ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?
மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.
இதனை விகிபீடியாவிலும் காணலாம்.
தெரியாம செஞ்சுமோன்னா ஒரு சொகம்.. ஒரு கெத்து... இப்போ வயித்தெரிச்சல்... அட வூடுப்பா நாங்க இப்படியே இருந்துக்குறோம்ய்யா..
ReplyDeleteதலிவா!
ReplyDeleteசோக்கா பேரு வச்சான் இல்ல வெள்ளைகாரன் மல்லிகட்டாணினு?
முலிக்டவாணி சூப்பைப் பறிமாறும் போது பெரிய கேட்டரர்கள் ஒரு கிண்ணத்தில் சோறு வைத்திருப்பார்கள். ஒரு ஸ்பூன் சோற்றை சூப்போடு கலந்து சாப்பிட வேண்டுமாம்.
ReplyDelete//முலிக்டவாணி சூப்பைப் பறிமாறும் போது பெரிய கேட்டரர்கள் ஒரு கிண்ணத்தில் சோறு வைத்திருப்பார்கள். ஒரு ஸ்பூன் சோற்றை சூப்போடு கலந்து சாப்பிட வேண்டுமாம். //
ReplyDeleteஒரு வேளை ரசம் சாதத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இருக்குமோ?
:)-
மொளகாத்தண்ணி சூப் கூட விட்டுவைக்கமாட்டீங்களா பதிவு போட? :-D
ReplyDelete//மொளகாத்தண்ணி சூப் கூட விட்டுவைக்கமாட்டீங்களா பதிவு போட? :-D //
ReplyDeleteஎழுதுறதுக்கு எதுவும் மேட்டர் இல்லைன்னா எதையும் விட்டுவைக்காம சீண்டி பாக்கறது தான் :)