காட்சி 6 : டிசிபி ராகவன் பேசறேன்
டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...
டெலிபோன் மணி போல சிரிக்கிறது சாட்சாத் டெலிபோன் மணியே தான்.
"ஹலோ"
"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"......"
"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"மீ டூ"
"என்னது மீ டுவா? நான் டிசிபி ராகவன் பேசறேன்னு சொன்னேன்".
"ஏன் நீங்க டிசிபி ராகவனாயிருக்கும் போது,
டிசிபியோட அப்பாவும் ஒரு டிசிபியா இருக்கக் கூடாதா?"
கேட்சி தி பாயிண்ட் ஆச்சே. என்ன சொல்ல முடியும்? கப்சிப்...
"சரிங்க டிசிபி...சென்னை சிட்டியில சட்டம் ஒழுங்கு எல்லாம் எப்படியிருக்கு"
"மொதல்ல சல்யூட் அடி...நீ மொதல்ல சித்தூர்கட் ஜூரிஸ்டிக்சனைப் பத்தி சொல்லு"
"நீங்களும் டிசிபி...நானும் டிசிபி. ரெண்டு பேருக்கும் ஒரே நம்பர் ஆப் ஸ்டாரு. நமக்குள்ள எதுக்குங்க சல்யூட்"
"இருந்தாலும் நான் சீனியரு..."
"கும்ட்டுக்கறேன் ஐயா! செக் எழுதி அனுப்பி இருக்கேன். கொஞ்சம் சின்ன டிசிபி கிட்ட சொல்லி உங்க வூட்டாண்ட எதனா டிராப் பாக்ஸ்ல போட்டுட சொல்லுங்க. இந்த ஊருல டிராப் பாக்ஸ் எங்கே இருக்குன்னு தேடி கண்டுபுடிக்கிறதுக்குள்ள டியூ டேட்டே முடிஞ்சுடும் போலிருக்கு"
"சரி. போட்டுட சொல்றேன். என்ன சாப்பிட்டியா?"
"ஊஹும் இனிமே தான்"
"சரி இருப்பா...ஒரு ரெண்டு வார்த்தை ஏட்டம்மாவோடயும் பேசிடு...போன் பக்கத்துலயே நிக்கிறாங்க, இல்லன்னா அப்பனும் புள்ளயும் மட்டும் பேசிட்டு வச்சிட்டீங்களான்னு என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க"
"ஹலோ"
"நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"என்ன திடீர்னு டிஜிபி?"
"டிஜிபி இல்ல டிசிபி"
"எதோ ஒன்னு. இப்ப என்ன திடீர்னு?"
"வேட்டையாடு விளையாடு பாத்ததுலேருந்து போலீஸ் ஆபீசர் ஆகறதுன்னு முடிவு பண்ணிட்டேன்"
"என்னது முடிவு பண்ணிட்டியா? ஏன் எதாவது லஞ்சம் கிஞ்சம் வாங்கப் போறியா?"
"நான் சீரியஸாத் தான் சொல்றேன்! ஒரு நேர்மையான போலீஸ் ஆபிஸர் ஆகப் போறேன். அதுக்கப்புறம் கிரைம்னா கிலோ என்ன வெலைன்னு கேக்கப் போறீங்க பாருங்க!"
"உக்கும். ஒனக்கும் ஒன் தம்பிக்கும் என்ன படம் பாக்குறீங்களோ அதுல எவன் என்ன பண்ணறானோ அந்த மாதிரியே ஆவனும்...அவனுங்க பண்ணற மாதிரியே பண்ணனும். அப்போலேருந்து இப்ப வரைக்கும் சினிமா படத்தப் பாத்துட்டு ஏர்போர்ஸ் பைலட்டு, ப்ளாக் கேட், போலீசு, ஆட்டோகாரன், பால்காரன், மாடு மேய்க்கிறவன், பைக் ஓட்டறவன்னு நீங்களும் தான் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கதை சொல்றீங்க. அதையெல்லாம் இத்தனை நாளா நாங்களும் கேட்டுட்டு தானே இருக்கோம்?"
"சரிடா மகனே! ஒரு போலீசு ஆபிசர் ஆகு, கொடியவர்களைப் போய் பந்தாடுன்னு வெற்றித் திலகம் வச்சு வழியனுப்புறீங்களா? எப்ப பாத்தாலும் இத மாதிரி எதாச்சும் தடை சொல்லி தடை சொல்லித் தான் எங்க கனவு கோட்டையெல்லாம் இடிஞ்சு நாசமாப் போச்சு. சின்ன வயசுல நீங்க எங்க ஆசைகளைப் பாத்து எள்ளி நகையாடாம இருந்துருந்தா நாங்க அப்பவே பைலட்டோ இல்ல போலீசோ ஆயிருப்போம்"
"சரிடா மகனே! போலீசு ஆகி நல்லா லஞ்சம் வாங்கு"
"அம்மா. சும்மா இப்பிடி நக்கல் தான் பண்ணுவீங்க?"
"(சிரிச்சிக்கிட்டே)பின்ன என்ன பண்ண சொல்றே? இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் போலீஸ் ஆவறதுக்கு எதுக்கு டெல்லியில போய் படிச்சுட்டு இப்போ ஜெய்பூர்ல ஒக்காந்து போய் வேலை செஞ்சிட்டு இருக்குறியாம்? ஓடியாடற வழியைக் காணோம். இதுல போலீஸ் ஆயி என்னத்தப் பண்ணப் போறீங்களோ? தொப்பை இருந்துட்டா மட்டும் போலீசு ஆயிட முடியாது கண்ணா...இப்பல்லாம் போலீசு காரங்களையே நெறைய எக்சர்சைஸ் பண்ணச் சொல்றாங்களாம்".
"மொதல்ல பெத்த மகன் வேலை செய்யிற ஊரு பேரைச் சரியாச் சொல்லுங்க"
"நாங்க படிச்ச மூணாப்புக்கெல்லாம் எங்களுக்கு அவ்வளவு தான் வரும். சரி! இவ்வளவு வயசுக்கு அப்புறம் எப்படி போலீசுல சேருவே?"
"படிப்படியா ஒழைச்சு முன்னேறி தான். சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி, அண்ணாமலை ரஜினி மாதிரி"
"படிப்படியான்னு சொல்லிட்டு கான்ஸ்டபிள், ஏட்டு, சப் இன்ஸ்பெக்டர் எல்லாம் ஆகாமயே நேரா டிஜிபி ஆவப் போறேங்கிறே?"
"ஐயோ! எப்பவும் சின்னதாவே யோசிங்க"
"சரி! நீ டிஜிபியோ டிசிபியோ ஆனதும் அப்படியே என்னையும் ஒரு சிஐடி ஆக்கிடு"
"புள்ள வேலை செய்யிற ஊரு சித்தூர்கட்டையே ஜெய்ப்பூர்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு எஜிகேசன்ஸ் பத்தாது. உங்க வூட்டுல இருக்காரே எங்கப்பாரு...சென்னை சர்க்கிள் டிசிபி, அவரு சொன்ன ஏட்டு போஸ்டே ஒங்களுக்கு அதிகம். இந்த அழகுல சிஐடி கேக்குதா சிஐடி?"
"போலீசே ஆவலை அதுக்குள்ளவே ஒங்களுக்கு இந்த பந்தா..."
"அம்மா திடீர்னு எனக்கு ஒரு மெகா ஐடியா வந்துருக்கு... நாம ஏன் குடும்பத்தோட போலீசு வேலைல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யக் கூடாது?"
"குடும்பத்தோடவா?"
"ஆமா...குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு. குடும்பத்தோட போலீஸ் ஆனா தப்பில்லை"
"மொதல்ல நீங்க டிஎஸ்பி ஆவுங்க...அப்புறம் நாங்க போலீஸ்ல சேர்றதைப் பத்தி யோசிக்கிறோம்"
"ஒன்னு டிஜிபிங்கிறீங்க இல்ல டிஎஸ்பிங்கிறீங்க...ஒங்களுக்கு மனசுக்குள்ள என்ன தெனாலி பட ரமேஷ் கண்ணான்னு நெனப்பா?"
"(சிரிச்சிக்கிட்டே)அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. போலீஸ்ல நான் சேர்ந்துட்டா, ஒன் தம்பிக்கும் ஒங்க டாடிக்கும் போலீஸ் டிஐஜி வந்து சமைச்சுப் போடுவாரானு சொல்லு...ஒக்காந்த எடத்துலேருந்தே அதை கொண்டாங்க இத கொண்டாங்கன்னு வேலை வாங்குறானே ஒன் தம்பி அவனுக்கு வேலை செய்ய யாராவது இன்ஸ்பெக்டர் வருவாங்களான்னு சொல்லு. நான் இப்பவே போலீஸ்ல சேந்திடறேன்?"
"கொஞ்சமாச்சும் நாட்டு மேலயும் இந்த சமுதாயத்து மேலயும் உங்களுக்கு அக்கறை இருக்குதா. எப்ப பாத்தாலும் சமைக்கிறதும், சாப்பிடறதுலயுமே இருங்க. ராஜஸ்தான்லேருந்து ரோமிங்ல எஸ்டிடி போட்டு பேசிட்டு இருக்குறேன்...இப்பிடி கிண்டல் பேச்சு பேசிட்டு இருக்கீங்களே?"
"இருக்குற வேலை எல்லாத்தயும் வுட்டுட்டு ராஜஸ்தான்லேருந்து எஸ்டிடி போட்டு, போலீஸ் ஆகப் போறேன்னு நீ பிளேடு போட்டுட்டு இருக்கே...உன் கிட்ட எப்பிடி பேசுவாங்களாம்?"
"இப்ப கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் அதோ போறாங்க பாரு பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மா...அவங்க தான் டிசிபி ராகவனோட அம்மான்னு ஊருல எல்லாரும் பெருமையாப் பேசத் தான் போறாங்க...நீங்களும் பாக்கத் தான் போறீங்க"
"மொதல்ல உங்க தொப்பையைத் தூக்கிட்டு ஓடிப் போயி நாலு திருட்டுப் பசங்களைப் புடிச்சி காட்டுங்க...அப்புறம் பாக்கலாம்"
சே! யாருமே என்னைய புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்குளே? சின்ன வயசுல "இது தாண்டா போலீஸ்" பாத்துட்டு போலீஸ் ஆகனும்னு வந்த ஆசை, இப்ப "வே.வி." பாத்ததும் திரும்ப வந்து நம்மளை கவ்விக்கிச்சு. ஆனாலும் இந்த வாட்டி போலீஸ் ஆகாம வுடறதில்லைன்னு டிசிபி ராகவரு உறுதியா இருக்காருங்க. இளா, அமுதன்னு பேரு வச்சிட்டு திரியறவிங்கிய எல்லாம் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருந்துக்கங்கப்பு. கோவத்துல போட்டுற கீட்டுற போறேன்? அப்ப மேலே படிச்ச நக்கலும், கிண்டலும் என்னான்னு கேக்கறீங்களா...அது "Another episode in a Police Officer's Life"
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. "கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிவை தூக்கி மனையில வையின்னு"
ReplyDeleteஅதுதான் ஞாபகத்து வந்தது.
/இளா, அமுதன்னு பேரு வச்சிட்டு திரியறவிங்கிய எல்லாம் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருந்துக்கங்கப்பு.//
ReplyDeleteஇந்த ஒரு பாயிண்டை வெச்சுக்கிட்டுதான் இந்த பில்ட் அப்பு. என்னடா யாரும் என்னை இன்னும் கலாய்க்கிலையேன்னு நினைச்சேன். வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க..
ஆமா அந்த அசிஸ்டன்ட் டிஐஜி வேலை இருந்தா நம்ம குவாட்டருக்கு ரெக்கமண்ட் பன்னேம்பா?
ReplyDeleteவழக்கம் போல தடிப்பசங்க கலக்கல் எபிசோட். நல்ல வேலை வே.வி பார்த்தீங்க அந்நியன் பார்த்திருந்தா கொஞ்சம் கஷ்டம்தான். :)
ReplyDeleteகலக்குறீங்க
ReplyDelete''ஆமா...குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு. குடும்பத்தோட போலீஸ் ஆனா தப்பில்லை"
ReplyDeleteஆஹா... கருத்து வழியுது, பாத்து தல.
லியோ சுரேஷ்
துபாய்
//அந்நியன் பார்த்திருந்தா கொஞ்சம் கஷ்டம்தான்//
ReplyDeleteநம்ம ஊர் அம்மணிக்கு கொஞ்சம் லொல்லு ஜாஸ்த்தியாப் போயிடுச்சு போல இருக்கே
//இந்த ஒரு பாயிண்டை வெச்சுக்கிட்டுதான் இந்த பில்ட் அப்பு.//
ReplyDeleteஇதையே தான இம்புட்டு நாளா பண்ணிக்கிட்டு இருக்கோம்? புதுசா இப்ப என்ன கேள்வி?
:)
//ஆமா அந்த அசிஸ்டன்ட் டிஐஜி வேலை இருந்தா நம்ம குவாட்டருக்கு ரெக்கமண்ட் பன்னேம்பா?//
ReplyDeleteவாங்க பல்லவப் பேரரசே!
அதுக்கென்ன? பண்ணிட்டாப் போச்சு. ஆனா இப்போதைக்கு நீங்க கேக்குற பதவி காலி இல்லியாம். ஒரு கமிஷனர் பதவி தான் இருக்குதாம். செல்லுமான்னு குவாட்டரைக் கேட்டுச் சொல்லுங்க.
//நல்ல வேலை வே.வி பார்த்தீங்க அந்நியன் பார்த்திருந்தா கொஞ்சம் கஷ்டம்தான். :)//
ReplyDeleteவாங்க அனுசுயா,
உண்மை தான். அந்நியன் எல்லாம் சொன்னா கலாய்க்க சான்ஸு நெறைய இருக்குதுல்ல? அதனால "அம்மா நான் அந்நியன் ஆகப் போறேன்"னு எல்லாம் நாங்க சொல்ல மாட்டோம்ல?
:)
//கலக்குறீங்க//
ReplyDeleteவருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவஞானம்ஜி
//ஆஹா... கருத்து வழியுது, பாத்து தல.
ReplyDeleteலியோ சுரேஷ்
துபாய் //
வாங்க லியோ,
அப்போ இதுக்குப் பேரு கருத்துங்கறீங்க? அப்பப்போ வழிய விட்டு கருத்து கந்தசாமின்னு பேர் எடுத்துடறேன்.
:)
//நம்ம ஊர் அம்மணிக்கு கொஞ்சம் லொல்லு ஜாஸ்த்தியாப் போயிடுச்சு போல இருக்கே//
ReplyDeleteஅது தான்யா நம்ம மண்ணோட மகிமை! அதை கூட புரிஞ்சிக்காம என்னாத்த வெவசாயம் பண்ணறீங்களோ?
அனுசுயா, நீங்களும் வெவசாயியும் ஒரே ஊருங்களா? உங்க ஊரு பக்கம் ""கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிவை தூக்கி மனையில வையின்னு" பழமொழி சொல்லுவாங்களாமே? இதப் படிச்சிப் பாத்துட்டு இந்தாளு என்னை பாராட்டிருக்குறாரா திட்டிருக்குறாரான்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க.
:)
//Comment Deleted
ReplyDeleteThis post has been removed by the author.
September 03, 2006 10:36 AM //
அம்மே! எண்டே அம்மே! மலையாள பகவதீ! எம் பொழப்புல மண்ணள்ளிப் போடற இந்த வேலையைச் செஞ்சது யாராருந்தாலும் அவன் ஒரு ரெண்டே முக்கால் லிட்டர் ரத்தம் கக்கணும் அம்மே.
//குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு. குடும்பத்தோட போலீஸ் ஆனா தப்பில்லை"//
ReplyDeleteஅண்ணாச்சி, குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு.. குடும்பத்தோட போலிசுக்குப் படிச்சா தப்பில்ல.. - இது எப்படி :) - ஹி ஹி.. சும்மா.. தடிப் பசங்களைப் படிச்ச எபெக்டு... :))
//கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிவை தூக்கி மனையில வையி//
நம்ம இளா என்ன சொல்ல வர்றார்னா.. தேவ், சிவா மாதிரி தொண்டர்கள் இருக்கும் போது, நீங்க எப்போவுமே இளாவை மட்டும் தான் கலாய்க்கிறீங்களாம்.. அதான் கிழவனைத் தூக்கி மணையில் வைக்கறீங்கன்னு சொல்றாரு.. அப்படித் தானேங்க இளா? :)
//அம்மே! எண்டே அம்மே! மலையாள பகவதீ! எம் பொழப்புல மண்ணள்ளிப் போடற இந்த வேலையைச் செஞ்சது யாராருந்தாலும் அவன் ஒரு ரெண்டே முக்கால் லிட்டர் ரத்தம் கக்கணும் அம்மே.
ReplyDelete//
கைப்ஸ், நல்லா பாருங்க. அது இளா தான்.. கொஞ்சம் பயந்துட்டாரு.. போனாப் போகுது விட்ருங்க :)
//அண்ணாச்சி, குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு.. குடும்பத்தோட போலிசுக்குப் படிச்சா தப்பில்ல.. - இது எப்படி :)//
ReplyDeleteசூப்பரு. இது நமக்குத் தோணாமப் போச்சே? இதுக்குத் தான் எதுகை மோனை தெரிஞ்ச ஒரு தங்கச்சி வேணுங்கிறது?
:)
//தேவ், சிவா மாதிரி தொண்டர்கள் இருக்கும் போது, நீங்க எப்போவுமே இளாவை மட்டும் தான் கலாய்க்கிறீங்களாம்.. அதான் கிழவனைத் தூக்கி மணையில் வைக்கறீங்கன்னு சொல்றாரு.. அப்படித் தானேங்க இளா? :)//
வெவசாயி! அப்படியாங்க?
//கைப்ஸ், நல்லா பாருங்க. அது இளா தான்.. கொஞ்சம் பயந்துட்டாரு.. போனாப் போகுது விட்ருங்க :) //
ReplyDeleteடேங்ஸ் பொன்ஸு :)
மலையாள பகவதி அம்மே! இஞ்ஞும் ஒரு ரிக்வெஸ்ட். ரத்தம் கக்கப் போறது நமக்கு வேண்டப்பட்டவருங்கிறதால ஓணம் பண்டிகை காலச் சிறப்புத் தள்ளுபடியா ரெண்டே முக்கால் லிட்டர்ல ஒரு 0.25% டிஸ்கவுண்ட் குடுத்தெங்கில் மதி.
:)
//ரெண்டே முக்கால் லிட்டர்ல ஒரு 0.25% டிஸ்கவுண்ட் குடுத்தெங்கில் மதி.//
ReplyDeleteகைப்ஸ், என்ன இருந்தாலும் .25% கொஞ்சம் அதிகமாத் தெரியுது... .00005% போதாது? :)))))
//கைப்ஸ், என்ன இருந்தாலும் .25% கொஞ்சம் அதிகமாத் தெரியுது... .00005% போதாது? :)))))//
ReplyDeleteஐயோ! வெவசாயி என்னைய மன்னிச்சிடுங்க. மலையாள பகவதியே வந்து கமெண்டு போடறதைப் பாத்தா உங்க நெலமை கொஞ்சம் கவலைக்கிடம் மாதிரி தான் தெரியுது.
:)
பாயச்சுதுல ஏலம் போடுவாங்க
ReplyDeleteபொங்கல்ல ஏலம் போடுவாங்க
கற்கண்டுச் சோத்துல ஏலம் போடுவாங்க
லட்டுல ஏலம் போடுவாங்க
ஏலக் கடையில கூட ஏலம் போடுவாங்க
நீங்க என்னடான்னா இந்தப் பதிவுல ஏலம் போட்டுருக்கீங்களே! அதுவும் என்னோட பேரை! என்ன துணிச்சல்.
//
ReplyDeleteஆஹா... கருத்து வழியுது, பாத்து தல.
லியோ சுரேஷ்
துபாய்
//
கருத்து தானே வழியட்டுமே..
ரத்தம் வழியும் போதெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இப்ப வந்து பாத்து தல னு சொன்னா எப்படி.???
கருத்தும் வழியுது இப்படில இருக்கனும்.::))))
//கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிவை தூக்கி மனையில வையின்னு//
ReplyDeleteசித்தூர்கட்ல ஏதோ சோத்துக்கு வழி கிடக்குது, அட உட்டுபுட்டு போலீஜ் ஆவறேன், ஏட்டு ஆவறேன்னு கதை சொல்லி "உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணா" ங்கிற மாதிரி ஆகிறப்போவுது.
முத பின்னூட்டத்தை நாமதான் போட்டுட்டு எடுத்தோம். அதுக்கு ரத்தம் கக்கனுமா? என்னாங்கடா அநியாயம் இது? அதுக்கு discoount வேறையா? பொன்ஸூ பார்த்துக்குங்க. இதுக்கு நீங்களே நியாயம் சொல்லுங்க. அந்த பின்னூட்டத்தை எடுக்காம இருந்தா உன் பொழப்பு நாறியிருக்கும் பரவாயில்லையா?
ReplyDelete//வெவசாயி! அப்படியாங்க? //
ReplyDeleteஐயையோ, அதுக்கு அது அர்த்தமில்லீங்க பொன்ஸ். நீங்க வேற தனியா கொலுத்திப்போடாதீங்க. அவுங்க அவுங்க தனித்தனியா பதிவு போட்டு மானத்தை வாங்கிறப்போறாங்க.
"என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே"
பச்ச குத்துற மேட்டருக்கு இங்கே இருக்கு விளக்கம்,பின்னூட்டத்துல
ReplyDeleteநம்ம ராசுக்குட்டி ஒரு கேள்வி கேட்டு இருப்பாரு. ஐயா, கைப்பு நாம் கொஞ்ச நாள் பதிவுலகத்தி விட்டு வெளியே போலாம்னு முடிவு பண்ணி பதிவெல்லாம் கூட போட்டாச்சு. திரும்பவும் வர வெக்கிறீங்களே சாமி.
ReplyDeleteசங்கத்துல ராசா வேற நான் ஏன் வெளியே போகிறேன் அப்படிங்கிறதுக்கு விளக்கம் எல்லாம் வேற குடுத்து இருக்காரு. பாருய்யா! நம்மள விட்டுருய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னோட பதிவுக்கே நான் இன்னும் பதில் போடல, உங்களோட பதிவுக்கு சுமார் 7/8 போட்டாச்சு.
ReplyDelete//கைப்புள்ள said...
//படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம்.//
அப்படீங்கறீங்க? அதுக்கென்ன பண்ணிட்டாப் போச்சு? //
இப்படி ஒரு பின்னூட்டம் என்னோட விவசாயத்துல போட்டு இருந்தீங்க. சந்தோசமா இப்போ? உங்களுக்கு போலீஸ் வேலை என்ன கூர்கா வேலை கூட கிடைக்காது, உட்டுப்புட்டேன் சாபம்.
very cute post! different...
ReplyDeleteaprom nethu K TV-la Winner padam night oru 7 maniku oliparupunanga,apo namma blog history, unga pugal ellam enga veetla pakirnthukitain.. veetla ammavum appavum romba net savvy elam illa, but they liked the concept of blogging!
suffering from Multiple split personality..? or Raasu kutti maathiri diff diff poto pudichu vutula maati irukeengaloo? :) Enjoyed very much! :) (As per our Agreement kaipulla) :)
ReplyDeleteகைப்புள்ள,
ReplyDeleteஒவ்வொரு வரி படிக்கும் போதும் சிரிப்பா இருக்கு.
கலக்குங்க...
:-)))
//லட்டுல ஏலம் போடுவாங்க
ReplyDeleteஏலக் கடையில கூட ஏலம் போடுவாங்க
நீங்க என்னடான்னா இந்தப் பதிவுல ஏலம் போட்டுருக்கீங்களே! அதுவும் என்னோட பேரை! என்ன துணிச்சல்//
வாங்க டிசிபி :)
"பேரோட" இருக்குறவங்க பேரை உபயோகிச்சாத் தான் பொருள் விக்குதில்லையா? அத மாதிரி தாங்க இதுவும். பேரு ரிப்பேரு ஆகாம பாத்துக்கறோம்...நீங்க கண்டுக்கிறாதீங்க
:)
//கருத்தும் வழியுது இப்படில இருக்கனும்.::)))) //
ReplyDeleteஅது
//சித்தூர்கட்ல ஏதோ சோத்துக்கு வழி கிடக்குது, அட உட்டுபுட்டு போலீஜ் ஆவறேன், ஏட்டு ஆவறேன்னு கதை சொல்லி "உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணா" ங்கிற மாதிரி ஆகிறப்போவுது//
ReplyDeleteஅப்டீங்கறீங்க? அப்ப பேசாம "நாசா"ல ஆஸ்ட்ரோநாட் ஆயிடுன்னு சொல்ல வர்றீங்க?
//பச்ச குத்துற மேட்டருக்கு இங்கே இருக்கு விளக்கம்,பின்னூட்டத்துல//
ReplyDeleteஎல்லாரும் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா!
//உங்களுக்கு போலீஸ் வேலை என்ன கூர்கா வேலை கூட கிடைக்காது, உட்டுப்புட்டேன் சாபம்//
ReplyDeleteஅப்படியே தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி கேச் புடிச்சு உங்க சாபத்தை திரும்ப உங்க கிட்டவே வீசிட்டேன்.
:)
//very cute post! different...//
ReplyDeleteவாங்க தீக்ஷ்!
டேங்ஸ்ங்க.
//unga pugal ellam enga veetla pakirnthukitain.. //
ஆஹா...இது வேறயா? மருதையில போய் நான் ரவுண்டு கட்டி
அடி வாங்குறதை பரப்பிட்டீங்களாக்கும்.
:)
//suffering from Multiple split personality..? or Raasu kutti maathiri diff diff poto pudichu vutula maati irukeengaloo? :) //
ReplyDeleteரெண்டும் தான். இப்போதைக்கு என்சிசி ஆபீசரு(கேடட்னு யாருப்பா கொரலு?) படம் மட்டும் வீட்டுல இருக்கு.
:)
//
Enjoyed very much! :) (As per our Agreement kaipulla) :) //
அப்ப அக்ரீமெண்ட் இல்லன்னா சொதப்பலுங்கறீங்க?
:)
//கைப்புள்ள,
ReplyDeleteஒவ்வொரு வரி படிக்கும் போதும் சிரிப்பா இருக்கு.
கலக்குங்க...
:-)))
//
வாங்க கோபி மாமா!
ரொம்ப சந்தோஷம்ங்க. மெட்டி ஒலி முடிச்ச கையோட 'எம்டன் மகன்'னு படம் எடுக்குறீங்களாமே?
:)
//"படிப்படியா ஒழைச்சு முன்னேறி தான். சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி, அண்ணாமலை ரஜினி மாதிரி"//
ReplyDeleteதல,
உனக்கு எப்பிடி பாட்டு போடணுமின்னு சொல்லு......
//உனக்கு எப்பிடி பாட்டு போடணுமின்னு சொல்லு...... //
ReplyDelete"அடே நண்பா..."னு ஒரு பாட்டு இருக்கில்ல? அது எனக்கு ரொம்ப புடிக்கும்.
:)
//"அடே நண்பா..."னு ஒரு பாட்டு இருக்கில்ல? அது எனக்கு ரொம்ப புடிக்கும்.//
ReplyDeleteவேணாம் அழுதுருவேன் ஆமா....
//வேணாம் அழுதுருவேன் ஆமா.... //
ReplyDeleteஏன் பாப்பா? வை அளுகை? உன் அளுகையை நிறுத்த அங்கிள் ஒரு பாட்டு பாடவா?
“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா?
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூன் வேணுமா?"
//ஏன் பாப்பா? வை அளுகை? உன் அளுகையை நிறுத்த அங்கிள் ஒரு பாட்டு பாடவா?
ReplyDelete“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா?
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூன் வேணுமா?" //
இதுல பாட்டு வேறேயா... நீ மொதல்லா கேட்ட பாட்டுக்கு என்ன மாதிரி ரசிகர்கள் எல்லாபேரும் அழுதிருப்பாய்ங்கே....?
கைப்ஸ்
ReplyDeleteஎன்ன இது ...இவ்வளவு ஈஸியா 'நான் வேணா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?' ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க..
பரவால்ல..உன் ஆசையை நிறைவேத்த என்ன பண்ணனும் சொல்லு..
//நீ மொதல்லா கேட்ட பாட்டுக்கு என்ன மாதிரி ரசிகர்கள் எல்லாபேரும் அழுதிருப்பாய்ங்கே....? //
ReplyDeleteஏம்பா? நான் சொன்ன பாட்டுக்கு என்ன கொறச்சல்? பாலைக் கறக்கறதுக்கு, அத பால்கோவா ஆக்கறது, அப்புறம் அத விக்கிறது, பணக்காரனா ஆவறது...இதுக்குப் பதிலா ஒரு ரெண்டு மைல் ஓடறது, ஒத்தக் கையால புஷ் அப் எடுக்கறது, அப்புடியே படி படியா டிசிபி ஆவறதுன்னு கற்பனை பண்ணி பாரு...நல்லாத் தான் இருக்கும்.
:)
நான் ரெண்டாவதைப் பாடுன பாட்டைக் கேட்டு உன் அளுகை நின்னுச்சா இல்லியா/
:)
//என்ன இது ...இவ்வளவு ஈஸியா 'நான் வேணா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?' ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க..//
ReplyDeleteகப்பி! இதுக்கே அசந்துட்டா எப்பிடி? எங்களைப் புள்ளையாப் பெத்த குத்தத்துக்கு எங்கம்மா இத மாதிரி நெறைய கேட்டுருக்காங்க...இது கூட உண்மையில போன்ல பேசுனது தான்.
//பரவால்ல..உன் ஆசையை நிறைவேத்த என்ன பண்ணனும் சொல்லு.. //
அதெல்லாம் தொழில் ரகசியம்.
:)
//ஏம்பா? நான் சொன்ன பாட்டுக்கு என்ன கொறச்சல்? பாலைக் கறக்கறதுக்கு, அத பால்கோவா ஆக்கறது, அப்புறம் அத விக்கிறது, பணக்காரனா ஆவறது...இதுக்குப் பதிலா ஒரு ரெண்டு மைல் ஓடறது, ஒத்தக் கையால புஷ் அப் எடுக்கறது, அப்புடியே படி படியா டிசிபி ஆவறதுன்னு கற்பனை பண்ணி பாரு...நல்லாத் தான் இருக்கும்.
ReplyDelete:)//
அட பாவி தல...... மக்களே இந்த கொடுமையே கேட்க ஆளில்லயா....?
//நான் ரெண்டாவதைப் பாடுன பாட்டைக் கேட்டு உன் அளுகை நின்னுச்சா இல்லியா//
ஹீக்கும் அது வேற சொல்லிதான் தெரியுமாக்கும்.....:-))))
தல சூப்பர்...கக்கக்கபோ....சேம் பிளட்...ஆமா காக்க காக்க பார்கலயா நீ....நான் எல்லாம் காக்க காக்க பார்த்த உடனே டிசி ஆய்டேன்...இன்னும் வே.வி பார்க்கல...பார்த்த அப்புறம் எனக்கு நானே பிரமோசன் குடுத்துக்கிடுவேன் :-)
ReplyDelete//ஆமா காக்க காக்க பார்கலயா நீ....நான் எல்லாம் காக்க காக்க பார்த்த உடனே டிசி ஆய்டேன்...இன்னும் வே.வி பார்க்கல...பார்த்த அப்புறம் எனக்கு நானே பிரமோசன் குடுத்துக்கிடுவேன் :-)//
ReplyDeleteவாய்யா 12பி,
"காக்க காக்க"ல ஹீரோ கடைசியா ஒண்டிக்கட்டையா நிப்பாரு இல்ல? அதனால அந்தப் படத்தைச் சாய்ஸுல விட்டுட்டேன்.
:)))
இப்பவே டிசின்னா வே.வி.பாத்துட்டா ஸ்யாம், 12பி, டிஐஜின்னு போர்டு மாட்டிப்ப போலிருக்கு?
:)
//ஸ்யாம், 12பி, டிஐஜி போர்டு மாட்டிப்ப போலிருக்கு//
ReplyDeleteபின்ன நமக்கு எல்லாம் நாம்ளே போட்டுகிட்டா தான் உண்டு...ராசுக்குட்டி பாக்கியராஜ் மாதிரி :-)
kalakiteenga ... humor parambarai parambaiyaa varudu pola
ReplyDelete//kalakiteenga ... humor parambarai parambaiyaa varudu pola//
ReplyDeleteவாங்க பாவை,
பரம்பரையில இதை கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாங்க. நன்றி.
:)