Wednesday, December 13, 2006

பால் காய்ச்சல்

அன்புடையீர்,

நிகழும் விய ஆண்டு கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள் (டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி 2006 ஆம் வருடம்) காலை 7 மணியிலிருந்து 11.23க்கு மத்தியில் செமத்தியாகக் கடிபடும் ராசியும், ஒட்டுமொத்தமாக பஞ்சர் ஆகக் கூடிய நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில்(!) எனது புதிய வார்ர்புரு புகுவிழாவிற்கும் அதையொட்டிய பால் காய்ச்சும் விழாவினையும் தாங்கள் தங்களது சுற்றமும் நட்பும் சூழ வருகை புரிந்திருந்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙணம்,
கைப்புள்ள

அவ்வண்ணமே கோரும்
மாஞ்சா போட்டு காத்தாடி வுடற மொட்டை பாஸ்.


சரி, ரொம்ப ஜம்பமா பால் காய்ச்சுற விழான்னு போஸ்ட் போட்டு கூப்புட்டாச்சு. புது டெம்பிளேட்டை போணி பண்ண எதாச்சும் மொக்கை பதிவு போடோணுமில்ல...அதுக்காக யோசனை பண்ணதுல ஒரு கதை சொல்லலாம்னு தோணுச்சுங்க. நா....னே சொந்தமா எழுதுன கதை இது. கதைன்னதும் நெல்லிக்கா மாதிரியோ, கதிரேசன் கதை மாதிரியோ எதையாச்சும் எதிர்பாத்து வந்தீங்கன்னா ஏமாந்து போயிடுவீங்க. ஏன்னா நம்ம கதை அதை எல்லாத்தையும் தாண்டுன ஒரு சூப்பரான சூப்ரீமான மெகாஹிட் ப்ளாக்பஸ்டர் கதை. சரி...சரி...பில்டப்பு போதும். கதையைச் சொல்றேன் கேளுங்க. அதாவது நம்ம கதையில ஒரு பயங்கர நேர்மையான போலீஸ்காரர் இருக்காருங்க. அவரு தான் நம்ம கதையோட ஹீரோ. அவரு பேரு...ஆங்...சி.ஐ.டி.சங்கர். மனுசனுக்கு ஒடம்பு பூரா மூளை...சின்ன வயசுலேருந்து டன் கணக்குல வெண்டைக்கா சாப்புட்டதுனால, லைட்டா நம்ம சி.ஐ.டி.மண்டையில கொட்டுனா கூட கொட்டுறவங்க விரல்ல மூளை ஒட்டிக்கும்...அம்புட்டு மூளை. சங்கருக்குக் எந்த அளவு கொழந்தை மனசோ அந்த அளவுக்கு நேர்மையும் நாணயமும் ரொம்ப முக்கியம். புள்ளைத்தாச்சி பொண்டாட்டிக்கு தோசை போட்டுத் தர்றதுல காட்டுற அதே இண்டரெஸ்டைத் திருட்டுப் பயலுங்களைப் புடிக்கறதுக்காக வாத்து டிசைன்ல ஒரு பைக்கை வச்சிக்கிட்டு தண்ணிக்குள்ளேருந்து பாஞ்சு சண்டை போட்டு கெலிக்கிறதுலயும் காட்டுவாரு.


சி.ஐ.டி.சங்கர்னு இருந்தா சி.ஐ.டி.சகுந்தலா இல்லாமலயா இருப்பாக? அவிங்களும் இருக்காக. ஆனா அவங்க நம்ம கதையில சங்கருக்கு ஜோடி கெடையாது. காலேஜ்ல ஒன்னா படிக்கும் போது சங்கரை ரகசியமா சைட்டடிச்ச 'ஜஸ்ட் ஃப்ரெண்டு' தான். இங்கே நம்ம சகுந்தலாவைப் பத்தி சொல்லியே ஆவனும். ஸ்பாகெட்டி டாப்ஸ், ஜீன்ஸ் இதெல்லாம் போட்ட நல்ல 'வடிவான பெண்டு' தான். ஆனா கடமைன்னு வந்துட்டா பெண்டு நிமித்துறதுலயும் கில்லாடி. நம்ம சி.ஐ.டி.சங்கரோட தோஸ்த் ஒருத்தரு இந்த கதையில இருக்காப்புல. அவரு பேரு...என்னாதது?...ஆங்...ஆங்...சாரி. Sorry இல்ல Chaari. நம்ம சாரியிருக்காரே, பாக்கறது ஏட்டு வேலைன்னாலும் கடலை போடறதுல கிங். சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு நம்ம சாரி வுடற நூல் பாதியிலியே டீலாகிப் போறதுன்னால சீ...சீ...இந்தப் பழம் புளிக்கும்னு, அதை அப்படியே விட்டுட்டு புடிபடப் போறத் திருட்டுப் பயலைத் தப்பிக்க வைக்கிற கஷ்டமான தொழிலைச் செய்யறாரு.


இது இப்படியிருக்க மலையூர் மம்பட்டியான் மலையூர் மம்பட்டியான்னு ஒருத்தரு நாடு நாடாக் கொள்ளை அடிக்கிறாரு. எந்த நாட்டு போலீசாலயும் அவரைப் புடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஜெகஜால கில்லாடி அவரு. ஆயா வேஷம் போட்டு பாயா திருடறது, பணக்காரங்க கிட்டேருந்து கொள்ளை அடிச்சி ஏழைகளுக்குக் குடுக்காம தானே வச்சிக்கிறது, திருடுன பணத்தை வச்சி அடுத்த திருட்டுக்குப் பளான் போடறதுன்னு இப்படியே ஜாலியாப் போவுது அவரு பொழப்பு. இப்படியே பல எடத்துல திருடுனாலும், நம்ம மம்பட்டியானுக்கு ஒரு பழக்கம்ங்க. அதாவது திருடப் போற எடத்துலெல்லாம் சிலேட் பல்பத்தைத் தேடி ஏபிசிடின்னு எதனா கிறுக்கி வைக்கிற ஒரு எல்கேஜி பழக்கம். இப்படி ஒரு தபா ஒரு எடத்துல திருடிட்டு வரும் போது சிலேட்ல நம்மாளு ஏ ன்னு எழுதி வைக்க, அது நம்ம ஹீரோ சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது...யார் கையில மாட்டிக்குது...நம்ம சி.ஐ.டி.சங்கர் கையில மாட்டிக்குது. ஒடனே சங்கரும், படக்குன்னு ஒரு கால்குலேட்டரை எடுத்து சொம்மா ஸ்டைலா ரெண்டு பட்டனை அழுத்தறாரு, கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு நம்ம கால்குலேட்டர் மம்பட்டியான் அடுத்ததா திருடப் போற எடத்தைக் கரீட்டாச் சொல்லிடுது. அதைக் கண்டு புடிச்சி சொன்னதும் மம்பட்டியானைப் புடிக்கறதுக்காண்டி சி.ஐ.டி.சங்கரையும், சி.ஐ.டி.சகுந்தலாவையும், ஏட்டு சாரியையும் வச்சி ஒரு தனிப் படை அமைச்சு 'போய் லபக்குன்னு கோழி அமுக்கு அமுக்கிக்கின்னு வாங்கப்பா'ன்னு போலீஸ்ல அனுப்பி வைக்கிறாங்க.


மலையூர் மம்பட்டியானைப் புடிக்கறதுன்னா சொம்மாவா? சகுந்தலாக்கா எஃபெக்டுக்காக ஒரு பனியனை எடுத்து மாட்டிக்குது, "ஐ நீ மட்டும் தான் எஃபெக்டு காட்டனுமா? நாங்களும் தான் காட்டுவோம்"னு சொல்லி சங்கரும், சாரியும் சோக்கா பீச்சுல வைப்பாங்கல்ல கலர் கண்ணாடி அதை வாங்கி மாட்டிக்கிறாங்க. மூனு பேரும் அவுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுக்காண்டி ஒரு மாடர்ன் டிரான்ஸிஸ்டர் வித் இயர்ஃபோன் எடுத்து காதுல மாட்டிக்கிறாங்க. ஆனா எம்புட்டுத் தான் டிரான்சிஸ்டர்ல இவுங்கல்லாம் பேசிக்கினாலும் நம்ம மம்பட்டியான்க்குறாரே மம்பட்டியான் சோக்கா செலை வேசம் போட்டு எப்படியோ லவட்ட வேண்டிய சமாச்சாரத்தை லவட்டிக்கிறாரு. நம்ம சி.ஐ.டி.சங்கருக்கு எப்படியோ இது தெரிஞ்சிப் போவ, சாரியை டிரான்சிஸ்டர்ல கூப்புட்டு உசார் பண்ணியும் நம்ம மம்பட்டியான் தாத்தா வேசம் போட்டு சாக்கடைக்குள்ள பூந்து எஸ்கேப் ஆயிடறாரு. நீ பாட்டுக்கு வரலாம், வந்து திருடிட்டுப் போலாம்னு பாத்தா சங்கரும், சாரியும், சகுந்தலாவும் வுட்டுருவாங்களா? எலிகாப்டர்லயும், மாட்டுவண்டிலயும் பயங்கரமா மம்பட்டியானைச் சேஸ் பண்ணுறாங்க...உங்க வீட்டு சேஸ் எங்க வீட்டு சேஸ் இல்ல...பயங்கரமான ஒரு சேஸ் பண்ணி...கடைசியா கோட்டை வுட்டுடறாங்க.

"சரி அடிச்சிக்கினு போனா போறான்...அடுத்தது ராஜா காலத்து அரை பிளேடு ஒன்னை அபேஸ் பண்ண மம்பட்டியான் கண்டிப்பா வருவான்" அப்படின்னு அங்கே அவனைப் புடிக்க எலிப் போன்ல மசால் வடை வைக்கிற மாதிரி லேசர் லைட்டெல்லாம் செட் பண்ணி ரெடியா நின்னுக்குனு இருக்காங்க சி.ஐ.டி.சங்கரும், சகுந்தலாவும். ஆனா மம்பட்டியான் வந்து பிளேடை அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்து அபேஸ் பண்ணிடுது. ஆனா பிளேடை அபேஸ் பண்ணற நேரம் பாத்து சி.ஐ.டி.சங்கர் தன்னோட சகப் பரிவாரங்களோட ஸ்பாட்ல ஆஜராயிடுறாரு. ஆனா கையில வெலங்கு மாட்டிப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி எஃப் ஐ ஆர் எழுதறதுக்குள்ள, மம்பட்டியான் பறந்து வந்து பொண்ணையும் பிளேடையும் எஸ்கேப் பண்ணி கூட்டுக்கினு ஓடிடறாரு. இவுங்க ரெண்டு பேரும் எஸ் ஆகி மம்பட்டியானோட ரெசிடென்ஸுக்குப் போறாங்க. அங்கே அந்த பொண்ணு தன்னோட முகமூடியை வெலக்குது...அடங்கொக்க மக்கா சக்கை அழகுடான்னு கண்ணாத்தா (அதான் பாப்பா பேரு) அழகைப் பாத்து மம்பட்டியான் அப்படியே மயங்கி நிக்கிறாரு. அப்பால சில பல மோதல்களுக்கு அப்பால பாஸ்கெட் பால் ஆடிக்கினே கண்ணாத்தாவையும் தன்னோட தொயில்ல பார்ட்னராச் சேத்துக்கிறாரு நம்ம மம்பட்டியான். ஆனா நம்ம கண்ணாத்தாவுக்கு மராட்டிய மகராஜா பேரைக் கேட்டா மட்டும் புடிக்கவே புடிக்காது. அது ஏன்னு கேக்கப் பிடாது. அதெல்லாம் அப்படித் தான். ஆனா மம்பட்டியானோட, கர்ச்சீப்ல செஞ்ச டிரெஸ் எல்லாம் போட்டுக்கினு டான்ஸ் ஆடுவாங்க. அதுவும் அப்படித் தான்.


இந்த நேரம் பாத்து நம்ம சி.ஐ.டி.சகுந்தலாவுக்கு சி.ஐ.டி. வேலையெல்லாம் வேலையத்த வேலைன்னு ஒரு ஞானோதயம் தோணவே அவுங்களும் அப்படியே சைக்கிள் கேப்ல எஸ்ஸாயிகிடறாங்க. ஆனாலும் எஸ்ஸாவறதுக்கு முன்னாடி தன்னை மாதிரியே இருக்கற அவங்க தங்காச்சி ஒருத்தங்க ரிகோலெத்தா பார்டர் தோட்டத்தாண்ட தனியா தங்கியிருக்கறதைச் சொல்லிட்டு எஸ்ஸாயிடறாங்க. தற்செயலா, அட படு தற்செயலா நம்ம கண்ணாத்தாவும், மம்பட்டியானும் அதே எடத்துக்கு வந்துருக்கறதா சங்கருக்கும், சாரிக்கும் தகவல் கெடைக்குது. சரி...கம்பெனி செலவுல கடலைக்கு கடலையும் ஆச்சு...அப்படியே முடிஞ்சா மம்பட்டியானைப் புடிக்க முயற்சி பண்ணுவோம்னு சங்கரும், சாரியும் பார்டர் தோட்டம் வந்து சேருறாங்க.

இந்த எடத்துல கதையில ஒரு திருப்புமொனை இருக்கற நேரத்துல பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுன்னு "பால் காய்ச்சல்" தொடரும்னு ஒரு வெயிட்டீஸ் வுட்டுக்கலாமான்னு நெனச்சேன். ஆனா பதிவு நீளமா தெரியாம இருக்கறதுக்காண்டித் தானே டெம்பிளேட்டையே மாத்துனோம்ங்கிறது நெனப்பு வர, அந்த ஐடியாவை அப்படியே குழித் தோண்டி ரிகோலெத்தா தோட்டத்தாண்டையே பொதச்சிட்டு கதையை மேலே சொல்றேன் கேளுங்க. இண்டிரெஸ்டா உம் கொட்டிக்கினே கேக்கனும் ரைட்டா? அப்ப தான் கதை சொல்றவனுக்கும் ஒரு ஃபீலிங்ஸ் வரும். திருப்புமொனைன்னு சொன்னேனே அது என்ன திருப்புமொனை?


இந்த கண்ணாத்தா இருக்கே கண்ணாத்தா...அது மம்பட்டியானைப் புடிக்க சி.ஐ.டி.சங்கர் செட்டப் பண்ண ஆளு. அடங்கொக்கமக்கா!!! என்ன இப்படி ஒரு மெகா திருப்பம்னு நீங்கல்லாம் கேக்கறது புரியுது. மறுக்கா ஒரு டேங்க்யூ. கதை த்ரில்லிங்காப் போவுதில்ல? ஆனா பாருங்க கண்ணாத்தாவுக்கு மம்பட்டியான் மேல மெய்யாலுமே லவ்ஸ் உண்டாகிப் போவுது. ஆனா இந்த நேரம் பாத்து கண்ணாத்தா சி.ஐ.டி.சங்கரோட ஆளுன்னு மம்பட்டியானுக்குத் தெரிஞ்சிப் போவ ரோல் கேப் துப்பாக்கியால கண்ணாத்தாவுக்கு பயம் காட்டறாரு. பயத்துல கண்ணாத்தாவுக்கு லவ்ஸ் இன்னும் அதிகமாவ...ஒரு சின்ன லா லா லா நடக்குது:) அதுக்கப்புறம் என்ன... கண்ணாத்தாவும் மம்பட்டியானும் ஒன்னு சேர்ந்து சி.ஐ.டி.சங்கர் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ரிகோலெத்தாலயும் ஒரு மெகா ஆட்டையைப் போட்டுட்டு தாடி வேசம் எல்லாம் போட்டு எஸ்கேப் ஆக முயற்சி பண்ணறாங்க. ஆனா ரெண்டு பேத்தையும் சி.ஐ.டி.சங்கரும், சாரியும் ஹவர் சைக்கிளை எடுத்துக்குன்னு போயி தொறத்தோ தொறத்துன்னு தொறத்துறாங்க. அப்படியே தொறத்திட்டுப் போகும் போது, மலை மேல ஒரு முகனையில கண்ணாத்தாவும், மம்பட்டியானும் மாட்டிக்கிறாங்க.

அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தானே கேக்கறீங்க? ஐ...ஐ...அஸ்கு புஸ்கு! நான் எப்படி சொல்லுவேன்? இப்பேர்ப்பட்ட என்னோட இந்த இண்டர்நேஷனல் கதையைத் தமிழ்ல கேப்டனை வச்சிப் படமாப் பண்ண நான் முயற்சி பண்ண நேரத்துல, "தர்மபுரி"க்குக் கேப்டன் பேரரசுக்கு டேட் குடுத்ததுனால, சும்மா இருக்க வேணாமேன்னு சி.ஐ.டி.சங்கரா அபிஷேக் பச்சனையும், சி.ஐ.டி.சகுந்தலாவா பிபாஷா பாசுவையும், மலையூர் மம்பட்டியானா ரித்திக் ரோஷனையும், கண்ணாத்தாவா ஐஸ்வர்யா ராயையும், சாரியா உதய் சோப்ராவையும் வச்சி "தூம் 2"ன்னு ஒரு இண்டர்நேஷனல் படம் எடுக்க வைச்சேன். அந்த கதை தான் நீங்க மேலே படிச்சது. கதையைப் படிச்சதும் இல்லாம க்ளைமாக்ஸையும் கேக்கறீங்களே? இது நியாயமா?

63 comments:

  1. அட அட அட..

    எப்படிங்க சாரு இப்படி...என்னமோ போங்க

    ReplyDelete
  2. நீங்க குடிபுகுறதுக்கு முன்னாடியே பார்த்துட்டேன் புது வீட்டை. இதோ அதைப் பத்தி ரொம்ப நேரம் முன்னாடி "வயசாயிடுச்சாங்க?" பதிவுல நான் போட்ட கமெண்ட்:

    "என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா!!) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது!!"

    அப்புறம்.. புதுமனை அழைப்பு மட்டுந்தான் பார்த்தேன். நான் கதையெல்லாம் படிக்கிறதில்ல. வர்ட்டா..

    ReplyDelete
  3. என்ன கொடுமை சரவனன் இது?

    ReplyDelete
  4. டாகடரப் பாத்து பேண்ட்- எய்ட்
    போட்டுட்டு வந்து பின்னூட்டம்
    போட்றேன்

    ReplyDelete
  5. கதை நல்லா சொல்றீங்க. இன்னும் கொஞ்சம் பத்தி பிரிச்சு அடிங்கண்ணா. கண்ணு வலிக்கி! பாடபுக்கு படிச்ச மாதிரி டயர்டா ஆயிட்டேன்.

    ReplyDelete
  6. புது வீடு புகுந்த புயல்,
    வூடு கட்டி அடிக்கும் சிங்கம்,
    அஞ்சா நெஞ்சன் கைப்புள்ள அவர்களுக்கு
    அவர் புது வூடு புகுந்த
    இந்தநாளில் எங்கள்
    வாய்த்துக்களை தெரிவித்துக் கொள்வது...
    தொண்டன்
    அரைபிளேடு....

    ReplyDelete
  7. சும்மா புகுந்து விளையாடறீங்க போங்க!!!

    ReplyDelete
  8. புது வார்ப்புரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நெருப்பு நரியில் கூட சரியாத் தெரியுதே!

    ஆனா இந்த படம், இத விட்டுடுங்கப்பா. கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு.

    ReplyDelete
  9. அடி ஆத்தி, கைப்புளள அண்ணே!

    என்னண்னே.......... இது?
    பால் காய்ச்சினா..வந்தவ்களுக்குப் பலகாரம்லாம் கொடுக்கமாட்டீகளா? ஏஏஏஏ...ன்?
    கதயச் சொல்லி அனுப்பிசிட்டீகளாமே!
    இங்கிட்டுப் பேசிக்கிறான்ங்ய..!

    உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே!
    நல்லாவா இருக்கு?

    SP.VR.SUBBIAH

    ReplyDelete
  10. //அட அட அட..

    எப்படிங்க சாரு இப்படி...என்னமோ போங்க//

    வாங்க மேடம்,
    ஹி...ஹி...எழுத எதுவும் மேட்டர் இல்லாமத் தான் இப்படி மொக்கை போடறோம். என்ன பண்றது?
    :)

    ReplyDelete
  11. //"என்னது.. டெம்பிளேட்டை மாத்திட்டீங்க.. (நல்லாத் தான் இருக்கு.. ஆனா!!) உங்க வலைப்பூவின் முதல் பக்கத்துக்கு (home) போனா இடமிருந்து வலம் மவுசை ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது!!"//

    வாங்க மேடம்,
    நெருப்பு நரி 2.0 வெர்சன்ல சரியா தெரியுது. நீங்க வெர்சன் அப்டேட் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்.

    //அப்புறம்.. புதுமனை அழைப்பு மட்டுந்தான் பார்த்தேன். நான் கதையெல்லாம் படிக்கிறதில்ல. வர்ட்டா..//
    இப்படி எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டா நம்ம பொழப்பு என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க?
    :(

    ReplyDelete
  12. //என்ன கொடுமை சரவனன் இது? //

    அதே தான் கார்மேகராஜா! 130 ரூவா குடுத்துல்ல கிலோமீட்டர் கணக்குல காதுல பூ சுத்திக்கிட்டோம்? கொடுமை தான்.
    :(

    ReplyDelete
  13. //டாகடரப் பாத்து பேண்ட்- எய்ட்
    போட்டுட்டு வந்து பின்னூட்டம்
    போட்றேன்//

    வாங்க சிஜி,
    ரம்பம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போயிடுச்சோ?
    :)

    ReplyDelete
  14. //கதை நல்லா சொல்றீங்க. இன்னும் கொஞ்சம் பத்தி பிரிச்சு அடிங்கண்ணா. கண்ணு வலிக்கி! பாடபுக்கு படிச்ச மாதிரி டயர்டா ஆயிட்டேன்.//

    வாங்க அனானி,
    ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் போலிருக்கு. இப்ப பத்தி பிரிச்சு போட்டுட்டேன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. //புது வீடு புகுந்த புயல்,
    வூடு கட்டி அடிக்கும் சிங்கம்,
    அஞ்சா நெஞ்சன் கைப்புள்ள அவர்களுக்கு
    அவர் புது வூடு புகுந்த
    இந்தநாளில் எங்கள்
    வாய்த்துக்களை தெரிவித்துக் கொள்வது...
    தொண்டன்
    அரைபிளேடு.... //

    கண்ணாலராமனுக்கு வெற்றிகரமா கண்ணாலம் பண்ணி வச்ச கையோட சரக்கு வுட்டுக்குன அரைபிளேடு அண்ணாத்தேக்கு என் டேங்க்ஸுங்கோ.
    :)

    ReplyDelete
  16. //சும்மா புகுந்து விளையாடறீங்க போங்க!!!//

    வாங்க அபர்ணா,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. //புது வார்ப்புரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நெருப்பு நரியில் கூட சரியாத் தெரியுதே!//

    கொத்ஸ் சான்றிதழ் கொடுத்ததும் தான் நிம்மதியா இருக்கு. டேங்க்ஸுங்க.

    //ஆனா இந்த படம், இத விட்டுடுங்கப்பா. கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சு. //
    இத்தோட விட்டாச்சு. இனிமே பேசலை சரியா?
    :)

    ReplyDelete
  18. //என்னண்னே.......... இது?
    பால் காய்ச்சினா..வந்தவ்களுக்குப் பலகாரம்லாம் கொடுக்கமாட்டீகளா? ஏஏஏஏ...ன்?
    கதயச் சொல்லி அனுப்பிசிட்டீகளாமே!
    இங்கிட்டுப் பேசிக்கிறான்ங்ய..!//

    வாங்க மாஸ்டர்ஜி,
    பலகாரத்துக்குப் பதிலா கதை சொல்லி செவிக்கு உணவளிக்கலாம்னு பார்த்தேன்...ஹி...ஹி...

    //உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே!
    நல்லாவா இருக்கு?//

    அதானே? எங்கய்யா போய்ட்டீங்க அப்ரெண்டீசுங்களா? சீக்கிரம் ஓடியாங்க
    :)

    ReplyDelete
  19. அடங்கொக்க மக்கா! இந்த படத்தைதான்
    தமிழ்ல 33 முறை எடுத்துட்டாங்களே.
    அப்படி என்னய்யா இந்தி சினிமால கதை பஞ்சம் வந்துடிச்சி!

    ஆனா இந்த மொக்கை கதையையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அவுத்து விட்ட கைப்புள்ளையை கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  20. அப்பால வூடு சூப்பரா இருக்கு கைப்ஸ்!

    ட்ரீட் எப்போ?

    ReplyDelete
  21. கைப்பு புது வீடு.. புது மொட்டை... ம் கலக்குற....

    அண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா.. தூள்ம்மா...ச்சே தூம்ம்மா...

    ReplyDelete
  22. நல்லா இருக்குங்க உங்க வார்ப்புரு

    :-)))).

    ReplyDelete
  23. கைப்பு இது உன் கதைதானா?? அதான் படத்தைப் பத்தி எல்லாரும் ஆகா ஓகோன்னு துப்பறாங்களா???

    புது டெம்ப்ளேட் போட்ட கைப்பு அப்படியே கண்ணம்மா போட்டோவையும் போட்டிருக்கலாம்ல.. :(

    டெம்ப்ளேட் மாத்தினதுக்கு ட்ரீட்டு??

    ReplyDelete
  24. தல...ஸ்மால் டெக்னிக்கல் ஃபால்ட் ஆகிப்போச்சு...நான் கேட்டது கண்ணாத்தா போட்டோ...நீ பாட்டுக்கு வேற ஏதோ கண்ணம்மா போட்டோவை எடுத்து நீட்டிடாதே ;))

    ReplyDelete
  25. தல,

    நீதான் எல்லாருக்கு தல... இந்தமாதிரி ஒலகத்தரமான கதை எழுதுறேதிலே.... :)

    ReplyDelete
  26. //உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... ஏற்பாடு பன்னாமா விட்டுப்பிட்டீகளே!
    நல்லாவா இருக்கு?//

    ஐயா,

    அவரு எங்ககிட்டே வந்து சொல்லலை.. அதுனாலேதான் நாங்க வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

    //அதானே? எங்கய்யா போய்ட்டீங்க அப்ரெண்டீசுங்களா? சீக்கிரம் ஓடியாங்க//

    தல அதுதான் வந்தாச்சுல்லே... அதுக்குள்ளே என்ன சவுண்ட்...:)

    ReplyDelete
  27. பால் காய்ச்சல்ன்னு சொல்லிட்டு ஹிந்தி சினிமாவ இந்தக்காய்ச்சு காய்ச்சுட்டீங்க!.

    கதை நீங்க சொன்னதால நல்லாயிருந்துச்சு.

    ReplyDelete
  28. உமக்கு சுட்டு போட்டாலும் சின்ன பதிவாப் போட வரவே வரதா?

    ReplyDelete
  29. ப்து வீடு ரொம்ப பெருசோ! சுத்திப் பார்த்து முடிக்கற வரை கதை சொல்றீங்களே!

    ReplyDelete
  30. //அண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா//

    அண்ணியா???!

    ReplyDelete
  31. ஒருவழியா கதையைப் படிச்சிட்டேன். நீங்களும் என்னை மாதிரி வளவளன்னு எழுதுவீங்க போலிருக்கு :D

    ReplyDelete
  32. ithu unga sontha kathai aah kaipulla sar thaan nambitomla :)))))) ammu

    ReplyDelete
  33. //அடங்கொக்க மக்கா! இந்த படத்தைதான்
    தமிழ்ல 33 முறை எடுத்துட்டாங்களே.
    அப்படி என்னய்யா இந்தி சினிமால கதை பஞ்சம் வந்துடிச்சி!
    இது போதாதுன்னு ஏற்கனவே எடுத்த ஹிந்தி படங்களோட செகண்ட் பார்ட் வேற நெறைய எடுத்துக்குனு இருக்காங்க. அதுக்கென்ன சொல்லப் போறீங்க?
    :)

    //ஆனா இந்த மொக்கை கதையையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அவுத்து விட்ட கைப்புள்ளையை கண்டிக்கிறேன்.//

    எதுவும் மேட்டர் இல்லாத கொடுமைக்குத் தானே இப்படி எல்லாம் கதை கட்டி விடறோம்? அதுலேயும் குத்தம் கண்டுபுடிச்சா எப்படி தம்பி?

    ReplyDelete
  34. //அப்பால வூடு சூப்பரா இருக்கு கைப்ஸ்!//
    டேங்ஸ் தம்பி.
    :)

    //ட்ரீட் எப்போ?//

    துபாய் பெரிய பஸ் ஸ்டாண்ட்ல சோத்துக் கை பக்கமா இருக்குற நாயர் கடைல தான் நம்ம அக்கவுண்ட் இருக்கு. அங்கன எம்பேரைச் சொன்னா காசில்லாமலயே டீ குடிச்சிக்கலாம்.
    :)

    ReplyDelete
  35. //கைப்பு புது வீடு.. புது மொட்டை... ம் கலக்குற....

    அண்ணி தேடிக் கொடுத்த டெம்ப்ளேட்டா.. தூள்ம்மா...ச்சே தூம்ம்மா...//

    அட பாவி! வாழ்த்தற மாதிரி வாழ்த்திட்டு பட்டாசைக் கொளுத்திப் போட்டுட்டு போறியே மச்சி?
    :(

    ReplyDelete
  36. //நல்லா இருக்குங்க உங்க வார்ப்புரு

    :-))))//

    வாங்க செந்தில் குமரன்,
    உங்க வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  37. //கைப்பு இது உன் கதைதானா?? அதான் படத்தைப் பத்தி எல்லாரும் ஆகா ஓகோன்னு துப்பறாங்களா???//

    தப்பு தப்பா பேசப்பிடாது. சும்மா ஒன்னும் துப்பலை. பீடா போட்டுத் தான் துப்பறாங்க.

    //புது டெம்ப்ளேட் போட்ட கைப்பு அப்படியே கண்ணம்மா போட்டோவையும் போட்டிருக்கலாம்ல.. :(

    டெம்ப்ளேட் மாத்தினதுக்கு ட்ரீட்டு?? //
    தம்பிக்குச் சொன்ன பதிலைப் பாரு. மாண்டிவீடியோல முண்டக்கண்ணி அம்மன் தெரு, மாண்டிவீடியோ-71 ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அண்ணாச்சி கடை இருக்கு. அங்கே என் பேரைச் சொல்லி என் அக்கவுண்டல தேன்முட்டாய் வாங்கி சாப்புட்டுக்க.

    ReplyDelete
  38. //நான் கேட்டது கண்ணாத்தா போட்டோ...நீ பாட்டுக்கு வேற ஏதோ கண்ணம்மா போட்டோவை எடுத்து நீட்டிடாதே ;)) //

    கண்ணாத்தாவா? அவங்க இப்ப செல்வி சீரியல்ல தாமரையா வராங்கப்பா. அதுல பாத்துக்க.

    ReplyDelete
  39. //தல,

    நீதான் எல்லாருக்கு தல... இந்தமாதிரி ஒலகத்தரமான கதை எழுதுறேதிலே.... :) //

    டேங்கீஸ் ராயல். எல்லாம் உங்களை மாதிரி அப்ரெண்டிசுங்க இருக்கறதுனால தான்.
    :)

    ReplyDelete
  40. //தல அதுதான் வந்தாச்சுல்லே... அதுக்குள்ளே என்ன சவுண்ட்...:)//

    லேட்டா வந்துட்டு லொள்ளைப் பாரு. எகத்தாளத்தைப் பாரு.

    ReplyDelete
  41. //பால் காய்ச்சல்ன்னு சொல்லிட்டு ஹிந்தி சினிமாவ இந்தக்காய்ச்சு காய்ச்சுட்டீங்க!.

    கதை நீங்க சொன்னதால நல்லாயிருந்துச்சு. //

    வாங்க சயீத்,
    ஹி...ஹி...உங்க வாழ்த்துக்கு ரொம்ப டேங்ஸுங்க.
    :)

    ReplyDelete
  42. //உமக்கு சுட்டு போட்டாலும் சின்ன பதிவாப் போட வரவே வரதா? //

    :( வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சனுமா? வர மாட்டேங்குதே? எதனா மருந்து இருந்தா சொல்லுங்கண்ணே?
    //
    ப்து வீடு ரொம்ப பெருசோ! சுத்திப் பார்த்து முடிக்கற வரை கதை சொல்றீங்களே!//

    ஆமாங்...1024பிக்செலுக்கு 768 பிக்செலு நம்ம வீடு.
    :)

    ReplyDelete
  43. //அண்ணியா???!//

    அண்ணியும் இல்ல...தண்ணியும் இல்ல. நம்ம பசங்க ஒரு பாசத்துல சொல்லிருக்காய்ங்க.
    :)

    //ஒருவழியா கதையைப் படிச்சிட்டேன். நீங்களும் என்னை மாதிரி வளவளன்னு எழுதுவீங்க போலிருக்கு :D //

    அடடா, உங்க வளவள கதையை நான் படிச்சதேயில்லியே. பொல்லாத மவுனத்தைக் கலைச்சு உங்க கதைகளை வலையேத்துங்களேன்.
    :)

    ReplyDelete
  44. //ithu unga sontha kathai aah kaipulla sar thaan nambitomla :)))))) ammu//

    வாங்க அம்மு,
    நம்பற மாதிரி இல்ல சொல்லிருக்கேன்.
    :)

    ReplyDelete
  45. எம் போலவே முகம் கொண்டிருக்கும் கைப்புள்ளையாரே.. உமக்கு ஒரு அழைப்பு.. இங்கே..

    http://24th-pulikesi.blogspot.com/2006/12/2006.html

    ReplyDelete
  46. தல புது வூட்டுக்கு வாழ்த்துக்கள்...அன்னைக்கு கட்டதொரை வூட்டுக்கும் கொள்ளை அடிக்க நாம ரெண்டு பேரும் போனப்ப சொன்னியே இதே மாரி ஒரு வூடு நான் கட்ட போறேன்னு...செஞ்சு காட்டிட்டயே தல :-)

    ReplyDelete
  47. தல நீ கேப்டனுக்காக எழுதி வெச்ச கதய சுட்டு தூம்-2 எடுத்தவன் எவன்னு மட்டும் சொல்லு...போயி அவன் கால்ல விழுந்து தமிழக மக்கள காப்பதுன தெய்வமேனு கும்ப்பிட்டு வறேன் :-)

    ReplyDelete
  48. //உங்க சங்கத்து ஆளுங்கள்ளெல்லாம் எங்கின பொய்ட்டாங்ய... //

    புதுமனை புகுவிழாவுக்கு கட்டதொரை வரதா தகவல் அதுனால நாங்க எல்லாம் சும்மா காத்து வாங்க காலார நடந்து போய்ய்ய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்டோம்
    :-)

    ReplyDelete
  49. //உங்க வளவள கதையை நான் படிச்சதேயில்லியே//

    நான் கதையே படிக்கிறதே அபூர்வம்னு சொல்லியிருக்கேன். இந்த லட்சணத்துல கதை எழுதறதா?? அந்த நல்ல காரியமெல்லாம் நான் பண்றதில்ல.

    ReplyDelete
  50. தல, தூம் 2 DVD வீட்ல இருந்தது, இப்போ இல்லை, சிதச்சிட்டேன்...

    அப்புறம் தல அவ்வ்வ்வ்வ் என் வலைப்பதிவை உங்க பேவரைட்ல இனைச்சதுக்கு அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  51. கைப்புள்ள கவனம் புள்ள
    பிஞ்சுப் புள்ள விழுந்துடுமில்ல (சும்மா பகிடிக்கு)
    தலைப்பை பார்த்தவுடன பறவைக் காய்ச்சல் மாதிரி பால் காய்ச்சலும் ஒரு வித காய்ச்சலாயிருக்குமோ எண்டு நினைச்சிட்டன்

    ReplyDelete
  52. தல!!!
    வீடு சூப்பர் தான்..ஆனா வீட்டுக்கு போறத்துக்கு முன்னாடி எங்களுக்கெல்லாம் சொல்லி இருந்தா வந்து ஜமாயிச்சு இருப்போம்ல...

    அப்புறம் தூம் 2 சூப்பர் கதை... எப்போ தூம் 3னு சொன்ன நாங்க எல்லாம் உஸாரா இருப்போம்...
    இப்போவே ஐசியுல இருக்கோம்...
    என்னங்க டாக்டர்...
    பில்லு எல்லாம் தலைக்கு அனுப்புங்க ...அவரு ரொம்ப நல்லவரு பைசா எல்லாம் கட்டிடுவாரு!!!
    அப்படி தானே தல!!

    ReplyDelete
  53. //எம் போலவே முகம் கொண்டிருக்கும் கைப்புள்ளையாரே.. உமக்கு ஒரு அழைப்பு.. இங்கே..

    http://24th-pulikesi.blogspot.com/2006/12/2006.html//

    வாங்க புலிகேசி,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வந்து பார்க்கறேன்.

    ReplyDelete
  54. //தல நீ கேப்டனுக்காக எழுதி வெச்ச கதய சுட்டு தூம்-2 எடுத்தவன் எவன்னு மட்டும் சொல்லு...போயி அவன் கால்ல விழுந்து தமிழக மக்கள காப்பதுன தெய்வமேனு கும்ப்பிட்டு வறேன் :-)//

    நம்பிக்க வேணுமய்யா நம்பிக்கை. கதை மேல நம்பிக்கை வச்சி கோடி கோடியா கொட்டிப் படம் எடுத்துருக்கான் பாரு. இதுல சாரியா நடிக்கிற உதய் சோப்ராவோட அப்பாவும் ஒரு தயாரிப்பாளர் தான். அவரு எடுத்த படம் தான் இது.

    ReplyDelete
  55. //இதே மாரி ஒரு வூடு நான் கட்ட போறேன்னு...செஞ்சு காட்டிட்டயே தல :-)//

    சும்மா இருக்கற கட்டதுரையை உசுப்பி விட்டு பாக்கறே? ஏம்ப்பு ஒனக்கு இந்த பொழப்பு?
    :(

    ReplyDelete
  56. //நான் கதையே படிக்கிறதே அபூர்வம்னு சொல்லியிருக்கேன். இந்த லட்சணத்துல கதை எழுதறதா?? அந்த நல்ல காரியமெல்லாம் நான் பண்றதில்ல//

    என்னை மாதிரியே வளவளன்னு சொன்னீங்களே...அதனால கேட்டேன்.
    :)

    ReplyDelete
  57. //தல, தூம் 2 DVD வீட்ல இருந்தது, இப்போ இல்லை, சிதச்சிட்டேன்...//
    அட பாவி,
    அவசரப்பட்டு சிதைச்சிட்டியே? அதுல ரிகொலேத்தா தோட்டத்தாண்ட கார்னிவல் டான்ஸு, நான் சொன்ன லா லா லா இதெல்லாம் பாக்காமலயே சிதைச்சிட்டியா?

    //அப்புறம் தல அவ்வ்வ்வ்வ் என் வலைப்பதிவை உங்க பேவரைட்ல இனைச்சதுக்கு அவ்வ்வ்வ்வ்//
    பேவரிட் இல்லியா பின்ன...உறுமுற முயல் குட்டி, ஆஸ்திரேலியா உயரக் கன்னுக்குட்டி, கூஜா மனுசன், சீஸ் பொண்ணுங்க...இதெல்லாம் சூப்பரில்ல?
    :))

    ReplyDelete
  58. //கைப்புள்ள கவனம் புள்ள
    பிஞ்சுப் புள்ள விழுந்துடுமில்ல (சும்மா பகிடிக்கு)
    தலைப்பை பார்த்தவுடன பறவைக் காய்ச்சல் மாதிரி பால் காய்ச்சலும் ஒரு வித காய்ச்சலாயிருக்குமோ எண்டு நினைச்சிட்டன் //

    வாங்க சுந்தரி,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. புது வார்ப்புரு பால் காய்ச்சலுக்குப் போட்ட ஒரு பதிவு இது. எழுத எதுவும் இல்லாததுனால ஒரு கதை சொல்லிருந்தேன்.
    :)

    ReplyDelete
  59. //தல!!!
    வீடு சூப்பர் தான்..ஆனா வீட்டுக்கு போறத்துக்கு முன்னாடி எங்களுக்கெல்லாம் சொல்லி இருந்தா வந்து ஜமாயிச்சு இருப்போம்ல....//

    வாங்க வாங்க! பகவான் டுபுக்கின் தொண்டருக்கும் நான் தலயா? பேறு பெற்றேன் இன்று. தொண்டருக்குச் சேவை செய்தால் பகவானுக்கே செஞ்ச மாதிரி.
    :)

    //
    அப்புறம் தூம் 2 சூப்பர் கதை... எப்போ தூம் 3னு சொன்ன நாங்க எல்லாம் உஸாரா இருப்போம்...
    இப்போவே ஐசியுல இருக்கோம்...
    என்னங்க டாக்டர்...
    பில்லு எல்லாம் தலைக்கு அனுப்புங்க ...அவரு ரொம்ப நல்லவரு பைசா எல்லாம் கட்டிடுவாரு!!!
    அப்படி தானே தல!! //
    தூம்3 தானே...இப்பத் தான் பேரரசோட கதை டிஸ்கஷன்ல இருக்கேன். அது முடிஞ்சதும் ஐசியுலேருந்து மார்ச்சுவரி போற லெவலுக்கு நேரா தூம்3 ரிலீஸ் தான். அதுக்கப்புறம் டாக்டரும் தேவை இல்ல பில்லும் கட்டத் தேவை இருக்காது. நேரா டண்டணக்க டணக்குணக்கா தான்.
    :)

    ReplyDelete
  60. தல... நீ போட்ட அன்னைக்கு எங்க கம்பெனில உன் ப்ளாக் ஓப்பனாகல அதான் வர லேட்டாயிடுச்சு :-(

    ReplyDelete
  61. தல கேப்டனை வெச்சி இந்த படம் எடுத்திருந்தா பட்டைய கிளப்பியிருக்குமே...

    இப்பவும் பிரச்சனையில்லை...
    தூக்கிடலாம் ;)

    ReplyDelete
  62. பால் காய்ச்சிச் சாப்பிட்டிருக்கீங்க ஒரு தகவலே இல்லையே, ம்ம்ம்ம்ம், வர வர நீங்களும் கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களே? அப்புறமா வந்து படிக்கிறேன். கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  63. im a new rasigai of ur blog..
    nice.. happy to read ur blog
    mahes

    ReplyDelete