இது இரு நபர்கள் கூகிள் டாக்கில் தனியாக பேசிக் கொண்டதை பொதுவில் வைத்து அம்பலப்படுத்தும் ஒரு Scoop பதிவு. அந்த இரு நபர்கள் - நான் கைப்புள்ள மற்றும் நீங்கள் எல்லாரும் அறிந்த மாயவரம் ஷேக் அபி அல்-அப்பா. நாங்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டதைப் படித்து விட்டு உங்களை நீதி சொல்லுமாறு அழைக்கிறேன். யார் பக்கம் தவறு இருக்கிறது, யார் தவறிழைத்தது, யாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
அபி அப்பாவுடன் எனக்கு ஆயிரம் மோதல்களும், வருத்தங்களும் இருந்தாலும், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருடைய இளைய மகன் நடராஜுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "நட்டு கண்ணா, வளர்ந்து படிச்சி பெரியவனாய் எல்லா விஷயத்துக்கும் அப்பாவை ஃபாலோ பண்ணு, ஆனா சாட் பண்ணற விஷயத்துல மட்டும் அவரை ஃபாலோ பண்ணாதே, அவரு கிட்ட சாட் செய்யவும் கத்துக்காதே."
எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு விஷயம். கீழே இருக்கற படங்களைப் பாருங்க. இந்த படங்களைப் பாத்து தெளிவடையறது Scoop புரியறதுக்கு மிக அவசியம்.
மேலே உள்ள படத்தில் இருப்பவர் தான் பிரபல கடம் வித்வான் திரு.விக்கு வினாயக்ராம் அவர்கள். இவரிடம் தான் என் தம்பி மிருதங்கம் கற்றுக் கொண்டான். விநாயக்ராம் அவர்கள் தான் என் தம்பியோட 'குரு'ன்னும் சொல்லலாம்:)
இவர் திரு.V.செல்வகணேஷ் - திரு.வினாயக்ராம் அவர்களின் மூத்த மகன். இவர் கஞ்சீரா வித்வான். ஏ.ஆர்.ரகுமான் உடன் சில திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். "வெண்ணிலா கபடிகுழு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்.
இவர் திரைப்படப் பின்னனி பாடகர் - திரு.மாணிக்க விநாயகம். பல பிரபல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
எனக்கும் அபி அப்பாவுக்கும் நடந்த சாட் உரையாடலை அப்படியே காப்பி-பேஸ்ட் செஞ்சி போட்டிருக்கேன். இந்த மாதிரி Scoop நடத்த வேண்டி வரும் என்று நான் நினைக்கலை. தெரிஞ்சிருந்தால் நானும் கொஞ்சம் தெளிவா தமிழ்லேயே தட்டச்சியிருப்பேன். கீழே இருக்கற சாட் உரையாடல்ல அபிஅப்பா தமிழ்லயும் நான் தங்கிலிஷ்லயும் தட்டச்சியிருக்கோம். நல்லா கவனமாப் படிச்சி ஒரு நியாயமான தீர்ப்பைச் சொல்லுங்க.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அபிஅப்பா நட்டுமுட்டுஅப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அதுல அவரு கல்யாணத்துக்கு சாக்ஸபோன் இசை கலைஞர் கதிரி கோபால்நாத் வந்திருந்ததாக எழுதியிருந்தார். அதுக்கப்புறம் நான் அவரைச் சாட்ல புடிச்சேன். இனி மேல படிங்க.
me: unga kalyanathukku Kadri vandhaaraa
?
அபி அப்பா: அது 3 நாள் கல்யாணம்
me: ok
அபி அப்பா: முதல் நாள் திருவிழா ஜெய்சங்கர் வலையபட்டி கச்சேரி
me: hmm
அபி அப்பா: இரண்டாவது நாள் சிவமணி ஏ கே பி கச்சேரி
me:Drums Sivamaniyaa?
அபி அப்பா: என் ரிஷப்ஷனுக்கு தான் கத்ரி சாக்ஸ். கன்யாகுமரி வயலிம். வினாயக்ராம் கடம், பெங்ககூர் ராசசேகர் மோர்சிங், தவில் ஏ கே பி
ஆமாம் டிரம்ஸ் சிவமணி அப்ப இப்ப போல பேமஸ் இல்லை
me:Vinayakram dhaan en Thambiyoda Guru
அபி அப்பா: அட
me: aamaa
அபி அப்பா: என் கல்யாணத்துக்காகவே ஜெர்மன்ல இருந்து அவரும் பழனிவேலும் அவரும் கன்யாகுமரியும் வந்தாங்க
me: enna romba neramaa typing???
oho
unga kudumbam isai kudumbamaa?
அபி அப்பா: ஒரு கையால டைப்பிங்
me: oh
ennachu innoru kaile?
அபி அப்பா: தூங்கிட்டு இருக்கேன்
me: innoru kaiyaale thoongareengalaa? :-o
அபி அப்பா: ஒருக்களிச்சு படுத்து கிட்டு ஒரு பக்கமா டைப்புரேன்
me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?
அபி அப்பா: நான் வேலைக்கு போயே 10 நநள் ஆச்சே
me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?
அபி அப்பா: வெண்ணிலா கபடி குழு நான் ரசித்து பார்த்த படம்
me: andha padathoda music director...
V.Selvaganesh Vinayakram Siroda paiyan
அபி அப்பா: விஜை ஆண்டணியா
me: illai
V.Selvaganesh
அபி அப்பா: ஒ
me: aamaa
அபி அப்பா: சரி
அவருக்கு என்ன ஆச்சு
me: aiyo
avaru Vinayakramoda paiyan
ippo puriyudhaa?
அபி அப்பா: என் மனைவிய தான் கேட்கனும்
me: aiyoooooooooooooo
saami kolreengale ippadi
அபி அப்பா: என் கல்யானத்து அப்ப கனேசன்னு ஒருத்தன் இருந்தான்
me: V.Selvaganesh Vinayakramoda paiyannu ungalukku naan sollaren
ungalai kekkalai
அபி அப்பா: சின்ன பய
me: Ganesan yaaru Vinayakram troupelayaa?
அபி அப்பா: இருங்க கேக்குறேன்
2 நிமிஷம்
அபி அப்பா: கனேசன் தான் செல்வகனேஷாம்
me: illeenga
naan ungaloda chatle pesi mandai kaainjadhai blogle podanum pola
appo dhaan neenga sari paduveenga
:(
அபி அப்பா: என்னாது
வழுவூர் ராமையா பிள்ளைக்கு 4 பையன்
me: aiyoooooo
vitrunga
naan thappu pannitten
அபி அப்பா: இதிலே கடைசி பையன் வழுவூர் மாணிக்க வினாயகம்
me: sari
avarkkum Vinayakramukkum enna sambandham?
அபி அப்பா: முதல் பையன் பேர் வழுவூர் சாம்ராஜ்
இரண்டாவது பையன் பேர் குரு
மாணிக்க வினாயகம் 4 வது பையன்
me: neenga sonnadhai ellam blogle podalaamaa?
அபி அப்பா: வேண்டாம்
me: sooda vyaparam aavum unga perai solli copy paste pannaa
en venaam?
அபி அப்பா: குரு IOBல மேனேஜர்
செத்து போயாச்சு
சாம்ராஜ்ம் செத்து போயாச்சு
me: hmm
அபி அப்பா:இப்ப இருப்பது மாணிக்க வினாயகம் மட்டும் தான்
me: neenga aarambathule Vinayakram pathi sonneenga
அபி அப்பா:வழுவூர் ராமையா பிள்ளை பிரபல பரத நாட்டிய கலைஞர்
me: aamaa Padminiyoda Guru
Nattiya Peroli
அபி அப்பா:ஆமாம் ஆமாம்
வைஜெயந்திமாலாவுக்கும் கூட
me: naan Vinayakram pathi sonnadhai padicheengalaa illaiyaa?
அபி அப்பா:அந்த கணேசனா இருக்கலாம்ன்னு என் வீட்டிலே கிருஷ்ணா சொன்னது
மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே
me: //மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே// idhu varai sollalai :(
nalla mandai kaaya vechitteenga
naan sonnadhai neenga note panneengalaa illaiyaane enakku idhu varaikkum theriyalai
அபி அப்பா:அய்யோ எழுந்துட்டேன்
இப்ப சொல்லுங்க
me: sari vidunga freeyaa
:(
naan idhai postaa podaren
appo paathu purinjikkanga
sariyaa?
me: எனக்கு மண்டை காய்ஞ்சிடுச்சு :)
அபி அப்பா: இப்ப ஆரம்பம் முதல் கேளுங்க
me: naan onnum kekkalai
அபி அப்பா: இல்லை நான் முழிச்சாச்சு
கேளுங்க
me: naan kekka varalai
naan unga kitte solla vandhen
unga Kalyanathukku Vinayakram vandharunnu sonneenga illai?
அபி அப்பா: அவரு தான் மாசம் ஒரு தடவை வருவாரே
me: hmmm :(
படிச்சீங்களா? இப்போ நீங்களே சொல்லுங்க. வினாயக்ராம்னு முதல் வரில இவர் சொல்லிட்டு, அவரைப் பத்தி நான் பேசும் போது இவரு மாணிக்கவிநாயகத்தைப் பத்திப் பேசியிருக்காரு. அதோட நான் பேசுனதுக்கு எதுக்குமே பதில் இல்லை. இதுலேருந்து என்னா தெரியுதுன்னா அபி அப்பாவுக்குத் தூக்கத்துல சாட் செய்யற வியாதி இருக்குன்னு. இவரை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. ஒரு விஷயம் சொல்லப் போய நான் மண்டை காய்ஞ்ச அனுபவத்தைப் படிச்சா உங்களுக்கே பாவமா இல்லியா? ஒரு நேர்மையான நியாயமான தீர்ப்பாச் சொல்லுங்க. Scoopனு போட்டாலும் பல்பு வாங்குனது என்னமோ நான் தான்.
(டிஸ்கி: பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னா கேக்கறீங்க? யாருக்குத் தெரியும்? அபி அப்பாவை இணைச்சு புதுசா வந்த மலையாளப் படப் பேருல தலைப்பு வச்சாலும் சூடா வியாபாரம் ஆகும்னு ஒரு நம்பிக்கை தான்)
பதிவு படிச்ச எனக்கும் மண்டை காஞ்சி போச்சு
ReplyDeleteஇதுல எங்க சித்தப்பா மேல என்ன தப்புங்க?
ReplyDeleteஉங்களுக்கு அவரு பேசுனது புரியலங்கிறதுக்காக பதிவு போடுவிங்களா?
அவரு மேல ஒரு தப்பும் இல்ல. தப்பெல்லாம் உங்க மேலத்தான்.
அடக்கடவுளே!!! பாவம்ங்க நீங்க. ஆனா படிக்கிற எங்களுக்கு ஜாலியா இருந்தது :)))
ReplyDeleteஅடக்கடவுளே!!! பாவம்ங்க நீங்க. ஆனா படிக்கிற எங்களுக்கு ஜாலியா இருந்தது :)))
ReplyDelete*#&DKJ*#((#)# தலை சுத்துது...
ReplyDeleteபாவம் ... நீங்க ரொம்ப நல்லவருங்கோ..
ReplyDeleteஅய்யோ... என்னை விட்டுடுங்க.. நான் ஓடிப்போய்டறேன்....
ReplyDelete( எண்ண வேணும்? எண்ணை தான் வேணும்... இந்த ஜோக் என்னமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாம வந்து போகுது )
//அபி அப்பா: என்னாது
ReplyDeleteவழுவூர் ராமையா பிள்ளைக்கு 4 பையன்
me: aiyoooooo
vitrunga
naan thappu pannitten
அபி அப்பா: இதிலே கடைசி பையன் வழுவூர் மாணிக்க வினாயகம்
me: sari
avarkkum Vinayakramukkum enna sambandham?
அபி அப்பா: முதல் பையன் பேர் வழுவூர் சாம்ராஜ்
இரண்டாவது பையன் பேர் குரு
மாணிக்க வினாயகம் 4 வது பையன்///
பை தி பை அந்த வழூவூர் காரர் கதையில இன்னும் கொஞ்சம் மிஞ்சம் வைச்சுப்புட்டாரு அண்ணே! :(
இன்னும் நிறைய இருக்கு சொல்றதுக்கு!
தொல்ஸ்ண்ணே வுடாதீங்க கண்டினியூ பண்ணி எல்லாத்தையும் சொல்லிடுங்க !
இல்லாங்காட்டி கைப்புள்ள இத்தோட எஸ்ஸாகிடுவாரூஊஊஊ!
//அபி அப்பா:இப்ப இருப்பது மாணிக்க வினாயகம் மட்டும் தான்
ReplyDeleteme: neenga aarambathule Vinayakram pathi sonneenga//
அட என்னங்க அண்ணாச்சி நீங்க திரும்ப திரும்ப எங்க அண்ணனை கேள்விகளால குடையிறீங்க அதான் வினாயகம் ரெண்டுலேயும் வருதுல்ல!
:))
ஐயையோ..
ReplyDeleteமண்டை காயுது..
மனுஷனா இவரு..?
பேசாம அவர்கிட்ட அரசியல் பேசியிருந்தீங்கன்னா இப்படி ரவுசு பண்ணிருக்க மாட்டாரு..!
//அபி அப்பா: இப்ப ஆரம்பம் முதல் கேளுங்க//
ReplyDeleteமறுபடியும் ஆரம்பத்திலேர்ந்தா....???!!!
//நான் பேசுனதுக்கு எதுக்குமே பதில் இல்லை. இதுலேருந்து என்னா தெரியுதுன்னா அபி அப்பாவுக்குத் தூக்கத்துல சாட் செய்யற வியாதி இருக்குன்னு.//
ReplyDeleteஹல்லோ அண்ணாச்சி நீங்க ஒருத்தருமட்டும்தான் மண்டை காஞசு போன மாதிரி ஃபீல்பண்ணுறீங்களே அதே டைம்ல (நீங்க சாட்டும்போது) இன்னும் மிச்சம் மீதி (ஒரு 5 அல்லது 7) சாட்ல குந்தியிருந்த மக்கள்ஸ் என்னாகியிருப்பாங்கன்னும் கொஞ்சம் ரோசனை பண்ணிப்பாருங்க!
:))))))))))
டூ அபி அப்பா ! :)
ReplyDeleteவெல்டன் !
சூப்பர்!
பெண்டாஸ்டிக்!
இப்படி எப்படி வேணும்னாலும் சொல்லலாம்ண்ணே நீ சிங்கம்ண்ணே :)))
:)))
ReplyDelete:))))))
உங்களுக்கு இப்பதான் தெரியுமா...?
நாங்கலெல்லாம் அவ்ரு ஹைய் குடுத்தாலே நாங்க bye குடுத்துடுவோம் :)
ஆயில்யனை வழிமொழியற கையோட நட்டுவுக்கு இரண்டாம் பிறந்த நாள் வாழ்த்துகளையும் சொல்லிக்கறேன்.
ReplyDeleteஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹீஹ்ஹிஹிஹீஹி பதிவிலே புரிஞ்ச விஷயமே நட்டுவோட பிறந்த நாள்ங்கறது மட்டுமே! :P
முடியலைங்க முடியலைங்க!!
ReplyDelete:-))))))))))))))))))))
..Ag
சந்தேகமே இல்லாமல் அபி அப்பாவோடத் தான் சாட்டி இருக்கீங்க! அது நிச்சயமாய்த் தெரியுது! :P:P:P:P
ReplyDelete//பதிவு படிச்ச எனக்கும் மண்டை காஞ்சி போச்சு//
ReplyDeleteவாங்க அ.அ,
உங்களுக்குங்களா?
:)
//அவரு மேல ஒரு தப்பும் இல்ல. தப்பெல்லாம் உங்க மேலத்தான்.//
ReplyDeleteவாங்க ஜோ,
சித்தப்பாரு பாசம் இருக்க வேண்டியது தான். இருக்கலாம் தப்பில்லை. இருந்தாலும் நீதின்னு ஒன்னு இருக்கில்லை? நியாயம்னு ஒன்னு இருக்கில்லை? பதிவைப் படிச்சிட்டு நீங்க இப்படி பேசலாமா?
:)
//அடக்கடவுளே!!! பாவம்ங்க நீங்க. ஆனா படிக்கிற எங்களுக்கு ஜாலியா இருந்தது :)))//
ReplyDeleteஹி...ஹி...அதுக்காகத் தானே இந்த பதிவே?
:)
//*#&DKJ*#((#)# தலை சுத்துது...//
ReplyDeleteஎனக்கும் தாங்க சுத்துச்சு. அதனால தான் இந்தப் பதிவே. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
:)
//பாவம் ... நீங்க ரொம்ப நல்லவருங்கோ..//
ReplyDeleteநன்றிங்கங்கோ சூரியன் சார்.
:)
//அய்யோ... என்னை விட்டுடுங்க.. நான் ஓடிப்போய்டறேன்....
ReplyDelete( எண்ண வேணும்? எண்ணை தான் வேணும்... இந்த ஜோக் என்னமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாம வந்து போகுது )//
ஹி...ஹி...அதே அதே தான் அண்ணாச்சி.
:)
//அட என்னங்க அண்ணாச்சி நீங்க திரும்ப திரும்ப எங்க அண்ணனை கேள்விகளால குடையிறீங்க அதான் வினாயகம் ரெண்டுலேயும் வருதுல்ல!
ReplyDelete:))//
அது சரி! அமீரகத்துல எல்லாரும் ஒரு மார்க்கமாத் தான் இருப்பீங்க போல.
:)
//ஐயையோ..
ReplyDeleteமண்டை காயுது..
மனுஷனா இவரு..?
பேசாம அவர்கிட்ட அரசியல் பேசியிருந்தீங்கன்னா இப்படி ரவுசு பண்ணிருக்க மாட்டாரு..!//
வாங்க உண்மைத் தமிழன்,
அப்போ அரசியல் பேசி அவரு ரவுசு பண்ணற ஆளா இல்லியான்னு பரிசீலிக்கலாம்னு சொல்லறீங்க? உங்களை நம்பலாமா?
:)
//இன்னும் மிச்சம் மீதி (ஒரு 5 அல்லது 7) சாட்ல குந்தியிருந்த மக்கள்ஸ் என்னாகியிருப்பாங்கன்னும் கொஞ்சம் ரோசனை பண்ணிப்பாருங்க!
ReplyDelete:))))))))))//
ஹி...ஹி...அதுனால தானே சொல்லிருக்கோம் அபி அப்பா ஒரு நிஷ்கலங்கன் - மனசுல களங்கம் இல்லாதவரு. பாரபட்சம் பாக்காம எல்லார் கிட்டயும் ஒரே மாதிரி பேசறவரு அவரு.
:)
////அபி அப்பா: இப்ப ஆரம்பம் முதல் கேளுங்க//
ReplyDeleteமறுபடியும் ஆரம்பத்திலேர்ந்தா....???!!!//
வெண்ணிலா கபடிகுழு படத்துல பரோட்டா தின்னற போட்டியில ஒரு வசனம் வருமே - " நீ கள்ள ஆட்டம் ஆடறே. கோட்டை எல்லாம் கலை. நான் மறுபடியும் ஆரம்பத்துலேருந்து சாப்புடறேன்"ன்னு. அது தான் இப்ப ஞாபகத்துக்கு வருது.
:)
//:)))
ReplyDelete:))))))
உங்களுக்கு இப்பதான் தெரியுமா...?
நாங்கலெல்லாம் அவ்ரு ஹைய் குடுத்தாலே நாங்க bye குடுத்துடுவோம் :)///
என்ன தான் இருந்தாலும் தங்கமான மனசு அவருக்கு, மண்டை ஒருத்தரை மட்டும் காய வைக்க மாட்டாரு...சாட்ல இருக்கற எல்லாரையும் காய வைப்பாரு. அதை நீங்க பாராட்டியே ஆகனும்.
:)
//முடியலைங்க முடியலைங்க!!
ReplyDelete:-))))))))))))))))))))
..Ag//
எனக்கும் தாங்க Ag.
:))
//சந்தேகமே இல்லாமல் அபி அப்பாவோடத் தான் சாட்டி இருக்கீங்க! அது நிச்சயமாய்த் தெரியுது! :P:P:P:P//
ReplyDeleteஅபி அப்பா தான். பின்னே மண்டபத்துல யாரோடயோ சாட்டிட்டு அதையா இங்கே கொண்டு வந்து பதிவாப் போடறேன்? சாட்டியது அபி அப்பா தான். அபி அப்பாவே தான்.
:)
தல ,
ReplyDeleteகலக்கல், என்கிட்டேயும் ஒரு நாள் இப்பிடி தான் டரியல் ஆனாரு... பாருங்க... :)
ஹய்யோ ஹய்யோ...
ReplyDeleteஇப்பவாச்சும் பரவாயில்லை.... இதுவே சில காலங்களுக்கு முன்பு அதுவும் அண்ணாச்சு வியாழன் இரவு பழசரம் அருந்தும் போது சாட் பண்ணி இருக்கனும்.. உங்களை சட்டைய பிச்சுக்க வச்சு இருப்பார்........
நீங்க அண்ணன் தெளிவா இருக்கும் போது பேசியிருக்கீங்க. அதான் ஓரளவுக்கு ரிலேட்டடா இருக்கு :)
ReplyDelete//தல ,
ReplyDeleteகலக்கல், என்கிட்டேயும் ஒரு நாள் இப்பிடி தான் டரியல் ஆனாரு... பாருங்க... :)//
வாப்பா ராயல்,
ஆனா என் கதைல டரியல் ஆனதென்னவோ நான் தாம்ப்பா
:(
//இப்பவாச்சும் பரவாயில்லை.... இதுவே சில காலங்களுக்கு முன்பு அதுவும் அண்ணாச்சு வியாழன் இரவு பழசரம் அருந்தும் போது சாட் பண்ணி இருக்கனும்.. உங்களை சட்டைய பிச்சுக்க வச்சு இருப்பார்........//
ReplyDeleteவாப்பா புலி,
இதையே பரவாயில்லேங்கிறியா? அப்போ எனக்கு சேதாரம் கம்மின்னா சொல்றே? மனசுக்கு சந்தோஷமா இருக்குப்பா.
:)
//நீங்க அண்ணன் தெளிவா இருக்கும் போது பேசியிருக்கீங்க. அதான் ஓரளவுக்கு ரிலேட்டடா இருக்கு :)//
ReplyDeleteரிலேட்டடா? இதுவே டாவின்சி கோட் மாதிரி தான் இருக்கு எனக்கு
:)