ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! சித்தூர்கட்லேருந்து அகமதாபாத்துக்கு வந்து ஒரு வாரம் ஆச்சுங்க. ஆறு மாசமா சாஃப்ட்வேர் கம்பெனில வேலை செய்றேன்னு தான் பேரு. படுபாவிங்க ஆறு மாசமும் வரப்பட்டிக்காட்டுலேயே ப்ராஜெக்ட்னு சொல்லி வறுத்து எடுத்துட்டானுங்க. இப்ப தான் மொதல் முறையா ஒரு நகரத்தில் தங்கும் வாய்ப்பு கெடச்சிருக்கு. ஆனா இங்கே வேறு விதமான மனிதர்கள், வேறு விதமான க்ளையண்ட், வேறு விதமான ப்ரச்சனைகள். சரி அதெல்லாம் இப்ப எதுக்கு? பதிவெல்லாம் போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீலிங். புதுசா எழுதறதுக்கு மேட்டர் ஒன்னும் இல்ல..."சித்தூர்கட் செலவு நிறைவு பகுதி" எழுதற அளவுக்கு இப்ப நேரமும் இல்ல. வெள்ளி கிழமை, தீபாவளிக்கு சென்னைக்கு வேற போவனும். அதுனால அப்படியே விட்டுட முடியுங்களா? மேட்டரே இல்லன்னாலும் சில த்ரீ மச் போட்டா படங்களை வச்சி ஒப்பேத்திடலாம்ங்கிற தெகிரியத்துல தொடங்கிட்டேன்.
அதுக்கு முன்னாடி அது என்ன பதிவு ஆரம்பத்துல 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா'? குஜராத்துக்கு வந்ததும் கவனிச்சது இங்கேயிருக்குற மக்கள், தங்களுக்குள்ளே வாழ்த்து சொல்லிக்கும் போது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா"ன்னு சொல்லிக்கிறத. நாம வணக்கம், குட் மார்னிங்(!) இதெல்லாம் சொல்றோமில்லியா அதே மாதிரி. எல்லாரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணான்னு சொல்லலைன்னாலும் நெறைய பேர் இப்படி சொல்லறதை இங்கே பாத்தேன். டெல்லியில என் கூட தங்கியிருந்த குஜ்ஜு(குஜராத்தி தான் சுருக்கமா குஜ்ஜு:D) பையன் கூட அவங்க வீட்டுலேருந்து போன் வரும் போதெல்லாம் ஹலோ சொல்றதுக்குப் "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா"ன்னு சொல்றதை கவனிச்சிருக்கேன். 'பி.கு'ன்னு பதிவோட கடைகோடியில போட்டுட்டு படிக்கிறவங்களுக்கு, கடைசியில வெளக்கம் குடுக்கற டார்ச்சர் ஒவ்வொரு வாட்டியும் வேணாமேன்னு தான் இந்த தடவை மொதல்லயே காரணத்தைச் சொல்லியாச்சு :)
கொஞ்சம் "தேநீர் நிறைய ஆகாயம்" அப்படின்னு தலைப்பு வைக்கனும்னு ஒரு நாள் காலங்காத்தால மூளை அலை(அதாங்க brainwave)அடிச்சு ஓஞ்சுச்சு. தேநீர் தெரிஞ்சதுன்னா ஆகாயம் தெரிய மாட்டேங்குது. ஆகாயம் தெரிஞ்சா தேநீர் தெரிய மாட்டேங்குது. சரி...நம்ம கெபாகிட்டிக்கு இம்புட்டுத் தான் நம்மால எடுக்க முடியும்னு நெனச்சி எடுத்த படம் இது. 'கொஞ்சம் தேநீர் கொஞ்சம் தார் ரோடு'ன்னு வேணா பேர் வைக்கலாம் :(
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், ஒரு செப்டம்பர் மாத காலை நேரம்.
கேமரா கையில இருந்துச்சுன்னா என்ன வேணா பண்ணலாமா? தார் ரோட்டு மேல ஊர்ந்து போற அட்டையை க்ளோசப்ல எடுத்ததுக்கப்புறம் எனக்கே ரொம்ப த்ரீ மச்னு தோனுன ஒரு படம்.
இடம் : நடு ரோடு, c/o.சித்தூர்கட், ஒரு செப்டம்பர் மாத ஞாயித்துக் கெழமை.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் இங்கெல்லாம் தங்குனீங்கன்னா, காலையில் நாஸ்தாவுக்கு பெரும்பாலும் கெடக்கிறது இது தான். போஹாவும் ஜிலேபியும். காலங்காத்தால டிபன்ல இனிப்பான்னு கேப்பீங்கன்னு தெரியும். ஏன்னா நானும் அப்படி கேட்டவன் தானே? சித்திரமும் கைப்பழக்கம் ஜிலேபியும் நாப்பழக்கம்னு பெரியவங்க தெரியாமலையா சொல்லிருக்காங்க? கெடச்சத தின்னனுங்கிறது தலையெழுத்துங்கிறதை தான் கொஞ்சம் மருவாதியா சொல்லிக்கிட்டேன். போஹாங்கிறது(Poha) அவல் உப்புமாங்க. அவலை தண்ணில லேசா அலசிட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் போட்டுத் தாளிச்சு எறக்கிட்டு அது மேல சேவு(Sev) (கிட்டத்தட்ட நம்ம ஓமப்பொடி மாதிரி இருக்கும், ஆனா its different) தூவி சாப்பிட வேண்டியது தான். வெங்காயத்தைப் பச்சையா நறுக்கி போஹா மேல தூவி சாப்பிடறவங்களும் உண்டு. இந்த போஹால, நீங்க உங்க கைவண்ணத்தை எப்படி வேணாலும் காட்டலாம். வேர்கடலை, உருளைக்கிழங்கு, மாதுளை, கொஞ்சூண்டு சர்க்கரை இப்படி எது வேணாலும் சேர்த்துக்கலாம்.
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், நாஸ்தா துண்ணற நேரம்
ஒரு மைனா எங்க ஃப்ளாட்டுல இருக்குற எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரத்துல கூடு கட்டிருந்துச்சு. ஒரு வைல்ட் லைஃப் போட்டாகிராஃபர் தங்கிருக்குற எடத்துல மைனா கூடு கட்டறது போட்டாகிராஃபர் தப்பா? நீங்களே சொல்லுங்க. அதான் மைனாவை(அட பறவைதாம்பா) தொரத்தி தொரத்தி படம் புடிச்சி தள்ளியாச்சு.
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், ஒரு ஒளி ஓவியர்(!!) தொழில் பண்ணற நேரம்
அக்கடான்னு நாங்க நடை போட்டா(கேட்வாக்)
அப்படி தான்...நேரா வா
ஏய் கழுதை! கழுத்தை எல்லாம் திருப்பாதே...படம் புடிக்கிறாங்கல்லோ?
டாய்! எவண்டா அவன் படம் புடிக்கிறவன்?
ஏய் வேணாம்! இத்தோட நிறுத்திக்குவோம்
பறந்து போகாம தில்லா போசு குடுக்கறதின் காரணம் என்னவோ?
மவனே! நான் இங்கே கூடு கட்டி இருக்கேன். புள்ளைங்கல்லாம் உள்ளே இருக்கு. அதுக மட்டும் இல்லன்னா உனக்கு ஆப்பு தாண்டி!
வாழைமரம் புதுசா குலை தள்ளியிருக்குன்னு அம்மா சொன்னதும், தோட்டத்துக்குப் போய் பாத்தா, வாழைப்பூ மேல(வடை ஆகறதுக்கு முன்னாடி) பெருசா வண்டு ஒன்னு ஒக்காந்துருந்துச்சு. சரி! நம்ம தம்பி தான் பாட்டனி, சுவாலஜின்னு தனித் தனியா +2வுல ப்யூர் சையின்ஸ் க்ரூப் எடுத்து படிச்சவனாச்சே அவனை கேட்டா இது என்ன வண்டுன்னு தெரியும்னு அவனை போய் கேட்டேன். "இது தான் ராணி தேனீ(Queen Bee)" அப்படின்னான். நாம +2ல 200 மார்க்குக்கு ஜுவாலஜி படிக்கலன்னாலும், நாம 50 மார்க்குக்கு முழிபிதுங்குன ஜுவாலஜி ப்ராக்டிகல்ல, நயிமுனிசா மிஸ் ரெகார்ட்ல தப்பு போட்டு "redraw" பண்ண சொன்ன ராணி தேனீ, ஜார்ல பாக்கும் போது இப்படியா இருந்துச்சு அப்படின்னு ஒரு டவுட். தோப்பனாருக்கு ஒரு வேளை தெரிஞ்சிக்கலாம்னு அவரைக் கேட்டதும் 'ராணி தேனீயெல்லாம் கூட்டை விட்டே வெளியே வராது.அதெல்லாம் எங்கே வாழைப்பூ மேல வந்து ஒக்காரப் போவுது'ன்னாரு.
அப்போ தான் வர்க்கர், குயின், ட்ரோன் அப்படின்னு ஹனிபீ அசோசியேஷன் பத்தி பயாலஜில படிச்சது லேசா நியாபகம் வந்துச்சு. தம்பி கிட்ட போய் "டேய்! வர்க்கர் பீ தாண்டா தேன் சேகரிக்கும். ராணி வெளியே வந்து தேன் எல்லாம் சேகரிக்காது"ன்னேன். அதுக்கு அவன் "ஒனக்கு ரொம்ப தெரியுமா? நீ மூணு மணி நேர பயாலஜி எக்சாம்ல வெறும் ஒன்னரை மணி நேரம் மட்டும் ஜுவாலஜி எழுதுனவன். நாங்கல்லாம் அதே ஜுவாலஜியை மூனு மணி நேரம் எழுதுனவங்க. எங்க கிட்டவே சவாலா? ப்ரெக்ணண்ட் ஆவுறதுக்கு முன்னாடி ராணி தேனீயும் வெளியே போய் தேன் சேகரிக்கும். நீ யாரா வேணா போய் கேட்டுப் பாரு"அப்படின்னு அடிச்சு விட்டான். எதோ எட்டாவது மாசம் வரைக்கும் தாராளமா ஆஃபிஸ் போலாங்கிற மாதிரி. இதை வேற நான் யாருகிட்ட கேக்கறது? எங்கேருந்து தான் எனக்கு மட்டும் இப்படி கதை சொல்ல ஒவ்வொருத்தனும் சந்து பொந்துலேருந்து எல்லாம் கெளம்பி வர்றானுங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். வெளியே இருக்குறவனுங்க தான் பல்பு குடுக்கறானுங்கன்னா வீட்டுல இருக்கறவனும் அப்படியா இருப்பான்? எல்லாம் நமக்குன்னே ஒக்காந்து யோசிப்பானுங்களோ?
ஐயயோ! அரசியல் பிரச்சாரம் எல்லாம் இல்லீங்கோ. போன தபா வூட்டுக்குப் போயிருந்த போது எல்.பி. ரோட்டுல நாய் ஒன்னு ஒக்காந்து இருந்துச்சு. அதை பாத்ததும் ஆர்.கே.நாராயணனோட மால்குடி டேஸ் டிவி தொடர் ஞாபகம் வந்துடுச்சு. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போதும் ஆர்.கே.நாராயணனோட தம்பி ஆர்.கே.லக்ஷ்மன்(ஹ்ம்ம்...அப்படியும் இருக்காங்க தம்பிங்க?) வரைஞ்ச கார்டூனோட சேர்த்து பேரு போடுவாங்க. அப்படி ஒரு கார்டூன்ல சோம்பலா நாய் ஒன்னு படுத்து கெடக்கும். மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு. சரி கார்டூன் போட முடியலைன்னாலும், நாமளும் ஒரு சோம்பேறி நாயைப் படம் புடிப்போம், வருங்கால சந்ததிகள் நம்மளைப் பாராட்டுங்கிற நம்பிக்கைல ஓடற ஆட்டோவுலேருந்து புடிச்ச படம் தான் கீழே. படம் எடுத்த நாயும் சோம்பேறியா இருந்ததுனால நடு செண்டருக்குப் பக்கத்துல வர வேண்டிய சோம்பேறி நாய், படத்துல ரைட் சைடு மூலையில குந்தியிருக்குது.
மால்குடி டேஸ் தொடர்ல எல்.வைத்தியநாதன் இசையமைச்ச "தாநானா நானா நனானா...னா..." அப்படிங்கிற பின்னனி இசை நமக்கு ரொம்ப புடிக்குமே, கேட்டு ரொம்ப நாளாச்சே? இணையத்துல எங்கேயாச்சும் கெடக்குமான்னு தேடுனேன். தேடுனது வீண் போகலை. அர்ஜுன் பிரபுவோட ப்ளாக்ல கெடச்சுது.
முதல்ல தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?
எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.
அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு....சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்.
அட என்னங்க இது, இந்த நாயா சோம்பேறி? சும்மா On your Mark, Ready, Set, Go.. போஸ்ல உட்கார்ந்திருக்கு.
ReplyDeleteசோம்பேறின்னா, அப்படியே நீநீஈஈட்டிப் படுத்து- வேற ஏரியா நாய் வந்தாலும்(உங்களைச் சொல்லைலைங்க) அதுபாட்டுல வந்துட்டுப் போகட்டுமேன்னு பெருந்தன்மையா- பெரிய லாரியே குறுக்க வந்தாலும் இப்பதைக்கு நகரறதா இல்லைங்கற மாதிரி மூஞ்சியை பரப்ரும்மமா வெச்சுகிட்டு, அரைக் கண்ணை மூடினாப்ல இருக்கணுங்க.
கைப்ஸ்...
ReplyDeleteபடம் எல்லாம் நல்லா இருக்கு.
இனிய திபாவளி வாழ்த்துக்கள்.
:-)
//தார் ரோட்டு மேல ஊர்ந்து போற அட்டையை க்ளோசப்ல//
ReplyDeleteஅட்டையை விட தார் ரோடுதான் நிறைய இருக்கு போட்டோவுல. தல, உங்க குசும்புக்கு அளவே இல்லை...
நல்லாயிருக்குங்க கைப்புள்ள.உங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteகைப்பு,
ReplyDeleteசூப்பரு. த்ரி மச் இல்ல சுவாமி. இப்படித்தான் இருக்கணும். routine life போட்டோக்களில் சில சமயம் ஆச்சரியப்படும்படியான டிடெயில்ஸ் கிடைப்பதுண்டு. மரவட்டை மாதிரி, இல்ல? போட்டோகிராபி பின்ன எப்படி கத்துக்கிறதாம்?
ஒரே விஷயத்தையே ஓராயிரம் தடவை எப்படிடா படம் புடிச்சு எங்களுக்கு டார்ச்சர் குடுக்கிறேன்னு எங்கம்மா அடிக்கடி கேப்பாங்க. இந்த மாதிரி வெட்டி போட்டோல்லாம் நூத்துக்கணக்குல இருக்கு.
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி வாழ்த்துக்கள் தலை...
ReplyDeleteபடம் எல்லாம் நல்லா வந்திருக்கு...
அலுவலக விஷயங்களை ஸமீபத்தில் 1975ல் என்று ஆரம்பித்து அறுப்பாய் என்று நினைத்தால் படம் / பாட்டு என்று போட்டு ஒப்பேத்திவிட்டீங்க...
சூப்பர்..
நீ ஒழுங்கா போட்டோ எடுக்காமல் நாயை தீட்டுவது கொஞ்சம் கூட நல்லா இல்ல, சொல்லிட்டேன். இந்த தடவை ஊருக்கு போகும் போது அந்த நாய் உன்ன கடிக்க....
ReplyDeleteஇந்த போட்டோ மேட்டர நானும் ஆரம்பிக்குறேன்........
Happy Diwali Mohaa :)
ReplyDeleteNuthing more to add now:)
கைப்புள்ள!
ReplyDeleteஎல்.வைத்தியநாதன், இதே போன்று மறுபக்கம் திரைப்படத்திலும் ஒரு இசைக்கோப்பு வைத்திருப்பார். படத்தில் பாடலே இல்லை. ஆனால் படம் பார்த்து முடியும் போது பல பாடல் கேட்டது போன்று தோன்றும்.
அதுசரி, அட்டைக்கு எத்தனை கால்னு சொல்லவேயில்ல..
வாழ்த்துக்கள்.!
This post is enjoyable.
ReplyDeleteHAPPY DIWALI TO ALL
சூஊஊஊஊப்பபபபபபபர் போஸ்ட், அதுவும் அந்த மைனா நல்லா போஸ் கொடுத்திருக்கு. இந்த குஜ்ஜுங்க "ஜெய ஸ்ரீகிருஷ்ணா" சொல்றதை நான் ஏற்கெனவே நுனிப்புல்லோட பதிவிலே ஒரு பின்னூட்டத்திலே சொல்லி இருக்கேன். (ஹிஹிஹி) உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் போனா, இன்னும் சொல்லப் போனா ராஜஸ்தானில் கூட, "ஜெய் ஸ்ரீராம்" அல்லது "ராம், ராம்" என்றோ சொல்வார்கள். குட்மார்னிங் அல்லது குட்நைட் எல்லாம் கிடையாது.
ReplyDeleteகரெக்டா வந்து,"உள்ளேன் ஐயா" சொல்லிட்டேன்.
தீபாவளி வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும். சபர்மதி ஆஸ்ரமம் போயிட்டு வாங்க. ஸ்வாமி நாராயண் கோவில், (அக்ஷர்தாம்) போயிட்டு வாங்க. அங்கே ஸ்வீட், ஊறுகாய் எல்லாம் விப்பாங்க. குஜ் ஊறுகாய் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.
கைப்பண்ணே...பண்டிகை நாள் வாழ்த்துகள்!!!
ReplyDelete//மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு.//
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?
//G.Ragavan said...
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு//
எய்யா...எழுத சோம்பேறித்தனப்பட்டு கிட்டு ஓமப்பொடியைச் சுத்தீட்டு இருக்கேன்;தொடர எல்லாம் எழுதச் சொன்னா எப்பிடி??
படம் எல்லாம் அருமையா வந்திருக்கு.
சொல்ல மறந்திட்டேனே...பின்னணி இசைக்கு நன்றீங்ணா...
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஊருக்கு வரதப்பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லலையே. என்னா மேட்டரு?
ஓமப்பொடியாரே, இது உமக்கே கொஞ்சம் ஓவராத்தெரியல? நம்ம தனிப்பட்ட பிரச்சினைய பேசித்தீர்க்குவோம்யா, சபையில சொல்லலாமா? வீட்டுக்கு வரும்போது இருக்குய்யா ஆப்பு.
ReplyDeleteகைப்ஸ்,
ReplyDeleteஇதுவே த்ரீ மச்சா?
நல்ல பதிவு :)
தீபாவளி வாழ்த்துக்கள்!
எப்படிப்பு இப்படியெல்லாம்..
ReplyDeleteபேக்ரவ்ண்டு மியுசிக் நல்லா இருக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Unga thambi ukkandu yosichada - neenga ukkandu ezhuthiteenga, rani theni tehn segarikuma illaya - manda kayudu -
ReplyDeleteHappy Diwali - adutha blogla badil sollunga
மைனாவை போட்டோ எடுக்கப் போனா சுவருதான் தெரியுது. என்ன போட்டோ எடுக்கறீரோ. ஆனாலும் பதிவு கவுண்டு ஏத்த இப்படி எல்லாமா? நல்லா இருங்கடா!!
ReplyDeleteஅப்புறம் நம்ம ராம்ஸு உ.கு. தெரியாமா அவருக்கு நன்றி எல்லாம் சொல்லாதே. நல்லா படிச்சுப் பாரு.
//இந்த மாதிரி 'வெட்டி போட்டோல்லாம்' நூத்துக்கணக்குல இருக்கு.//
ஹாஹாஹா!!
சரி வந்து உள்ளேன் ஐயா போட்டாச்சு. வரேன்.
தல உனக்கும் மகத்தான(great) மற்றும் மகிழ்ச்சிகரமான(happy) தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDelete//சித்திரமும் கைப்பழக்கம் ஜிலேபியும் நாப்பழக்கம்னு பெரியவங்க தெரியாமலையா சொல்லிருக்காங்க//
கரீட்டா சொன்ன போ...எனக்கும் இங்க வந்த புதுசுல டோனட்டு டோனட்டுனு ஒன்னு தான் நாஷ்டாக்கு கிடைச்சுது...பார்த்தா நம்ம ஊர் மெதுவடை மாதிரி கொஞ்சம் பெரிசா இருக்கு ஆகானு சாப்பிட்டு பார்த்த அப்புறம் தான் இனிப்புனு தெரிஞ்ச்சுது..என்ன பண்றது இப்பொ வாய்ப்பழக்கம் ஆகிபோச்சு... :-)
தல
ReplyDeleteயூ தி டீச் போட்டாகிராபி..ஐ வான் டு தி லர்னிங்க் ஆப் ஆர்ட் ஆப் போட்டாகிராபி..
அப்புறம்..மைனா முட்டைல ஆம்லெட் போட்டு சாப்பிட்ட மேட்டரை சொல்லாம விட்டுட்ட???
திருவான்மியூரா நீங்க? :)
ReplyDelete//முதல்ல தீபாவளி நல்வாழ்த்துகள்.//
ReplyDeleteதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
//அப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?//
நன்றி. Canon Digital Ixus 750. 7.1 Mega Pixel.
//எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.//
போகாவும் வயித்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஆகாரம் தாங்க. இந்தூர்ல இருந்த ஒன்னரை வருஷம் போகா சாப்பிட்டுத் தான் உயிர் வாழ்ந்தேன்.
//அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)//
ஆஹா :). தங்கள் சித்தம் என் பாக்கியம்.
//மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு....//
கண்டிப்பா. ஏற்கனவே நெறைய மால்குடி டேஸ் பத்தி எழுதிருக்காரு.
//சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. //
அந்த தொடர் பேரு இந்திரதனுஷ். ரொம்ப நல்லாருக்கும். எனக்கும் ரொம்ப புடிச்ச தொடர் அது.
//அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்//
கூகிளில் தேடிப் பார்த்தேன். மத்ததைப் பத்தி தெரியலை. ஆனா ஃபேரி டேல் தியேட்டர் டிவிடி அமேசான்.காம் தளத்தில் கிடைக்கிறது.
//அட என்னங்க இது, இந்த நாயா சோம்பேறி? சும்மா On your Mark, Ready, Set, Go.. போஸ்ல உட்கார்ந்திருக்கு.
ReplyDeleteசோம்பேறின்னா, அப்படியே நீநீஈஈட்டிப் படுத்து- வேற ஏரியா நாய் வந்தாலும்(உங்களைச் சொல்லைலைங்க) அதுபாட்டுல வந்துட்டுப் போகட்டுமேன்னு பெருந்தன்மையா- பெரிய லாரியே குறுக்க வந்தாலும் இப்பதைக்கு நகரறதா இல்லைங்கற மாதிரி மூஞ்சியை பரப்ரும்மமா வெச்சுகிட்டு, அரைக் கண்ணை மூடினாப்ல இருக்கணுங்க. //
வாங்கண்ணே! ரோட்டோரத்துல சும்மா ஒக்காந்துருக்கற நாயைச் சோம்பேறி நாயின்னும் சொல்லலாம், லேசி டாக்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.
நானே வெட்டித்தனமா எடுத்த ஒரு த்ரீமச் படத்தைப் போட மால்குடி டேஸ் அது இதுன்னு சொந்தமா திரைக்கதை எழுதி எதோ பொழப்பை ஓட்டிட்டு இருக்கேன். நீங்க வந்து இப்படி சோம்பேறி நாய்க்கு வெளக்கம் குடுத்து பொழப்பைக் கெடுக்கலாமா? இது நியாயமா? தர்மமா? இல்ல இது அடுக்குமா?
:)
//கைப்ஸ்...
ReplyDeleteபடம் எல்லாம் நல்லா இருக்கு.
இனிய திபாவளி வாழ்த்துக்கள்.
:-) //
நன்றி நன்மனம். இன்னும் அசர்பைஜான்ல தான் இருக்கீங்களா? எப்போ திரும்ப இந்தியா வரீங்க? தங்களுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
//அட்டையை விட தார் ரோடுதான் நிறைய இருக்கு போட்டோவுல. தல, உங்க குசும்புக்கு அளவே இல்லை... //
ReplyDeleteவாங்க சவுண்டு, அட்டையை இன்னும் க்ளோசப்ல எடுக்கனும்னா நான் ரோட்டுல படுத்துக்கிட்டுத் தான் எடுத்திருக்கனும். எதோ நாலு பேரு பாத்துட்டு "யாரோ கிறுக்குபய போலிருக்குடா"ன்னு சொல்லாம இம்புட்டுத் தான் என்னால எடுக்க முடிஞ்சது.
:)
//நல்லாயிருக்குங்க கைப்புள்ள.உங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள்//
ReplyDeleteவாங்க தானாரா, வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
//சூப்பரு. த்ரி மச் இல்ல சுவாமி. இப்படித்தான் இருக்கணும். routine life போட்டோக்களில் சில சமயம் ஆச்சரியப்படும்படியான டிடெயில்ஸ் கிடைப்பதுண்டு. மரவட்டை மாதிரி, இல்ல? போட்டோகிராபி பின்ன எப்படி கத்துக்கிறதாம்?//
ReplyDeleteநீங்க ஒருத்தராச்சும் ஊக்கம் குடுக்கறீங்களே. இனிமே இது மாதிரி பிளேடு போட தெம்பா இருக்கும்.
//ஒரே விஷயத்தையே ஓராயிரம் தடவை எப்படிடா படம் புடிச்சு எங்களுக்கு டார்ச்சர் குடுக்கிறேன்னு எங்கம்மா அடிக்கடி கேப்பாங்க. இந்த மாதிரி வெட்டி போட்டோல்லாம் நூத்துக்கணக்குல இருக்கு.//
நம்ம கதையும் அதே தான். ஆனா அது எல்லாத்தையு பாக்க யாருக்கும் பொறுமை இல்ல. நானே பாத்து பாத்து ஒரு ஒளி ஓவியன் உருவாகிறான்னு நெனச்சி சந்தோஷப் பட்டுக்குவேன்.
//இனிய தீபாவளி வாழ்த்துகள்! //
மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
//தீபாவளி வாழ்த்துக்கள் தலை...
ReplyDeleteபடம் எல்லாம் நல்லா வந்திருக்கு...//
மிக்க நன்றி செந்தழல் ரவி.
//அலுவலக விஷயங்களை ஸமீபத்தில் 1975ல் என்று ஆரம்பித்து அறுப்பாய் என்று நினைத்தால் படம் / பாட்டு என்று போட்டு ஒப்பேத்திவிட்டீங்க...
சூப்பர்.. //
ஹி...ஹி...ஒப்பேத்தல் பதிவு தானே இது.
:)
//நீ ஒழுங்கா போட்டோ எடுக்காமல் நாயை தீட்டுவது கொஞ்சம் கூட நல்லா இல்ல, சொல்லிட்டேன். இந்த தடவை ஊருக்கு போகும் போது அந்த நாய் உன்ன கடிக்க....//
ReplyDeleteஏம்ப்பா புலி! அப்பப்போ என்னை தொரத்திட்டு வந்து நீ கடிச்சி வைக்கிறது போதாதா? அந்த நாய் வேற என்னை கடிக்கணுமா? அதுல ஒனக்கு என்னப்பா அவ்ளோ சந்தோசம்?
//இந்த போட்டோ மேட்டர நானும் ஆரம்பிக்குறேன்........//
ரைட்டு...ஸ்டார்ட் மீஜிக்.
:)
//Happy Diwali Mohaa :)
ReplyDeleteNuthing more to add now:) //
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவ்.
//கைப்புள்ள!
ReplyDeleteஎல்.வைத்தியநாதன், இதே போன்று மறுபக்கம் திரைப்படத்திலும் ஒரு இசைக்கோப்பு வைத்திருப்பார். படத்தில் பாடலே இல்லை. ஆனால் படம் பார்த்து முடியும் போது பல பாடல் கேட்டது போன்று தோன்றும்.//
வாருங்கள் மலைநாடான்,
அப்படியா? நீங்கள் குறிப்பிட்டுள்ள அவ்விசையை நான் கேள்வி பட்டதில்லை. நீங்கள் அதை வர்ணித்துள்ள விதம் என் ஆர்வத்தையும் தூண்டி விட்டு விட்டது. அதை கேட்க முயல்கிறேன்.
//அதுசரி, அட்டைக்கு எத்தனை கால்னு சொல்லவேயில்ல..//
ஆஹா! நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? :))
//வாழ்த்துக்கள்.! //
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
//This post is enjoyable.
ReplyDeleteHAPPY DIWALI TO ALL
//
வாங்க அனானி,
மிக்க நன்றி
//ஹிஹிஹி) உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் போனா, இன்னும் சொல்லப் போனா ராஜஸ்தானில் கூட, "ஜெய் ஸ்ரீராம்" அல்லது "ராம், ராம்" என்றோ சொல்வார்கள். குட்மார்னிங் அல்லது குட்நைட் எல்லாம் கிடையாது.//
ReplyDeleteவாங்க கீதா மேடம்,
ரொம்ப கரெக்ட். அதே மாதிரி "ஜெய் ராம் ஜி கி"ன்னு கூட சிலர் சொல்லுவாங்க.
//தீபாவளி வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும். சபர்மதி ஆஸ்ரமம் போயிட்டு வாங்க. ஸ்வாமி நாராயண் கோவில், (அக்ஷர்தாம்) போயிட்டு வாங்க. அங்கே ஸ்வீட், ஊறுகாய் எல்லாம் விப்பாங்க. குஜ் ஊறுகாய் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். //
இன்னும் குஜராத்ல எதுவும் சுத்தி பாக்கலை. எல்லாம் தீபாவளி முடிஞ்சு திரும்ப போனதும் தான். தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்.
//கைப்பண்ணே...பண்டிகை நாள் வாழ்த்துகள்!!!//
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும் என் வாழ்த்துகள்.
//மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு.//
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?//
அட இல்லீங்க! சொன்னா நம்புங்க.
:)
//படம் எல்லாம் அருமையா வந்திருக்கு. //
//சொல்ல மறந்திட்டேனே...பின்னணி இசைக்கு நன்றீங்ணா...//
நன்றி...நன்றி...நன்றி.
:)
//தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஊருக்கு வரதப்பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லலையே. என்னா மேட்டரு? //
அட அதை தான் மொத பத்தியிலியே சொல்லிருக்கோமே சாமி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
//கைப்ஸ்,
ReplyDeleteஇதுவே த்ரீ மச்சா?
நல்ல பதிவு :)
தீபாவளி வாழ்த்துக்கள்! //
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி தம்பி.
//எப்படிப்பு இப்படியெல்லாம்..//
ReplyDeleteஅதெல்லாம் தானா வருது :))
//பேக்ரவ்ண்டு மியுசிக் நல்லா இருக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் //
ரொம்ப நன்றி மின்னல். தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
//Unga thambi ukkandu yosichada - neenga ukkandu ezhuthiteenga, rani theni tehn segarikuma illaya - manda kayudu -
ReplyDeleteHappy Diwali - adutha blogla badil sollunga //
வாங்க பாவை!
தங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அடுத்த ப்ளாக் என்ன இப்பவே சொல்றேன்...நீங்க கேட்டீங்கன்னு கூகிளில் தேடினேன். டாக்டர் சீனிவாசன்ங்கிறவரு திண்ணைல இதைப் பத்தி கட்டுரை எழுதிருக்காரு. அவரு சொல்றதை எல்லாம் பாத்தா தேன் சேகரிக்கற வேலை எல்லாம் வேலைக்கார தேனீ(Worker) தான் செய்யும் போலிருக்கு.
இங்கே பாருங்களேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40405132&format=html
//மைனாவை போட்டோ எடுக்கப் போனா சுவருதான் தெரியுது. என்ன போட்டோ எடுக்கறீரோ. ஆனாலும் பதிவு கவுண்டு ஏத்த இப்படி எல்லாமா? நல்லா இருங்கடா!!
ReplyDeleteஅப்புறம் நம்ம ராம்ஸு உ.கு. தெரியாமா அவருக்கு நன்றி எல்லாம் சொல்லாதே. நல்லா படிச்சுப் பாரு. //
ஹ்ம்ம்ம்...எனக்கு அளுவாச்சி அளுவாச்சியா வருது :((
//இந்த மாதிரி 'வெட்டி போட்டோல்லாம்' நூத்துக்கணக்குல இருக்கு.//
ஹாஹாஹா!! //
மருந்தே வெட்டி போட்டோ எல்லாம் எடுக்கறாருன்னு சந்தோசப் பட்டுக்கிட்டேன் கொத்ஸ்.
//சரி வந்து உள்ளேன் ஐயா போட்டாச்சு. வரேன். //
நாரதர் வேலை முடிஞ்சிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க?
:)
//தல உனக்கும் மகத்தான(great) மற்றும் மகிழ்ச்சிகரமான(happy) தீபாவளி வாழ்த்துக்கள்...//
ReplyDeleteநன்றி ஸ்யாம். உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.
//கரீட்டா சொன்ன போ...எனக்கும் இங்க வந்த புதுசுல டோனட்டு டோனட்டுனு ஒன்னு தான் நாஷ்டாக்கு கிடைச்சுது...பார்த்தா நம்ம ஊர் மெதுவடை மாதிரி கொஞ்சம் பெரிசா இருக்கு ஆகானு சாப்பிட்டு பார்த்த அப்புறம் தான் இனிப்புனு தெரிஞ்ச்சுது..என்ன பண்றது இப்பொ வாய்ப்பழக்கம் ஆகிபோச்சு... :-) //
வட இந்தியாவுலே போகா ஜிலேபி, அமெரிக்காவுல டோநட்ஸ். கககபோ.
:)
//யூ தி டீச் போட்டாகிராபி..ஐ வான் டு தி லர்னிங்க் ஆப் ஆர்ட் ஆப் போட்டாகிராபி..//
ReplyDeleteஅட என்னப்பா! பெரிய தலைங்க எல்லாம் இருக்காங்க...என்னைய போயி கேட்டுக்கிட்டு. இந்த தளத்தைப் பாத்தியா?
http://anandvinay1.blogspot.com
//அப்புறம்..மைனா முட்டைல ஆம்லெட் போட்டு சாப்பிட்ட மேட்டரை சொல்லாம விட்டுட்ட??? //
ஆமாய்யா! அது ஒன்னு தான் குறைச்சல்? ஏற்கனவே அந்த மைனா படம் புடிச்ச என்னைய ஒரு மார்க்கமாத் தான் பாத்துச்சு. முட்டையை எடுக்க பொந்துல கையை விட்டுருந்தேன்...எதுனா வெவகாரமாத் தான் ஆகியிருக்கும்.
//திருவான்மியூரா நீங்க? :) //
ReplyDeleteவா பாப்பா!
படு ஸார்ப்பா இருக்கியே?
:)
i will read ur blog and comment later. For now,
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள
புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போ்கனும் :)
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
-Arun
// //மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு.//
ReplyDeleteஎன்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //
பண்ணீட்டாலும்............ஒடனே நாலு பதிவு போட்டுறப் போறீரா என்ன?
// //G.Ragavan said...
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு//
எய்யா...எழுத சோம்பேறித்தனப்பட்டு கிட்டு ஓமப்பொடியைச் சுத்தீட்டு இருக்கேன்;தொடர எல்லாம் எழுதச் சொன்னா எப்பிடி?? //
அப்ப நீங்க எழுதிக்கிட்டிருக்குற பெங்களூர் பிறந்த கதை தொடரை எப்போ வலையேற்றம் செய்யப் போறீங்க? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...சொல்லீருக்கக் கூடாதுல்ல... :-)
// October 20, 2006 12:23 PM
ReplyDeleteகைப்புள்ள said...
//அப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?//
நன்றி. Canon Digital Ixus 750. 7.1 Mega Pixel. //
பிரமாதம் மைனைப்பட கைப்சே!
// //எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.//
போகாவும் வயித்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஆகாரம் தாங்க. இந்தூர்ல இருந்த ஒன்னரை வருஷம் போகா சாப்பிட்டுத் தான் உயிர் வாழ்ந்தேன். //
அப்படியா? நான் இன்னமும் போகப் பக்கம் போகா ஜிரா-தான்.
// //அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)//
ஆஹா :). தங்கள் சித்தம் என் பாக்கியம். //
மேல பாருங்க...ரெண்டு வாட்டி அந்தப் பேர வெச்சி ஒங்களக் கூப்பிட்டிருக்கேன்.
// //சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. //
அந்த தொடர் பேரு இந்திரதனுஷ். ரொம்ப நல்லாருக்கும். எனக்கும் ரொம்ப புடிச்ச தொடர் அது.//
அதானய்யா...இந்திரதனுசு...சொல்லீட்டீரே....ஒம்ம அறிவும் அழகும்....அடடா! அப்படியே கன்னி வேட்டை படத்துல வர்ர கமலப் போலவே இருக்கு :-)
// //அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்//
கூகிளில் தேடிப் பார்த்தேன். மத்ததைப் பத்தி தெரியலை. ஆனா ஃபேரி டேல் தியேட்டர் டிவிடி அமேசான்.காம் தளத்தில் கிடைக்கிறது. //
ஐயா.....அந்த லிங்க்கக் குடுங்கையா....எங்க பய ஒருத்தன் அடுத்த மாசம் அமெரிக்காவுல இருந்து வர்ரான்...அவங்கிட்ட வாங்கியாரச் சொல்லனும். லிங்க்கு..லிங்க்கு.
நூபுர் நாடகத்துல எல்லாம் இந்திதான் பேசுவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. ஆனா நடுநடுவுல ஏமமாலினி "அம்மா உப்புமா கொண்டா"...."ஐயோ கீழு விழுந்திருச்சு பாரு"ன்னு எண்ணி ஒரே ஒரு வசனம் ஒவ்வொரு எபிசோடுலயும் பேசுவாரு. அதுக்காக் காத்திருந்து பாப்பேன்.
//அதானய்யா...இந்திரதனுசு...சொல்லீட்டீரே....ஒம்ம அறிவும் அழகும்....அடடா! அப்படியே கன்னி வேட்டை படத்துல வர்ர கமலப் போலவே இருக்கு :-)//
ReplyDeleteபோங்கண்ணே! எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது :)
//ஐயா.....அந்த லிங்க்கக் குடுங்கையா....எங்க பய ஒருத்தன் அடுத்த மாசம் அமெரிக்காவுல இருந்து வர்ரான்...அவங்கிட்ட வாங்கியாரச் சொல்லனும். லிங்க்கு..லிங்க்கு.//
ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு சிடி இருக்கு போல...ஸ்லீப்பிங் பியூட்டி ஃபேரி டேலுக்கான உரல் இதோ.
http://www.amazon.com/Faerie-Tale-Theatre-Sleeping-Beauty/dp/B00061UHWE
//நூபுர் நாடகத்துல எல்லாம் இந்திதான் பேசுவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. ஆனா நடுநடுவுல ஏமமாலினி "அம்மா உப்புமா கொண்டா"...."ஐயோ கீழு விழுந்திருச்சு பாரு"ன்னு எண்ணி ஒரே ஒரு வசனம் ஒவ்வொரு எபிசோடுலயும் பேசுவாரு. அதுக்காக் காத்திருந்து பாப்பேன். //
உண்மை தான். இந்தி நாடகத்துல இல்ல இந்தி படத்துல தமிழைக் கேக்கறதும் ஒரு ஜாலி தான். 'ஏக் துஜே கே லியே' படத்துல கமல் ஒரு பாட்டு நடுவுல் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"ன்னு சொல்லறதை கேக்க, அப்பல்லாம் சித்ரஹார்ல அந்த பாட்டு வருதா வருதான்னு பாத்துக்கிட்டு இருப்பேன்.
கைப்பு,
ReplyDeleteஅது அட்டை பூச்சி இல்லன்னு நினைக்கிறேன்.....மரவட்டை பூச்சின்னு எங்க ஊருல சொல்லுவாக..