நேற்று(29.03.2009அன்று) ஞாயிற்றுக் கிழமை வெளியான தினமலர், வாரமலர் இதழில் "இது உங்கள் இடம்" பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பிரசுரமாகியிருந்த 1000ரூபாய் பரிசு பெற்ற ஒரு கடிதத்தைக் கண்டதும் அதிர்ந்து போனேன். தென்காசியைச் சேர்ந்த ஒரு வாசகி(தமிழாசிரியராம்) தேர்வில் மாணவர்களை "தமிழ் எத்தனை வகைப்படும்?" என்று கேள்வி கேட்டிருந்தாராம். எல்லா கேள்விகளுக்கும் தப்பு தப்பாக பதில் சொல்லிய ஒரு மாணவி அந்த ஒரு கேள்விக்கு மட்டும் சரியாக(!) "முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்..." என பதிலளித்திருந்தாளாம். அதை பார்த்ததும் "இந்த ஒரு கேள்விக்கு மட்டும் எப்படி சரியாக பதிலெழுதினாய்?" என்று அம்மாணவியைப் பார்த்து தமிழாசிரியர் கேட்டாராம். அதற்கு அவள் "தான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்றும், அவருடைய படப் பாடல் ஒன்றில் - நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...என்று பாடியது நினைவில் இருந்ததால் சரியான பதில் எழுத முடிந்தது" என்று கூறினாளாம். இதே கடிதத்தைப் பற்றிய திரு.சுந்தரராஜன் அவர்களுடைய பதிவையும் பாருங்கள்.
தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!
இ.உ.இ. பகுதியில் இடம்பெறும் பல கடிதங்கள் வெறும் கற்பனையே என்பது என் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ளது நேற்று பிரசுரமான இக்கடிதம். ஒன்று யாரோ ஒருவர் எழுதியதாக தினமலரே எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். இல்லை என்றால யாரோ ஒரு விஜய் பித்து தலைக்கேறிய ஒரு வாசகர்/கி, விஜய் பாடல்களின் பெருமையை நிலைநாட்டுவதற்காக இப்படியெல்லாம் எழுதிப் போட்டிருக்கக் கூடும். (இப்படி எல்லாம் ஏன் யோசிக்க வேண்டியுள்ளதென்றால் தமிழாசிரியர்களின் தமிழறிவு இவ்வளவு தான் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது). இதெல்லாம் எதுவும் இல்லையென்றால் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. அதற்கு ஒரு பத்திரிகை 1000ரூபாய் பரிசு வழங்கியிருப்பது இன்னும் வேதனையானது. இயல், இசை, நாடகத்தை முத்தமிழ் என்று கொண்டாலும் கூட தமிழின் வகைகள் இயல், இசை, நாடகம் என்று எழுத வில்லை என்றால் எந்த தமிழாசிரியரும் இதற்கு மதிப்பெண் அளிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சரி அதை விடுவோம். சில நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஐயம் ஒன்று உள்ளது. அண்மை காலங்களில் வலைப்பதிவுகளில் கண்ட சில சொற்களின் பயன்பாட்டைப் பற்றியது. அதாவது ழகரத்தினை ளகரம் வர வேண்டிய இடங்களில் பயன்படுத்தும் வழக்கத்தினைப் பற்றியது. உதாரணமாக 'ஒளித்து வைத்தல்', 'ஒளிந்து கொண்ட' என்ற பொருள் தருகின்ற வாக்கியங்களில் வலைப்பதிவுகளில் 'ஒழித்து வைத்தல்' என்றும் 'ஒழிந்து கொண்ட' என்றோ எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதே போல 'சுளிக்க வைக்கும்' என்பதனை 'சுழிக்க வைக்கும்' என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். ஒளித்தல், ஒழித்தல், சுளித்தல், சுழித்தல் ஆகிய சொற்களுக்குப் பொருட்கள் கிட்டத்தட்ட நிகராக இருந்தாலும் இது நாள் வரை நான் பயன்பாட்டில் அறிந்த வரையில் இவை அவற்றுக்கேற்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்த வந்துள்ளன. உதாரணத்திற்கு "அவன் அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை "அவன் அருவெறுப்பினால் முகம் சுழித்தான்" என்று எழுதுவது சரியா? "முகத்தினை சுழித்தல்" என்று எழுதினாலும் பொருள் தரும். ஆனால் நான் இது நாள் வரை அறிந்திருப்பது "அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை தான். அதே போல "புத்தகத்தை ஒழித்து வைத்தான்" என வலைப்பதிவுகளில் எழுதப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் பதுக்கி வைத்தல் எனும் பொருள்பட எழுதும் போது "ஒளித்து வைத்தான்" என்றே நான் எழுதி வந்திருக்கிறேன். ளகரம் வரும் இடங்களில் இவ்வாறு ழகரத்தை இடைமாற்றி எழுதலாமா? அப்படி எழுதலாம் எனில் அதற்குண்டான விளக்கம் என்ன? என் ஐயத்தை யாராவது தீர்த்து வையுங்களேன்? நன்றி.
ஏற்கனவே இது பத்தி நான் கேட்டு வாங்கிக் கட்டிட்டேன் குழுமத்துல.. இப்ப பொதுவுல கேட்டிருக்கிறீரு ...
ReplyDeleteஉங்களை ஒளிஞ்சு போன்னு சொல்லவா இல்லை ஒழிஞ்சு போன்னு சொல்லவா ?
காளை வேலையில் எளுந்து பூபாழ ராகம் கேட்டும் மனம் மகிள்ந்து உள்ளம் குழிந்துக் கிடக்க வாள்த்துக்கள்
:) தட்டச்சு பிழை வருவது சகஜம்..ஆனா பிழையாவே தட்டச்சுவது நிறைய நடக்கிறது.. நீங்கள் சொன்னதுபோல எழுதுவது தவறு தானே.. பேச்சுவழக்கில் சிலர் அதனை மாற்றியே பேசிப் பழகி அதையே எழுத்திலும் கொண்டுவருகிறார்கள்.. இங்கே தட்டச்சுபவர்கள் பலரும் பலவருடங்களாக தமிழை எழுத மறந்து போனவர்கள் என்பதை ஒரு எக்ஸ்யூஸாக வைத்திருக்கிறார்கள்..
ReplyDeleteபடிச்ச உடனே நினைச்சேன் என்ன கேவலம் இதுன்னு. அப்புறம் வாரமலர்தானேன்னு விட்டுட்டேன்.
ReplyDeleteதமிழில் இப்பொழுது ரகர குழப்பங்கள், ழகரக் குழப்பங்கள் ணகரக் குழப்பங்கள் அதிகம் இருப்பதற்குக் காரணம் சரியான உச்சரிப்பைப் பள்ளிகளில் சொல்லித் தராததினால்தான் என்பது என் எண்ணம்.
தமிழ் பதிவுலகில் கண்ணில் பட்ட இடங்களில் சொல்லி வந்தேன். இப்பொழுது நன்றாகத் தெரிந்தவர்கள் தப்பு செய்தால் மட்டும் சொல்கிறேன்.
ஒளி ஒழி - நானும் சிலமுறை தப்பு செய்திருப்பதால், ாவற்றைச் செய்தவர்களை மன்னித்து விடலாம்.
ReplyDeleteமற்றவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது :-)
சில பிழைகள், என்னவோ நம் கழுத்தையே அறுப்பது போல இருக்கும். மீத்தப்பற்சுடு என்றால் யாருக்காவது புரியுமா?
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
//ஏற்கனவே இது பத்தி நான் கேட்டு வாங்கிக் கட்டிட்டேன் குழுமத்துல.. இப்ப பொதுவுல கேட்டிருக்கிறீரு ...//
ReplyDeleteவாங்கி கட்டிக்கிற மாதிரி பின்நவீனத்துவமா எதாச்சும் பறஞ்சிருப்பீங்க...அதான் :)
//உங்களை ஒளிஞ்சு போன்னு சொல்லவா இல்லை ஒழிஞ்சு போன்னு சொல்லவா ?//
//காளை வேலையில் எளுந்து பூபாழ ராகம் கேட்டும் மனம் மகிள்ந்து உள்ளம் குழிந்துக் கிடக்க வாள்த்துக்கள்//
இதெல்லாம் ரொம்ப ஓவர். இப்படியெல்லாம் யாரும் எழுதறதில்லை. இந்த மாதிரி தான் போய் குழுமத்துல நக்கல் பண்ணிருப்பீங்கன்னு நெனக்கிறேன். அதான் உங்களை கும்மிருக்காங்க.
:)
//:) தட்டச்சு பிழை வருவது சகஜம்..ஆனா பிழையாவே தட்டச்சுவது நிறைய நடக்கிறது.. நீங்கள் சொன்னதுபோல எழுதுவது தவறு தானே.. பேச்சுவழக்கில் சிலர் அதனை மாற்றியே பேசிப் பழகி அதையே எழுத்திலும் கொண்டுவருகிறார்கள்.. இங்கே தட்டச்சுபவர்கள் பலரும் பலவருடங்களாக தமிழை எழுத மறந்து போனவர்கள் என்பதை ஒரு எக்ஸ்யூஸாக வைத்திருக்கிறார்கள்..///
ReplyDeleteஅப்போ இது பிழைன்னே சொல்றீங்களா? உண்மையிலேயே நான் சந்தேகத்தின் பேரில் தான் கேட்டேன். பல பேர் இந்த மாதிரி எழுதறாங்களே...ஒரு வேளை எனக்கு தான் தெரியாமப் போச்சோன்னு.
பேசும் போது சில பிழைகள் நம்மையும் அறியாமல் வந்து விடுகிறது. உதாரணத்திற்கு ஒரு கூட்டத்தில் அல்லது மேடையில் பேசும் போது படபடப்பில் 'ல'க்குப் பதிலாக 'ள' வந்துவிடும். எனக்கும் சில முறை இது நடந்துள்ளது.
வல்லவன் படத்துல டி.ஆர் பாடுனது நியாபகத்துக்கு வருதா...
"உன்னைப் போள என்னைப் போள காதலிக்க யாருமில்லை"
ஆனா அடுக்குமொழியில் வல்லவர், அரட்டை அரங்கம் எல்லாம் நடத்தறவருக்குப் படபடப்புங்கிறதையும் நம்ப முடியலை :)
//படிச்ச உடனே நினைச்சேன் என்ன கேவலம் இதுன்னு. அப்புறம் வாரமலர்தானேன்னு விட்டுட்டேன். //
ReplyDeleteஹ்ம்ம்ம்...அந்த கேவலத்தைத் தான் பல வருஷமா எங்க வீட்டுல வாங்கறோம்னு நெனக்கும் போது வெட்க வெட்கமா வருது :(
//தமிழில் இப்பொழுது ரகர குழப்பங்கள், ழகரக் குழப்பங்கள் ணகரக் குழப்பங்கள் அதிகம் இருப்பதற்குக் காரணம் சரியான உச்சரிப்பைப் பள்ளிகளில் சொல்லித் தராததினால்தான் என்பது என் எண்ணம். //
நீங்க சொல்றது ஒரு காரணமா இருக்கலாம்னு தான் தோனுதுங்க கொத்ஸ்.
//தமிழ் பதிவுலகில் கண்ணில் பட்ட இடங்களில் சொல்லி வந்தேன். இப்பொழுது நன்றாகத் தெரிந்தவர்கள் தப்பு செய்தால் மட்டும் சொல்கிறேன்.//
ஏன்? ஜீவ்ஸ் மாதிரி உங்களையும் யாராச்சும் கும்மிட்டாங்களா?
:)
//ஒளி ஒழி - நானும் சிலமுறை தப்பு செய்திருப்பதால், ாவற்றைச் செய்தவர்களை மன்னித்து விடலாம்.
ReplyDeleteமற்றவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது :-)//
வாங்க சார்,
ஹி...ஹி...நல்ல கொழ்கை தான்:)
//சில பிழைகள், என்னவோ நம் கழுத்தையே அறுப்பது போல இருக்கும். மீத்தப்பற்சுடு என்றால் யாருக்காவது புரியுமா?//
நான் கேள்வி பட்டதே இல்லை. என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
:)
ஹ்ம்ம்..நீங்க சொல்வது புரிகிறது! சுழிக்கறதுன்னா, "பேப்பரிலே சுழிச்சுடுவேன்" ன்னு சொல்றதும், சுளிக்கறதுன்னா, "முகஞ்சுளித்தான்" ன்னு படிச்சதும்தான் நினைவுக்கு வருது! முகத்தை சுழிக்க முடியுமா..சுளிக்கத்தான் முடியும்! :-)
ReplyDeleteவாரமலர் பற்றி உங்கள் கருத்து உண்மை.
ReplyDeleteஅதில் வரும் பல விசயங்கள் கற்பனையே. அங்கு மட்டும் இல்லை பல வார இதழ்களிலும் இந்த கொடுமை நடப்பது உண்டு. ஏன் குமுதம் அரசு பதில்கள் கூட அப்படி தான்(நான் கேள்வி பட்ட வரை)
எங்க வீட்டிலும் தினமலர் தான், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து. என்னை பொறுத்தவரையில் தினமணி ஒன்று தான் ஒரளவுக்கு தரமான தினசரி என்பது என் கருத்து.
ழகர, ளகர குழப்பம் எனக்கு உங்க பதிவை படித்த பிறகு வந்து விட்டது. முடிந்த வரை சரியாக எழுத முயல்கிறேன்.
அண்ணே,
ReplyDeleteநான் தான் அப்பவே சொன்னனே அது தப்பு தானு. இப்படி எல்லார்கிட்டயும் இதை கேட்கனுமா?
எழுத்துப் பிழையை தவிர்க்கணும்னு தான் நானும் பார்க்கறேன். முடியல :)
// "தான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்றும், அவருடைய படப் பாடல் ஒன்றில் - நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...என்று பாடியது நினைவில் இருந்ததால் சரியான பதில் எழுத முடிந்தது" என்று கூறினாளாம்.//
ReplyDeleteஎன்னடா நாம இந்த மாதிரி படிக்கலயே. தமிழ் புத்தாண்டை மாத்திட்டே இருக்கற மாதிரி இதையும் மாத்திட்டானுங்களானு யோசிச்சேன்.
நாதாரிங்க.
//ஹ்ம்ம்..நீங்க சொல்வது புரிகிறது! சுழிக்கறதுன்னா, "பேப்பரிலே சுழிச்சுடுவேன்" ன்னு சொல்றதும், சுளிக்கறதுன்னா, "முகஞ்சுளித்தான்" ன்னு படிச்சதும்தான் நினைவுக்கு வருது! முகத்தை சுழிக்க முடியுமா..சுளிக்கத்தான் முடியும்! :-)
ReplyDelete//
வாங்க முல்லை,
பேப்பரிலே சுளிச்சுடுவேன்னு சொன்னா எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாத்தேன். சிப்பு வந்துடுச்சு.
:)
//வாரமலர் பற்றி உங்கள் கருத்து உண்மை.
ReplyDeleteஅதில் வரும் பல விசயங்கள் கற்பனையே. அங்கு மட்டும் இல்லை பல வார இதழ்களிலும் இந்த கொடுமை நடப்பது உண்டு. ஏன் குமுதம் அரசு பதில்கள் கூட அப்படி தான்(நான் கேள்வி பட்ட வரை)//
வாப்பா புலி,
அப்படியா? இது புதுசா இருக்கு.
//எங்க வீட்டிலும் தினமலர் தான், எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து. என்னை பொறுத்தவரையில் தினமணி ஒன்று தான் ஒரளவுக்கு தரமான தினசரி என்பது என் கருத்து.
ழகர, ளகர குழப்பம் எனக்கு உங்க பதிவை படித்த பிறகு வந்து விட்டது. முடிந்த வரை சரியாக எழுத முயல்கிறேன்.//
நன்னிப்பா.
:)
//அண்ணே,
ReplyDeleteநான் தான் அப்பவே சொன்னனே அது தப்பு தானு. இப்படி எல்லார்கிட்டயும் இதை கேட்கனுமா?
எழுத்துப் பிழையை தவிர்க்கணும்னு தான் நானும் பார்க்கறேன். முடியல :)
//
ஹி...ஹி...நானும் பொதுவாத் தாம்ப்பா சொன்னேன்.
:)
//என்னடா நாம இந்த மாதிரி படிக்கலயே. தமிழ் புத்தாண்டை மாத்திட்டே இருக்கற மாதிரி இதையும் மாத்திட்டானுங்களானு யோசிச்சேன்.
ReplyDeleteநாதாரிங்க.
//
ஹி...ஹி...தப்பா சொல்றதையும் அழுத்தம் திருத்தமா சொல்றாங்களா? அதை படிச்சிட்டு நமக்கும் ஒரே சந்தேகமா போயிடுது.
:)
ஹாய் மோஹன்,
ReplyDeleteஆமாம் நானும் இத மாதிரி நிறைய்ய இடங்கள்ல படிச்சுருக்கேன், ஆனா இது தட்டச்சரப்போ மட்டும் ஏற்படர தப்பு இல்ல, உச்சரிப்புலயும் வர்ர தப்பு தான். என் நண்பர் கூட ழகரம், ளகரம் வராது.கேட்டா அவரெல்லாம் கிராமத்துல படிச்சவராம், அதனால அங்க சொல்லிக் குடுக்கற ஆசிரியரும் அப்படிதான் உச்சரிப்பாராம்.அப்படியே பளகிடிச்சு னு சொல்வாரு.திருத்திக்க முயற்ச்சி எடுக்கறதேயில்லை. அதனால அதை தட்டச்சும் போதும் அப்படியே அடிக்கறதால தான் இப்படி.அதே மாதிரி ஆங்கிலத்திலும் ஷ ச உச்சரிப்பு பாதி பேருக்கு வர்ரதேயில்லை. என்னவோ இப்பல்லாம் தமிழ் பேசறதே பெரிய விஷயமாச்சே..
இப்படி யோசிச்சுப் பார்த்தீங்களா:) ழ
ReplyDeleteகரத்தைக் காப்பாற்றுவதற்காக
இப்படி ஒழிக்கிறாங்களோ??????
விரல்கள் பேசுவது என்பதே அறிது அதில் எழுத்து பிழை என்ன ..... உலறல்கள் என்று நினைக்கலாமே ... தவறென்ன
ReplyDelete