இன்று பணிக்கு வரும் போது பல நாட்களுக்குப் பின் சகலகலாவல்லவன் படத்தில் வரும் "இளமை இதோ இதோ..." பாடலை வாக்மேனில் கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் உற்சாகம் தொற்றி கொண்டது. நான் கவனித்த மற்றுமொரு விஷயம் கால் நூற்றாண்டைக் கடந்தும் அப்பாடல் இன்னும் அதே இளமை துள்ளலுடன் சோடை போகாமல் ஒலித்தது தான். சிறுவயதில் வாய் ஓயாமல் அப்பாடலை முணுமுணுத்தது நினைவுக்கு வந்தது. என்னுடைய சொற்ப இசையறிவை வைத்து நான் கண்ட இன்னுமொன்று - அப்பாடலின் "Out of the world orchestration and complex music patterns". கிட்டதட்ட 7 நிமிடங்களுக்கு ஒலிக்கும் இப்பாடலின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியை நினைவு படுத்தாதபடி புதுமையாக அமைந்திருக்கும். பாடல் ஒலிக்கும் போது அடுத்த பகுதி எவ்வாறு ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது திண்ணம். கேளுங்கள்...மகிழ்ச்சியில் ஆழுங்கள்.
வரும் நாட்களில் 'பாட்டு படிக்கேன்' என்ற தலைப்பில் பாமரனாய் நான் ரசித்த, என்னை மகிழ்வித்த, வியப்பில் ஆழ்த்திய பாடல்களைப் பற்றி (மொழி பாகுபாடின்றி) பதிய எண்ணியுள்ளேன்.
nice thing man.. Eagerly waiting to see what u r going to write next
ReplyDelete