Tuesday, February 07, 2006

ஐயோ...நான் இல்லை!

எஸ் எம் எஸ்ல வந்ததுங்க. படிச்சுட்டு என்னைய உதைக்க வராதீங்க.

பஸ் எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பார்த்து கேட்டுச்சாம் "எப்படி மச்சான் இவ்ளோ வேகமா போறே?"

எலெக்ட்ரிக் ட்ரெயின் சொல்லுச்சாம் "போடாங் கொய்யாலே! நல்லா வருது வாயிலே! கரெண்ட் கம்பியைப் பிடிச்சு பாரு தெரியும்!"

ஐயோ...நான் இல்லை!

25 comments:

  1. அய்யோ ஹய்யோ ! மண்வாசனை தூக்கலா இருக்கேன்னு ஒதுங்குனேன் ! சங்கத்துல சேத்துக்கப்பு !

    ReplyDelete
  2. kaippulla,

    also hear this

    aeroplane vandhu rocketkitta kettucham. eppaida ivvalavu vegama porennu. rocket sollucham " unakku pinnala patha vacha theriyumnu"

    cheers

    siva.

    ReplyDelete
  3. //எலெக்ட்ரிக் ட்ரெயின் சொல்லுச்சாம் "போடாங் கொய்யாலே! நல்லா வருது வாயிலே! கரெண்ட் கம்பியைப் பிடிச்சு பாரு தெரியும்!"//

    கைப்பு எலக்டிரிக் டிரெயினுக்கு வாயிருக்கா???

    ReplyDelete
  4. //கைப்பு எலக்டிரிக் டிரெயினுக்கு வாயிருக்கா??? // - DEV said.

    ஐயோ.. யாராச்சும் காப்பாத்துங்களேங்.....

    பச்சாவ்... முஜே பச்சாவ்....

    ரக்ஷிக்கனே.... ஆரெங்கிலும் என்ன ரக்ஷிக்கனே....

    ReplyDelete
  5. //சங்கத்துல சேத்துக்கப்பு !//

    வாங்கையா வாங்க! சங்கத்தில் நீங்க மெம்பர் இப்போ!

    ReplyDelete
  6. வாங்க சிவா!
    தங்கள் கடிக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  7. தேவு,
    எனக்கு அதை விட பெரிய சந்தேகம்.
    ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா?

    ReplyDelete
  8. //பச்சாவ்... முஜே பச்சாவ்....

    ரக்ஷிக்கனே.... ஆரெங்கிலும் என்ன ரக்ஷிக்கனே.... //

    நஹி பேட்டா! அப் பச்னே கா கோயி ராஸ்தா நஹி ஹை!
    ஈ ஜோக்கு ஒரு செறிய சாம்பிள் தன்னே மோனே!

    ReplyDelete
  9. வணக்கம் தோழா...

    தங்களின் வலைப் பக்கத்தை எனது விடுபட்டவைகள் மூலம்
    தொடுப்பு கொடுக்க விரும்புகிறேன்.
    தங்களின் அனுமதி கோரி இம் மடல்.
    பதில் தாங்க...


    தோழன்
    பாலா

    ReplyDelete
  10. வாங்க பாலா,
    தாராளமா தொடுப்பு கொடுங்க. எனது நன்றி.

    பாலபாரதின்னதும் "மணியென்ன ஆச்சு, நான் போறேன் பீச்சு, பீச்சுன்னா கடலு..."அப்படிங்கற பாட்டு ஞாபகம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும் போது ரொம்ப பிரபலம் அந்த பாட்டு. அந்த படம் பேரு ஞாபகம் இல்லை, ஆனா இசையமைப்பாளர் பேரு பாலபாரதி

    ReplyDelete
  11. கைபுள்ள இப்பவே கண்ண கட்டுதே!

    ReplyDelete
  12. Kaipu,

    Intha Fruit samaacharam ellaam nammakku avalavuaa theriyathaaa.. innaikku Koyambedu ponnaaa avasiyam theriyum...

    amaaa innaikku koyambedulley etho visheshamaam theriyumaa

    ReplyDelete
  13. தேவ்,
    நான் இப்ப சென்னையிலேயே இல்லையே! என்ன விசேஷம்னு நீங்களே சொல்லுங்க...எனக்கு தெரியாது!

    ReplyDelete
  14. வாங்க சிங்கு,
    இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி...இன்னும் என்னைய மாதிரி ஆர்த்தியும் கிளம்பியிருக்காங்க. ஏற்கனவே தலைவர் யோசிப்பவர் வேற இதே சேவையை செஞ்சுக்கிட்டு இருக்கார்.இன்னும் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் எங்க ஆளுங்க கிளம்பிட்டாங்க
    :))-

    ReplyDelete
  15. வாங்க ஆர்த்தி,
    ஏற்கனவே நல்ல கவிதாயனியா இருக்கீங்க. நல்ல கடியாளினியாவும் சிறக்க என் வாழ்த்துகள்.
    :)))-

    ReplyDelete
  16. அது வேற ஆளுங்க சாமீ...
    அந்த படம் தலைவாசல்.
    அதில் தான் மடிப்பு அம்சாவாக விசித்திராவும், தலைவாசல் விஜய்-யும் அறிமுகம்.

    தமிழ் படங்களில் முதலில் கானா பாடல்களை அறிமுகப் படுத்திய படம்னு நெனைக்கிறேன்.

    இணைப்பு கொடுத்துடேன்.

    நன்றி.

    ReplyDelete
  17. ஐயோ!ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க!
    செல்போன் தொந்தரவு தாங்காம கம்ப்யூட்டருக்குள் நுழைஞ்சா இங்கேயும் கடிக்கிறாங்களே!
    கைப்புள்ளே ஏதோ ஆபத்துலே இருக்காருன்னு காப்பாத்த வந்து மாட்டிகிட்டேன்!

    ReplyDelete
  18. வாங்க பாலா,
    தகவலுக்கும் இணைப்புக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  19. வாங்க மேடம்,
    நட்சத்திர வாரத்துக்கு அப்புறம் ஆத்துக்காரரையும் குழந்தைகளையும் இந்நேரம் தாஜா பண்ணியிருப்பீங்கனு நினைக்கிறேன். கடிப்பது நம்மளோட முழு நேரத் தொழில் கிடையாது. அப்பப்போ கொஞ்சம் ஆசைக்கு கடிச்சிக்கறது அவ்வளவு தான். என்னோட மத்த உளறல்களையும் படிச்சு பார்த்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.

    ReplyDelete
  20. யாருப்பா.. இந்த வடிவேலுன்னு வந்து பார்த்தா, அட நம்ம Junior பையன். அடியேனும் CEGதான்.(ECE, 1989 Batch). மணி ராத்திரி 12 ஆக போகிறது. வீட்டுக்காரம்மா மறுபடியும் சத்தம் போடுறதுக்கு முன்னாடி லேப்டாப்ப மூடனும். அப்புறமா உங்க குடிலுக்கு வந்து படிச்சிட்டு கடுதாசி போடுறேன்.

    Senior,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  21. வாங்க சார் வாங்க,
    இணையத்துல நம்ம CEG சூப்பர் சீனியர் ஒருத்தர சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. உங்க வலைப்பூவை பார்த்தேன், சமீபத்துல தான் ஆரம்பிச்சிருக்கீங்க போல. ஒரு சின்ன ஆலோசனை - உங்க வலைப்பூவை தமிழ்மணம் இல்ல தேன்கூடு இந்த மாதிரி திரட்டிகளுக்கு கொடுத்தீங்கனா, நிறைய பேர் படிக்க வசதியாயிருக்கும்.

    அடிக்கடி வாங்க. நம்ம கிறுக்கல் எப்படினு சொல்லுங்க. நன்றி

    ReplyDelete
  22. எங்க ஆபீஸ்ல ஸ்ட்ரஸ் மேனேஜ்மென்ட் அப்டீனு சொல்லி ரெண்டு மணி நேரம் லெக்சர் கொடுக்கறாங்க
    பாடகர்கள். அதுக்கு பதிலா நான் உங்க தள்த்துக்கு வந்து கொஞ்ச நேரம் வாய்வுட்டு சிரிச்சுட்டு போறேனுங்க

    ReplyDelete
  23. வாங்க ராசய்யா,
    ரொம்பவே மகிழ்ச்சி. உங்க வார்த்தைகள் எனக்கு மிகவும் ஊக்கத்தைக் கொடுத்தது. நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  24. //மணியென்ன ஆச்சு, நான் போறேன் பீச்சு, //

    அந்த படத்தோட பேரு தலைவாசல்.

    ReplyDelete
  25. வாங்க சிபி சார்,
    தகவலுக்கு நன்றி. இந்த படம் வந்த போது ஸ்கூல்ல ஹிந்தி பேசற பசங்களுக்கு பீடா சேட்டுன்னு பேரு வச்சது ஞாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete