Sunday, February 05, 2006

காப்பாத்துங்க!

நேத்து காலையிலேருந்து Blogger பயலுக படுத்தி எடுக்குறானுங்கப்பா! உஷா மேடம் சொன்ன மாதிரி மெயிலில் வரும் பின்னூட்டத்தை பப்ளிஷ் என்று க்ளிக்கினால் We're sorry, but we were unable to complete your request என்று வருகிறது. அதை தவிர எனக்கு இன்னுமொரும் பிரச்சனையும் இருக்குது. கிண்டி டைம்ஸ் பதிவுக்கு முதலில் வந்த மூணு பின்னூட்டம் மட்டும் தான் இப்போ பதிவில இருக்குது. அதுக்கு நான் கொடுத்த மறுமொழியும் அதுக்கப்புறம் வந்த ஒரு பின்னூட்டமும் காணாமப் போய்கிட்டே இருக்கு. நானும் வந்த பின்னூட்டத்தையும் என் பதிலையும் மயிலிலிருந்து எடுத்து எடுத்து போட்டுக்கிட்டே இருக்கேன், யாரோ சளைக்காம அதை எல்லாம் காலி பண்ணிட்டே இருக்காங்களே? ஒன்னும் புரியலியே? அநேகமா இதே பிரச்சனை ரசிகவ் ஞானியாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அவரோட பதிவுல பார்த்த பின்னூட்டத்தையும் இப்ப காணலை.யாருக்காச்சும் எதாச்சும் தெரிஞ்சா சொல்லக் கூடாதா? தமிழ்மணத்துல யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்கையா! உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

15 comments:

  1. ஐயா! இது சோதனைங்க!

    ReplyDelete
  2. i too face the same problem.None of the replies in my post are getting published.Blogger says "sorry we are unable to complete your request"

    I am fed up

    ReplyDelete
  3. கைப்புள்ள, ஒமக்காச்சும் பின்னூட்டந்தாய்யா காணாமப் போவுது... எனக்கு நேத்தக்கி பின்னூட்டமும் காணாமப்போச்சு, இன்னிக்கு ப்ளாக்கே ஓபன் ஆவ மாட்டேங்குதுய்யா!!

    என்னயவே unauthorised-நு சொல்லுதுய்யா!!!

    என்னான்னு சொல்வேனுங்க...
    பிளாக்கர்தான் படுத்துதுங்கோ....

    :-))

    ReplyDelete
  4. செல்வன்,ஞான்ஸ்,
    உங்க பின்னூட்டத்துக்கு நன்றி. இப்ப என்னால மெயிலிலிருந்து பப்ளிஷ் பண்ண முடியுது. இப்ப சரியாயிட்ட மாதிரி இருக்கு.

    உங்க ரெண்டு பேரு பதிவுலேயும் நான் ஒரு சோதனை பின்னூட்டம் போடறேன். நீங்களும் பப்ளிஷ் பண்ண முடியுதானு பாருங்க! ஞான்ஸ் கூடுதலா பாஸ்வர்ட் சரியானு ஒரு தரம் சரி பார்த்துக்கங்க!

    ReplyDelete
  5. ஞான்ஸ்,
    உங்க ப்ளாக்கே திறக்க மாட்டேங்குது இங்கே.

    You are not authorized to view this pageனு வருது.

    Bloggerக்கு ஒரு மெயில் அடிங்க உடனே.

    ReplyDelete
  6. தாணு இடுகையில சில பின்னூட்டங்களோடு என்னோடதும் ஒண்ணு இருந்திச்சி. இப்போ அங்கே 0 comments அ;டின்னு இருக்கு??!!

    ReplyDelete
  7. Blogger says:

    Please republish your blog in 10 minutes.

    This post has been saved and your blog is still publicly viewable while we perform system enhancements.


    - Agent NJ

    ReplyDelete
  8. ஆமா சார்! நேத்துலேருந்து இப்படி இருக்கு. திடீர்னு பின்னூட்டம் 0 ஆகிடும் இல்லை எண்ணிக்கை கம்மியாயிடும்.

    ReplyDelete
  9. ஞான்ஸ்,
    எனக்கும் இதை மாதிரி வந்துது 30 நிமிஷத்துக்கு முந்தி. அதுக்கப்புறம் இப்ப சரியாயிருக்கு. உங்களுக்கும் சரியாயிடும்னு நினைக்கிறேன். 10 நிமிஷம் கழிச்சு பாருங்க.

    ReplyDelete
  10. thanks mohan

    Your post was published.I am very happy now

    ReplyDelete
  11. செல்வன் தங்கள் பிரச்சனை தீர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. //ஞான்ஸ்,
    எனக்கும் இதை மாதிரி வந்துது 30 நிமிஷத்துக்கு முந்தி. அதுக்கப்புறம் இப்ப சரியாயிருக்கு. உங்களுக்கும் சரியாயிடும்னு நினைக்கிறேன். 10 நிமிஷம் கழிச்சு பாருங்க. //


    Your Prophecy fulfilled!

    It appears that everything back to normal!!

    :-)

    ReplyDelete
  13. மகிழ்ச்சி ஞான்ஸ்!

    ReplyDelete
  14. ஆனா நம்மகிட்ட பிளாக்கர் நல்லபிள்ளையா சொல் பேச்சு கேட்டுதான் இருக்குது:-)))))

    ReplyDelete
  15. வாங்க முத்துகுமரன்,
    ஹிட் லிஸ்ட்ல கொஞ்சம் பேர் மட்டும் மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறோம்.
    :)-

    ReplyDelete