Thursday, November 09, 2006

என்ன வண்டு கடிச்சிடுச்சுபா?

என்ன தமிழ்மண வலைப்பூ நண்பர்களே? என்ன நலமா? என்ன நான் நலம்? என்ன சே எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க? என்ன இன்னிக்கு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பயணம் சம்பந்தப்படாத பதிவெழுதலாம்னு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்தேனா? என்ன அந்த நேரம் பாத்து கூகிள் சேட்ல ரெண்டு அப்பாவிங்க இன்னிக்கு ஆன்லைன் வந்தாங்களா? என்ன அந்த பாழாப் போன நேரம் ஒரு வண்டு வந்து என்னை கடிச்சி வச்சிச்சா? என்ன அந்த வண்டு பேரு "என்ன வண்டாம்"லே? என்ன அந்த வண்டு கடிச்ச நேரத்துலேருந்து எது எழுதுனாலும் "என்ன" சேர்ந்துக்குதா? என்ன பாவம் அந்த ரெண்டு பச்சை மண்ணுங்களும் போனா போவுது போனா போவுதுன்னு மரியாதை குடுத்து ஒரு அரை மணி நேரம் தாக்கு புடிச்சாங்க?

என்ன ஆனாலும் ராத்திரி நேரம்...ஆபிஸ்லேருந்து கெளம்பாம வயித்து பசியோட எம்புட்டு நேரம் தான் தாக்கு பிடிப்பாங்க? என்ன என்ன இருந்தாலும் என்னை அந்த வண்டு கடிச்சிருக்கக் கூடாது? என்ன என்ன இருந்தாலும் வண்டு கடிச்ச அந்த நேரத்துல அந்த ரெண்டு அப்பாவிங்களும் என்கிட்ட மாட்டிருக்கக் கூடாது? என்ன நான் போட்டு கடிச்ச கடியில ரெண்டு பேரும் துண்டை காணோம் துணியைக் காணோம்னு ஓடிட்டாங்க? என்ன ஆனாலும் "என்ன பைத்தியம்" புடிச்சாலும், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு இல்லியா?? என்ன அதனால தான் என்னோட அந்த 'என்ன பைத்தியம்' இருக்கும் போதே மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு ஒரு ப்ளாக் எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம்? என்ன ஆனா என்ன தான் 'என்ன பைத்தியம்' புடிச்சாலும் கடிப்பட்ட அந்த ரெண்டு பேரோட பேரை மட்டும் நான் சொல்லவே இல்லை பாருங்க? என்ன வண்டு கடிச்சாலும் அம்புட்டு ஸ்டெடி நானு? என்ன இந்த பதிவைப் போட்டுட்டு கொஞ்ச நேரத்துல தூங்கப் போயிடுவேனுங்கோ? என்ன காலைல தூங்கி எந்திரிச்சா இந்த 'என்ன பைத்தியம்' தெளிஞ்சிடும்னு நெனக்கிறேன்? என்ன அப்படியே ஒரு வேளை தெளியலைன்னு வையுங்க...? என்ன என்ன தெளியலைன்னா? என்ன அதெல்லாம் கண்டிப்பாத் தெளிஞ்சிடும்? என்ன நான் போட்ட பிளேடு தாங்காம ஆபிசுலேருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே போயிருக்காங்க? என்ன நாளைக்கும் தெளியலைன்னா என்னை கல்லெடுத்து அடிச்சி க்ளோஸ் பண்ணிடுவாங்க?


என்ன சரி...ஒரு கிறுக்கு பயலைப் பாக்க வந்துட்டீங்க? என்ன வந்ததுக்கு ரெண்டு படத்தைக் காட்டுறேன்...பாத்துட்டு கொஞ்சம் துப்பிட்டு போங்க சாமியோவ்?

என்ன இந்த மஞ்சா கலருலே ஒரு பூவு தெரியுதே...அது தான் அலமண்டா பூவு? என்ன அது கொத்து கொத்தா பூக்கும் பாக்க ரொம்ப அழகா இருக்கும்?


என்ன மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா?


என்ன செவ்வரளி தோட்டத்துலே உன்னை நெனச்சேன்?


என்ன என்ன பழம் இதுன்னு சொல்லுங்க? என்ன சின்னதா வெள்ளை கலர்ல ஒரு பூவும் இருந்துச்சு?


என்ன இதை படிச்சிட்டு கொலைவெறி வருதா?? என்ன கொலைவெறியோட ஒரு பின்னூட்டம் போடுங்க அம்மா, ஐயா?

81 comments:

  1. சீக்கிரமே கல்யாணப் பிரப்திரஸ்து!!

    (பாதி ராத்திரியில இப்படி எல்லாம் உளறினா வேற என்னத்த சொல்ல?)

    ReplyDelete
  2. இங்கயுமா?? ;))))

    படம் புடிக்கற கிறுக்கை போனா போதுன்னு தாங்கிக்கிட்டோம்..இப்ப இது வேறயா?? தல...அப்புறம் நாங்களே உன்னை ஆஸ்பத்திரியில போய் சேர்க்க வேண்டியீருக்கும்...நல்லா தூங்கி எழுந்து நீயா திருந்திடு ;))

    ReplyDelete
  3. அந்த மஞ்சப்பூ, நம்மூர் தங்க அரளிதானே? புள்ளையாருக்குப் போடுவோமே அது.

    இந்த அரளி வகைகள் ஒலாண்டோன்னு இங்கே சொல்றாங்க.

    அதுசரி, கசாண்ட்ரா ன்னா என்ன பூ?

    நம்மூர் 'கனகாம்பரம்':-))

    ReplyDelete
  4. என்ன சித்தூர்கட்டிலிருந்து புத்தூர்கட்டு போட்டுக்கொள்ள ஆசையா ? :-)))

    ReplyDelete
  5. கைப்ஸ்!

    என்ன என்னன்னு ஔவையாருக்கு அடுத்தபடியா நீதான் அதிகமா யூஸ் பண்ணியிருக்க!

    அதனால என்னன்னு கேட்டுபுடாத!

    தாங்க மாட்டேன்.

    ReplyDelete
  6. வண்டு உங்களை கடிச்ச பாவத்துக்கு நீங்க எங்களை இப்படி கடிக்கலாமா? ;)

    தல நாளைக்கு லீவு போட்டு நல்லா தூங்கு... சரியாயிடும் ;)

    ReplyDelete
  7. தல, விரல் நுனில கவிதை ஊறுது, என்னிய கட்டுப்படுத்தாதே, அழுதுறுவேன..

    ஒரு

    பூ வே

    பூ வை

    படம்

    பிடிக்கிறதே !!

    அழுதுறுவேன்..ப்ர்ர்ர்..

    ReplyDelete
  8. //என்ன ஆனாலும் ராத்திரி நேரம்...ஆபிஸ்லேருந்து கெளம்பாம வயித்து பசியோட எம்புட்டு நேரம் தான் தாக்கு பிடிப்பாங்க? என்ன என்ன இருந்தாலும் என்னை அந்த வண்டு கடிச்சிருக்கக் கூடாது//

    என்ன கைப்புள்ள.. என்ன உளறல் இப்படி.. என்ன என்னத்த சொல்ல போ..

    பாத்துப்பா.. இப்பிடியே பேசிகினு போன..சுத்தி இருக்கவங்க ஒரு மாதிரி பாக்கப் போறாங்க

    ReplyDelete
  9. இந்த ஆப்பு ஆப்பு அப்படீங்றாங்களே அது எங்கயும் போறது இல்ல, அது தேமேனு ஒரு எடத்துல இருக்கு நாம தான் தேடி போய் வாங்கிட்டு வரோம் அப்படீங்கறது எவ்வளவு சரினு இப்ப தான் புரிஞ்சுது கைப்ஸ்...

    :-)

    வாங்கின ஆப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுக்கறா மாதிரி இருக்கு....

    :-))

    "என்ன" வண்ட விசாரிச்சதா சொல்லுங்க.:-)

    ReplyDelete
  10. என்னோட கண்ணுல நண்டு கடிச்சிருச்சின்னு தெரியுது. சுடத்தண்ணில குளிக்கவும் ( அந்த பழக்கம் இருக்கா ???)

    ReplyDelete
  11. வண்டு நல்லா இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  12. கைப்ஸ்...

    சொல்ல மறந்துட்டேன்...

    படம் எல்லாம் அருமை.

    ReplyDelete
  13. என்ன கல்லெடுத்து அடிச்சி க்ளோஸ் பண்ணிடுவாங்க?

    ReplyDelete
  14. என்ன கொத்து கொத்தா பூக்கும் பாக்க ரொம்ப அழகா இருக்கும்?

    ReplyDelete
  15. என்ன காத்து உக்காந்து பேசுதம்மா?

    ReplyDelete
  16. என்ன உன்னை நெனச்சேன்?

    ReplyDelete
  17. என்ன வெள்ளை கலர்ல ஒரு பூவும் இருந்துச்சு?

    ReplyDelete
  18. என்ன பின்னூட்டம் போடுங்க அம்மா, ஐயா?

    ReplyDelete
  19. வெய்யில் கூட இப்ப கம்மி ஆயிடிச்சே
    அப்புறம் ஏன்?...ஹ்ம்ம்ம்??.. எதுக்கும்
    'இத' லேப்புக்கு அனுப்புறது நல்லது


    ( 'இத'= எத சொல்றேன்னு தெறியாதாங்னா)

    ReplyDelete
  20. திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!
    திரும்ப திரும்ப பேசற
    திரும்ப திரும்ப ..... :)

    ReplyDelete
  21. என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???

    ReplyDelete
  22. //என்ன நான் போட்டு கடிச்ச கடியில ரெண்டு பேரும் துண்டை காணோம் துணியைக் காணோம்னு ஓடிட்டாங்க? என்ன ஆனாலும் "என்ன பைத்தியம்" புடிச்சாலும், மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு இல்லியா?? என்ன அதனால தான் என்னோட அந்த 'என்ன பைத்தியம்' இருக்கும் போதே மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு ஒரு ப்ளாக் எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம்? //

    தல ,

    உண்மையே சொல்லு அவங்கதானே உன்னை ஓட்டினாங்க... நீ அவங்க கேட்கிறகேள்விக்கு பதில் சொல்லத்தெரியமா அதிலே என்ன?? என்ன?? ன்னு சேர்த்து போட்டு அழு அழுன்னு அழுதுப்புட்டு இங்கே நல்லவன் மாதிரி பிளாக்கிலே எழுதிறியா???

    ReplyDelete
  23. என்ன நடக்குது இங்க.?
    என்ன கொடுமையிது கைப்பு ?
    என்ன ஆனாலும் நீங்க இப்டி எழுதியிருக்க கூடாது?
    ஆண்டவா என்ன வியாதியிது?
    என்ன இருந்தாலும் பூ படம் எல்லாம் சூப்பர். :)

    ReplyDelete
  24. //சீக்கிரமே கல்யாணப் பிரப்திரஸ்து!! //

    பெரியவங்க வந்து வாழ்த்திருக்கீங்க. ரொம்ப நன்றி

    //(பாதி ராத்திரியில இப்படி எல்லாம் உளறினா வேற என்னத்த சொல்ல?) //

    இன்னும் முழுசா முத்தலைன்னு தான் அர்த்தம். பாருங்க எப்படி தெள்ளத் தெளிவா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு?
    :)

    ReplyDelete
  25. //இங்கயுமா?? ;))))

    படம் புடிக்கற கிறுக்கை போனா போதுன்னு தாங்கிக்கிட்டோம்..இப்ப இது வேறயா?? தல...அப்புறம் நாங்களே உன்னை ஆஸ்பத்திரியில போய் சேர்க்க வேண்டியீருக்கும்...நல்லா தூங்கி எழுந்து நீயா திருந்திடு ;))//

    நேத்து என்னமோ என்ன மாயமோ தெரியலை கப்பி...அந்த அப்பாவிங்களை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன்...இப்ப தூங்கி எந்திரிச்சு நல்லா ஸ்டெடியா இருக்கேன்...இப்ப பாரு "என்ன?" நான் எழுதும் போது வரலை?
    :)

    ReplyDelete
  26. //அந்த மஞ்சப்பூ, நம்மூர் தங்க அரளிதானே? புள்ளையாருக்குப் போடுவோமே அது.//

    வாங்கக்கா,
    தங்க அரளியே தான். நான் தான் அலமண்டான்னு தப்பா சொல்லிட்டேன். அலமாண்டாங்கிறது வேற ஒரு பூ.

    //இந்த அரளி வகைகள் ஒலாண்டோன்னு இங்கே சொல்றாங்க.

    அதுசரி, கசாண்ட்ரா ன்னா என்ன பூ?

    நம்மூர் 'கனகாம்பரம்':-)) //

    கசாண்டிரா கிராசிங்னு ஒரு இங்லீஷ் பட பேரு கேள்வி பட்ட நியாபகம்...அப்ப அதை தமிழ்ல சொன்னா "கனகாம்பரம் சந்திப்பா?"
    :)

    ReplyDelete
  27. //வண்டு கடிச்சதா இல்லை பர்ஸ் கையை கடிச்சிதா. சித்தூர்கட் செலவு முடிஞ்சா அடுத்த ஊருக்கு போகவேண்டியது தானே. அதுக்கு பதில் பூ படம் போட்டால் எப்படி.நான் வேணுமினாலும் பயணச்செலவு ஸ்பான்ஸர் செய்கிறேன், 1000 dollar , DD எடுத்து உங்கள் நிரந்தர முகவரியான துபாய் விவேகானந்தர் குறுக்கு தெருவுக்கு பெற்றுக்கொள்ளவும் //

    வாங்க கிறுக்கன்,
    எழுத மேட்டரே இல்லாமத் தானே இப்படி மொக்கை பதிவையும் பூவும் பொஸ்பத்தையும் போட்டு ஊரை ஏமாத்தறோம்? அதுக்கே 1000 டாலர் தரேன்னு சொல்றீங்களே...உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் :)

    ReplyDelete
  28. //என்ன சித்தூர்கட்டிலிருந்து புத்தூர்கட்டு போட்டுக்கொள்ள ஆசையா ? :-)))//

    வாங்க லதா,
    சிலேடையா எழுதிருக்கீங்க. மிகவும் ரசித்தேன். நல்ல மோனை நயம். வருகைக்கு மிக்க நன்றி. நேத்து இதே மாதிரி இன்னும் அரை மணி நேரம் கண்டினியூ பண்ணியிருந்தேன்னா கண்டிப்பா புத்தூர்கட்டாத் தாங்க முடிஞ்சிருக்கும்.
    :)

    ReplyDelete
  29. //கைப்ஸ்!

    என்ன என்னன்னு ஔவையாருக்கு அடுத்தபடியா நீதான் அதிகமா யூஸ் பண்ணியிருக்க!//

    ஓளவையாரும் இதே மாதிரி பிளேடு போட்டிருக்காங்களா? எங்கேப்பா? நான் கேள்வி பட்டதேயில்லியே?
    :)

    //அதனால என்னன்னு கேட்டுபுடாத!

    தாங்க மாட்டேன். //

    ஆமாம் தம்பி! நேத்து நெசமாலேயே தாங்குன அந்த ரெண்டு பசங்களை நெனச்சாத் தான் ரத்த ஆனந்தக் கண்ணீர் வருது.
    :)

    ReplyDelete
  30. //வண்டு உங்களை கடிச்ச பாவத்துக்கு நீங்க எங்களை இப்படி கடிக்கலாமா? ;)//

    அது எல்லாம் அந்நேரத்துக்கு நடந்த ஒரு தெய்வீக சங்கல்பம்(பல்பம்...எதோ ஒன்னு) அதாவது ஒரு divine intervention. அந்த தாக்கத்தின் காரணமாகத் தான் இப்படி எல்லாம் நடந்துருக்கும்னு நான் ஆணித் தரமாகவும் எதிர் வினையாகவும் நம்பறேன்.

    //தல நாளைக்கு லீவு போட்டு நல்லா தூங்கு... சரியாயிடும் ;)//

    லீவு போடாமலேயே இப்ப சரியாயிடுச்சு. இதுவும் ஒரு தெய்வீக intervention தான்.
    :)

    ReplyDelete
  31. //தல, விரல் நுனில கவிதை ஊறுது, என்னிய கட்டுப்படுத்தாதே, அழுதுறுவேன..

    ஒரு

    பூ வே

    பூ வை

    படம்

    பிடிக்கிறதே !!

    அழுதுறுவேன்..ப்ர்ர்ர்..//

    பூவைப் படம் புடிச்ச நானும் ஒரு பூவா? ஆஹா கேக்கவே எம்புட்டு ஓவரா இருக்கு? ஆனாலும் இத கேட்டுட்டு என்னோட ரியாக்ஷன் இப்ப கீழே இருக்கற மாதிரி தான் இருக்கு.

    http://im.rediff.com/movies/2006/jul/03poster.jpg

    நன்றி.

    :))

    ReplyDelete
  32. //என்ன கைப்புள்ள.. என்ன உளறல் இப்படி.. என்ன என்னத்த சொல்ல போ..

    பாத்துப்பா.. இப்பிடியே பேசிகினு போன..சுத்தி இருக்கவங்க ஒரு மாதிரி பாக்கப் போறாங்க /

    வாங்க கார்த்திக்,
    என்னமோ இப்ப மட்டும் ரொம்ப மானம் மருவாதியோட பாக்கற மாதிரி இல்ல சொல்றீங்க? இத பத்தியெல்லாம் பொது வாழ்க்கையில இருக்கற நம்மளை மாதிரி ஆளுங்க கண்டுக்கப் பிடாது. வண்டு ஸ்யாம் அண்ணனைக் கடிச்சி பிட்டு இப்ப கம்முனு தான் குந்தியிருக்காம்...வேணா ஒங்க ஊரு பக்கம் வரச் சொல்லவா?
    :)

    ReplyDelete
  33. //வாங்கின ஆப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுக்கறா மாதிரி இருக்கு....

    :-))

    "என்ன" வண்ட விசாரிச்சதா சொல்லுங்க.:-) //

    வாங்க ஸ்ரீதர்,
    ரொம்ப நாள் கழிச்சி உங்களைப் பாக்குற ஒரு ஃபீலிங். இது வெறும் பிரமை தானா இல்ல உண்மையா? வண்டோட கூட்டாளிங்க அசர்பைஜான் எல்லையிலும் இருக்காங்களாம்...உங்க வூட்டாண்டயும் வந்து கண்டுக்கச் சொல்லவா?
    :)

    ReplyDelete
  34. //என்னோட கண்ணுல நண்டு கடிச்சிருச்சின்னு தெரியுது. சுடத்தண்ணில குளிக்கவும் ( அந்த பழக்கம் இருக்கா ???) //

    வாங்க ரவி,
    கடிச்சது நண்டு இல்லீங்க...வண்டு. வண்டு கடிக்கு சுடத் தண்ணி சரிபடுங்களா?
    :)

    ReplyDelete
  35. //வண்டு நல்லா இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்//

    அவ்வண்ணமே கோரும்...அடியேன் கைப்புள்ள.
    :)

    கடிபட்டவனுங்க நீங்க சொன்னதை கேட்டா உங்க கதை கந்தல் தான்.

    ReplyDelete
  36. //கைப்ஸ்...

    சொல்ல மறந்துட்டேன்...

    படம் எல்லாம் அருமை. //

    திரும்ப வந்து பாராட்டுனதுக்கு ரொம்ப டேங்ஸ் ஸ்ரீதர்.
    :)

    ReplyDelete
  37. //என்ன கல்லெடுத்து அடிச்சி க்ளோஸ் பண்ணிடுவாங்க?//

    //என்ன கொத்து கொத்தா பூக்கும் பாக்க ரொம்ப அழகா இருக்கும்?//

    //என்ன காத்து உக்காந்து பேசுதம்மா?//

    //என்ன உன்னை நெனச்சேன்?//

    //என்ன வெள்ளை கலர்ல ஒரு பூவும் இருந்துச்சு?

    //என்ன பின்னூட்டம் போடுங்க அம்மா, ஐயா?//

    யய்யா 12பி,
    நல்லா புரியுதுய்யா...நல்லா புரியுதுய்யா. வண்டு இப்ப அமெரிக்காவுல வாஷிங்டன் டி.சி. மாகாணத்துக்கு நான் "டூ கோ" பண்ணி வச்சேன். கரெக்டா வந்து சேந்துடுச்சு போலிருக்கு? நடத்து...நடத்து.
    :))

    ReplyDelete
  38. //வெய்யில் கூட இப்ப கம்மி ஆயிடிச்சே
    அப்புறம் ஏன்?...ஹ்ம்ம்ம்??.. எதுக்கும்
    'இத' லேப்புக்கு அனுப்புறது நல்லது


    ( 'இத'= எத சொல்றேன்னு தெறியாதாங்னா)//

    வாங்க மங்கை மேடம்,
    வண்டைத் தான் சொல்றீங்கன்னு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாப் புரியுது. ஆனா பாருங்க இப்ப வண்டு வாஷிங்டன் டி.சி.யில நம்ம ஸ்யாமைக் கடிச்சிட்டு இருக்குது.
    :)

    ReplyDelete
  39. //திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!
    திரும்ப திரும்ப பேசற
    திரும்ப திரும்ப ..... :) //

    அப்படீங்கறீங்க? இந்த "திரும்ப" வண்டு அப்போ வேற எங்கேயோ போயிருந்துச்சு. என்னிக்காச்சும் ஒரு நாள் நம்மளைக் கடிக்காமலயா போயிடும்?
    :)

    ReplyDelete
  40. //என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???என்னா???//

    அதானே...என்னாப்பா ராயலு?
    :)))

    ReplyDelete
  41. //தல ,

    உண்மையே சொல்லு அவங்கதானே உன்னை ஓட்டினாங்க... நீ அவங்க கேட்கிறகேள்விக்கு பதில் சொல்லத்தெரியமா அதிலே என்ன?? என்ன?? ன்னு சேர்த்து போட்டு அழு அழுன்னு அழுதுப்புட்டு இங்கே நல்லவன் மாதிரி பிளாக்கிலே எழுதிறியா??? //

    முருகேஷா! நான் கேட்டேனா?
    :))

    ராயலு உன் கமெண்டைப் படிச்சதும் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது. அது என்னாங்கறியா?

    "எங்க நைனா குதிருக்குள்ளே இல்ல"
    :))

    ReplyDelete
  42. //என்ன நடக்குது இங்க.?
    என்ன கொடுமையிது கைப்பு ?
    என்ன ஆனாலும் நீங்க இப்டி எழுதியிருக்க கூடாது?//

    ஆமாங்க அனு...அதையே தான் நானும் சொல்லறேன்.

    //
    ஆண்டவா என்ன வியாதியிது?//
    எல்லாமே அவன் செயல் தாங்க.

    //
    என்ன இருந்தாலும் பூ படம் எல்லாம் சூப்பர். :) //

    ரொம்ப டேங்ஸுங்க.
    :))

    ReplyDelete
  43. ஒரு சின்ன வண்டு கடிச்சா இவ்வள்வு effect aa இனிமேல் carefulla இருந்திடணும் !!!

    ReplyDelete
  44. //அதானே...என்னாப்பா ராயலு?//

    அது அவசியம் தெரியனுமின்னா சொல்லுறேன் அது என்னான்னு??


    //"எங்க நைனா குதிருக்குள்ளே இல்ல"//

    இது நல்லா இருக்கு தல... பழமொழிக்கும் என்னோட கமெண்ட்க்கும் என்ன சம்பந்தம் இருக்கு??
    அப்போ அவங்க ஒன்னேதான் ஓட்டுனாங்கிறேதே ஒளிவுமறைவு இல்லேமே ஒத்துக்கிறே அப்பிடிதானே????
    :-)

    ReplyDelete
  45. என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு! ராஸ்கல்!

    ReplyDelete
  46. உன்ன நாய் கடிக்காம விட்டுச்சே.....

    ReplyDelete
  47. //என்ன வந்ததுக்கு ரெண்டு படத்தைக் காட்டுறேன்...பாத்துட்டு கொஞ்சம் துப்பிட்டு போங்க சாமியோவ்?//

    யோவ் எங்களை எல்லாம் என்ன நினைச்சுக்கிட்டு இருக்க. நீ என்ன சொன்னாலும் நம்பவோம் என்றா? ரொம்பவே மட்டம் தான் எடைப் போடுறீர் போல்.....

    இரண்டு படம் காட்டுறேன், ஏன் இத்தனை படம் போட்டே?

    ReplyDelete
  48. கைப்ஸ்

    வண்ட போய் மரியாதை இல்லாம அது இதுன்னு சொல்லுவனா..பாவம்..

    ReplyDelete
  49. இ.கொ. சொன்னதை வழிமொழிகிறேன். மத்தப் பின்னூட்டத்தை எல்லாம் பார்க்கவே இல்லை. வேணாம்னு தோணிடுச்சு. ரொம்பவே ஓவரா இல்லை? :D

    ReplyDelete
  50. முரு"கேசு" முரு"கேசு"!!ஐய்யய்யாயோ ஏம் மாப்ப்ள்ளைக்கு வண்டு கடிச்சிடுச்சாம்ல!! ரெண்டு மாசம் ஊருள்ள இல்லைங்கவும் இப்படி நடக்கும்?

    இதுக்குத் தாம்லே சொல்லுரது மலைவண்டு கடிச்சாலும்...சாரி.. மலையேறிப் போனாலும் மச்சான் கிடக்க மாட்டம்லே!
    என்ன ஆச்சோ ஏது ஆச்சோ, இவன நம்பி இங்க ஒரு அன்னகுயிலு அழகு மயிலு மேகலை-ய வேற வளத்து வச்சிருக்கனே!
    வண்டு கடிச்சிருச்சினுல்ல சொல்லுரான் எந்த எடத்துலனு வேற தெரியலையே,

    ஏலே! மொக்கராசு அந்த வெடக் கோலியப் புடிலே!சீமத்தண்ணீய எடுலே, அப்படியே அந்தா இருக்கிற வாழத் தாரையும் கையில் புடி! ஐய்யோ எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!

    இப்படி அரக்கப் பரக்க உன்னியப் பாக்க ஓடோடி வந்தாக்கா!!!
    நீ என்னடானா வழக்கம் போல அந்த கேமிராப் பொட்டிய கைல எடுத்துகிட்டு படம் காமிக்கிற? மொக்க வெடக்கோழி வெட்டக் கொண்டு வந்த அருவாளை எடுலே!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  51. enna koduma saravanan idhu... enna enna nadakudhu... enna nama illaina ipdi kuda aagiduma ;)

    ReplyDelete
  52. அது சரி, பாட்டிக்கு கண்ணும் தெரியல, கை வேற நடுங்குது.. மத்த பின்னூட்டத்த என்ன பதிவ கூட படிக்க முடியாது ;)

    ReplyDelete
  53. கூவின பூங்குயில்
    கூவின கோழி
    குருகுகள் இயம்பின
    விளம்பின சங்கம்
    யாவரும் அறிவரியா
    கைப்புள்ள பள்ளி எழுந்தருளாயே!

    ReplyDelete
  54. Your are tagged kaipullai.

    he hee, vechoom illa aapu! :)

    ReplyDelete
  55. //ஒரு சின்ன வண்டு கடிச்சா இவ்வள்வு effect aa இனிமேல் carefulla இருந்திடணும் !!!//

    வாங்க சுந்தரி,
    ஆமாங்க ஜாக்கிரதையா இருந்துக்கங்க. அன்னிக்கு உங்க வீட்டு கடி எங்க வீட்டு கடி இல்ல...மரண கடி. வண்டு கடிச்சதை சொல்லலை...நான் அந்த ரெண்டு சிறுவர்களைக் கடிச்சதை சொல்லறேன். எதுக்கும் நீங்களும் ஜாக்கிரதையாவே இருங்க.
    :)

    ReplyDelete
  56. //அது அவசியம் தெரியனுமின்னா சொல்லுறேன் அது என்னான்னு??//

    தப்பு கொண்டா...செப்பு நைனா.


    //இது நல்லா இருக்கு தல... பழமொழிக்கும் என்னோட கமெண்ட்க்கும் என்ன சம்பந்தம் இருக்கு??
    அப்போ அவங்க ஒன்னேதான் ஓட்டுனாங்கிறேதே ஒளிவுமறைவு இல்லேமே ஒத்துக்கிறே அப்பிடிதானே????
    :-)//

    இன்னொரு பழமொழி நியாபகத்துக்கு வருது ராயலு..."குற்றமுள்ள நெஞ்சு...". வேணாம்...பழமொழி வண்டு கடிச்சிட கிடிச்சிட போவுது.
    :)

    ReplyDelete
  57. //என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு! ராஸ்கல்!//

    அதானே! யாருய்ய இங்கே சின்னப்புள்ளத் தனமா பேசுறது? ராஸ்கல்.
    :)

    ReplyDelete
  58. //உன்ன நாய் கடிக்காம விட்டுச்சே..... //

    லொள்...லொள்...லொள்ளு பண்ணற புலியைக் கடிக்குறதுக்கா?

    ReplyDelete
  59. உங்களை எல்லாம் கலாய்க்கிறக்கு எந்த அனானியும் வராதா...
    அது சரி அனானி என்ன லூஸா அதவே கலாய்ச்சிக்கிறதுக்கு...



    இருந்தாலும் அந்த வண்டு எதோ
    விஷ(ம) வண்டு போல..

    யப்பா ஒரு வழி பண்ணீட்டீங்க...

    ReplyDelete
  60. //இரண்டு படம் காட்டுறேன், ஏன் இத்தனை படம் போட்டே?//

    மிகவும் அருமையான கேள்வி...இந்த மாதிரி கேள்வி யாராச்சும் கேக்க மாட்டாங்களான்னு நெனச்சிட்டே இருந்தேன். நீங்க கணக்குலயும் புலின்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க...அது வந்து...அது வந்து என்னை கடிச்ச வண்டுக்குக் கணக்கு தெரியாது...அதான்.

    ReplyDelete
  61. //தங்க அரளியே தான். நான் தான் அலமண்டான்னு தப்பா சொல்லிட்டேன். அலமாண்டாங்கிறது வேற ஒரு பூ.//

    கைப்புள்ள!

    எங்க ஊரில் இதைப் பொன்னலரி எனச் சொல்வோம்...ஆ....
    கடிச்ச வண்டுக்கு ஒண்ணும் ஆகேல்லையில....

    ReplyDelete
  62. //அன்னிக்கு உங்க வீட்டு கடி எங்க வீட்டு கடி இல்ல...மரண கடி. வண்டு கடிச்சதை சொல்லலை...நான் அந்த ரெண்டு சிறுவர்களைக் கடிச்சதை சொல்லறேன். எதுக்கும் நீங்களும் ஜாக்கிரதையாவே இருங்க.//

    தல,

    உன்னை கடிச்சே அந்த வண்டு, வாழ்வில் எல்லா சீரும்சிறப்பும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆனால் நீ அந்த ரெண்டு சிறுவர்களை கடிச்சேன்னு சொன்னா ஊரூஉலகமே நம்பின்னாகூட நான் நம்பவே மாட்டேன்!!!!!
    ;)

    ReplyDelete
  63. //இன்னொரு பழமொழி நியாபகத்துக்கு வருது ராயலு..."குற்றமுள்ள நெஞ்சு...". வேணாம்...பழமொழி வண்டு கடிச்சிட கிடிச்சிட போவுது.//

    அய்யோயோ என்னாச்சு உனக்கு... பழமொழி பரமசிவமா மாறிட்டியேயா என்னா???? அநியாத்துக்கு எல்லாத்துக்கும் பழமொழியா, நாடு தாங்காது சாமியோவ்!!!!! இதே கேட்க ஆளில்லய்யா????

    ReplyDelete
  64. //கைப்ஸ்

    வண்ட போய் மரியாதை இல்லாம அது இதுன்னு சொல்லுவனா..பாவம்..//

    வாங்க மேடம்,
    வண்டை இல்லை...வண்டு கடிச்ச மண்டைப் பத்தி சொல்லிருக்கீங்கன்னு லேட்டாத் தான் புரியுது.
    :)

    ReplyDelete
  65. //இ.கொ. சொன்னதை வழிமொழிகிறேன்.//
    ரொம்ப நன்றி மேடம். பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி
    :)

    // மத்தப் பின்னூட்டத்தை எல்லாம் பார்க்கவே இல்லை. வேணாம்னு தோணிடுச்சு. ரொம்பவே ஓவரா இல்லை? :D //

    ஓவரா இருக்குத் தான். என்ன பண்ணுறது? அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா?
    :)

    ReplyDelete
  66. //முரு"கேசு" முரு"கேசு"!!ஐய்யய்யாயோ ஏம் மாப்ப்ள்ளைக்கு வண்டு கடிச்சிடுச்சாம்ல!! ரெண்டு மாசம் ஊருள்ள இல்லைங்கவும் இப்படி நடக்கும்? //

    என்ன கொடுமை இது சரவணன்?

    //இதுக்குத் தாம்லே சொல்லுரது மலைவண்டு கடிச்சாலும்...சாரி.. மலையேறிப் போனாலும் மச்சான் கிடக்க மாட்டம்லே!
    என்ன ஆச்சோ ஏது ஆச்சோ, இவன நம்பி இங்க ஒரு அன்னகுயிலு அழகு மயிலு மேகலை-ய வேற வளத்து வச்சிருக்கனே!
    வண்டு கடிச்சிருச்சினுல்ல சொல்லுரான் எந்த எடத்துலனு வேற தெரியலையே,//

    ஐயயோ...இது என்ன கலாட்டா? வண்டு கடிச்சதை விட டேஞ்சரான மேட்டரா இருக்கும் போலிருக்கே இது...

    //ஏலே! மொக்கராசு //
    என்னைய வெச்சி எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே?

    //இப்படி அரக்கப் பரக்க உன்னியப் பாக்க ஓடோடி வந்தாக்கா!!!
    நீ என்னடானா வழக்கம் போல அந்த கேமிராப் பொட்டிய கைல எடுத்துகிட்டு படம் காமிக்கிற? மொக்க வெடக்கோழி வெட்டக் கொண்டு வந்த அருவாளை எடுலே!//
    இத வேற கமெண்டாவே போட்டாச்சா? கடி பட்ட பசங்க கேட்டா சந்தோஷப் படுவாங்க.

    ReplyDelete
  67. //enna koduma saravanan idhu... enna enna nadakudhu... enna nama illaina ipdi kuda aagiduma ;) //

    ஆமாம் பாப்பா! பாரு என்ன அழிசாட்டியம் பண்ணி வச்சிருக்காங்கன்னு. வந்து என்னான்னு கேளு.
    :)

    ReplyDelete
  68. //அது சரி, பாட்டிக்கு கண்ணும் தெரியல, கை வேற நடுங்குது.. மத்த பின்னூட்டத்த என்ன பதிவ கூட படிக்க முடியாது ;) //

    போர்க்கொடி...நற...நற...நற(தலைவி சொல்லிக் குடுத்தது தான்). தலைவியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வரும் பின்னூட்டங்கள் மிகக் கடுமையாகவும் கொடூரமாகவும் மட்டுறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  69. //கூவின பூங்குயில்
    கூவின கோழி
    குருகுகள் இயம்பின
    விளம்பின சங்கம்
    யாவரும் அறிவரியா
    கைப்புள்ள பள்ளி எழுந்தருளாயே! //

    வாங்க ஜிரா,
    திருப்பள்ளியெழுச்சியிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டிருக்கீங்க. ஆனா இதுல என்ன உள்குத்து, வெளிகுத்து, சைட்குத்து இருக்குன்னு தெரியலியே. எதாருந்தாலும் கொஞ்சம் வெளக்கமாச் சொல்லிடுங்கய்யா ப்ளீஸ்.
    :)

    ReplyDelete
  70. //ஆமாம் பாப்பா! பாரு என்ன அழிசாட்டியம் பண்ணி வச்சிருக்காங்கன்னு. வந்து என்னான்னு கேளு.//

    இப்போ மாட்டினீய்யா!!! அப்போ நீதான் கடி வாங்கிருக்கே... அப்பிடி உண்மையே ஒத்துக்கோ!!!! ;)

    ReplyDelete
  71. //Your are tagged kaipullai.

    he hee, vechoom illa aapu! :)//

    ஹி ஹி ஹி
    (இடுக்கண் வருங்கால் நகுக...சமாளிக்கிறேன்)

    ReplyDelete
  72. //கைப்புள்ள!

    எங்க ஊரில் இதைப் பொன்னலரி எனச் சொல்வோம்//

    வாங்க மலைநாடான் சார்,
    அதே தான். தகவலுக்கு மிக்க நன்றி.

    //...ஆ....
    கடிச்ச வண்டுக்கு ஒண்ணும் ஆகேல்லையில.... //

    இல்லை...வண்டுக்கு ஒன்னும் ஆகலை...நல்லா சுகமாத் தான் இருக்காம்.
    :)

    ReplyDelete
  73. //ஆனால் நீ அந்த ரெண்டு சிறுவர்களை கடிச்சேன்னு சொன்னா ஊரூஉலகமே நம்பின்னாகூட நான் நம்பவே மாட்டேன்!!!!!
    ;) //

    அட ராயலு. சொன்னா நம்ப மாட்டேய்யா...எனக்கு இன்னொரு பழமொழி ஞாபகம் வருது.

    "குஞ்சு மிதிச்சு கோழி சாவுமா?"

    ReplyDelete
  74. //அட ராயலு. சொன்னா நம்ப மாட்டேய்யா...எனக்கு இன்னொரு பழமொழி ஞாபகம் வருது.

    "குஞ்சு மிதிச்சு கோழி சாவுமா?"//

    எவ்வளவு தூரம்தான் நீ பொய்யே சொல்லுறேன்னு பார்ப்போமே????

    ReplyDelete
  75. தல,

    எனக்கு ஒரே ஒரு உண்மை மட்டும் தெரியணும்!!!! அந்த வண்டு உன்னை கடிச்சிச்சிசா... இல்லே இங்கே நீ பீலா விட்டமாதிரியே நடந்துச்சா.... அதேமட்டும் சொல்லீரு போதும்.

    ;)

    ReplyDelete
  76. //உங்களை எல்லாம் கலாய்க்கிறக்கு எந்த அனானியும் வராதா...
    அது சரி அனானி என்ன லூஸா அதவே கலாய்ச்சிக்கிறதுக்கு...//

    ஐயோ! என்னங்க மேடம் குழந்தைகள் தினமும் அதுவுமா ஒரு குழந்தை பையன் மேல இப்படி ஒரு அபாண்டமான பழி...நான் எதோ இதுகளைச் செல்லமா கன்னத்துல தட்டி குடுத்ததைப் பாத்தே கலாய்ச்சேன்னு சொல்றீங்களே...இங்கே பாருங்க நம்ம நெலைமையை

    http://kappiguys.blogspot.com/2006/11/2.html

    இங்கே குமுறியிருக்காங்க பாருங்க...
    http://vettipaiyal.blogspot.com/2006/11/6.html

    இங்கே குமுறோ குமுறுன்னு குமுறியிருக்காங்க பாருங்க
    http://raamcm.blogspot.com/2006_11_01_raamcm_archive.html#116316262991442035

    இப்பவாச்சும் நான் அப்பாவின்னு நம்பறீங்களா?
    :(

    //இருந்தாலும் அந்த வண்டு எதோ
    விஷ(ம) வண்டு போல..

    யப்பா ஒரு வழி பண்ணீட்டீங்க... //

    நல்லா சொல்லுங்க மேடம்! இந்த ராயல் தொல்லை தாங்க முடியலை.

    ReplyDelete
  77. //ஐயோ! என்னங்க மேடம் குழந்தைகள் தினமும் அதுவுமா ஒரு குழந்தை பையன் மேல இப்படி ஒரு அபாண்டமான பழி...//

    இதை விட அபாண்டம் என்ன இருக்கு????

    ReplyDelete
  78. //இப்போ மாட்டினீய்யா!!! அப்போ நீதான் கடி வாங்கிருக்கே... அப்பிடி உண்மையே ஒத்துக்கோ!!!! ;)//

    இப்ப ஒரு பாட்டு தோணுது..."நீயும் நானுமா ராயல் நீயும் நானுமா?"

    ReplyDelete
  79. //இப்ப ஒரு பாட்டு தோணுது..."நீயும் நானுமா ராயல் நீயும் நானுமா?" //

    ஆமாம் நீயும் நானும்தான் இப்போ என்னா அதுக்கு????

    பேசுறது பூராவும் பொய்புரட்டு இதிலே இடையிலே வேறே சைடுமீயூச்சிக், சிட்டிவேசன் சாங்....

    ஐய்யோ கொடுமைய்யா சாமி!!!!

    ReplyDelete
  80. //இங்கே குமுறோ குமுறுன்னு குமுறியிருக்காங்க பாருங்க
    http://raamcm.blogspot.com/2006_11_01_raamcm_archive.html#116316262991442035

    இப்பவாச்சும் நான் அப்பாவின்னு நம்பறீங்களா?
    :(//

    இப்போ இந்த விளம்பரத்த நான் கேட்டனா முருகேசா?????

    //இருந்தாலும் அந்த வண்டு எதோ
    விஷ(ம) வண்டு போல..

    யப்பா ஒரு வழி பண்ணீட்டீங்க... //

    நல்லா சொல்லுங்க மேடம்! இந்த ராயல் தொல்லை தாங்க முடியலை. //

    ஹி ஹி நடந்த உண்மை என்னான்னா???? :-))))))))))))))

    ReplyDelete
  81. //இதை விட அபாண்டம் என்ன இருக்கு????//

    //பேசுறது பூராவும் பொய்புரட்டு இதிலே இடையிலே வேறே சைடுமீயூச்சிக், சிட்டிவேசன் சாங்....

    ஐய்யோ கொடுமைய்யா சாமி!!!!//

    தெரியுதில்ல? உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா ஒரு பழமொழியைச் சொல்லி ஆட்டத்தைக் க்ளோஸ் பண்ணிக்கிறேன்.

    "வாழு வாழ விடு"

    ReplyDelete