Monday, January 02, 2006

திருவாசகத்துக்கு உருகியவன்

நல்லிசை நாடும் இவ்வுலகம் உம்மிசையதனில்
திளைத்து எழும்-மாந்தர் இம்மைக்குண்டு
திரையிசை தான் எவ்விசையோ மறுமைக்கும்
எனஐயன் ஈசனவன் அருள்பெற்று அருட்தந்தை
துணைகொண்டு திருவான வாசகத்தை
உம்மிசை கேட்டு வளர்ந்த வெம்மை
வாழ்வாங்கு வாழ்விக்க அருந்தவ்மே தான்
புரிந்து ஈன்று எமக்கு அளித்தீரோ?

நான் என்றும் எனது என்றும்
தான் என்றும் தனது என்றும்
தன்னுண்மை தன்மை யறியா திறுமாந்து
இருந்தோம் யாம்! மாணிக்கர் தம்
பண்குழைத்த உம்முயர் இசை அமுது
அதனால் இறைவன் உறை இருதயத்தின்
ஈரம் தனை கண்டோமே! மொழி
இலா பேரின்பம் தனை கொண்டோமே!

ஆழ்கடலின் ஆழத்தினும் அளவிலாத ஆசையுடன்
ஏங்கும் உந்தன் தொண்டர் மனம்
எம்மிசை இறைவன் ஆட்சியிலே ஒருமுறையோ
பேரின்பம் பன்முறையுன் வரம் வேண்டி
இறைஞ்சுகிறார் பலகோடி அவர் தமக்கு
அருள்புரிய பிறப்பறுக்கும் நல்லிசை யதனை
பற்பலவும் படைத்திடுவாய்! பிறந்து விட்ட
இப்பிறப்பின் பொருள தனையாம் அறிய!

(சிம்பொனி இசையில் திருவாசகத்தை கேட்டு உருகியது)

5 comments:

கைப்புள்ள said...

Thanks and wish you the same Murali.

கீதா said...

கைப்புள்ள.. ரொம்ப உருகி இருக்கிங்க.

உருகி உருகி ஒருவர்
திருவாசகம் படைத்தார்
இசையில உருக்கி ஒருவர்
உலகிற்கு தந்தார் - அதை
உருகிக் கேட்டு நீரும்
இவ்வாசகம்(கவிதை) தந்தீர்
உருகித்தான் போனேன் நானும்

அன்புடன்
கீதா

கைப்புள்ள said...

வாங்க கீதா மேடம்,
நெனச்சதும் ஒரு கவிதை சட்டுன்னு எழுதிட்டீங்க. அது தான் நிஜ கவிஞரோட ஆற்றல். மிக்க நன்றி.

BadNewsIndia said...

vow! ippadhaan paatthen.

asaththal!

Raj said...

நல்ல கவிதை..

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
இளையராஜாவின் இசைக்கு உருகார் வேறெந்த இசைக்கும் உருகார்!