கீழ இருக்கற படங்களைக் கொஞ்சம் பாருங்க!
நாம் வாழும் கிரகமான பூமியினுடைய அளவை மற்ற கிரகங்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.
நாம் வாழும் கிரகமான பூமியினுடைய அளவை மற்ற கிரகங்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.
இப்போது அதனை வியாழன் மற்றும் சனி கிரகங்களுடன் ஒப்பிடுங்கள்
( முதல் வரிசையில் உள்ள முதல் பந்து தான் பூமி)
இப்போது அதே பூமியை சூரியனுடன் ஒப்பிடுங்கள்.
(சிவப்பு அம்புக் குறி சுட்டும் முதல் வரிசையில் உள்ள ஐந்தாவது புள்ளி தான் பூமி)
சூரியனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பூமி வெறும் ஒரு புள்ளி தான். அதில் வாழும் மனிதன் எம்மாத்திரம்?
இப்போது இவை அனைத்தையும் படைத்தவனை எண்ணிப் பாருங்கள். தன்னிலை மறந்து தான் என்ற அகந்தையுடன் வாழும் காலத்தை மற்றவர்களுக்கும் தனக்கும் பயனற்றதாக ஆக்குகிறோம். மதத்திற்காகவும் பணத்திற்காகவும் போரிட்டு மாள்கிறோம்.
யோசித்து பார்க்கையில் 'Iam just a Man... imperfect lowly' என்பது சில சமயம் விளங்குகிறது. நாம் தோன்றியதும் உண்டு,உடுத்து,உறங்கி மாய்வதற்கில்லை என்றும் புரியும். ஆனால் இந்த சிந்தனை எல்லாம் சில கணங்களுக்குத் தான். அடுத்த கணமே 'போய் பொழப்பைப் பாருடா லூஸுப் பையா' என்ற ஒரு எண்ணம் தலையில் தட்டி உட்காரச் சொல்லுகிறது. காரணம்??? தெரிஞ்சாச் சொல்லுங்க!
படம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு கைப்புள்ள. எனக்கு Astronomy-ல ரொம்ப ஆர்வம் உண்டு. இதை திருவாசகத்தோடு இனைத்து உருகிட்டீங்க. திருவாசகம் உங்களை ரொம்ப தான் பாதித்துவிட்டது போல.
ReplyDeleteஆமாம் சிவா, நீங்க சொல்லறது உண்மை தான்.
ReplyDelete