படம் : இரத்தத் திலகம்(1963)
பாடல் : கவியரசு கண்ணதாசன்
இசை : K.V.மகாதேவன்
பாடியது : T.M.சௌந்தரராஜன்
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
(புத்தன் வந்த திசையிலே...)
பரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெண்தளத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா
வா...வா...வா...வா...வா...
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா
வா...வா...வா...வா...வா...
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன்நிமிர்த்து வா
பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா
வா...வா...வா...வா...வா...
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர்
போர்...போர்...போர்....
1962ஆம் ஆண்டு சீனப் போர்தொடுப்பின் போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த படம் "இரத்த திலகம்(1963)". பாடல் வரிகளுக்காகவும் கற்பனை நயத்திற்காகவும் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல்கள் உண்டு. இது அவ்வகையில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல்.
எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த வரி, பாடலுக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் "பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா" என்பது. இதை பாடலில் கேட்கும் போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கும். "போரில் உயிரிழப்பதை குறித்து அஞ்ச வேண்டாம், உன்னைத் தாக்க வரும் பகைவனும் அப்போரில் உயிரிழக்கலாம்" என்று ஐந்து சொற்களில் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்.
இசைஞானி இளையராஜா கவியரசர் கண்ணதாசன் குறித்த தன்னுடைய நினைவுகளைப் பகிர்கிறார் கீழே உள்ள இந்த ஒலிக்கோப்பில். தான் முதன்முதலில் கவியரசரைக் கண்ட போது அவரை வெறுத்தது, "தேன் சிந்துதே வானம்" பாடல் பதிவின் போது கவிஞரைக் கண்டு வியந்தது, தன் மனதில் கவியரசருக்கு எவ்வளவு உயர்ந்த இடம் உள்ளது என்றெல்லாம் மனம் திறந்திருக்கிறார். இதையும் கேட்டு ரசியுங்கள்.
|
கவிஞரின் புகம் இன்னும் பல ஆண்டு கண்டிப்பா தொடரும்.
ReplyDeleteஅருமையான இந்த பாட்டு நான் பல தடவை கேட்டு ரசித்திருக்கேன். அவரின் நினைவு நாளில் இந்த பதிவு ரொம்ப பொருத்தம்.
மீ த பஸ்ட்டா?
ReplyDelete:)
ReplyDeleteகவியரசர் என்ற பட்டத்திற்கு ஏற்ப தமிழ் சினிமா பாடல் உலகின் என்றும் அரசன் அவர் தான்.
நல்ல பகிர்வு!
நன்றிங்க அபி அப்பா. யூ தி ஃபர்ஸ்ட்.
ReplyDelete:)
//:)
ReplyDeleteகவியரசர் என்ற பட்டத்திற்கு ஏற்ப தமிழ் சினிமா பாடல் உலகின் என்றும் அரசன் அவர் தான்.
நல்ல பகிர்வு!//
நன்றிப்பா புலிக்குட்டி.
:)
ஆகா..அண்ணே இப்போதைக்கு கேட்க முடியல எதையும்...அப்பாலிக்க வரேன் ;)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ;)
முதல் முறையாகக் கேட்கிறேன்! பகிர்வுக்கு நன்றி! //இப்படத்தில் உள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடலும், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலும் மிகப் பிரபலமானவை.//
ReplyDeleteஅவ்வ்வ்...மறக்க முடியுமா!! நமக்கு பாட்டி காலத்து முஸ்தஃபா முஸ்தஃபா ஆச்சே இந்த பசுமை நிறைந்த நினைவுகளே!! :-)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபிநாத், முல்லை.
ReplyDelete:)