ஐய்யய்யோ! யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க. நான் யாரையும் திட்டலை. 'சொல்றோம்ல' - இது இந்த தொடரோட தலைப்பு. 'கம்மநாட்டி' என்கிற சொல் தற்போது தமிழ் மொழியில் ஒருவரைத் திட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப் பெறுகின்றது. ஆனால் இச்சொல் கணவனை இழந்த கைம்பெண்ணைக் குறிப்பதற்காக முன்காலத்தில் பயன்படுத்தப் பட்டது. இதே பொருளில் இன்னும் கிராமங்களில் பயன்படுத்தப் பெறுகின்றது. 'அவ கம்மநாட்டி ஆயிட்டா!' என்று கிராமத்தில் வயதான ஆயாக்கள் சொல்லுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்னாடி தினமலர் வாரமலரில் 'திண்ணை' என்று ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அதில் படித்தது, கம்மநாட்டி என்ற சொல் "கைம்மை நோற்றி" என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து மறுவி வந்ததேயாகும். கணவனை இழந்த ஒரு பெண், கைம்மையை ஒரு நோன்பாக நோற்பவள் ஆவாள். 'கைம்மை நோன்பை நோற்பவள்' என்னும் பொருளில் விதவைப் பெண்ணை கைம்மை நோற்றி என்றார்கள். அதெல்லாம் சரி தாங்க ஆனா இதுக்கெல்லாம் நோன்பு, ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்சுன்னு பேர் கொடுத்தவங்க யாராயிருப்பாங்க? எதுக்கு அது அவங்களுக்கு மட்டும் நோன்பு?
கைப்புள்ள... சும்மா சுத்தி சுத்தில்ல அடுக்குறீய?!
ReplyDeleteநல்லாருங்க..
நான் ஒரு வடகலையைச் சேர்ந்த ஐயங்கார் சாதியைச் சேர்ந்தவன். எனக்கு குஸ்பு பிடிக்கும்.
ஐயா! சத்தியமா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. அந்த அளவுக்கு அறிவும் இல்லை அனுபவமும் இல்லை. என்ன சொல்றீங்கன்னு மட்டும் புரிய வைங்க!
ReplyDeleteகைப்புள்ள....அது டோண்டு சொல்லலை. போலி டோண்டு சொல்லீட்டுப் போயிருக்காருன்னு நெனைக்கிறேன். இப்ப இதெல்லாம் சகஜமுங்க.
ReplyDeleteஅதுசரி. ஆராய்ச்சியெல்லாம் ரொம்பப் பயமா இருக்குதே.....
நோன்பு என்றால் விரதம் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். அந்த விதத்தில் இது சரிதானே. நீங்கள் கேட்டபடி freemasonry பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன். ஒரு நடை வந்து படியுங்களேன்.
ReplyDeleteRagavan,
ReplyDeleteBayappadara alavukku onnum illai...eppavo Chennaiyil irukkum podhu Dinamalar Varamalaril padichadhu ippo nyabakathukku vandhuchu...
Thittara vaarthai enralum adhukku pinnadi olinjuttu irukkare Tamizh vaarthaiyin porulai vilakkave indha padhivu...vera onnum illai. Yaaraiyum punpaduthara nokkam kidaiyadhu...pun paduthara alavukku onnum illainnum nambaren.
வலைப்பதிவு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDelete-திருமுருகன்