Monday, December 29, 2008

மூனைத் தொட்டது யாருடா? - குவிஜ் பதிவு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி பதில் பதிவு இது.

1. மகாபாரதம் மற்றும் பாப்ர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு. ( இந்த கேள்வியின் இரண்டாம் பாதியை நேற்று தவறோடு வெளியிட்டு விட்டேன். நேற்று இக்கேள்வியின் முதல் பாதியைச் சரியாகச் சொல்லியவர்கள், இதனை மீண்டும் முயலும் தேவையில்லை. தவறுக்கு வருந்துகிறேன்)
4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.

பல பதிவுகள்ல பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் உள்ள தொடர்பை எக்கச்சக்க பில்டப்பு எல்லாம் குடுத்து கடைசியிலே சொல்லிருக்கேன். இந்த பதிவோட தலைப்புக்கும் மூனாவது கேள்விக்கும் சம்மந்தம் இருக்குன்றதுனாலே இந்த தலைப்பை வைக்கலை. பின்ன?..."மூனைத் தொட்டது யாருடா"ன்னு நான் உங்களை யாரையும் மரியாதை குறைவா கேட்டேன்னும் நெனச்சிக்காதீங்க. அப்படியே கேட்டுட்டாலும் மூனைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங்க் இல்லை அமிர்தலிங்கம்னு நீங்கல்லாம் ரொம்பச் சரியாச் சொல்லிடுவீங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் மூனைத் தொட்டது யாருடான்னு எதுக்குடா தலைப்பை வைச்சேன்னு தானே கேக்கறீங்க? ஹி...ஹி...அதொன்னுமில்லீங்கண்ணா...இன்னையோட கைப்புள்ளக்கு மூனு வயசாச்சு. டிசம்பர் 29, 2005 அன்னிக்கு தமிழ் ப்ளாக் எல்லாம் நான் ஆரம்பிக்க சான்ஸே இல்லை, அதெல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலைன்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட கூகிள் சாட்ல வாய்ச் சவடால் விட்டுட்டு அன்னிக்கு சாயந்திரமே ஆரம்பிச்சது தான் இந்த கைப்புள்ள காலிங் ப்ளாக். இவ்வளவு நாளா எனக்கும் ஆதரவு தந்துட்டிருக்கற உங்க எல்லாத்துக்கும் என் மனமார்ந்த நன்றிங்கங்கோ.

63 comments:

  1. மூனை தொட்ட மூவேந்தர்களும் முன்னாடி ஆன தல கைப்புள்ள க்கு வாழ்த்துக்கள் கூற வயது இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து கும்பிட்டுக்குறேன் சாமியோவ்...

    ReplyDelete
  2. ஒவ்வொரு கேள்விக்கு பதில் சரியா தப்பானு சொல்லனும். அப்ப தான் நான் ஆட்டைக்கு வருவேன்....

    ஊக்குவிப்பு ரொம்ப முக்கியம்ல அதான்...

    ReplyDelete
  3. //மூனை தொட்ட மூவேந்தர்களும் முன்னாடி ஆன தல கைப்புள்ள க்கு வாழ்த்துக்கள் கூற வயது இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து கும்பிட்டுக்குறேன் சாமியோவ்...//

    உன் கமெண்டைப் படிச்சி சிப்பு வந்துடுச்சுப்பா. நன்னி.

    இப்ப நல்ல புலியா வந்து கேள்விக்கெல்லாம் பதிலைச் சொல்லு பாப்போம்.

    ReplyDelete
  4. //வாழ்த்துக்கள் தல!//

    வளர நன்னி தள.

    ReplyDelete
  5. சொல்றேன் ராசா...நீ மொதல்ல பதிலைச் சொல்லு.

    ReplyDelete
  6. புலி

    2 - சரியான பதில்

    ReplyDelete
  7. புலி

    3. முதல் பாதி மட்டும் சரி

    ReplyDelete
  8. புலி
    3. இல்லை. வெற்றி பெற்ற பயணத்தோடவே தொடர்பு படுத்தி யோசிக்கவும்.

    ReplyDelete
  9. //Blogger கைப்புள்ள said...

    புலி

    6. தப்பு//

    யோவ் நல்லா தெரியுமா? என்ன இந்த பய சரியான பதிலை சொல்லுறானே என்று பழி வாங்கும் படலம் இல்லல?

    ReplyDelete
  10. //யோவ் நல்லா தெரியுமா? என்ன இந்த பய சரியான பதிலை சொல்லுறானே என்று பழி வாங்கும் படலம் இல்லல?//

    இப்படியெல்லாம் நீ என்னை மெரட்டனாலும் இல்லை மேல விழுந்து பாய்ஞ்சே கடிச்சாலும் பதில் தப்பு தான்.

    ReplyDelete
  11. புலி

    3. இன்னும் தப்பு தான்

    ReplyDelete
  12. சரி புலிக்குட்டி...நீ மட்டும் தான் இருக்க...நான் வீட்டுக்குக் கெளம்பறேன்...ஆட்டத்தை இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுலேருந்து தொடரலாமா?

    உத்தரவு கொடுத்தீன்னா யெஸ் ஆவேன்.

    ReplyDelete
  13. // கைப்புள்ள said...

    சரி புலிக்குட்டி...நீ மட்டும் தான் இருக்க...நான் வீட்டுக்குக் கெளம்பறேன்...ஆட்டத்தை இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுலேருந்து தொடரலாமா?

    உத்தரவு கொடுத்தீன்னா யெஸ் ஆவேன்.//

    அவன் அவன் ப்ரீட்சைக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு படிச்சது இல்லங்குற ரேஞ்சுக்கு கேள்விக்கு எல்லாம் பதில் கண்டுப்பிடிச்சு சொல்லிட்டு இருந்தா இப்படி போறேன் என்று சொல்லி மூடு அவுட் பண்ணுறியே மேன்...

    சரி சரி.. போயிட்டு வாங்க

    ReplyDelete
  14. தபால் தலைக்கும், தபால் அட்டைக்கும் நடுவில் கன்பூஸ் ஆயிட்டேன் ஹிஹி..

    ReplyDelete
  15. 8.vetiveria zizanioides - வெட்டிவேர்

    3 வது வருசத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. கைப்பு
    மூணு வருசம் ஆகிருச்சா? இன்னும் நாலு பேருக்கிட்ட அடி வாங்கி ரொம்ப ரொம்ப நல்லவன் அப்புடீன்னு பேரெடுங்க

    ReplyDelete
  17. 1. Tanda in Uttar Pradesh
    2. Emu & Kangaroo in Australia
    3. Buzz Aldrin -The failed mission is Gemini 9A
    4. Newzealand
    5. David Ogilvy
    6. Deltiology
    7. சாயிஸ்ல விடு மாமே..
    8. Ammophila arenaria

    ReplyDelete
  18. //மூனை தொட்ட மூவேந்தர்களும் முன்னாடி ஆன தல கைப்புள்ள க்கு வாழ்த்துக்கள் கூற வயது இல்லாத காரணத்தால் குப்புற விழுந்து கும்பிட்டுக்குறேன் சாமியோவ்...//

    நானும் தல... :)

    ReplyDelete
  19. 1) சூரத்

    2) பெங்குவின் - (கலை)மான் - South Georgia (Googling)

    3) ங்ஙே...

    4) நியுசிலாந்து

    5) MRF

    6) ங்ஙே...

    7) உமறு புலவர் ??

    8) ங்ஙே...

    9) ங்ஙே...

    10) ங்ஙே...

    ReplyDelete
  20. நிறைய "ங்ஙே" இருக்கு.... நாளை காலையிலே வாறேன்..

    ReplyDelete
  21. //அவன் அவன் ப்ரீட்சைக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு படிச்சது இல்லங்குற ரேஞ்சுக்கு கேள்விக்கு எல்லாம் பதில் கண்டுப்பிடிச்சு சொல்லிட்டு இருந்தா இப்படி போறேன் என்று சொல்லி மூடு அவுட் பண்ணுறியே மேன்...

    சரி சரி.. போயிட்டு வாங்க//

    புலி ஐ ஆம் பேக்.

    இப்ப உண்மையைச் சொல்லு ...ஐ ஆம் பேக்கு ன்னு தானே நீ படிச்சே?

    :)

    ReplyDelete
  22. புலி

    6. இப்ப பதில் சரி

    ReplyDelete
  23. கயல்விழி மேடம்...வாங்க...வாங்க...வாழ்த்துகளுக்கும் ரொம்ப டேங்கீஸ்.

    ஆரம்பமே அசத்தல்.

    8- ரொம்ப சரி. மத்ததையும் ட்ரை பண்ணுங்க
    :)

    ReplyDelete
  24. //கைப்பு
    மூணு வருசம் ஆகிருச்சா? //

    வாங்க சங்கர்,

    ஆமாங்க.

    //இன்னும் நாலு பேருக்கிட்ட அடி வாங்கி ரொம்ப ரொம்ப நல்லவன் அப்புடீன்னு பேரெடுங்க//

    ஐ ஆம் தி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    :)

    ReplyDelete
  25. புலி

    9 - தப்பு

    1 - தப்பு

    8 - தப்பு

    3 - கேள்வியைக் கொஞ்சம் மாற்றியமைச்சிருக்கேன் பாரு.

    ReplyDelete
  26. புலி

    1. கேள்வி சற்று மாற்றப்பட்டுள்ளது.

    ReplyDelete
  27. சங்கர்.

    1. தவறு, மாற்றப்பட்ட கேள்வியைக் கொஞ்சம் பாருங்க
    2. சரி
    3. முதல் பாதி சரி. மாற்றப்பட்ட கேள்வியைக் கொஞ்சம் பாருங்க
    4,5,6 சரி
    7,8 தவறு

    ReplyDelete
  28. ராயல்

    4 மட்டும் சரி

    ReplyDelete
  29. 1. மகாபாரதம் மற்றும் மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?


    காசி அல்லது வாரணாசி

    2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.

    ஈமு,கங்காரு,ஆஸ்திரேலியா

    3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), அதன் பின் தோல்வியடைந்த ஒரு நிலவு பயணத்திலும் பங்கேற்றார். அவர் யார்? தோல்வி கண்ட அப்பயணத்தின் பெயர் என்ன?

    தல உங்க கேள்விலே தப்பு இருக்குன்னு நெனக்கிறேன்.

    edwin aldrin, buzz aldrinன்னு கூட சொல்லுவாங்க.

    4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?

    இது choice லே விட்றலாம்.
    ஆனா sweden or holland ன்னு ஞாபகம்.

    5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?

    DAVID OGILVY.,உங்களோட ஏதோ ஒரு முன்பதிவுலே படிச்சதுன்னு நெனக்கிறேன்.

    6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?

    deltiology

    இந்தப்பதிவுக்கு முன்னாடி பதிவுலே philately, பத்தி எழுதிட்டு இப்ப இந்தக்கேள்விய கேட்டதுலே கொஞ்சம் குழப்பம் ஆச்சுங்க.


    7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?

    செய்குத்தம்பி


    8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?

    வெட்டிவேரு வாசம் தெரியாத ஆளு உண்டா.,

    வேற நாட்லே இதோட பயன் தெரியாத காலத்துலே,தமிழ்நாட்லே இருந்து போன பேருதான் வெட்டி வேரு.





    9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

    இது சாய்ஸ் லே விட்றலாம்.


    10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.


    கொத்ஸ் இத பாக்க மட்டுந்தான் முடியும்.

    நாக்குலே ஒரு சொட்டு கூட விட முடியாது.

    தீர்த்தம்ன்னு கூட ஒரு சொலவடை உண்டு.

    வேறென்ன ஜானி நடையர்.

    ReplyDelete
  30. 1. பாடலிபுத்திரா
    2. எமு, ஆஸ்திரேலியா
    3. பஃஸ் (Buzz) அல்ட்ரின். ஜெமினி? கூகிளிட்டாலும், இவர் நிலவுபயணத்துக்குப் "பின்" தோல்வியடைந்த நிலவு பயணத்தில் பயணித்ததாகத் தெரியவில்லை
    4. ஸ்விட்சர்லாந்து. நியுஸிலாந்து காலவரிசையில் முதலில் வந்தாலும், அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தமையால், "நாடு" என்ற அளவில் வராது.
    5. டேவிட் ஒகில்வி
    6. Cartophily
    7. ?
    8. வெட்டிவேர்
    9. ?
    10. ஜானி வாக்கர்

    மூன்றாம் வருடத்துக்கான வாழ்த்துகள்!!

    ReplyDelete
  31. பெருசு

    1. இல்லீங்களே. முகலாயப் போர்கள்னு சொன்னேனே...அதையும் கருத்துல கொண்டு தேடிப் பாருங்க.

    2. சரி

    3. முதல் பாதி சரி. ரெண்டாவது பாதி...ஐ ஆம் சாரி...என் கேள்வியே தப்பு. நீங்க சுட்டிக் காட்டுனதும் தான் சரி பாத்தேன். புலி வந்து என்னை கும்மப் போறாப்புல...நேத்தெல்லாம் உக்காந்து இதுவா அதுவான்னு பதில் சொல்லிக்கிட்டிருந்தாரு.
    :(

    4. இல்லை

    5. சரி

    6. சரி

    7. சூப்பர். சரியான பதில். நீங்க தான் முதல்ல சொல்லிருக்கீங்க. அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? கூகிள்ல தேடுனாலே கெடைக்குமே?

    8. சரி

    10. சரி

    ReplyDelete
  32. வாங்க கெபி,
    வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்னி.

    1. இல்லீங்க. பாபர் காலத்தில் நடைபெற்ற முகலாயப் போர்களுடன் தொடர்பு படுத்திப் பாருங்க.

    2. சரி...இருந்தாலும் விலங்கின் பேரை விட்டுட்டீங்களே?

    3. சரி. என்னோட கேள்வியே இரண்டாம் பாதி தப்பு. மன்னிச்சுக்கங்க. மாத்திடறேன்.

    4. சரி. ஆனா நான் எதிர்பார்த்தது ரெண்டாவதா நீங்க சொல்லிருக்கற நாட்டைத் தான்.

    5. சரி

    6. இல்லீங்க

    8. சரி

    10. சரி

    ReplyDelete
  33. மூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. 1. பானிபட்
    2. ரெட் கங்காரு மற்றும் எமு
    3. Buzz Aldrin. இவர்தான் அப்பல்லோ 11-ல் ஆர்ம்ஸ்ட்ராங்கோட போனவரு. டிஆர் கதை என்னன்னு தெரியலையே
    4. NewZealand-னு நம்ம கூகுளாண்டவர் சொல்றார். துளசி ரீச்சர்கிட்ட வேணா கேட்டு உறுதி செய்துக்கலாம்.
    5. David Ogilvy?
    6. deltiology
    7. சதாவதானி செய்கு தம்பி பாவலர்
    8. Rosa
    9. Human Resources / Personnel Department?
    10. Johnny Walker

    ReplyDelete
  35. 1 Bhagalpur?
    2 Kangaroo- Emu Australia.
    3. Buzz Aldrin
    4. New Zealand, Srilanka
    5. David Ogilvy (The legendry)
    6 Deltiology
    7. Umaru pulavar
    8. Vettiver
    9
    10 Bacardi

    Thiyagarajan

    ReplyDelete
  36. 1. Kurukshethiram
    2.flag of Scotland?? no, no seal bird?? isn't it? appo US??? the bird american seal??

    3.Edwin ???ithukku mele ninaivillaiye??

    4.Sweden???

    5. mmmmmmm??? yoosikka vaikiringa! therinjal varen.

    6.philatelist= thanks to dictionary!!!!!

    7. konjam verify paNNanum,

    8.vetty veroo???
    9. theriyalai,
    10. he he he he Johnny Lever??????

    ReplyDelete
  37. ஸ்ரீதர் நாராயணன் சார்,
    வாங்க.

    1. சரி. நீங்க தான் முதலில் சரியான பதில் சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள்.
    2. சரி. ஆனா நாட்டோட பேரை விட்டுட்டீங்களே? :)
    3. சரி. டி.ஆர். கதையை அப்புறமாச் சொல்றேன்.
    4. சரியான பதில் தான்.
    5. சரி
    6. சரி
    7. சூப்பர். முழுப் பெயரையும் சொல்லி அசத்திட்டீங்க. சரியான பதில் சொன்ன இரண்டாமவர் நீங்க.
    8. தவறு. மண்ணரிப்புன்னு சொன்னேனே?
    9. இல்லீங்க. Marketing/HR/IT அப்படின்னு யோசிக்காதீங்க. நான் சொல்றது ஒரு தனியார் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு தற்போது மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்பெறும் ஒரு பெயர். ஒரு பிராண்ட் பெயர் மாதிரி இருக்கும்னு வெச்சிக்கங்களேன்.
    10. சரி

    ReplyDelete
  38. தியாகராஜன் சார். வாங்க.

    1. இல்லீங்க
    2. சரி
    3,4,5,6 - சரி
    7,8,10 - தவறு

    ReplyDelete
  39. தலைவிஜி...
    வாழ்த்துகளுக்கு நன்றி.

    1. இல்லீங்க
    2. இல்லீங்க
    3. கிட்டத்தட்ட சரிங்க
    4,5,6,7 - தவறு (6 கூட தவறு தான்)
    8. சூப்பர். மூனு கேள்விக்குறி போட்டிருந்தாலும் சரியான பதில் இது.
    9. ஹி...ஹி...
    10. பாதி தான் சரி

    ReplyDelete
  40. 1. Murshidabad in MP???? ithan irukkanum, vere ethuvum irukiratha theriyalai, First War of Independencele inge produce akum Chanderi sariyai pathiyum varumnu ninaikkiren. mmmm??????

    6. philatelist thappuna sollringa??mmmmmm????

    10. he he he kandu pidichuten munnaleye, thappa ezuthiten. Johnny Walker thane??? levernu thappa ezuthiten. pesitu irunthathile kavanam illai.

    ReplyDelete
  41. Edwin Eugene Buzz Aldrin, Jr. kashtappattu googleyai kettu :( vaanginen kadanay! ivangaloda pona innoruthar, Pete Conrad, (pilot)

    ReplyDelete
  42. mmm New Zealand thane muthalil allowed women to vote?? mmmm Thulasiyai kettu irukkanum, :P:P:P Year 1893????

    ReplyDelete
  43. மிச்சத்துக்கு நேரம் இருந்தா அப்புறமா வரேன்.

    ReplyDelete
  44. தலைவிஜி

    1. தவறு

    6. ஆமாம். தவறு தான் :)

    10. இப்ப சரி

    ReplyDelete
  45. தலைவிஜி

    3. சரி

    4. சரி

    ReplyDelete
  46. grrrrrrrrrrrrrrr nan varalai intha potti atathuku! ellame thappuna appuram nijamave thappana answer than kodukkanum.

    firstukku Murshidabada?? ithu kadaisi chanca vachirunthen. mathathukku nan varalai ponga! Nara nara nara nara nara nara

    ReplyDelete
  47. ம்ம்ம்ம்ம்??/ பானிபட்டில் நெசவுத் தொழில் நடந்ததா?? திரும்பிப் பார்க்கணும்! இப்படி ஒரு அறிவாளியா இருப்பேன் என்று இன்னிக்குத் தான் புரியுது! :P :P:P:P

    ReplyDelete
  48. தலைவிஜி

    1. சூப்பர். இப்போ சரி.

    ReplyDelete
  49. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இப்பதிவுக்கான விடைகள் அனைத்தையும் கூடிய விரைவில் அறிவிக்கின்றேன்.

    ReplyDelete