Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.

27 comments:

  1. //"ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
    யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
    நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
    நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"//


    தமிழ் மொழியில் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்த இந்த முக்கூடற்பள்ளு பாடல் மறக்க முடியாதது தல! நாலாம்பு படிக்கும்போது செய்யுள் பகுதில வரும்! சந்த நயத்தால நான் கவரப் பட்டேன்!

    இனிய மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  2. //மாட்டையவிழ்த்தாய்விட்டது.

    மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

    "என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்//

    பால்வண்ணம்பிள்ளை!

    ReplyDelete
  3. //"I was angry with my friend:
    I told my wrath, my wrath did end.
    I was angry with my foe;
    I told it not, my wrath did grow"//

    Poison Tree!

    William Blake!

    ReplyDelete
  4. தள

    அடுத்து இரு பதில்களும் சரி தான்

    ReplyDelete
  5. 3 .ராமயணம்

    4.நன்னூல்

    மத்ததெல்லாம் சாய்ஸ்யேய்ய்ய்ய்ய்! :)

    ReplyDelete
  6. குவிஸ் போட்டில பாஸ்னு சொல்லிடலாம். மார்க் போட ஒரு பிகர் எல்லாம் இருக்கும். இப்ப உங்க ஆபிஸ்ல உங்க பக்கத்துல அப்படி யாராவது..? :)))


    உங்க டச்சுல அழகா எழுதி இருக்கீங்க தல. :))

    ReplyDelete
  7. உங்க பிளாக்கர், கூகிள் பஸ்ல லிங்கி வருது. அத கட் பண்ணுங்க. அங்கன யாராவது விடைய சொல்லிட்டா போட்டியின் நோக்கம் வீணாயிடும். பின்னூட்டமும் கோவிந்தா. :))

    ReplyDelete
  8. ஆயில்ஸ்

    தமிழ்ல 3 சரி

    மத்ததுக்கெல்லாம் இப்பவே கையைத் தூக்கிட்டா எப்படி?

    ReplyDelete
  9. /2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’/

    SELFISH GIANT

    ReplyDelete
  10. என் பதில்கள்:

    1) குற்றால குறவஞ்சி - திரி கூட ராசப்ப கவிராயர் (டவுட்டா தான் இருக்கு)

    2) பாஞ்சாலி சபதம் - தல பாரதியார்

    3) பெரிய புராணம் - சேக்கிழார்

    4) பட்டினத்தார்..? (தப்புனு நினைக்கிறேன்)

    5) பாஸ்...

    ஆங்கிலம்:

    1) பாஸ் - ரெம்ப கஸ்டமா இருக்கு.
    2)
    3)
    4) poem: பாய்சன் ட்ரீ - ராபர்ட் பிராஸ்ட்(?)

    5)

    எதுக்கும் யோசிச்சு திரும்ப வரேன்.

    ReplyDelete
  11. அம்பி, நன்னி.

    கூகிள் பஸ் லிங்கை தூக்கிட்டேன்.

    ReplyDelete
  12. அம்பி,

    தமிழ்
    1. இல்லை
    2. சரி
    3. இல்லை
    4. ஆமா...தப்பு தான் :)
    5. பாஸ் பண்ணாலும் ஃபெயில் தான் :)

    ஆங்கிலம்
    4. பாட்டோட பேரு மட்டும் சரி

    ReplyDelete
  13. ஹலோ அண்ணே.... ஹலோ... சிக்னல் சரியில்லைண்ணே இங்க.. ஹலோ... எழுத்தெல்லாம் தலைகீழா வேற தெரியுது..ஹலோ.. ஹலோ.. கைப்ஸண்ணே.. ஹலோஓஓஓ

    ReplyDelete
  14. 3)உலகம் யாவையும் - கவிச்சக்ரவர்த்தி கம்பர் (கன்ப்யூஸ் ஆயிட்டேன்)

    4) பல் சான்றீரே! பல் சான்றீரே! புற நானூறு - பாடியது ஒரு பாண்டிய மன்னனின் ராணி(ரீமா சென் இல்லை) தொகுத்தது - மதுரை பேராள வாயர்.

    4) பாய்சன் ட்ரீ - வில்லியம் ப்ளேக்

    ReplyDelete
  15. அம்பி

    தமிழ்
    3. சரி
    4. சரி. எழுதுனவரு பேரு ரொம்ப ஸ்பெஷலான பேரு. தேடுங்க.

    ஆங்கிலம்
    4. இப்ப முழுசும் சரி.

    ReplyDelete
  16. 3.கடவுள் வாழ்த்து - கம்பராமாயணம் - கம்பர்
    இந்த கடவுள் வாழ்த்துக்கும், சேக்கிழார் பெரியபுராணத்துக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இரண்டு கடவுள் வாழ்த்தும் உலகம் என்று தான் தொடங்கும். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்" - இது இறைவன் எடுத்து கொடுத்த அடி என்று படித்திருக்கிறேன்

    1.Khuswant singh - not sure must be "karma" story
    2.Cherry Tree - Ruskin bond
    5.Poison tree - William blake

    Good posting.. taking me to good old school days.. Nostalgia....

    ReplyDelete
  17. Guru

    தமிழ்
    3. சரி

    ஆங்கிலம்
    1,2,5, Spot On :) Please attempt the others too. Thanks for your feedback.

    ReplyDelete
  18. //
    1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman! //

    இங்கிலீஷ் மேன், சத்யராஜ் நடிச்சது!

    ReplyDelete
  19. தள

    உங்களுக்கும் ரொம்ப தான் நக்கலு
    :)))

    ReplyDelete
  20. படிச்சிட்டேன் ;-)

    ReplyDelete
  21. கம்பரும் பாரதியாரும் மட்டும் தான் தெரிஞ்சுது :((
    எரிதழல் கொண்டுவா..என்ன ஒரு வரியில்ல!!! பேச்சுப் போட்டிகளில் மேற்கோள் காட்டி பேசும் போது எனக்கு நரம்பெல்லாம் முறுக்கேறும் (இதையே வேற ஒரு போட்டியில எக்ஸ்டம்போர் தலைப்பா குடுத்தாங்க...அந்தப் போட்டியை மட்டும் மறக்கவே மாட்டேன் அவ்வளவு உணர்சிவசப்பட்டேன்..கப்பையும் குடுத்தாங்க :))ஹூம்...

    இங்லிபிஸ் கொஞம் தூரம்ங்க

    ReplyDelete
  22. ஸ்கூல் டேஸ் பதிவு போடுங்க தல
    ரொம்ப நாளாச்சு
    முப்பது வயசு நினைவுகள் னு போடுங்க
    பழைய நிகழ்ச்சியெல்லாம் நினைவு கூர்ந்த மாதிரி இருக்கும்

    ReplyDelete
  23. இன்னுமா முடிவைச் சொல்லிப் பரிசைக் கொடுக்கலை! :P:P:P:P:P

    ReplyDelete
  24. hihi சிபியோட ஐடியா நல்லா இருக்கு. சீக்கிரம் செய்ங்க அங்கிள்!

    ReplyDelete
  25. HeHe did we even learn these things...My Memory is failing me. Though I could have Googled 'em...But that would have spoiled the fun!

    ReplyDelete
  26. Idhellam nyabagam vachika mudiama thaane konaar notes and english guide'a kilichu bit'aa akunom???marubadiyum first lendhaaaaaa?????thaangaadhu paaa

    ReplyDelete