய் இறைவா!

3 comments:

  1. 2012 பதிவர் வட்டம் வருத்தம்..லேபிளில் ஏதோ உள்குத்து இருக்கும் போல ;))

    ReplyDelete
  2. உங்கள் ஆழ்ந்த வருத்தம் புரிகிறது. இந்தக் கனல் இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அனைவர் உள்ளங்களிலும் சுடர் விடப் பிரார்த்தனைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என்னது, கொஞ்சம் என்ன மாதிரி குழந்தைகளுக்கு புரியற மாதிரி எழுதணும்னு தோணனுமா இல்லியா.. எதை பற்றி வருத்தம்..? (அத்தனை விஷயங்கள் இருக்கு அப்படிங்கறதே பெரிய வருத்தம் தான்..)

    சரி எதுவா இருந்தாலும் 2013ல் கொஞ்சம் நல்லது நடக்கும்னு நம்புவோமாக..

    ReplyDelete